https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 12 ஜனவரி, 2023

மணிவிழா - 48

 



ஶ்ரீ:



மணிவிழா - 48


12.01.2023






ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை திருக்கோவிலூர் ஜீயர் துவக்கி வைப்பது பற்றி சொன்ன போது அந்த எதிர்ப்பு எழுந்தது. குழு நோக்கம் மற்றும் செயல்பாடு என எது குறித்தும் கேட்காமல் விழாவிற்கு வடகலை பிரமுகர்களை அழைக்கச் சென்ற போது அவர்கள் தங்களது எதிர்ப்பை சொன்னார். எந்த விளக்கமும் தேவைப்படாத வெறும் காழ்ப்பு. எதிர்பார்த்தது தான். உடன் வந்திருந்தவர் கொதிநிலைக்கு சென்றார். நான் மிக அமைதியாக எனது தரப்பை அவரிடம் சொல்ல முயன்றேன். எனக்கு அனைவரும் வேண்டும். அவர்களின் எதிர்ப்பு மிக பலவீனமாக இருந்ததால் அதை இன்னும் கீழிறக்க முடிவு செயதேன் . அடித்தாட வாய்ப்பு கிடைக்கும் போதுதெல்லாம் அதை தவற விட்டதில்லை. உட்ச பட்சமாக தங்களால் அதில் பங்கு கொள்ளமுடியாது என அவர்கள் சொல்லலாம் என ஊகித்திருந்தேன். ஆனால் அது சொல்லவது எளிதல்ல என்றும் அறிந்திருந்தேன்

அதை எதிர்பார்த்து பேச துவங்கையில் விழா குழுவிற்கு ஆளும் அரசின் ஆதரவு மற்றும் புதுவை சார்ந்த அனைத்து முக்கிய ஆளுமைகள் ஏற்கனவே பொறுப்பிற்கு தேர்ந்தெடு பட்டிருக்கிறார்கள் என்பதுடன் வேளுக்குடி போன்றவர்கள் வந்து நிகழ்த்தும் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு துவக்க விழா என்பது அதன் பிரமாண்டத்தை அவர்களால் கணிக்க முடிந்ததால் இப்போது திகைத்து நின்றிருக்கிறார்கள். எனவே பங்கு பெற இயலாது என சொல்ல முடியாது. அது அவர்களை தனிமைப் படுத்திவிடும் என அவர்களுக்கு புரிந்திருந்தது. அவர்களுக்கும் அது போன்ற திட்டம் வருங்காலத்தில் இருந்திருக்கலாம். நான் அமைத்திருப்பதை விட மிக பிரமாண்டமாக முன்னெடுக்கும் வல்லமை உள்ளவர்கள். ஆனால் யாரும் எதிர் நோக்காத சூழலில்இப்போதுதுவங்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது அவர்கள் ஒருங்கு திரளாத சூழலில்


ஶ்ரீரங்கத்திலும் ராமாநுஜர் பிறந்த ஊரான ஶ்ரீபெரும்பூதூரிலோ அவரது ஆயிரமாவது ஆண்டு குறித்து எதுவும் அசையாத நிலையில் நான் அதை ஐந்து வருடத்திற்கு முன்பே துவக்க நினைத்தது இரண்டு காரணத்தினால். ஒன்று திட்டமிட்ட பிரமாண்டத்தை நோக்கிய முன் தயாரிப்பிற்கு எனக்கு குறைந்தது ஐந்தாண்டுகள் தேவையாகும். இரண்டு அனைவருக்கும் முன்பாக துவக்கப்பட்டு இலக்கை நோக்கிய பயணம். எனக்கு தேவையற்ற பிற சர்ச்சைகளை களைந்துவிடும். இதோ இப்போது வைக்கப்பட்டது போன்ற எதிர்ப்புகள் பல மடங்கு வீரியமாக அப்போது எழுந்து எந்த செயல்பாட்டிற்கும் செல்லவிடாது


அதுவரை ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டை யாரும் ஒரு விழாவாக முன்வைக்காத சூழலில் புதுவையில் விழா குழு ஒருங்கு திரண்டு துவக்கபட இருப்பது அவர்களுக்கு திகைப்பை தந்திருந்தது. அனைத்தையும் அவதானித்தே புதுவை ராமாநுஜர் ஆயிரமாவது விழா கமிட்டி என பெயர் போட்டிருந்தேன். கமிட்டி என்கிற சொல் பல ஊகங்களை படிமங்களை அளிக்கக் கூடியதுஉள்ளூர் ஆளுமைகளில் பெரும்பான்மையோர் நிர்வாக கமிட்டியில் இடம் பெற்றுவிட்ட சூழலில் இனி யார் புதிதாக துவங்கினாலும் அது போட்டி அமைப்பாக பார்க்கப்படும். குறுங்குழு போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடுவதால் முக்கிய ஆளுமைகள் அதில் இடம் பெறத் தயங்குவார்கள். இந்த சூழலில் அவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுப்பது சரியாக இருக்காது என உணர்ந்திருந்தனர். மூன்றாவது மிக முக்கியமானது. அதுவரை எந்த மரபான குழுவிலும் இடம்பெறாத என் போன்றவர்களின் ஊர் முக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்த பின்பு அவர்களை சந்திக்க சென்றது திட்டமிட்ட செய்தது. இதில் வென்றிருக்கிறேன் என்றாலும் எனது அணுகுமுறை மிக முக்கியமானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக