https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 9 ஜனவரி, 2023

மணிவிழா - 45

 



ஶ்ரீ:



மணிவிழா - 45


09.01.2023






ஆற்ற வேண்டிய வேலைகள் எண்ணிலடங்காது நிரை கட்டி நின்றிருந்தன . இருக்கும் நேரம் மிக குறைவுஅந்த கலக் கெடுவிற்குள் ஒரு இயக்கத்திற்கு தேவையாகும் பங்கு பெறுபவர்களும் அவர்களை வழி நடத்துபவர்களும். அவர்களை ஒரே சமயத்தில் விழா குழுவிற்குள் கொண்டு வந்தாக வேண்டி இருக்கிறது. மானுட திரளை திரட்டி விராட வடிவமென ஆக்குவது ஒரு கலை. அரசியல் அதை கற்றுக் கொடுத்திருக்கிறது. அது சொன்ன பாடங்கள் பலவிதமானவை . பல முறை வென்றிருக்கிறேன் சில முறை தோல்வி. அதில் ஒன்று எனது எதிர்காலத்தை தீர்மானித்து புறட்டியது . பெரும் திரளின்வசீகரம்என்னும் அதன் நெறி மிக எளியது என்றாலும் அதை செயல்படுத்தும் முணை மிக கவனமாக கையாளப்பட வேண்டும் என்கிற பாடத்தையும் அது சொல்லி கொடுத்திருக்கிறது . அனைவரையும் ஒரே சமையத்தில் வசீகரிப்பது பிரமாண்டம் மட்டுமே. அது நிர்வாகிகள் முதல் பார்வையாளர் வரை உணரப்பட வேண்டும் என்பது திட்டமாக இருந்தது


நாற்பதடி மேடையை வடிவமைத்தது பின்புறம் வைக்கப்படும் திரைசீலையை கணக்கிட்டு முப்பதடி உயர ராமாநுஜர் உருவம் கொண்ட பின் திரைசீலை அதன் மையத்தில் அமைக்கப்பட வேண்டும். அது எந்த விதமான பார்க்கும் உணர்வை தரும் என்பது கற்பனையில் பல முறை நிகழ்த்திப் பார்த்து மாற்றி அமைக்கப் பட்டது. கணினி தொழில்நுட்பம் உதவியாக இருந்தது. அது ஒரு வகை கற்பனை அளவை முன்வைப்பது. அதை கொண்டு மிக சிறிய அளவில் பொருத்து பார்த்து தேர்வு செய்ய எனது தொழில் அனுபவம் உதவியது. மாபெரும் கட்டடங்களுக்கு முன்பக்க அலங்காரத்தை உருவாக்குவது எனது தொழில். ஆனால் இறுதியில் நிகழ்வது இயற்கையின் வசம். பல முறை திட்டமிட்ட பிரமாதமாக வரும் என எதிர் பார்ப்புடன் சென்று ஏமாற்றமடைந்து இருக்கிறேன். பள்ளி மைதான நுழைவாயிலில் இருந்து மேடை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் உணரப்படும் அந்த பிரம்மாண்டம் முழு உரு பெரும் நிலையில் இருந்தது


மேடையின் பின் புறம் திரை சீலையின்று காலியாக இருந்த வரை மேடை இங்கிருந்து பார்க்கையில் சிறியது போலதான் தெரிந்தது. மதியம் 2:00 மணி வெய்யிலில் அந்த மைதான நுழைவாயிலுக்கு அருகில் உதவிக்கு யாருமற்று தனித்து நின்று கொண்டிருந்தேன். அலையடிக்கும் மனத்துடன் அந்த பின் திரை எழுவதற்கு காத்திருப்பு . படத்தை இரும்பு சட்டகத்தில் ஒட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஆவலும் குழுப்பமுமாக நின்று கொண்டிருந்தேன். இது தான் நிறைவு வேலை. என்னை தொகுத்துக் கொள்ள வீட்டிற்கு சென்று உணவருந்தி சிறிது உறங்க வேண்டும். 4:00 மணிக்கு வரும் பிரதான விருந்தினர்கள் திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் வேளுக்குடி வருகையை எதிர் கொள்ள இங்கு திரும்பவும் இங்கு வர வேண்டும். பின் விழா நிறைவிற்கு பிறகே இங்கிருந்து செல்ல முடியும். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள இருக்கிறார்கள். பல முறை வேறு எங்காவது பரஸ்பர வார்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் இணைந்து தங்குவது இங்குதான் நிகழ இருக்கிறது. அதன் காரணமாக எழுந்த பதட்டம் இணைந்து சிந்தனை ஸ்தம்பித்திருந்தது


ஒட்டி முடிக்கப்பட்ட சட்டகத்தில் இருந்து மெல்ல உயிர் பெருவது போல திரைசீலை நிமிர்ந்து கொண்டது. எதிர் காற்றை உள்வாங்கி வெளியிட இயலாமல் உப்பி நின்ற போதுதான் அதன் பிரமாண்டமும் வீசும் காற்றின் விசையும் தெரிந்தது. மேடைக்கு பின்புறம் கச்சிதமாக அமந்து நின்ற போது வேலை முடிந்த உணர்வு எழுந்தாலும். அருகில் உதவ யாருமில்லாதது வருத்தமாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பல நூறு நிர்வாகிகள் வீட்டில் இருக்கிறார்கள். மாலை சலவை வேட்டி ஓசை எழுப்ப வந்துவிடுவார்கள். பலர் இருந்து இரவு பகலாக செய்த வேலை போல தோன்றுவது ஒரு பாவணை. அது உண்மையில்லாமல் போனாலும் அதுவும் பிரமாண்டத்தின் ஒரு பகுதிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக