https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 22 ஜூன், 2018

அடையாளமாதல் - 355 * இடைவெளியில் *

ஶ்ரீ:




பதிவு : 355 / 536 / தேதி :- 22 ஜூன்  2018

* இடைவெளியில் *


நெருக்கத்தின் விழைவு ” - 49
விபரீதக் கூட்டு -04.




நகர்புறத்தை பொருளியலில் பலமுள்ளவர்களை அல்லது கூட்டம் சேர்ப்பவரை சார்ந்தும் , கிராமத்தில் பெருநிலக்கிழார்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டும் , கட்சி செயல்பாடுகள்  வரையறுக்கப்பட்டிருந்தன.. அவர்கள் சொல்கேட்டு செயல்படும் அமைப்பாகவே அது வளர்ந்து விட்டிருந்தது. அவர்களை மையப்படுத்திய அரசியல் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை சரியானதாக இருந்திருக்கலாம் . அன்று அது வேறு மாதிரியாக கருத்தியல் கொண்டவர்களுக்கானது . ஆனால் வேகமாக மாற்றமடைந்தது வரும் சூழலில் அந்த மரபை புதிதாக அரசியலை பார்ப்பவர்களால் ஒருபோதும் கையாள இயலாது என்பது மட்டுமின்றி , அதன் மீது அவர்கள் வெறுப்புற்றவர்கள் . பதவி , பொருளியல் ரீதியான முன்னேற்றம் மட்டுமே வெற்றியின் அடையாளமாக பார்க்கப்பட்டது . நெறி சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும், அதை முறைப்படுத்த முயன்றால் ,அவர்களை தங்களுக்கு எதிரென நினைக்க தயங்குவதில்லை

குடிமை சமூகத்தை மாநில கட்சி நிர்வாகிகளில் பலர் ஒதுக்கி வைத்ததால் , அதுவே நாங்கள் நுழையக்கூடிய வழி என்றானது. அதை நாங்கள்  நடிப்பாக செய்யாது ஈடுபாட்டுடன் தொடங்கினேன் , என்னை , எனக்கான வழிமுறைகளை நான் அந்த பாதையில் கண்டடைந்தேன் , அது எனக்கொரு புதிய முகத்தை உடல் மொழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது . முதலில் அலங்காரமாக இருந்தாலும் , பின்னாளில் அவை என்னுள் அழுந்தி அது நான் என்றே மாறிப்போனது . எண்ணி எண்ணி எனக்கான முறைகளை வளர்த்துக்கொண்டேன் . எதையும் என் மனத்திற்கு உவப்தாக இருக்கும் படி பார்த்துக்கொண்டேன் . என் இயல்பிற்கு ஒவ்வாததை ஆரம்பத்திலேயே மறுத்து விடுவது என் வழமையானது.

தோழர் அமைப்பு மிக உண்மையான அதேசமயம் கொந்தளிப்புள்ளதாக எப்போதும் இருப்பது . அவர்களின் எளிய தேவைகள் புறக்கணிப்படுகையில் அவர்கள் சார்பாக நின்று செயல்படுவது , எங்களுக்கான அரசியலாக  இருப்பதை அறிய முடிந்தது. பின் நானும் அறியாமல் அதுவே நான் என்றானது.

தோழர் அமைப்பை வளர்க்க அவர்கள் வாழ்விடங்களில் முக்கியத்தும் பெருகும் நிகழ்வுகளை தொடர்ந்து நிகத்துவதும் , அதை மறுக்கும் பிற கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பதே எங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்கிற நிர்பந்தமிருந்தது . மரபான காங்கிரஸின் உறுப்பினர்களை மதிப்பதை எவரும் அறியும்படியும் , மேலிருந்து திணிக்கப்படும் தலைமையை நிராகரிப்பதுமே எங்களை டையாளப்படுத்துவதாக இருந்தது. எங்களுக்கு கருத்தியல் ரீதியில் யாராக இருப்பினும் உழைத்து தங்கள் ஸ்தானத்தில் அமையட்டும் என்பதாக இருந்தது.

ரேணுகா அப்பாத்துரை . நேற்று வரை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நேரடியாக தேர்தல் காலத்திற்குள் நுழைந்து வென்று அமைச்சருமானார் . இதை கட்சியின் சாபக்கேடு என்கிற புரிதலில் உள்ள எங்களை போன்றவர்களுக்கு , அவர்களின் அரசியல் எப்போது உகப்பதில்லை ,   ஆகவே நான் அவரின் நுனிப்புல் அரசியல் செயல்பாடுகளுக்கான அழைப்பை அங்கேயே நிராகரித்தேன் . ஆனால் அப்போது அவர் பாலனை பற்றி சொன்ன பலதகவல்கள் பிற்காலத்தில் உண்மை என்றானது . ஆனால் அன்று பாலனின் அணியில் இருந்தும் அவருக்கு நான் மறுதலிக்கவில்லை . எனது அடிப்படை கருத்தியல் கொள்கைக்கு முற்றாக விரோதித்தால் நான் அவரது அழைப்பை நிராகரித்தேன். அதை தனது திட்டமனென்று வைத்தியநாதன் பின்னாளில் சொன்ன போதுதான் அன்று நிலவிய சூழலின் ஆழத்தை அவதானிக்க முடிந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக