https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 11 ஜூன், 2018

அடையாளமாதல் - 347 * எதிர் துடுப்பு *

ஶ்ரீ:




பதிவு : 347 / 530 / தேதி :- 11 ஜூன்  2018

* எதிர் துடுப்பு *


நெருக்கத்தின் விழைவு ” - 41
விபரீதக் கூட்டு -04.



வைத்தியநான் நான் சரியாக சொல்லவில்லை அதனால் எனக்கு தேவையோ இல்லையோ என தான் நினைத்துக்கொண்டதாக சொல்லி , என்னை கைகாட்டி தில்லிக்கு வழியனுப்பிவிட்டு கிளம்பிச் சென்றார். அதன் பிறகே எனக்க உரைத்தது . மனிதாபமற்ற செயல் என வரு முறை மனம் குமுறியது , பிறிதொன்று அவர் அதற்காகவே பிறந்தவர் , வேறு வழிகளை யோசி என்றது. இது அவரது அழுத்தம் கொடுக்கும் விளையாட்டா, இல்லை உண்மையிலேயே நான்தான் சரியாக எனது தேவையை அவருக்கு புரியும்படி சொல்லவில்லையா? என்கிற குழப்பத்திற்கு ஆளாளேன் . இத்தகைய சிந்தனை முடிச்சிகளில் சிக்கிக் கொள்ளமல் இருக்க நான் டெல்லிக்கு பயணப்பட்ட ஓடும் ரயிலில் இருந்து குறிப்பது தவிற பிற வழிகள் தூர்ந்து போயின . அது ஒரு அபாயகரமான அதே சமயம் முட்டாள்தனமானதும் கூட . எனக்கு அப்போது வேறு முடிவுகள் இல்லை.

பல வித கலசலான எண்ணங்களுடன் புதுவைக்கு அதிகாலையில் திரும்பிய நான் , வீடு வந்ததும் குளித்து காலை 5:00 மணிக்கெள்ளாம் ஆனந்தபாஸ்கரனை சந்திக்க வில்லியனூர் புறப்பட்டேன்.அவர் என்னிடம் கேட்ட எதற்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை . அவரிடம் தில்லி செல்ல விமான டிக்கெட் எடுத்துத்தர சொன்னேன் . தான் பார்த்துக்கொள்வதாக சொன்னார். “மாலை 6:00 மணி விமானம்என்றேன் . மேலதிக பொருளியல் உதவி தேவையா? என்றவரிடம் . கௌரவமாக வேண்டாம் என சொல்லி விட்டேன் . அவரிடம் பணமா பெறுவது அரசியலுக்கு உகந்ததல்ல என்பது எனது எண்ணம் . வேறு சில நண்பர்களின் துணையுடன் வேண்டிய பொருளியல் உதவிகளை பெற்று மதியம் சென்னை திரும்பினேன் .

அன்று மாலை அங்கிருந்து விமானத்தில் தில்லிக்கு . அதற்குள்ளாக நண்பர்கள் அனைவரும் ரயில் நிலையத்திலிருந்து இறக்கி விடப்பட்டு மாநில வாரியாக அவர்களுக்கு தில்லியில் நான் ஏற்பாடு செய்திருந்த விடுதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து சென்று விட்டனர் . நான் தில்லியை அடையும்போது இரவு 10:00 மணியாகி இருந்தது . அனைவருக்கும் பழைய தில்லியில் நிஜாமுதீனுக்கு பக்கம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் அவர்களைத் தேடி அந்த விடுதிக்கு செல்ல முடியாது , நான் வேறு வழியில்லாது வல்சராஜு தங்கியிருந்த சாணக்கியபுரி பாண்டிசேரி விடுதியை தங்கிக்கொண்டேன் .  “ரயிலில் வரவில்லையாஎன வல்சராஜ் கேட்டபோது , வேறு காரணத்தை சொன்னேன் . உண்மையை சொல்லியிருந்தால் தில்லியில் இருக்கும் நாள் முழுவதும்என் கதையே இளிவரலாக பேசி சிரித்து மாய்ந்திருப்பார்கள்

வல்சராஜுடன் தங்கி விட்டதால் அனைத்திற்கும் அவரை சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டதுமாநாட்டிற்கு வருவது செல்வதும் அவர் காரில் . என்னால் நான் அழைத்துவந்த புதிய நண்பர்களுடன் இணைந்து இருக்க முடியவில்லை . நான் திட்டமிட்டது அனைவருடன் சேர்ந்திருக்கும் இந்த ஒருவராகாலம் அது ஒரு புதிய அளவிலான நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் . விரிவாக அவர்களுடன் என்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேச பல வாய்ப்புகள் இருந்தது . அவர்கள் அனைவரும் புதியவர்கள் ஆகவே இயல்பில் என்னை நெருங்க மிகவும் தயங்கினர் . எனது இயல்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை . இந்த தில்லி பயணம் அனைத்தையும் ஒரு முடிவிற்கு கொண்டுவரும் எனற எண்ணம் வீண் கனவாகிப்போனது. பின்னாளில் நிகழ்ந்த பல அநர்த்தத்திற்கு இதுவே தொடக்கம் என இப்போது உணர முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...