https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 19 ஜூன், 2018

அடையாளமாதல் - 352 * தடுப்பின் இருள் *

ஶ்ரீ:
பதிவு : 352 / 533 / தேதி :- 19 ஜூன்  2018

* தடுப்பின் இருள்  *


நெருக்கத்தின் விழைவு ” - 46
விபரீதக் கூட்டு -04.
கண்ணன் அமைச்சரான பிறகு இளைஞர் அமைப்பின் புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டிய தேவை எழுந்ததும், அமைப்பிற்குள்  முரண்பாடுகள் ஏற்படத் துவங்கின . மரைக்காயர் அதன் பிண்ணனியில் இருப்தாக அப்போது எங்கும் பேசப்பட்டது. கண்ணனுக்கு அடுத்ததாக அவரது அனுக்கர் லக்ஷ்மிநாராயாணன் வந்திருக்க வேண்டும்.ஆனால் அது பாலன் கைக்கு வந்தது, இதன் பிறிதொரு கோணத்தை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன். அமைப்பு ரீதியாக நாங்கள் பிளவடைந்த விட்டதால் , சில இடங்களிலில் அது பிறரால் தூண்டப்பட்டிருந்தாலும் , புதிய தலைமையாக பாலன் வந்ததற்கு வேறு காரணங்களும் அப்போது பேசப்பட்டன. அதிலிருந்தே முரண்பாடுகள் இரு தரப்பிலும் குற்றச்சாட்டாக எழுந்தன. எங்களை போன்றோருக்கு சில அடிப்படைக் காரணத்தை ஒட்டி கண்ணன் குழுவிடம் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.

பாலன் மிக திறமையான இரண்டாம் கட்டத் தலைமைக்கு பொருத்தமானவர் , தன்னை முதன்மை தலைமைக்கு முன்னிறுத்தியது பெரும் அரசியல் பிறழ்வு . அவர் அதற்கான இடத்திற்கு வந்திருக்கவில்லை அல்லது அந்த பக்குவத்தை அடைந்திருக்கவில்லை . இளைஞர் காங்கிரஸ் தலைவராக சிறப்பாக செயலபட்டு அரசியல் வெளியில் தன்னை மிகச் சரியான சவாலாக முன்னிறுத்துவதில் பெரும் வெற்றியை அடைந்திருந்தார். அதற்கு பின்புலமாக ஆயிரக்கணக்கான சாமான்ய ஏழை தொண்டர்களின் தியாகம் இருந்தது. ஆனால் அவர் தேர்தல் அரசியலுக்கு விழைந்ததும் அதை ஒட்டிய அவரது சகலவிதமான முன்னெடுப்புகளும் அவரது ஆதரவு தளத்தை காணாமலாகியது

அவரின் தொகுதி தேர்வு , தேர்தல் தோல்விமற்றுமின்றி தலைமைக்கு மிக முக்கிய குணமாகசமநிலை பேணுவதுஎன்பது அவருக்கு இயலாமல் போனது . அதன் பிறகு அவரது அனுகுமுறைகள் அனைத்தும் , அவரது அன்றாட தேவை என்கிற ஒன்றினால் அடிபட்டு , தேர்தல் தோல்விக்கு பிறகு உற்சாகமிழந்து போயிருந்த அமைப்பு , ஆட்சி அமைந்ததும் ஒருவாறு எழுந்து வந்தது. அதை உற்சாகப்படுத்த அரசாங்கத்துடன் அவருக்குள்ளதாக காட்டிய பொய்யான நெருக்கம், அவருக்கே வினையாக முடிந்தது. அரசியலில் வெளியே நிற்பவர்களுக்கு எப்படிஉள்ளே நிகழ்வது தெரிவதில்லையோ அதே போல உள்ளே இருப்பவர்களுக்கும் அதுபற்றி  ஒன்றும் தெரிவதில்லை என்பதுதான் பேருண்மை . 

அவரை நம்பி இருந்தவர்கள் தங்கள் தேவைக்கு அரசாங்கத்தை அனுகும்படி நெருக்கடிக் கொடுக்க , அவற்றை செய்து கொடுக்க முடியாத யதார்த்த நிலை அவருக்கு புரிபடத் துவங்கியதும் , அவரின் இயலாமையால்  உதவி கேட்டு வருபவர்களிடம் தனது வெறுப்பை காட்டத்துவங்கியதும் , அமைப்பு சிதற ஆரம்பித்தது

அதன் பிறகு அவர் வாழ்வில் மிகக் கசப்படைந்தவராக மாறிப் போனார். தலைமைக்கு தேவைபடும் அனைத்தும் இந்த ஒரு அனுகுமுறையால் அவரை தனிமைப்படுத்தி விட்டது . அதன் பின் ஒருபோதும் முதன்மைக்கு தலைமைக்கு அவர் வர இயலாதது போனது. தனது திறமைகள் வெளிப்படும் வாய்ப்பிற்கு ஏங்கும் அதே சமயம் , திறனற்ற பலர் புகழடைந்தது பதவியில் அமர்வதை பார்க்க  சகிக்க இயலாமல்  , எப்பவும் , எதிலும் தனது காழ்ப்பை வெளியிடுபவராக மாறிப்போனார். ஊழ் அவரை வாழ்கையில் கசப்படைந்தவராகவே முன்னிறுத்திவிட்டது.

1980 களின் இறுதியில் பாலனின் கைகளுக்கு இளைஞர் காங்கிரஸ் வந்த போது . கண்ணனின் அசுர வளர்ச்சியை அஞ்சிய அனைத்து தரப்பும் பாலனை முனையிலே தட்டிவைக்கும் முயற்சிகள் துவங்கியிருந்தது . நாங்கள் கண்ணனிடமிருந்து பிரிந்த பிறகு எங்களுக்கான அரசியலில் கள நிலவரத்தில் எங்களை ஸ்திரப்படுத்துவதை பற்றிய முயறச்சியில் இருந்த போது , பொது அரசியல்வெளியில் எங்களை நீர்த்துபோகச் செய்யும் முதற்சிகள் உக்கிரமாக இயங்குவதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக