ஶ்ரீ:
பதிவு : 526 / தேதி :- 04 ஜூன் 2018
“மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவந்து அணியமுடியாது”. “அவ்வுரு உங்கள் உள்ளே முன்னரும் இருந்துகொண்டிருக்கவேண்டும். உங்கள் விழியிலும் உடலசைவிலும் அதுவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும். அரசே, மானுட உடலில் ஓர் ஆளுமை மட்டுமே குடியிருப்பதில்லை. ஒரு மரத்தில் பல தெய்வங்கள் என நம்முள் பலர் உள்ளனர். ஒருவரை நாம் நம்பி மேலெழுப்பி பிறர்மேல் அமரச்செய்கிறோம். அவருக்கு பிறரை படையும் ஏவலும் ஆக்குகிறோம். அவ்வாறு நம்முள் உள்ள ஒருவரை மேலெழுப்புவதே மிகச்சிறந்த மாற்றுருக்கொள்ளல்.”
“அவரும் நம்முருவே என்பதனால் நாம் எதையும் பயிலவேண்டியதில்லை. அடக்கப்பட்டு ஒடுங்கியிருந்தவராதலால் அவர் வெளிப்படுகையில் முழுவிசையுடன் பேருருக்கொண்டே எழுவார். அவரை எழுப்பியபின் அவருக்கு நம் பிறவுருக்களை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதுமானது” தமனர் தொடர்ந்தார் “அவர் நமக்கு ஒவ்வாதவராக முதல்நோக்கில் தோன்றலாம். ஏனென்றால் அவ்வெறுப்பையும் இளிவரலையும் உருவாக்கி அதை கருவியெனக் கொண்டே நாம் அவரை வென்று ஆள்கிறோம். அவரைச் சூடுவதென்பது முதற்கணத்தில் பெருந்துன்பம். சிறு இறப்பு அது. ஆனால் சூடியபின் அடையப்பெறும் விடுதலை பேருவகை அளிக்கக்கூடியது. ஒருமுறை அவ்வுருவைச் சூடியவர் பின்னர் அதற்கு திரும்பிச்சென்றுகொண்டேதான் இருப்பார்.” என்கிறது வெண்முரசு .
நிகழ்வுகள் அல்லது அதை நிகழ்த்துவரை பொறுத்து நாம் தூண்டப்படுகிறோம் , அதனால் நம்மை நாம் உள்நோக்கி திரும்பி சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்திக்கொள்கிறோம் . நிகழ்வுகளினால் வெளிப்படும் உணர்வினால் சீண்டப்படாது , உள்ளிருக்கும் பல உருவும் கருத்து தொகையான அதிலிருந்து ஒன்றை அடைவதும் , பின்னர் அதை மட்டுமே உற்று நோக்கி அத்துடன் பயணித்து புதிய பாதைகளை கண்டடைவதில் அது முடிகிறது . அதைதான் ஜெயமோகனின் ஓருடலில் வாழும் பல ஆளுமை என்கிறார் என நினைக்கிறேன் . ஒன்றிலிருந்து பிற உள்ளுறை ஆளுமைக்கு நுட்பாக மாறுவதை அவயல்லது தொடுவதைத்தான் “சிறு இறப்பு” என குறிப்பிடுகிறார் போலும் . ஆம் , ஒரு மரணத்திற்கு ஒப்பான தருணமாக அவற்றை உணர்ந்துள்ளேன். இதைக் கேள்வியை நான், அடையாளமாதல் பதிவு தொடங்கியபோது கேட்டுக்கொண்ட பிறகே அதன் பிரமாண்டத்தை அறிய முடிந்தது . சில சமயம் இது எனது கிருக்குத்தனமோ? என்று கூட அஞ்சியதுண்டு.
வெண்முரசு அத்தகைய புரிதலை கொடுத்த போது இப்போது வைப்பது போல இந்தப் பதிவை துவங்கியது போது துல்லியமாக என்னால் எடுத்து வைக்க இயலவில்லை . காரணம் எனது மொழி பற்றாக்குறை . அதை சீர் செய்திட இயலுமா ? என்கிற தேடலே இவ்வலை பூத்தளம் தொடங்கிட காரணமாக இருந்தது . இதுபற்றி விரிவதாக வேறு பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.
சரி , இப்போது மனத்தின்,பிரம்மாண்டத்தை அறிந்து கொண்டாயா? எனக் கேட்டால் , “ஆம் அறிந்து கொண்டேன் , அதை ஒரு நாளும்,அறிந்து கொள்ள முடியாது என்று . அது மட்டுமுன்றி எந்த வகைமைகுள்ளும் அதைக் வைத்து நம்மை வெளியே கொண்டு வந்துவிட முடியாது என்கிற பேருண்மையையும் அதன் இணைப்பாக புரிந்து கொண்டேன் .
உடலில் கரந்துள்ள மனதே ஆன்மாவையும் உடலையும் ஊடுபாவும் ஒன்று என்பதால் . அதை புரிந்து கொள்வதே தன்னை புரிந்து கொள்வதாகிறது. தான் என்கிற இருப்பு உடல் அல்லவே . அது ஆத்மா , பின் உடலை பற்றிய அறிதல் அவசியமா? எனக்கேட்டுக்கொண்டால் . வாடகைவீட்டின் தன்மையையும் அதன் உரிமையாளரையும் தெளிந்து கொள்வது , அதில் இருக்கும் வரை நமது “தன்மானமும், தன்னறமும்” பாதிக்காது பார்த்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு எண்ணம் மட்டுமே . பின்,உடலின் உரிமையாளர் யார்?, இந்திரியங்கள் அவற்றின் உரிமையாளர் . மனம் இந்திரியங்களின் வழியாகவே தான், சுகப்படுவதாக நினைக்கிறது.அதற்காகவே பல உலகியல் நியாயங்களை அது உருவாக்கிக் கொள்கிறது போலும். ஆனால் உடலில் ஆத்மா சுகப்படவே முடியாது என்கிறது நமது சிந்தனை மரபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக