https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 24 ஜூன், 2018

அடையாளமாதல் - 357 * உரிமை *

ஶ்ரீ:




பதிவு : 357 / 538 / தேதி :- 24 ஜூன்  2018

* உரிமை *


நெருக்கத்தின் விழைவு ” - 50
விபரீதக் கூட்டு -04.



பயிற்சி என்பது திரும்பத்திரும்பச் செய்யப்படுவதன்மூலம் மனதுக்கோ உடலுக்கோ கைவரும் ஒரு பழக்கம். தட்டச்சுப்பயிற்சி என்கிறோம். வண்டிமாடு நுகத்திற்குப் பழகுவதை பயிற்சி என்கிறோம். நாம் நம் கல்விச்சாலைகளில் அளிப்பதும் இதுவே. கணிப்பொறியாளராக ஆவதற்கான பயிற்சி. பொறியியலின் ஏதேனும் ஒருபகுதியில் பயிற்சி. மருத்துவப்பயிற்சி.

பயிற்சி ஒருபோதும் ஆளுமையுருவாக்கத்தில் பங்கெடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பயிற்சியை அதிதீவிரமாக எடுக்கும்போது உண்மையில் ஆளுமையில் ஒரு கோணல்தான் உருவாகிறது. பிற எதுவுமே தெரியாத ஓர் அசட்டுப்பிறவியாக அது மனிதனை ஆக்கிவிடுகிறது. இன்றைய நம் உயர்கல்விபெற்ற இளைஞர்களில் பெரும்பகுதியினரைப் பார்த்தாலே இது தெரியும். ஓர் அடிப்படை ஆளுமைத்திறன்கூட இல்லாத அற்பர்கள் அல்லது அசடுகள் அவர்கள்எனகிறார் ஜெயமோகன் தனது பதிவு ஒன்றில்

அது போன்ற ஒன்று நிகராதிருக்க தெய்வங்கள் அருள வேண்டும் .பயிற்சி இல்லாத எதுவும் தேவை ஏற்படும் சூழலில் ஒருவரை செயல்படவைப்பதில்லை ஆனால் அதே நேரம் வெறும் பயிற்சி மட்டிலும் ஈடுபட்டிருக்கும் ஒருவரை அது  அடிமை மனப்பான்மைக்கு தள்ளிவிடுகிறது . திறமை என்பது பயிற்சியினால் வருவது . ஆனால் பயிற்சிக்கும் ஆளுமைக்கும் மத்தியில் பிறிதேதோ ஒன்று அந்த கோணல் ஏற்படாது , நிலைமையை உணர்ந்து அதிலிருந்து தங்களது எதிர்காலத்தை நோக்கி எழுந்து வருகிறார்கள்

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கனவையும் அதை நோக்கிய நகர்வையும் இந்த இயக்கம் பல ஆண்டுகாலம் கொடுத்து வந்ததை நான் அறிவேன் . அது இன்று சூம்பி போய் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை , அனைத்தையும் பார்த்து பார்க்காதது போல கடக்க இயலாமல் ,ஏதாவதொரு வழியில் இதை சரி செய்ய வேண்டும் என்கிற வெறி நேரத்திக்கு நேரம் கூடியபடி இருந்தது 

இந்த கருத்தை எட்டிய பிறகு தில்லியிலிருந்து உடன் புறப்பட வேண்டும் என்கிற அடக்க இயலாத உந்துதலுக்கு ஆளானேன். இளைஞர் காங்கிரஸ் தனது அனுபவத்திலிருந்து தனக்கான கருதியலை உருவாக்கிக் கொண்டது . அது தனி நபரின் சார்ந்திராது ஒட்டு மொத்த அமைப்பாக , அரசியலில் காலத்தின் பொருட்டு ஏற்படும் இடைவெளிகளை நிரப்புவதற்காக அது வளர்ந்தது. கண்ணனுடன் அது முரண்பட்டு வெளியேறியதறகு காரணம் , அதை ஒரு கம்பெனி போல சிலரிடம் கையளிக்க முயற்சித்த போது. பாலன் அதன் பலனை அடைந்தவர் . ஆனால் தேர்தல் களத்தில் ஏற்பட்ட தோல்வி அவரை பதட்டமடைய வைத்துவிட்டது

அதன் பிறகு அதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தனியனுக்கும் அதில் ஏதாவதொரு பங்கிருகிருப்பதைப் போல ஒன்றை நிர்வகிக்கும் தலைமையை தரும் வாய்ப்பு முழுவதுமாக தூர்ந்து போனது. திட்டமிடலும் அதானால் விளையும் பலனிலும் அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் பங்கிருப்பது அந்த சூழலின் சிறப்பு . இனி அதுபோன்ற ஒன்று நிகழ வாய்ப்பில்லை .

திட்டமிட்டு வளர்த்தெடுத்த அமைப்பு . பாலனின் சுயநலத்தால் அது நடுத்தெருவிற்கு வந்து விட்டது. அவரிடம் இப்போது அதற்கும் தர்க்கரீதியான பதில் இருந்தால் ஆச்சரியபடுவதற்கில்லை . ஆனால் எந்த விசையால்  அதன் உந்து சக்தியால் காலநேரம் இல்லது உழைத்த ஆயிரக்கணக்கானவர்களின் தியாகம் , எல்லாம் ஆவியாகி போனதைப்போனது . இதற்கு யார் என்ன விலை கொடுக்கபோகிறார்கள் எனக் குழந்தை தனமாக கேட்டுக் கொள்ளலாம் , ஊழின் கால நகர்வை அதன் சம புத்தியையும் அற்ப ஆயுளை கொண்ட மனிதன் புரிந்து கொண்டுவிட முடியாது .

அந்த இரவு தில்லியின் குளிரகால இரவில் தங்க முடியாத வருத்தத்தை அடைந்த போது , இங்கு இருந்து கொண்டு என்னசெய்கிறேன் என்கிற கேள்வி ஆழ்மனம்  எழுப்பிக்கொண்டே இருந்த போதுஅவமானமாய் உணராத துவங்கினேன் . வல்சராஜ் தலைமையால் இயக்கத்தின் மீது வைக்கப்பட்ட எடை மிகுந்த கல் அது இயக்கத்தை எத்திசையிலும் நகரச் செய்யாது . அது கொழுக்கொம்பில் ஒட்டியிருக்க எளிய கொடியின் நெஞ்சில் கட்டப்பட்டது முடிச்சு , அதுவே அதன் வளர்ச்சிக்கும் தடை . கருணைபோல தோன்றும் பலவற்றிற்கு பின்னல் உள்ள நிஜம் கொடுமையானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்