https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 17 ஜூன், 2018

அடையாளமாதல் - 351 * மைய இடம் *

ஶ்ரீ:




பதிவு : 351 / 534 / தேதி :- 17 ஜூன்  2018

* மைய இடம் *


நெருக்கத்தின் விழைவு ” - 45
விபரீதக் கூட்டு -04.



1970 களிலிருந்து கண்ணனை பொறுத்தவரை கட்சி பணி என்பது தனக்குபின்னால் ஒரு பெரும் அணியை திரட்டியதும் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான போராட்டம் நடத்தியதுமே அவரது அன்றாட அரசியல் வேலைகளானது . கட்சியில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள அவர் ஒவ்வொரு தளத்திலும் , நிலைகளிலும் சண்முகத்துடன் மோத வேண்டியது அவருக்குள்ள அடிப்படை வழிகளில் ஒன்று . அகில இந்திய தலைமையுடனான நெருக்கம் . யாருக்கும் பனியாமை. தெளிவான அரசியல் போக்கு என பல தளத்தில் விரிந்திருந்த சண்முகத்தை எதிர்கொள்ள இயலாதவர்கள் . கண்ணனை  சண்முகத்துக்கு எதிராக பயன்படுத்த  முயற்சிக்கையில் அவரை பலவீனப்படுத்த சண்முகம் தீவிரமாக செயல்பட்டார்

புதுவை அரசியலின் இரு பெரும் ஆளுமைகளான சண்முகம் மற்றும் மரைக்காயர் என்று  இருமுனை கொண்டதாக இருந்த கட்சி அரசியலை தன்னை இணைத்த முக்கோண அரசியலுக்கு நகர்த்தியவர் கண்ணன்இருவருக்கும் மத்தியில் தன்னை எப்போதும் நிலைப்படுத்தி கொண்டு , இருவரிடமும் பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொள்ளுவதனூடாக தன்னையும் தனது அரசியலையும் வளர்த்தெடுத்தார் . கட்சி அரசியலின் தவிற்க இயலாத இடத்தை பெற்ற பிறகு . அரசியல் களத்தில் தன்னை நிலைநிறுத்த , தேர்தல் அரசியலை நோக்கி நகர்ந்தார்

1981 தேர்தலில் சண்முகம் தனது  தில்லி செல்வாக்கினாலும் , சண்முகத்தின் நெருங்கிய நண்பர் முன்னாள் குடியசு தலைவர் வெங்கட்ராமனை புதுவைக்கான மேலிடப் பார்வையாளராக நியமிக்கப்பட்டதாலும்முழு அதிகாரமும் சண்முகத்திடம் வந்து குவிந்தது . தனது எதிரிகளை வளரவிடாத அரசியல் காரணங்களுக்காக , திமுக கூட்டணி அரசாங்கத்தில் 1981 களில்  கண்ணனுக்கு mla சீட்டு மறுக்கப்பட்டும் , மரைக்காயர் அமைச்சராக முடியாத சூழலை உருவாக்கி அவரை சபாநாயகர் என்கிற செயல்படாத நிலையை நோக்கி சண்முகத்தால் அன்று  தள்ள முடிந்தது

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இரு பெரும் ஆளுமைகளின் அரசியல் சமன்பாடுகளை பேணிக்கொள்ள கண்ணன் தவிற்க முடியதவாராகிப்போனார். கண்ணனுக்கு  சாதகமான அரசியல் நிலவத்துவங்கியது. அவர் எந்தப்பக்கம் சாய்கிறாரோ அந்தத்தரப்பு வென்றது . கண்ணன் பெரும்பாலும் மரைக்காயரை சார்ந்தே தனது அரசியலை வளர்த்தெடுத்து , தான் அமைச்சராக வரும் வரை நீடித்தார் . அரசியலுக்கு பொருளியல் தேவையின் அவசியம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

1985 ல் கண்ணன் அமைச்சரான பிறகு தனது அனுகுமுறையை முற்றிலுமாக மாற்றி அமைத்து , குடிமை சமூகத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார் . அவரது மாநிலம் தழுவிய பாதையாத்திரை அவரை பெரும் அரசியல் ஆளுமையாக நிலை நிறுத்தியது , அவரின் இந்த தனித்த அரசியல் பயணம் பெரிய வெற்றியாக  அனைத்து விதத்திலும் கனிந்த பிறகு, அவர் முதல்வர் பதவியை நோக்கி தனது காய்களை நகர்த்தத் துவங்கினார் , மரைகாயருடனான அவரது உறவு முரண்பட்டது . பல விதத்திலும் கண்ணனை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாயின . ஆனால் அவை சில வெற்றிகளை கொடுத்தாலும் , பெரும்பாலும தோல்வியையே கொடுத்தன. கண்ணனின் ஏறுமுக பாதையில் அவை தடைகள் ஏற்படுத்தின ஆனால் தடுக்க இயலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...