https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 14 ஜூன், 2018

அடையாளமாதல் - 348 * சார்பு *

ஶ்ரீ:
பதிவு : 348 / 531 / தேதி :- 14 ஜூன்  2018

* சார்பு *


நெருக்கத்தின் விழைவு ” - 42
விபரீதக் கூட்டு -04.

அந்த செய்தி அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு கணக்கை ஒன்றுமில்லாது செய்து விட்டது என நினைக்கிறேன் . அந்த கணம் முதல் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் முற்றாக விலகியது . கமலக்கண்ணனின் குழுவை மிக நெருக்கமாக நான் அறிந்திருக்கிறேன்  வலிந்து தங்களுக்கு கெடுதலை தேடிக்கொள்வதில் வல்லவர்கள் என்பதை நான் முன்னமே பார்த்ததுதான் . அவர்களுக்கு வல்சராஜ் கொடுத்திருந்த இடம் பொருத்தமற்றது . நான் எனது எண்ணத்தை வல்சராஜிடம் செல்லாமல் அவர் மனதில் ஓடுவதை அறிய விரும்பினேன். வளரவிரும்பும் இரண்டு குழுவின் போட்டியில் தன்னை நிலைக்க செய்யும் விசை இருக்கும் என அவர் நம்பியிருக்கலாம்

இளைஞர் காங்கிரசில் சண்முகத்தின் பிரதிநிதியாகவே வல்சராஜ்  பொறுப்பு வகித்ததால் , அந்த இயக்கத்தின் விழுமயங்களை அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை , அல்லது அவரது இடத்தில்லிருந்து அதை புரிந்து கொள்ளும் ஆர்வமின்மை அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். சண்முகத்தை பொருத்தவரை  இளைஞர் காங்கிரஸ் ஒரு  ஆபத்தான அமைப்பு . அதை கட்டுப்படுத்த தனது ஆதரவாளர்கள் அதில் இருக்க வேண்டிய அவசியத்தால் அவர்கள் அந்த இயக்கத்தின் பொறுப்பில் இருக்க வைத்தார்

ரவீந்திர வர்மா போன்ற உள்ளூரைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களுக்கு மாநில அரசியலில் ஆர்வமிருந்தாலும். தனி ஒரு அமைப்பாக அவர்கள் செயல்பட இயலவில்லை. சண்முகத்தின் கீழ் அந்த இடத்தை நோக்கிய நகர்வு சாத்தியமில்லை . மேலும் சண்முகம் அவர்களுக்கான களத்தை ஏற்படுத்தித் தருவார் என்றோ , களம் எழுந்து வரும் போது தங்களை செயல்பட அனுமதிப்பார் என்றோ அவர்கள் நிலைத்திருக்கலாம் . தலைமை நமக்கான தளத்தை ஒருநாளும் உருவாக்கிக் கொடுக்காது .

கண்ணன் தலைமையலான இளைஞர் அமைப்பு சண்முகத்தின் அரசியல் முற்றதிகாரத்திற்கு அறைகூவலாகவே அன்றைய முக்கியத் தலைவர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது . கண்ணன் தனது அரசியல் நுண்மையாலும் பெரும் தோழர் படை பலத்தாலும் சட்டமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த காலம் அது.  

1981 களில்  அவருக்கு mla சீட்டு மறுக்கப்பட்டாலும் , அவர் அரசியலை நகர்த்தும் பெரும் ஆளுமையாக உருவெடுத்ததை யாராலும் தடுக்க இயலவில்லை . சண்முகத்துக்கு எதிராக கொம்பு சீவி அவரை பலப்படுத்த பலர் முயற்சிக்கையில் அவரை பலவீனப்படுத்த சண்முகம் தீவிரமாக செயல்பட்டார் . புதுவை அரசுயலின் இரு பெரும் ஆளுமைகளான சண்முகம் மற்றும் மரைக்காயர் முக்கோண அரசியலில்  இருவருக்கும் மத்தியில் கண்ணன் தன்னை எப்போதும் நிலைப்படுத்தியே தன்னையும் தனது அரசியலையும் வளர்த்தெடுத்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக