https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 ஜூன், 2018

அடையாளமாதல் - 345 * கனவு காண்பவன் *

ஶ்ரீ:




பதிவு : 345 / 527 / தேதி :- 05 ஜூன்  2018

* கனவு காண்பவன் *



நெருக்கத்தின் விழைவு ” - 39
விபரீதக் கூட்டு -04.





1983 ஆட்சி கவிழ்ப்பு நிகழ்வும் அதனால் விளைந்ததை பற்றியும் நானும் ஆனந்தபாஸ்கரனும் பல காலம் விவாதித்திருக்கிறோம் .இந்த ஒரு கூறே பல திறப்புகளை கொடுக்க வல்லதாக இருந்தது. அவருடனான எனது தொடர் உரையாடல்கள் சிறு முரண்களையும் கலைந்து கொடுத்தது . என் மீதிருந்து அபிப்ராயம் காரணமாக , நான் செல்லும் சிறு கூடுகைகளுக்கு திடீரென வந்து அவற்றை வேறொரு தளத்திற்கு நகர்த்தி விடுவார் . நான் என் மனத்தில் தோன்றுகிற அணைத்து எதிர்கால திட்டம் பற்றி எந்த தயக்கமின்றி அவருடன் விவாதிக்க துவங்கினேன் . அரசிலை நோக்கிய எனது நம்பிக்கை பெருகியது இந்த சந்தர்பத்திற்கு பிறகுதான்.

ஆனந்தபாஸ்கரனுக்கும் எனக்கும் பொது நண்பராக வைத்தியநாதன் இருந்தார். அரசியல் இரட்டைகளை கொண்ட ஒன்றல்ல , முரண்படுபவருடனும் சில நகர்வுகளை இணைந்தே செய்யவேண்டி இருக்கும். அதற்கு வயதிற்கு மீறிய அனுபவம் ஒரு பெரிய பலம் . நான் வல்சராஜ் மற்றும் ஆனந்தபாஸ்கரன் என்கிற இரு பெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் என்னை எப்போதும் வைத்திருந்ததால் , ஒரு பாதுகாப்பு இருந்தது. ஆனால் எனக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

வைத்தியநானின் அழுத்தம் கொடுக்கும் விளையாட்டில் சிக்கிக் கொள்ளமல் இருக்க நான் டெல்லிக்கு பயணப்பட்ட ஓடும் ரயிலில் இருந்து குறிப்பது தவிற பிற வழிகள் தூர்ந்து போயின . அது ஒரு அபாயகரமான முடிவு . பல வித கலசலான எண்ணங்களுடன் புதுவைக்கு அதிகாலையில் திரும்பிய நான் , வீடு வந்ததும் குளித்து காலை 5:00 மணிக்கெள்ளாம் ஆனந்தபாஸ்கரனை சந்திக்க வில்லியனூர் புறப்பட்டேன்.

அவர் என்னிடம் கேட்ட எதற்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை . அவரிடம் தில்லி செல்ல விமான டிக்கெட் எடுத்துத்தர சொன்னேன் . தான் பார்த்துக்கொள்வதாக சொன்னார். “மாலை 6:00 மணி விமானம்என்றேன் . மேலதிக பொருளியல் உதவி தேவையா? என்றவரிடம் . கௌரவமாக வேண்டாம் என சொல்லி விட்டேன் . அவரிடம் பணமா பெறுவது அரசியலுக்கு உகந்ததல்ல என்பது எனது எண்ணம் . வேறு சில நண்பர்களின் துணையுடன் வேண்டிய பொருளியல் உதவிகளை பெற்று மதியம் சென்னை பயணமானேன் .

அன்று மாலை விமானத்தில் தில்லிக்கு பயணமானேன் . அதற்குள்ளாக நண்பர்கள் அனைவரும் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக மாநில வாரியாக இறக்கிவிடப்பட்டு ,அவர்களுக்கு தில்லியில் நான் ஏற்பாடு செய்திருந்த விடுதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து சென்று விட்டனர் . நான் தில்லியை அடையும்போது இரவு 10:00 மணியாகி இருந்தது . அனைவருக்கும் பழைய தில்லியில் நிஜாமுதீனுக்கு பக்கம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் அவர்களைத் தேடி அந்த விடுதிக்கு செல்ல முடியாது , நான் வேறு வழியில்லாது வல்சராஜு தங்கியிருந்த சாணக்கியபுரி பாண்டிசேரி விடுதியை தங்கிக்கொண்டேன்ரயிலில் வரவில்லையா என வல்சராஜ் கேட்டபோது , வேறு காரணத்தை சொன்னேன் . உண்மையை சொல்லியிருந்தால் தில்லியில் இருக்கும் நாள் முழுவதும்என் கதையே இளிவரலாக பேசி சிரித்து மாய்ந்திருப்பார்கள்

அன்று இரவு தில்லியின் கடும் பனிக்கு இடையில் அனைவரும் அமர்ந்து பேசிக்பவண்டிருக்க . நான் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ந்ததை தொகுத்தபடிருந்தேன் . ஆனந்தபாஸ்கரனுடன் சில கருத்துக்களை விவாதம் என்கிற எல்லைக்கு கொண்டுசெல்லாமல் ,அதை ஒரு உரையாடல் என்கிற தளத்திறகு நான் நகர்த்த முயன்றபோது , அவர் தன்னுடனான சிக்கலில் இருந்து வெளிவந்தார் . ஆனால் அது எளிதில் நிகழ்ந்துவிடவில்லை . அது ஒரு உடைவு போல தோன்றி பிறகு மெல்ல விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தினால் மாறி வந்தது . என்னைகனவு காண்பவன்என்கிற அடைமொழிக்குரியனாக பிறிதெப்போதும் சொல்ல துவங்கினார். நான் தில்லியல் அவர் சொன்னதுபோல கனவு காண்பவன் என்கிற பட்டம் ஒரு வசைபோல தோன்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக