https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 ஜூன், 2018

அடையாளமாதல் - 346 * கால நேரம் ! *

ஶ்ரீ:




பதிவு : 346 / 529 / தேதி :- 10 ஜூன்  2018

* கால நேரம் ! *


நெருக்கத்தின் விழைவு ” - 40
விபரீதக் கூட்டு -04.





1980 சண்முகம் தனி ஆளுமையாக உருவெடுத்த நிலையில் , புதுவை காங்கிரஸின் அகில இந்திய அரசியலில் தனி மாநிலமாக கணக்கு வைக்கப்பட்டாலும் , தேர்தல் நேரத்தில் அகில இந்தியத் தலைமை , புதுவையை தமிழகத்தோடு இணைத்தே புரிந்து வைத்திருந்தது. சண்முகம் மூப்பனாருக்கு சீனியர் என்கிற கட்சி அடுக்குமுறை போன்ற ஒன்று இந்திரகாந்தி இருந்த வரை பிரதானமாக பார்க்கப்பட்ட நேரம் , அதனால்  ஸ்தானத்தில் சண்முகம் மூப்பனாரை வஞ்சியிருந்தார். காமராஜர் இந்தியாவுடன் முரண்பட்டு தனிக்கட்சி கண்டபோது , சண்முகம் இந்திராவை ஆதரித்தார். அது இந்திராகாந்தி உயிருடன் இருந்தவரை சண்முகத்தை அசைக்க முடியாத ஸ்தானத்தில் வைத்திருந்தது. தமிழக முடிவுகள் பெரும்பலும் சண்முகத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசியலின் நுட்பங்களை தெளிவாக தெரிந்து வைத்திருந்த சண்முகத்தை , காமராஜருக்கு பிறகு முக்கிய இடத்திற்கு வந்த மூப்பனார்,அவரை தனக்கு ஒரு தடையாகவே பார்த்தார். சண்முகம் யாருக்கும் பனியாத தனது இயல்பாலும் , காமராஜருடன் நெருக்கமான தொடர்புகளும் , தமிழக காங்கிரஸ் அரசியலில் முக்கிய தலைவர்களுடனான தொடர் உரையாடலகளும் , அவருக்கு தமிழக அளவில் ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்திருந்தது. தமிழகத்தில் உள்ள மூப்பனாரின் அரசியல் எதிர்நிலைகள் தங்களின் காரியத்திற்கு  சண்முகத்தை சார்ந்திருந்தது மூப்பானருக்கு சண்முகம் உகப்பில்லாதவராக நினைக்க பிறிதொரு காரணமாக இருந்திருக்கலாம

தன்னிலையை பேணிக்கொள்ளவும் , சணமுகத்தை ஒரு கட்டத்திற்குள் நிறுத்த அவருக்கு எதிராக சிலரை கொம்பு சீவி கொடுத்த நெருக்கடியினால் , இந்திராகாந்தியுடன் தனக்கிருந்த செல்வாக்கை வைத்து தமிழக அரசியலில் சண்முகம் தலையிடுவதை தடுக்க வேண்டியோ , புதுவையில் தனக்கென ஒரு குழுவை மூப்பனார் முனைந்து வளர்த்தார். அதிலிருந்து கிளைத்து வளர்ந்தவர்கள்தான் கண்ணன் போன்றோர்
அரசியலில் ஒரு ஸ்தானத்தில் இருந்த ஆனந்தபாஸ்கரன் உடனான  எனது தொடர் உரையாடல்கள் சிறு முரண்களையும் கலைந்து கொடுத்தது . என் மீதிருந்து அபிப்ராயம் காரணமாக , நான் செல்லும் சிறு கூடுகைகளுக்கு திடீரென வந்து அவற்றை வேறொரு தளத்திற்கு நகர்த்தி விடுவார் . நான் என் மனத்தில் தோன்றுகிற அணைத்து எதிர்கால திட்டம் பற்றி எந்த தயக்கமின்றி அவருடன் விவாதிக்க துவங்கினேன் . அரசிலை நோக்கிய எனது நம்பிக்கை பெருகியது இந்த சந்தர்பத்திற்கு பிறகுதான்.

ஆனந்தபாஸ்கரனுக்கும் எனக்கும் பொது நண்பராக வைத்தியநாதன் இருந்தார். அரசியல் விருப்புகள் இரட்டைகளை கொண்ட ஒன்றல்ல , முரண்படுபவருடனும் சில நகர்வுகளை இணைந்தே செய்யவேண்டி இருக்கும். அதற்கு வயதிற்கு மீறிய அனுபவம் ஒரு பெரிய பலம் . முந்தய இளைஞர் காங்கிரஸின் களப்பணி எனக்கு ஒரு புரிதலை கொடுத்திருக்க வேண்டும். நான் வல்சராஜ் மற்றும் ஆனந்தபாஸ்கரன் என்கிற இரு பெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் என்னை எப்போதும் வைத்திருந்ததில் , ஒரு பாதுகாப்பு இருந்தது. ஆனால் காலம் எனக்கான நேரம் குறிக்கப்பட்டிருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்