https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 ஜூன், 2018

அடையாளமாதல் - 349 * யானையின் பாதை *

ஶ்ரீ:
பதிவு : 349 / 532 / தேதி :- 15 ஜூன்  2018

* யானையின் பாதை *நெருக்கத்தின் விழைவு ” - 43
விபரீதக் கூட்டு -04.
கண்ணன் புதுவை அரசியலில் ஒரு மாபெரும் மாயசக்தி என எப்படி உருவெடுத்தார் என்பது இன்றும் வியப்பிற்குறியது. அதுவரை அப்படி ஒரு இடத்தை அடைந்தவர்கள் வெகு சிலரே , அவர்களில் மக்கள் தலைவர் .சுப்பையாவை பற்றி அப்படி கேள்விப்பட்டதுண்டு . குபேருக்கும் அப்படி ஒரு ஆளுமை இருந்தாலும், கண்ணன் வந்து சேர்ந்தது , ஒரு முழு அரசியல் அங்கீகாரத்திற்கும் ,ஆளுமைக்கான இடம் , அதைப்போன்ற ஒன்றை இன்னும் சிறப்பாக ரங்கசாமியால் பின்னாளில் அடைய முடிந்தது . அது கண்ணன் அவருக்கென உருவாக்கி வைத்திருந்த களத்தில்  அவர் தோற்று அந்த  தோல்வியிலிருந்து எழுந்தது ரங்கசாமியின் எழுச்சி என்பதுதான் வினோதம் .

1995ல் இருந்தே புதுவையில் புதிய தலைமைக்கான  ஒரு வெற்றிடம் உருவாகி , அதை நிறைக்கும் ஒரு புதிய ஆளுமைக்காக அது நீண்டநாட்கள் காத்திருந்தது . புதிய அரசியல் களம் 2010 ல் எழும் என்றும் அப்படி எழும்போது அதற்கான தலைமை உருவாகி வரும்  என்கிற கருத்தை பல மூத்த அரசியல் நோக்கர்கள் வழியாக அப்போது நாங்கள் அடைந்திருந்தோம். ஒரு கனவைப்போல பல நாட்கள் அதுபற்றிய உரையாடல்கள் எங்களுக்குள் நிகழ்ந்ததுண்டு . காரிய காரணத்தை ஒட்டி எழுந்த அந்த விவாதத்தின் முடிவில்  நான் அதை முழுமையாக ஏற்றேன் . பலர் என்னை இளிவரலாக பார்கக பேச வைத்த நிகழ்வு அது . ஆனால் எனது பயணம் முழுவதும் 2010 நோக்கியே இருந்தது

அரசியல் நோக்கர்கள் கணித்தது , அவர்கள் சொன்னபடியே பிற்காலத்தில் நிகழ்ந்தது. அதன் முழுப் பலனையும் ரங்கசாமி அடைந்தார். அது தற்செயலானதா? அல்லது 1995 அரசியல் நோக்கர்கள் சொன்னது இதைத்தானா? என்பது எனக்கு தெரியாது . ஆனால் அதை உருவாக்கிய கண்ணனால் அதை நிரப்பியிருக்க முடியும் . ஆனால் அவரது தொடர் அரசியல் பிறழ்வுகள், தனிப்பட்ட கணக்குகளும் , காழ்ப்பும் , அவசரமும் அவரை அந்த அந்த இடத்தை அடைய முடியாததாக்கியது . ரங்கசாமி பின்னாளில் அந்த இடத்தையும் அதிலிருந்து விளைந்த பலனையும் முழுமையாக அடைந்தார். ஆனால் அவரின் பாதையில் அவரின் அரசியல் பிறழ்வுகளால் , தன்னை அதே தளத்தில் நிலைநிறுத்த இயலாது வீழ்ந்து போனார்.அவரின் எதிர்காலம் குறித்து கணிக்க இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது . இப்போது நிலவும் சூழலை ஒட்டி அவரைப் பற்றிய முழு விமர்சனத்தை முன் வைப்பது ஒருகால் நிகழ் அரசியலில் பொருந்தாதும் போகலாம்

அவரின் கடந்த கால அரசியலிலிருந்து அவரின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது . அவரது அரசியல் செயல்பாடுகளை இரு வேறு தளத்தில் வைத்து பார்க்கலாம் என நினைக்கிறேன் .ஒன்று தலைவர்களுள் அவரை வைத்து பார்க்கையில் , யாரையும் அவர் நம்புவதில்லை என்பதும் , அவரின் இயல்பான அதீத மௌனம் அவரை கணிக்க முடியாதவராக பார்க்க வைத்தது , இந்த இடத்தில என்னால் சண்முகத்தோடு அவரை ஒப்பிட இயன்றாலும் , சண்முகம் பலரை அரவணைத்து செல்லும் ஜனநாயக முகம் போன்ற ஒன்றை தனக்கு ரங்கசாமியால் தனக்கு உருவாக்கிக் கொள்ள முடியவில்லை . அவர் ஒரு வித சர்வாதிகார மனப்போக்கு உள்ளவர் என்றே நினைக்கிறேன்

தன்னுடன் முரண்படுபவரை இருவரும் அவர்களுக்கான காலம் வருமவரை கடுமையாக நடந்து கொண்டதில்லை . ஆனால் உட்கட்சி ஜனநாயகம் என்கிற ஒன்றை ரங்கசாமியால் தான் கண்ட அமைப்பில் உருவாக்கி எடுக்க முடியவில்லை . அனைத்து அதிகாரமும் அவரிடம் குவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின்அதிமுகமாதிரியான ஒரு அடிமை அமைப்பாக அது உருமாறி இருந்தது . வாழ்த்து ஸ்துதியின் சப்தம் ஒரு காலகட்டத்தில் யாராலும் தாளமுடியாத இடத்தை அடைந்ததும் ரங்கசாமியின் வீழ்ச்சி துவங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக