ஶ்ரீ:
பதிவு : 353 / 534 / தேதி :- 20 ஜூன் 2018
* செயல்பாடுகள் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 47
விபரீதக் கூட்டு -04.
1980 களின் இறுதியில் பாலனை கைகளுக்கு இளைஞர் காங்கிரஸ் வந்தது . கண்ணனின் அசுர வளர்ச்சியை பார்த்த அனைத்து தரப்பும் அதை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன . அவர்களைப் பொறுத்தவரை முடக்குவது என்பது மாநில கட்சி அமைப்பின் சார்பாக நடக்கும் எல்லா நிகழ்விலும் புறக்கணிகப்பது . கண்ணனிடமிருந்து பிரிந்த பிறகு எங்களுக்கான அரசியலில் கள நிலவரத்தில் எங்களை ஸ்திரப்படுத்துவதின் வழியாக தில்லி மேலிடத்தின் ஆதரவை பெறுவது ஒன்றுதான் எங்களுக்கான ஒரே வழி , பொது அரசியல்வெளியில் எங்களை நீர்த்துபோகச் செய்யும் முதற்சிகள் உக்கிரமாக இயங்குவதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை .
ஒருமுறை அமைச்சர் ரேணுகா அப்பாதுரை நான் பாலனுடன் இணைந்து இளைஞர் காங்கிரஸில் செயல்படுவது அர்த்தமற்றது என்றும் , நான் எனது எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்கிறேன் என்றும் , தன்னால் சண்முகத்திடம் பேசி எனக்கான இடத்தை உருவாக்கி கொடுக்க இயலும் என்று சொன்னவரை நான் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன் . அன்று மிக தீவிரமாக இளைஞர் அமைப்பை அடிப்படையிலிருந்து அமைப்பை வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்த போதுதான் , இதை பற்றி ரேணுகா அப்பாதுரை பேசினார் .
இரண்டு காரணங்களுக்காக அவர் சொன்னதை நான் நிராகரித்தேன் . ஒன்று அடிபடை தொடர்புகள் இல்லாமல் அரசியல் இல்லை என்பது இன்றளவும் எனது கொள்கையாக இருக்கிறது . சண்முகத்தின் கீழ் இயங்கும் அமைப்பில் என்னைப் போன்றவர்கள் இயங்குவதற்கான களமும் சூழலும் இல்லை . அது போன்ற ஒன்றை உருவாக அல்லது உருவாக்க மாநிலத் தலைமை அனுமதிக்கப்போவதும் இல்லை , என்பதே அன்றைய யதார்த்தம்.
பின்னாளில் நான் சண்முகத்தின் கீழ் அரசியலில் ஈடுபடுகிற காலம் வந்த போது இவற்றை நேரடியாக பார்கக நேர்ந்தது . அதுவே என்னை தன்னியல்பால் செயல்பட முயற்சிக்கையில் வல்சராஜால் அதை மிக எளிதாக முடக்க முடிந்தது . மாநில கட்சி அமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் , கண்ணன் சேவாதளத் தொண்டர் அமைப்பு மோதிக்கொண்ட நிகழ்வும் , அதன் உக்கிரமும் இளைஞர் காங்கிரஸின் மீது பெரும் வெறுப்பை உருவாக்கி இருந்தது. வல்சராஜ் தலைமை ஏற்றது அதை முடக்க சண்முகம் எடுத்த நடவடிக்கை என்றே புரிந்து வைத்திருந்தனர். அது பெருமளவு உண்மையும் கூட , அதை உடைத்த போதுதான் எனக்கான எதிர்காலம் எழுந்து வந்தது . ஆனால் அது எளிதில் நிகழ்ந்து விடவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக