https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 16 ஜூன், 2018

அடையாளமாதல் - 350 * பிம்பம் *

ஶ்ரீ:





பதிவு : 350 / 533 / தேதி :- 16 ஜூன்  2018

* பிம்பம்  *


நெருக்கத்தின் விழைவு ” - 44
விபரீதக் கூட்டு -04.




புதுவையின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி கட்சி அரசியலில் அதிகார பகிர்வு என்பதை தனது அமைப்பில் நடைமுறை படுத்தாதது இயல்பில் சர்வாதிகார மனப்போக்கு உள்ளவர் என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டது.அவருக்கும் சண்முகத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்குமானால் , அதிகம் பேசாத வாய் கட்டுமானத்தை சொல்லலாம் . அது தவிர இருவரும் இருமுணைகளில் தங்களை அமைத்துக் கவண்டவர்கள் . சண்முகம் போன்று உட்கட்சி ஜனநாயகத்தை ஒரு தோற்றமாகக் கூட ரங்கசாமியால் உருவாக்கி எடுக்க முடியவில்லை . அனைத்து அதிகாரமும் அவரிடம் குவிக்கப்பட்டுஅதிமுகமாதியான ஒரு அடிமை அமைப்பாக அது உருமாறி இருந்தது .

ஆரம்பம் முதலே தனது தொகுதியை மையப்படுத்தியே தன்னை  அடையாளப்படுத்திக் கொண்டதால், மாநில அளவிலான அரசியல் பொது தளத்தில் முழுமையாக தன்னை முன் வைக்க அவரால் முடியாது போனது . தனது ஆட்சி காலத்தின் இறுதியில் முற்றும் செயலிழந்த அரசாக , ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் முடிவில் கலசலான ஒரு பிம்பத்தையும் அவர் விட்டுச் சென்றார் . அவருக்கு ஜாதீய அடையாளம் சிலரால் முனைந்து உருவாக்கப்பட்ட போது , அதிலிருந்து வெளிவரும் அரசியலையும் அவர் ஒருநாளும் செய்யவில்லை

ஜாதியை அல்லது மதத்தை பின்புலமாக கொண்ட அரசியல் புதுவைக்கு முற்றும் அயலானது . ரங்கசாமியின் இன்றைய இடம் அரசியல் ரீதியில் தவிற்க இயலாத ஒருவர் . அவரது அரசியல் முடிவுகளும், முன்னெடுப்புகளும் மட்டுமே அவரை அந்த  இடத்திற்கு  நிலை நிறுத்துபவை . அவரால் இயக்கத்தை மேற் கீழ் என்கிற அமைப்பும் , அதை  தொடர்புறுத்தும் வலுவான இரண்டாம் நிலை தலைமை இல்லாதது , அல்லது அவர் வளர்க்காதது அவரின் பலகீனமான பகுதிகள் . அவரின் அரசியல்  குறித்து பின்னர் விரிவாக பதிய நினைக்கிறேன்.

காங்கிரஸின் கட்சி தொடர்ந்து சண்முகத்தின் தலைமையில் மிக நீண்டகாலம் நீடித்ததால் அது  ஒரு இருக்கமான அமைப்பாக உருவாகி இருந்தது . புதுவை சுதந்திர கால தொடர்புடைய பலர் சண்முகத்தின் மாநில கமிட்டியில் நீடித்தது கட்சிக்கு ஒரு ஸ்திரத் தன்மையை கொடுத்திருந்தது . “காந்தியை புரிந்து கொள்ள முடியும் ஆனால் அவரது வழிமுறைகளை ஏற்றுக்கொள்வது கடினமானதுஎன்கிறார் திரு.ஜெயமோகன். காந்திய வழிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்கிற எண்ணம் மிக ஆழமாக வேரூன்றிய தலைமுறை தோன்றிய பிறகு, குடிமை சமூகத்தில் பரப்பியத்தின் வினையாற்றும் சக்தியை காங்கிரசார் உணர்ந்திருக்காதது , போன்றவை காங்கிரஸை சில காலம் தொய்வுற்று இருக்கச் செய்தது  . 1970 களின் இறுதியில் அதன் வேகம் புதுவை இணைப்பு , மற்றும் இளைஞர் காங்கிரசின் எழுச்சி போன்றவற்றால் பலம் மிக்க அமைப்பாக உருவாகத் துவங்கியது.

கட்சி அரசியலில் மூத்தோர் விலகாத சூழலே தொடர்ந்து நீடித்ததால் , கட்சியில் இளைஞர்களுக்கான பாதையை ஏற்படுத்தக்கூடிய ஓரே சக்தியாக கண்ணனைத்தான் அவரது தோழர் அமைப்பு நம்பியது . அந்த நம்பிக்கையே கண்ணனை பேருரு கொள்ளச்செய்திருந்தது. அதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்காத அங்கீகாரத்தை தனது செயல்பாடுகள் மூலம் அடைந்திருந்தார். அவர் பெரும் ஆளுமையாக நின்ற காலத்தில் ரங்கசாமி போன்றோர் உருவாகிக் கூட வரவில்லை என்பது யதார்த்தம்  . கண்ணன் கட்சி அரசியலை நகர்த்தும் பெரும் ஆளுமையாக உருவெடுப்பதை அப்போது யாராலும் தடுக்க இயலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக