https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 21 ஜூன், 2018

அடையாளமாதல் - 354 * புதிய ஒழுங்குகள் *

ஶ்ரீ:




பதிவு : 354 / 535 / தேதி :- 21 ஜூன்  2018

* புதிய ஒழுங்குகள்  *


நெருக்கத்தின் விழைவு ” - 48
விபரீதக் கூட்டு -04.




இளைஞர் காங்கிரஸில் இணைந்து ஆர்வமாக களப்பணியில் இருந்த நேரம் , அரசியலென்று ஒன்றும் தெரியாமல் களத்தில் கிடைக்கும் அனுபவமும் , அதை தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களும் ஒருவித மயக்கத்தையும், அங்கு நிகழும் உரையாடல்கள் மூலம் உணர்வும் கொந்தளிப்பும் எழ , அந்த நாள் சடுதியில் கடந்து போகும் . நாளை பிறிதொரு இடம் பிறிதொரு சிக்கல் . புதிய நண்பர்களின் அறிமுகம் . இதுவே வளர்ச்சி என்கிற விசை பகலெல்லாம் செலுத்தும் . பின்னர் இரவு என்பதே உரையாடல்களின் வெளியென்றானது

இளைஞர் காங்கிரஸில் கம்யூனிஸ சித்தாந்தங்களுக்கு பெரும் மதிப்பிருப்பதை அறிந்து கொண்டது அங்குதான். லெனின் , மார்க்ஸ் போன்ற பெயர்கள் உற்சாகத்துடன் உச்சரிக்கபடுவதை பார்த்திருக்கிறேன் . கீதையை பற்றிய விவாதங்களும் எழுந்ததுண்டு . அது எனது பதின் பருவத்தை தாண்டிய காலம் . இளைஞர் அமைப்பின் கருத்தியல் என்ன வெகுவாக கவர்ந்து . அதன் விசையாலேயே எங்களது நடவடிக்கைகள் விரிவடைந்தபடி இருந்தன . எங்களை போன்றவர்களை தங்களை நோக்கி இழுக்கும் கருத்தியல் என்று ஏதும் மாநில கட்சி பொறுப்பிலுள்ளவர்களிடம் இல்லை , அவர்கள் செயல்படும் எங்களை முடக்க மட்டுமே முயற்சிக்கிறார்கள் என்கிற புரிதலை அடைந்திருந்தேன் . அந்த முயற்சி  மிக வரிவாக அணைத்து தளத்தலும் எங்களுக்கு எதிர்ப்பாக இயங்கிக் கொண்டிருந்தது என்பது எங்களுக்கு அப்போது தெரியாது.

காங்கிரஸ் அமைப்பு ஒவ்வொரு தொகுதியிலும் யாரையாவது ஒரு ஊர் பெரிய மனிதரை மையப்படுத்தியே வளர்ந்து எழுந்தது. சுதந்திரத்திற்கு பிறகு சமூக விழுமியங்கள் பெரும் மாற்றமடைந்து விட்டது . அறத்தின் மீது நம்பிக்கையுள்ள தலைமுறை மறைந்த பின் எழுந்த புதிய தலைமுறை, பரப்பியம் சார்ந்த திராவிட கட்சிகளின் செயல்பாடுகளே அரசியல் என்கிற பிழை புரிதலை அடைந்து விட்ட பிறகு. அறம் என்கிற சொல்லே வசை போல தோன்ற ஆரம்பித்தது.

அரசியல் என்பதே தனிநபர் ஆதாயத்திற்கானது என்கிற நிலை ஆழமாக வேறூன்றி விட்டது . அதிலிருந்து கிளைத்தவர்கள் பொறுப்பிறகு வந்ததும் , கட்சி செயல்பாடுகள் மாற்றத்திறகுள்ளாகி விட்டன . மாற்றமடைந்த நிலைகளினூடாக மாநில தலைமை தனது பயணத்தை நிகழ்த்த கற்றுக் கொண்டது

ஒன்று நிகழ்வதற்கு பல்லாயிரம் வாய்ப்புகள். அவற்றில் ஒரு வாய்ப்பையே அது நிகழ்வதற்கு தெரிவுசெய்ய முடியும். நிகழ்ந்தபின் பிற வழிகள் அனைத்தும் இல்லாமலாகிவிடுகின்றன. அந்நிகழ்வு வரையறுக்கப்பட்டுவிடுகிறது. அதன்பின் அதை எதிர்கொள்வது மிக எளிது. அது நிகழ்ந்த அவ்வெல்லைக்கு அப்பால் நாம் செயல்படுவதற்கு பல நூறு இடைவெளிகள் இருக்கும். நாம் செல்வதற்கான வழிகள் முடிவிலாது திறக்கும்என்கிறது ஜெயமோகனின் வெண்முரசு , செந்நா வேங்கை ”..


இது கருத்தியல் முரணியக்கம் தான் தேரும் தனது வழியைப் பற்றியது . இங்கு யாரும் யாரிடமும் எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை . “எல்லாம் தெரிந்தவர்களின்எண்ணிக்கை பெருகிவிட்டது. யார் முன்நிற்கின்றனரோ அவரை சார்ந்து செல் என்பதே எல்லாருக்கும் சொல்லப்படாத ஆணை போலாயிற்று. யாரையும் யாரும் எங்கும் அழைத்துச்செல்லும் சூழலில் இல்லை. நிகழ்ந்தவற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது மட்டுமே தலைமையின் அரசியல் என்றானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்