https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 9 ஜூன், 2018

அடையாளமாதல் - 345 * உலகியல் புரிதல் *

ஶ்ரீ:




பதிவு : 345 / 528 / தேதி :- 09 ஜூன்  2018

* உலகியல் புரிதல்  *


நெருக்கத்தின் விழைவு ” - 39
விபரீதக் கூட்டு -04.



ஒவ்வொருவராக வெளியேறுவதை நோக்கி அமர்ந்திருந்த சாத்யகி அசங்கனிடம்அவையில் நிகழ்ந்த எதைப்பற்றியும் உங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நிகழ்ந்தன அனைத்தும் உங்கள் நினைவில் நின்றால் போதும். சென்று அரண்மனையில் ஓய்வெடுங்கள். நான் அரசரையும் அமைச்சர்களையும் பார்த்துவிட்டு திரும்பிவருகிறேன்என்றான். சாந்தன்ஏன் நாங்கள் பேசிக்கொள்ளக்கூடாது?” என்றான்.

சினத்துடன் திரும்பிய சாத்யகிஏனென்றால் நீங்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினால் உடனே இளிவரல்தான் எழுந்துவரும். இந்த அகவையில் அரசுசூழ்தலும் அதன் பலநூறு சிடுக்குகளும் விசைநிகர்களும் புரிந்துகொள்ள முடியாதவையாகவே இருக்கும். தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை ஏளனம் செய்வதென்பது இளையவர்களின் இயல்பு. நீங்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும், அரசர்கள் பல்லாயிரம் செவிகளும் கண்களும் கொண்டவர்கள். தனியறைக்குள் இருந்து நீங்கள் பேசும் சொற்களைக்கூட அவர்கள் அறியக்கூடும். எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதென்பது காட்டு விலங்குகளுக்கு தெய்வங்கள் அளித்த கட்டளை. அரசியல் சூழலும் ஓர் வேட்டைக்காடு என்றுணர்க!” என்றான். என்கிறது வெண்முரசின் செந்நா வேங்கை-பகுதி 6

1983 புதுவை திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு நிகழ்வும் அதனால் விளைந்ததை பற்றியும் நானும் ஆனந்தபாஸ்கரனும் பல காலம் விவாதித்திருக்கிறோம்.அதன் ஒரு கூறே அரசியலில் எனக்கு பல திறப்புகளை கொடுக்க வல்லதாக இருந்தது . ஊழின் ஆடலையும் வல்லமையையும் மனிதர்கள் மிக நெருக்கமாக உணரும் சில துறைகளில் அரசியல் முதன்மையான ஒன்று . நான் மாநில தலைமைக்கு பக்கத்தில் இருந்ததால்  பலரின் வாழ்கையை மாற்றிய முடிவுகள் எடுக்கப்பட்ட கணங்கள் ஒருவரின் ஊழ் அவருக்கு எந்த நெகிழ்வையும் கொடுப்பதில்லை என்கிற பேருண்மையை அறிந்து விதிர்த்திருக்கிறேன் . அந்த நேரங்களில் ஊழ் தன் இரையை கையாளும் ஒரு கொலை மிருகம் மட்டுமே. அவை காரணங்களுக்கும் உண்மைநிலைகளும் என்றுமே ஒன்றுகொன்று முரண்பட்டவை

ஊழ் வலிமையால் தலைவர் தான் ஒன்று நினைக்கையில் அதில் சம்பந்தப்பட்டவர்கள் வேறுவிதமான எண்ணங்களுக்கு ஆட்பட்டு தங்களுக்குள் எங்கோ , யாருடனோ , எந்த உரையாடலின் பகுதியாக சொன்னஒரு சொல்அவருக்கு கிடைக்கவேண்டியதை தடுத்து , அவருக்கு எதிரான யாருக்கோ சென்று சேர்வதை பதைப்புடன் பல நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன் . எங்கோ பேசிய ஒரு சிறு விளையாட்டு பேச்சி ஒரு பெரும் அரசியல் முடிவாக உருவெடுப்பதையும் , அதை சார்ந்து சிலர் வாழ்வதும் , காரணங்களை அறியாமலேயே சிலர்  வீழ்வதை பார்த்திருக்கிறேன்.

கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டதால் , நடக்கவிருந்த ராஜ்யசபை தேர்தல் நின்று போனது . 1985 காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த போது மீளவும் ராஜ்யசபை தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதும், கட்சிக்குள் பலர் அந்த பதவியை விழைந்தனர். அன்றைய சூழலில் வக்கீல் முருகேசன் பிரதானமாக பேசப்பட்டார் . அவர் சண்முகத்திற்கு  மிக நெருக்கமாக அறியப்பட்டிருந்தாலும் , அவர் மூப்பனாருக்கும் அனுக்கமானவர். அரசியலில் தலைமைக்கு விசுவாசம் என்கிற ஒன்றில்  முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என்ற பேதம் ஒன்று இருப்பதை பலரும் அறிவதில்லை . வக்கீல் முருகேசனுக்கு அவரின்மூப்பனார்ருக்கு அனுக்கம்என்கிற ஒரு விஷயத்தின்  பொருட்டே அவர் சண்முகத்தால் மிக கவனமாக தவிற்கப்பட்டு நாராயணசாமி அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

அதன் தொடர்ச்சியாக நடந்த பலவித கூறுகளின் குவிமுணையின் விளைஙயவால் 1999 க்கு பிறகு நிகழ் அரசியல் புதிய சமன்பாடு எழுந்து வந்தது , அதில் சர்வ வல்லமையாக திகழ்ந்து ஐம்பது வருடத்திற்கு மேலாக புதுவையின் அரசியல் போக்கை நிர்ணயித்த சண்முகம் , கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்அவரது சீடர் என சொல்லப்பட்ட நாராயணசாமி அதை உருவாக்கி வைத்தார் . அதிலிருந்து சண்முகத்தால்  ஒருகாலமும் மீண்டு அவர் இயலாமலானது. ஊழின் வழியை யாரும் அறிய இயலாது. வக்கீல் முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்,அவரது அரசியல் அந்த ஆறு வருடத்தோடு ஒரு வேளை முடிந்து போயிருக்கலாம் , தனது கைக்கு அடக்கமானவர் என்றும் , மிக அடிமட்டத்திலிருந்து வந்ததால் தனக்கு என்றும் நன்றிநோடு இருப்பார் என்கிற சண்முகத்தின் கணக்கு நாராயணசாமி விஷயத்தில் பொய்த்து போனது. அவரது அரசியல் கணக்கை காலம் நாராயணசாமியைக் கொண்டு முடித்து வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்