https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 13 ஜூன், 2018

அடையாளமாதல் - 348 * வினோத மனிதர்கள் *

ஶ்ரீ:
பதிவு : 348 / 531 / தேதி :- 13 ஜூன்  2018

* வினோத மனிதர்கள்  *


நெருக்கத்தின் விழைவு ” - 42
விபரீதக் கூட்டு -04.காலம் அனைவருக்கும் பொதுவானது , ஆனால் தெய்வம் தன்னை வணங்கும் ஒருவனுக்கு பிரத்தேயகமானது . நமது சரித்திரத்திரத்தில் தெயவம் ஒரு பகுதியல்ல , தெய்வத்தின் அகண்ட முடிவில்லா சரித்திரத்தில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் உண்டு என்பார்கள்காலம் கணக்கில்லா பாதைகளை உடையது . அதன் நோக்கத்தை என்றும் முற்றறிந்து விட இயலாது. அதை அணுகும் தோறும் விரிவடைவது . ஒரு பக்கத்தில் நான் பெரிதும் எதிர்பார்த்த சாதகமான ஒன்று நிகழாது போனாலும் இங்கு வல்சராஜுடன் தங்கியதால் வேறொரு விஷயத்தை அறிய முடிந்தது . நேரடியான பாதிப்புகளை ஆழ்மனம் உள்வாங்கியிருந்தது. அதிலிருந்து அடைந்த புரிதலைக் கொண்டே நான் எனக்கான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டேன்

அன்று இரவு என்னுடன் அவர் பேசிக்கொண்டிருந்த போது வந்த அலைபேசி அவரை நிலையழிய செய்ததை உணர முடிந்தது அப்போது எனக்கு எந்த விபரமும் தெரியாது . ஆனால் அதை அடுத்தடுத்து நிறைய அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்க , நான் அவரது தொகுதி ரீதியான சிக்கல் பற்றிய தகவல்கள் பல முனைகளிலிருந்து அவருக்கு வந்து கொண்டு இருக்கின்றன போலும் என நினைத்தேன். அதில் ஒன்று தலைவரிடமிருந்து என்பதை அவரது பேசு மொழிக்கொண்டு புரிந்துகொள்ள முடிந்து . அதன் பிறகு அவர் நிலையிழிதலின் உச்சத்திற்கு சென்றார்

நான் அங்கிருந்து விலக முயன்ற போது என்னை கையமர்த்தி இருக்க சொல்லி சைகை செய்ததும் , விஷயம் எங்கள் இருவருக்கும் பொதுவானது என்கிற யூகத்தை அடைந்தேன். அது இளைஞர் காங்கிரஸ் மாநில அமைப்பில் ஏதோ சிக்கல் என்பது மட்டும் எனது புரிதலாக இருந்தது. எனக்கும் லேசான பதட்டம் தொற்றிக் கொண்டது . ஒருமணி நேர பேச்சிற்கு பிறகு  கட்டிலுக்கு திருப்பியவர் பக்கத்தில் படுத்திருந்த என்னிடம்கமலக்கண்ணன் குழு கண்ணனின்தமாகாசென்று இணைந்து விட்டார்கள் , உனக்கு செய்தி தெரியுமா? என்றார். . எனக்கு இந்த செய்தி திகைப்பை கொடுத்ததுவல்சராஜ் கோபம் அடங்காமல் தனக்குத் தான் சொல்லிக்கொள்வது போலவினோத மயிருஎன்றார்

கமலக்கண்ணனின் குழு முழுவதும் ஒரு வினாடி எனது மனதில் தோன்றி மறைந்தது. இது என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு , அங்கு இவர்களுக்கு முன்பே சென்று இணைந்த பாலன் படும் அவமானத்தைப் பார்த்த பிறகும் எப்படி கண்ணனை இவர்கள் நம்பினார்கள் . இவர்களால் கண்ணனுக்கு ஆவது ஒன்றில்லைஇவர்களுக்கான களம் அங்கு இல்லாத போது அங்கு சென்று சேர்வதென்பது , இருளை நோக்கி செல்வது . மரணத்தின் தருணம் , எது அவர்களை இங்கிருந்து துரத்துகிறது என்பது எனக்கு புரியவில்லை . என்னை முடக்குவதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தார்கள். அவர்கள் தனித்து செயல்பட்டுக் கொண்டிருந்ததால் , இந்த தில்லி பயணம் குறித்து அவர்களிடம் என்னால் பேச முடியவில்லை . அவர்கள் தில்லிக்கு வருவது குறித்து வல்சராஜ்தான் முடிவெடுத்திருக்க வேண்டும். வலசராஜ் அவர்களுக்கான பயணத்தை ஒருங்கவில்லை என்பதை நான் அறிந்திருந்தாலும். அவர்களை என்னுடன் அழைத்து வருவது வம்பை விலைக்கு வாங்குவது. தாங்கள் கைவிடப்பட்டதாக நினைத்திருக்கலாம்.  

இவர்கள் வலிந்து தங்களுக்கு கெடுதலை தேடிக்கொள்வதில் வல்லவர்கள் என்பதை நான் முன்னமே பார்த்ததுதான் , நான் எனது எண்ணத்தை வல்சராஜிடம் செல்லாமல் அவர் மனதில் ஓடுவதை அறிய விரும்பினேன் , அந்த கணம் முதல் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் முற்றாக விலகியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 68 அழைப்பிதழ்

 காண்டீபன்