https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

ஜெ கடிதம் -1

12 டிசம்பர்   2015







திரு ஜெயமோகன் அவர்களுக்கு

என் பணிவான வணக்கம் , என்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி சந்தித்ததற்கும் , நான் கூறியவைகளை மிகுந்த அலுவல்களிக்கு மத்தியில் பொருமையாக செவி மடுத்தமையால், நான் தங்களிடம் கூறவிரும்பியதை மிச்சமின்றி கூற முடிந்தமைக்கு தங்களுக்கு நன்றி

திறந்த மேடை திட்டம் குறித்தது சுமார் ஏழு ஆண்டுகால தேடல் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருப்பதை முழுமையாக உணர்கிறேன் . என் தேடல்
" ஓர் சரியான தொடக்கப்புள்ளி"
"அதற்கான பாடதிட்டம்"
இப்படியாக என் என்ன ஓட்டம் இருந்தது , தங்களின் எழுத்துடனேயான என் அறிமுகம், சுமார் மூன்று மாதங்கள் மட்டுமே , அதன் தாக்கம் பற்றியும்  அதனால் எனக்கேற்பட்ட திறப்பு பற்றி ஏற்கனவே தங்களி நேரில் சந்தித்த போது கூறிவிட்டேன்.
பிரபலமானவர்களை பற்றி ஊடகங்களால் அவரைப்பற்றி ஒருவருக்கு எற்படும் மனப்பதிவு நேரில் சந்திக்கும் போது பெரும்பாலும் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இருந்திருக்கிறது . ஆனால் அது அவர்களது தவறல்ல, காரணம் வெற்றி என்பதற்கு லோகாயதமான காரணமும் அதற்கான நியாயங்களும் அவர்களிடம் இருக்கும். அவர்கள் "மனோ வாக் காயத்தினால் " ஓர் நேர்கோட்டில் தங்களின் இருத்தலியலில் நியாயங்களால் நிகர்நிலை நிற்பவர் அல்லர்.
பல்வேறு பிரலபலர்கள சந்திக்கும் வாய்ப்பில் இருந்த எனக்கு , என்மீது தாக்கத்தை ஏற்படித்தியவார்கள் ஒருகை விரல் என்னிக்கைக்குள் அடங்குவர் அதில் தாங்கள் தலையாய இடத்தில் உள்ளீர்கள் . ஓர் முடிவிற்கு வருவதற்கு முன் நிறைய தயக்கமிருக்கும் , மெதுவாக அதை நோக்கி நகர்ந்து என் பதிவுகளை ஏற்படுத்திக்கொள்வேன். ஏமாற்றமடையாமல் இருப்தற்கான என் அனுகுமுறை இது.
தங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது இதுவரை இல்லாத பலத்திறப்புகளுக்கு ஆளானேன் . ஒன்றரை மாத்த்தில் வெண்முரசு முடித்தேன். மிகுந்த தயக்கத்துடன் விஷ்ணுபுரம் தொட்டேன்,காரணம் , அதற்கு இருந்த ஆரவாரமாக இருக்கலாம். தங்களை கோயம்பத்தூரில் சந்திக்க கிளம்பும்போது கடைசி முப்பது பக்கம் மீதமிருந்தது. கீதை உரையைப்பற்றிய உங்களுடைய குறிப்பே என்னை கோயமுத்தூர் வரவழைத்தது, மற்றபடி தங்களை சந்திக்கும் திட்டமெல்லாம் இல்லை. எனக்கு அங்கு யாரையும் தெரியாது மூன்று நாள் தங்குவதாக திட்டம். ஆனால் அதே சமயம் ஒரு ஒன்னறை மணி நிகழ்விற்காக காலை முதல் காத்திருப்பது பைத்தியக்காரத்தனமானதாக தோன்றியது.
முதல் நாள் தங்களின் உரையை கேட்ட பிறகு , என்னுடைய பல வருடத்தேடல் முடிவிற்கு வந்ததாகத் தோன்றியது . அன்று தங்களை சந்தித்து என் விசிட்டிங் கார்டை கொடுத்து என்னை அறிமுகம் செய்துகொண்டேன் .
அடுத்ததாக தங்களிடம் பேச வேண்டிய விஷயங்களையும் அதற்கு நீங்கள் என்ன கூறப்போகிரீர்கள் என யோசிக்க ஆரம்பித்து விட்டேன் . அந்த சந்திப்பு மிக இனிமையானதாக முடிந்ததை மறுபடியும் , மறுபடியும் என் மனத்தில் வந்தபடியே இருந்தது .
இது சம்மந்தமாக தங்களை மறுமடியும் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன் .
என்னை மிகுந்த சிந்தனைக்கு ஆட்படுத்தியது, வெண்முரசை நீங்கள் அஸ்தீகரிடமிருந்து தொடங்கியது ,
என்னை பாதித்தும் / என் மனப்பதிவுகளும்
ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்றான்.

ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை…ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையை” என்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.

இதுவே எனக்கு முதற்திறப்பை தொடங்கிவைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் என் மனம் இதற்கு சொந்தம் கொண்டாடியது , என் வெளியிடப்படாத கருத்திற்கு நீங்கள் சொற்களை அடுக்கியதாக என்னுடன் விவாதித்தது , ............ஆம் அது சரியே, திரு  ஜெயகாந்தனை பற்றி நீங்கள் சொன்னது சபலத்திலத்தையும்,சஞ்சலத்தையும் ஜெயித்தவர் என்று , நான் இப்படித்தான் என்று பிறரர் அறிய வாழ்ந்த கவிஞர் திரு.கண்ணதாசனுக்கும் , திரு.ஜெயகாந்தனுக்கும் பெரும் வித்தியாசமுண்டு என நினைக்கிறேன்
சபலத்திலத்தையும்,சஞ்சலத்தையும் ஜெயிப்பதென்பது அதை மறுப்பதா,மறப்பதா என்பதும் உடன்பட்டு மறுமுனையில் சமன்படுத்துவது மற்றும் நியாயபடுத்துதலின் மத்தியில் மறைந்திருக்கும் நுட்பம் .
சாஸ்திரங்களில் ஆமோதிப்பதிக்கும, மறுப்பதற்கும் சகல விதமான வாதங்களை வைத்துவிட்டு , தள்ளி நின்று நகைக்கிறது. பல சமயம் தன்னை வைளிக்காட்ட விரும்பாதது போலவே தோன்றுவதும் . வதையே.
முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.

இது சத்தியமானது மனித இனத்தில் காணாத ஓர் கட்டுப்பாட்டு பிற உயிர்களில் காணமுடிகிறது. புரிதலின் , உச்சம் என நினைக்கிறேன். சிருஷ்டியில் மிக பலவீனமானது மனிதப்பிறவியே . அது தன் வாழ்நாள் முழுவதும் தன் மேன்மையை கண்டடைவதில் இழியட்டும் என விட்டது பெருந்தெய்வம் .இது வரமா , சாபமா? அடைந்தவனுக்கும் அடையாதவனுக்கும் சூழ்நிலையை வைத்து விளையாடுவது ஒரு கணம் கொடுமையானதாகப் படுகிறது . நம் கோபம் யாரை என்ன செய்யும் .
“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.

நீங்கள் கூற விரும்புவதாகத் எனக்கு தோன்றுவதும் , திறப்பு எனப்படுவதும் இதுவே என நினைக்கிறேன் காரணம் தெரிந்ததையே புரியவைக்க முடியும்-
ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.

எப்பேற்பட்ட வரிகள்.
தியானத்திலும் , யோகத்தாலும் ஒரு சாதகன் அடையும் நிலை அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும் . புரியாத ,வறட்சியான ஸமஸ்கிருத்தால் ,பத்திர எழுத்தர் போல , பௌராணிகர்கள் அல்லாடுவது இதைத்தான் .
இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் மொழி ஆளுமை அதை சாதாரணமாக புரியவைக்கிறது
நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.

மந்திர த்ருஷ்டாக்கள் கண்டடைவது இதுவோ !! ஆனால் இந்த வரிகள் படிக்க படிக்க ஏதோ அநிர்வசநீயமான உணர்வுகளை கட்டுப்படுத்தவே இயலவில்லை .
ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்.”

அடிப்படையான விஷயங்கள் நமக்கு கிடைக்காமலும் பிறருக்கு  மிக எளிதாக கிடைப்பதும் , மற்றவர்களால் கனவிலும் நினைக்க இயலாதது சதாரணமாக கிடைப்பதும் , வாழ்கையின் சில நிமிடங்களில் நம்மை நிலைகுலைய வைக்கிறது , என எப்பொழுதும் நினைக்க வைப்பதுடன் , வலிமிகுந்ததாக இருப்பது . இந்த வரிகள் என்னை கட்டுபடுத்த இல்லாமல் கண்ணீர் பெருக்க வைத்தவை

சத்யவதியின் முகம் சற்று மாறுபட்டது. “ஆனால் பேரரசியரின் ஊழ் என்றுமே கரியதுதான். தேவயானியின் ஊழும் பிறிதொன்றல்ல. அரியணையில் அமர்ந்தவள் விழையும் அனைத்தும் கைதொடும் தொலைவில் இருக்கும். செல்வம், அரசு, மக்கள், புகழ். ஒவ்வொன்றுக்கும் நிகராக தன்னுள் இருந்து மதிப்புமிக்க ஒன்றை அவள் இழந்துகொண்டே இருப்பாள். இறுதியில் வெறுமையையே சுமந்துகொண்டிருப்பாள்.”

முன் சொன்ன என வரியின் விவரணமாகத்தான் இந்த வரி அமைந்ததாக என்னினேன்

உண்ட உணவு ஜீரணித்து மேலும் அடுத்த வேளைக்கு  வழிவிடுவது; போல் வெற்றி இறக்கம் காணுதல் நல்லூழே
------
முழுமை என்பது கூட்டத்தின் அமர்வில் ;தன் பாதுகாப்பு குறித்த மகிழ்வில் அல்ல , யாராலும் தனக்கு உதவமுடியாமை குறித்த தன்னற தெளிவுடைமை.
------
 அப்போது அறிந்தேன், உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது என்று. அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்.”

----

பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.”

எனக்கிது கயாஸ் தியரி மற்றும் ஸ்டிங்தியரிப் கலவையைப் போல்லுள்ளது, அது ஓடி மூச்சுவாங்க கூறுவதை தாங்கள் போகிற போக்கில் கூறுவதை பிரமிப்புடன் பார்க்கிறேன்
பொருளில்லாத நிகழ்வோட்டங்களின் உள்ளே மேலும் மேலும் பொருளின்மைகள் ஊடுருவிக்கலக்க இருத்தலும் சுவைத்தலும் அறிதலும் கடத்தலும் ஒன்றேயாகி மண்புழு மண்ணைத் தின்று தின்று சென்றுகொண்டே இருந்தது. முடிவேயில்லாத நெளிதல். நெளிவு மட்டுமேயான உடல். நெளிவுக்குள் நெளிந்து செல்லும் அகம்.

எனக்கு இது மனித வாழ்வினை கடும் கோபத்துடன் சொல்வதாக ஆறுதல்  படுகிறது ,
---
தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் மூதாதையர். அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது.”

நான் சிரித்து மகிழ்ந்து இருந்த தருனம் இவை , இதை ஏற்கவைக்க முடியுமானால் , எவரையும் உடைக்கும் வரிகள் இவை ,
--------
“தார்க்கிகன் மனம் திகைக்கும் ஒரு தருணம் உண்டு கூத்தரே” என்றார் சௌனகர். “ஒவ்வொன்றும் பிசிறின்றி பிறிதுடன் இணைந்து ஒன்றாகி முழுமைகொள்வதைக் காணும்போது அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் முழுமை இப்புடவியின் இயல்பல்ல. அது முழுமைக்கு சற்று முன்னரே தன்னை குலைத்துக்கொள்ளும். அது நிகழும் புள்ளியைத் தேடி அவன் அகம் பதைக்கிறது. அவனை தர்க்கத்தின் கருவிகள் துழாவுகின்றன. ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்படுகிறான். முழுமையாக. மீதமின்றி. அப்போது அவன் தர்க்கத்தின் எல்லையை அறிகிறான். நம்பிய தெய்வத்தால் கைவிடப்பட்டவனின் வெறுமையை சென்றுசேர்கிறான்.”
-------

முன் சொன்ன என வரியின் விவரணமாகத்தான் இந்த வரி அமைந்ததாக என்னினேன்


ஸ்மிருதிகளனைத்தும் சொல்வது ஒன்றே. அதை அறம் எனலாம். சொல்லும் கோணங்களும் செல்லும் வழிகளுமே மாறுபடுகின்றன என்பார்கள். ஒவ்வொரு யுகத்துக்கும் உரிய ஸ்மிருதிகள் வேறு. மாறுவதனாலேயே ஸ்மிருதிகள் வாழ்கின்றன, மாறாத தன்மையால் சுருதிகள் வாழ்கின்றன. ஸ்மிருதிகளை சுருதிகளுக்கு நிகராக்குபவன் மாறா இருளை அடைகிறான்” துரோணர் சொன்னார். “ஸ்மிருதிகள் ஆடலுக்காக வகுக்கப்பட்ட களங்கள். அவை ஆடலை நெறிப்படுத்துகின்றன. ஆடலுக்குப்பின் அவை அழிக்கப்பட்டாகவேண்டும்.
-
மிக நுட்பமாக , அதே சமயம் காலத்திற்கேற்ப மாறுதல்களை அடைய வேண்டியதை பற்றி பேசுகிறது ,ஆனால்        இன்றைய பௌராணிகர்களுக்கு புரியவேண்டியது இது என நினைக்கிறேன்
---
“இதோ என தொட்டறிவது மனம். அறிந்தவற்றை அடுக்குவது புத்தி. அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம். அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம். அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம். அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம். அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம்இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.”
மீளாவிட்டாலும்தான் என்ன என நான் எண்ணிக்கொண்டேன். அதுவே வழிபாடு”

இது ஏறக்குறைய விஷ்ணுபுரத்தில் பிங்களுடன் அவர் குரு விவாதம் , மற்றும் அந்த காவியத்தில் உள்ள பல இருக்கமான உடையும் போது அது இதன் அடிப்படையில் தான் நடக்கிறது என நினைக்கிறேன்
----
உலக உயிர்கள் ஒரு விதி, ஒரு செயல்பாடு என்பது ஓர் வாக்கியமானால் அதில் ஒரு ஜீவன் , ஒரு சொல்


இந்த வரிகள் என்னை ஏதோ செய்கிறது .நினப்பதை வார்தைகளில் கொண்டு வரும் தவம் எனக்கில்லை இருப்பினும் முயன்றால் என்ன.
ஆம்  ....பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஓர் காவியமாக்கினால் ஆம் அதில் மட்டுமே ஓர் ஜீவன் அர்த்தமுள்ள சொல். வாழ்கை எனும் பயணத்தில் காலில் தட்டுபடும் சில பொருள்கள் சேகரிக்க தொடங்கினால் அவை எதிர்காலத்தில் நம் வாழ்கையில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவாக இருக்கும் என உறுதியாக நினைக்கிறேன் .
--
நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் கரவுகள் தெரியவருகின்றன. அந்த நுண்மைகளின் வாயிலற்ற கோட்டை முன் நம்மைக் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்.”

பெரும் வேதாந்திகளை இது இப்படித்தான் சித்திரவதை செய்கிறது , சரியான திசையிலே செல்கிறோம் என்கிற செருக்கு நிச்சயமாக வாயிலற்ற கோடை முன் நிறுத்திவிடுகிறது . வாயிலற்ற கோட்டை ........என்ன ஒரு சொல்லாட்சி .



இது ஒரு களம் அரசே. இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் அல்லவா?”

வலியையும் மரணத்தை பற்றியும் இதயம் நோகாமல் இதைவிட சிறப்பாக யார் சொல்லிவிட முடியும் .
--

“அவர் காதல்கொண்டார் என நினைக்கிறீர்களா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அது காதலல்ல. ஆம், அதை அன்னையென நான் அறிவேன். காதலுக்கு அப்பால் ஒன்றுள்ளது. அது…” என்று குழம்பிய காந்தாரி தன் மேலாடையை இழுத்து தோளிலிடும் அசைவின் வழியாக உறைந்து நின்ற சொற்களை மீட்டுக்கொண்டு “அதை வழிபாடு என்பதே பொருத்தம்” என்றாள். கிருஷ்ணன் அவளை நோக்கியபடி விழி அசையாமல் அமர்ந்திருந்தான். “கண்ணா, மிகமிக அரியதோர் உணர்வு இது. பெண்ணை தாய்மை வழியாகவோ காமம் வழியாகவோதான் ஆண்கள் அணுகுகிறார்கள், அறிகிறார்கள். என்றோ எவரிலோ அதற்கப்பால் ஒன்று நிகழ்கிறது. அந்த ஆண் ஒரு பெண்ணை வழிபடுகிறான். அவள் காலடிமண்ணையும் போற்றும் பெரும் பணிவை அடைகிறான்” என்றாள் காந்தாரி.
“அது மிக ஆபத்தானது யாதவனே. ஏனென்றால் அதன் அரியதன்மையாலேயே அது புரிந்துகொள்ளப்படாது போகும். அவ்வுணர்வை அடைபவனுக்கேகூட அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆகலாம்” காந்தாரி தொடர்ந்தாள். நெடுநாட்களாக அவள் எண்ணியிருந்த சொற்களென்றாலும் அவளால் அவற்றை பொருள்திகழ கோத்தெடுக்க முடியவில்லை. “அன்னையின் புறக்கணிப்பும் காதலியின் புறக்கணிப்பும் கொடுநஞ்சாக ஊறக்கூடியவை. அதற்கும் அப்பாலுள்ள இப்பெரும்புறக்கணிப்போ ஆலகாலம்…” மேலும் சொல்ல விழைந்து சொற்களுக்காக தவித்து “அங்கன் அகம் கொண்ட புண் ஆறிவிடும்…” என்றாள்.
-
ஓர் உறவு உடையும்போது ஆண்கள் பெரிதும் துயரமடைவது அதை பிறர் எப்படி கொள்வார்கள் என்று எண்ணிக்கொள்வதனால்தான்”
-
மிகமிக எளிய உயிர்கள். ஆணும் பெண்ணும். மிகமிக பழகிப்போன நாடகம். அதைமட்டும் உணர்ந்துகொண்டால் சினமும் வஞ்சமும் நெஞ்சில் எஞ்சியிருக்காது. இனிமை மட்டும்தான். அதைத்தான் இன்று கண்ணனின் இசையில் கேட்டுக்கொண்டிருந்தேன்.”
-
விழி சொல்லாததை மொழி சொல்லக்கூடுமா?
-
இச்சொற்களுடன் நீங்கள் நின்றிருக்கும் எந்நிலத்திலும் என் கால்கள் இல்லை. நான் உணர்ந்திருப்பது காலமற்ற வெளியில் வாழும் தெய்வங்கள் கூறுவது.

இச்சொல்லாடல்கள் முற்றிலும் புதிய அனுகுமுறையை தோற்றுவிக்கும் வல்லமை உடையது, பிரமிக்கத்தக்கது
-
இம்மண்ணுக்கு நீங்கள் அளித்த அனைத்தும் உப்பென்றும் உயிரென்றுமாகி நிறைந்துள்ளன. நானோ உங்கள் சொல் சென்று தொட்டு மீளும் சிற்றுயிர். தானே நகரும் உரிமையற்றது நிழல். ஆயினும் என் உள்ளம் எப்படிச் சுழன்றாலும் அங்கேயே சென்றமர்கிறது
-
அர்ஜுனன் “இது வெறும் தற்செயல்” என்றான். “மானுடனே, புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதென்றுணர்க!” என்றான் சித்ரரதன். “நான் காத்திருந்த மானுடன் நீயே.” அர்ஜுனன் வியந்து நின்றான்.


‘‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’
‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது. அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும்’.
‘உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை துணிச்சலாக முன்வைப்பவனாகவே இருப்பான். ஒருபோதும் தன் கருத்துக்களை சூழலில் இருந்து பெறமாட்டான். தான் அறிந்த வாழ்விலிருந்தே பெறுவான். அதற்காக அன்னியமாகவும் அஞ்சமாட்டான்’.

இதற்காகவே தங்களை சந்திக்கும் நல்லூழ் நான் பெற்ற பேறு.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலம் கேட்பாடற்ற கிடந்த என் தந்தையின் புத்தக அலமாரியை புதிதாக்கி அதை நிரைக்க தொடங்கி இருக்கிறேன் .   இதற்கு நீங்கள் மட்டுமே காரணம் , என்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிரீர்கள்.
நன்றியுடன்
க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்
புதிவை





குறிப்பு
இது தங்களுக்கு என் முதல் கடிதம் , குற்றங்களை பொறுத்தருள வேண்டுகிறேன்




மாமலர் வெப்பத்துளை - பதிவு



மாமலர் வெப்பத்துளை - பதிவு



மாமலரின் 16 முதல் 20 வரையிலான பதிவுகளில் வரும் சம்பவங்களை திரு.ஜெயமோகன் அவர்கள்  கூறு முறையில் இதுவரை கையாண்ட பாணியில் இது ஒரு பெறும் பாய்ச்சலை எனப் பார்க்கிறேன் . இது போன்றவற்றை "பௌரானிக " மரபில் திகழ்த்து கலையில் ஒரே விஷயத்தை பல்வேறு மூலநூல்களின் ஊடாக சொல்லப்படும் விளங்கிக் கொள்ள இயலாத ஆனால் பல அடுக்குத் திறப்புகளை கொண்ட நிகழ்வுகளின் இணைவுகள் மற்றும் தொடர்புகளை நிகழ்த்துவது போல் இந்த பகுதிகளில் காண்கிறேன். மூளையின் மடிப்புக்களை அவை சொடுக்குவதை உணர்கிறேன். அதன் விளைவாக தோன்றுவதை இப்படி தொகுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் .
ஒருமுறை சம்பவித்தது மறுமுறையும் சம்பவிக்கும் என்பதற்கு இன்று இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே சாட்சி என ஜகத் சிருஷ்டி பற்றி ஶ்ரீமத் பாகவதத்தில் ஒரு வரி வரும். கீதையில் கண்ணன் தனக்கும் அரஜுணனுக்கும் பல பிறவிகள் கழிந்திருப்பதையும் தான் இன்னும் எடுக்க இருக்கும் பிறவிகள் குறித்து தனக்கு தெரியும் என்றும் , 'அர்ஜுணா உனக்கு சிறு பிரியத்தில் நடந்தவைகளை நீ மறந்து விட்டாய் என்பது போல வரும்.இது "ஸ்டிங் தியரி" போல பிரமாண்ட ஆர்வத்தை விதைப்பதில் திரு.ஜெயமோகன் அவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளார் .
'இனை உலகம்' கருதுகோல் போல பீமனை புரூரவஸின் இடத்தில் வைத்தல்லாமல் தன் பூர்வ ஜன்ம நினைவுகளாக புனைவது எதிர்பாரத யுக்தி முண்டனை ருத்ரனாக்கி அவனுடன் பயனிக்க வைத்துள்ளார் .
இந்த கோணத்தில் கல்யாண சௌகந்திக வாசம் திரௌபதியின் எதைக் பற்றிய குறியீடு என விளங்கவில்லை . எதிர்கால கணக்கில் இதை எங்கு முடிவார் என புரியவில்லை .....அற்புதம்
வலக்கையிலொரு சிறு வெண்மலரை. இடக்கையில் ஒரு கூழாங்கல். அதை பீமன் முன் நீட்டினான். “இது விண்ணிலிருந்து உதிர்ந்த மலர். இது அவளை நாடிச்செல்லும் ஒரு மானுடன். இதைத் தொடுக!” என்றான். பீமன் கை நீட்டி அந்தக் கூழாங்கல்லை தொட்டான். “செல்க!” என அவன் சொன்னான். 
அது ஒரு கனவென்று அவன் எண்ணினான். கனவுக்குள் என அவன் குரல் ஒலித்தது. “செல்க…” பீமன் இனிய துயிலில் என உடல்தளர்ந்தான். ஆம் கனவேதான் என்று சொல்லிக்கொண்டான். “செல்க!” என மீண்டும் எங்கோ முண்டனின் குரல் ஒலித்தது
உலகின் சேவல்கள் கோவென....கருக்கலில் கூவுவது அதன் கோவான சூரியனை நோக்கி என்பதாக இளவேனில் எழுந்ததும் முதற்சேவல் மரக்கிளையில் ஏறி நின்று செங்கனல் கொண்டையைச் சிலிர்த்து சிறகடித்து “எங்கோ எழுந்தருளாயே! எங்கோ எழுந்தருளாயே!” என்று கூவியது.
சேவலுக்கு முன் துயிலெழ வேண்டிய நாகணவாய் பின் எழுகிறது . அரசன் இருக்க  தேர்பாகனை முன் சொல்லி நாள் திறப்பு வழமையல்ல என்பதை
கீழ்வான் விளிம்பில் அருணனின் தேர்ப்புரவிகளின் குளம்புத் தடங்கள் சிறு செந்நிறத் தீற்றல்கள் எனத் தோன்றலாயின. “வருக, எம் தேவா!” என்று கூவியபடி நாகணவாய்கள் துயிலெழுந்தன. தேர்முகம் தெளிந்து கிழக்கே ஒளியரசன் வானிலெழுந்து செங்கதிர்முடி துலங்கி வந்தான்.
துயிலில் விலகும் இடமும் காலமும் தன்னிலையும் நினைவும் , "துயக்கு மயக்கு மறப்பு " என நுண்மான் நுழைபுலம்  விலகிப் பொதிவது அவனை விட்டு விலக்கியும் துயில் மீள்கையில் எழுந்து உறக்கத்தில் விட்டு விலகியவை மீண்டும் நொடியில் இறங்கி நிறைகின்றது.
கற்றலின் நின்றவை ,வாழ்வு கணங்களின் தொகுப்புகள் என உறங்கி வழித்ததும் ,அதற்கு முன் அவை அவனிடமில்லை எங்கு சென்று உறைந்திருந்து மீண்டது , எழுந்தவுடன் அனைத்தும் துலங்கி எழுகிறது. இதுவும் 'நைமித்திக பிரளயமான'  எனும் மரணத்திற்கு வெகு அருகில் சென்று மீள்கிறது
அவன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இடமும் காலமும் தன்னிலையும் துயிலின்போது விலகி நின்று விழிப்பிற்குப்பின் மெல்ல வந்தமைவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். அவை விழிப்பின் மூன்று நிலைகள் மட்டுமே என கற்றிருக்கிறான்.
இது வேரொரு கணமென்று இங்கு சொல்லப்படுகிறது. முண்டனை சூதன் பாணன் போல திரு.ஜெயமோகன் அவர்கள் பயன்படுத்துவார் என நினைக்கையில் அவனை மட்டுமின்றி நம்மையும் நினைக்கவியலாத உலகில் கொண்டு செல்கிறார்.
புருவம் சுருங்க அவள் “யார்?” என்றாள். “என் கனவில் எழுந்த ஒருவன்… இன்னும் வாழ்ந்திராதவன்” என்றான். “விந்தைதான்” என்று அவள் சொன்னாள். 
வாழ்ந்திராதவன் ஆம் அது உண்மை ஆனால் அண்டத்தின் வேரொரு 'சதுயுகத்தில்' வாழ்ந்தவனை இந்த 'சதுர்யுகத்தில் ' இன்னும் வாழ்திராதவன் என சொல்லுகிறாரா? .......சிருஷ்டி கிரமத்தின் மர்மத்தின் திரை விலகுவது  போல பிரமிப்பு  .....என நினைக்கத் தோன்றும் இடம் இது.

கானாடலில் அவனுக்கு முதற்படைத்துணை என இடம் நின்று உடன் வருபவன் அணுக்கனாகிய ருத்ரன். குற்றுடலும் இரட்டை மண்டையும் குரங்குக் கண்களும் கொண்ட முண்டன். அவன் சிறுமைந்தனாக இருக்கையிலேயே உடன் வந்த விளையாட்டுத்தோழன்.சிறுவனாகவே உடல் எஞ்சிவிட்டதனால் உள்ளத்தையும் அவ்வாறே அமைத்துக்கொண்டவன். அவனுடன் பேசும் அனைவரையும் சிறுவர்களென்றாக்கும் ஊக்கம் கொண்டவன். ஆனால் சொல்கடந்து நுண்புலம் தேரவும் அவனால் இயலுமென புரூரவஸ் அறிந்திருந்தான். ஆக இது ஒரு இரு வழி பாதை போல புரிதல் ஏற்படுத்தி இரண்டிற்கும் இனைவு கொடுத்தது. 'வெப்பதுளை' கருதுகோள் என பின்னிவிடுகிறார். இது வாசிப்பவர்களை மயக்கமுற செய்வது. 
அதில் நான் பிறிதொருவனாக இருந்தேன்” என்றான். ருத்ரன் அவனருகே வந்து “அரசனாகவா?” என்றான். புரூரவஸ் குழம்பியபின் “அரசனைப்போல. ஆனால் அரசன் அல்ல. ஐந்து உடன்பிறந்தாரில் இரண்டாமவன் என எவரோ சொன்ன நினைவுள்ளது” என்றான்.

அவள் சுவையை எண்ணி இதழூறி வழிய சொல்லிலா குதலைமொழிகளுடன் அவன் அவள் அருகே இருந்தான். அப்போது அவன் அந்த மலர்மணத்தை அறிந்தான். அதுவரை அறியாததாக இருந்தது அது. பிறிதொன்றிலாது வந்து சூழ்ந்துகொண்டது நல்லவேளை பாலி பூமியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை எப்போதோ சொன்ன குரங்குகளில் பொதிந்து 'கிலி' ஏற்படுத்தியபடி ஏதும் சொல்லாது விட்டார் .
வேட்டுவேளா குளவி ரீங்கரித்து சுழன்று சுழன்று கொட்டி கொட்டி அது தன் புழுவையும் குளவியாக்குகிறது என்பார்கள். சூதர்கள் பாடிப்பாடி வேடர்களை அரசர்களாக்குகிறார்கள் என்று என் தந்தை சொன்னார்” என்றாள். அவன் சற்றே சினம்கொண்டு “அனைத்து வேடர்களும் அரசர்கள் ஆகிவிடுவதில்லை” என்றான். “ஆம், ஆனால் அரசர்கள் அனைவரும் வேடர்களாக இருந்தவர்களே” என்றாள் சியாமை. வெறுப்பேற்றுவதின் உச்சம்
அவ்வாறுதான்… பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றாள். “நன்று! வெற்றுடலுடன் ஒளியில் உன்முன் தோன்றமாட்டேன்” என்றான் புரூரவஸ். “இம்மலரின் நறுமணத்தை எண்ணி ஆணையிடுங்கள்” என்றாள். “அவ்வாறே ஆணையிடுகிறேன்” என்று அவன் சொன்னான். அதை மின்னலில் வெளிப்படுத்தியது ஒவ்வொன்றையும் நினைவில் எடுத்து மீட்டுவது ஆசகாயத்தனம்
ஆயுஸ் வெறுமனே நோக்கியபடி நின்றான். “நான் பாண்டவனாகிய பீமன்… இது என் சோலை…” என்றான் புரூரவஸ். ஆயுஸ் திரும்பி நோக்கியபோது மிக அப்பால் படைத்தலைவனின் செந்நிறச் சிறுகொடி தெரிந்தது. அவன் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றான். புரூரவஸ் மீண்டும் அந்த நீர்நிலையருகே அமர்ந்தான். அவன் விழிமறைந்து நின்று ஆயுஸ் நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து துயில்கொள்பவன் போலிருந்தான் புரூரவஸ். ஆயுஸ் எண்ணியிராது ஓர் ஐயத்தை அடைந்தான். அங்கிருப்பவன் பிறிதொருவன்தானா? எப்படி அறியக்கூடும்? மானுட உடலை மட்டுமே அறிய வாய்க்கிறது. உள்ளே குடிகொள்வது எது? அது இடம்மாறிவிட்டதென்றால் அது உரைப்பதன்றி வேறு சான்றுதான் எது? முன்பே நிகழ்த்திய நுழைபுலம் எனும் கருதுகோளை இங்கு இருவழி பாதையாக்கி முடிக்கிறார்

ஆயுஸ் ஒரு நறுமணத்தை உணர்ந்தான். பாரிஜாதம் எனத் தோன்றிய மறுகணமே செண்பகம் என்றும் தோன்றியது. மிக அருகே அந்த மணம். இல்லை, மிக அப்பால் அலைபெருகி விரிந்த நறுமணப்பெருக்கின் சிறு துளியா?சரி இந்த ஆயுஸாவது அந்த காலமடிப்பில்
நிற்கப்போகிறானா ............

தந்திர மொழிபெயர்ப்பு - பதிவு

தந்திர மொழிபெயர்ப்பு - பதிவு



மதுசூதனனின் பதிவு மிகச்சரியாக ,செறிவானதாக இருந்தது. அவர் சொன்னது போல 'பழைமைவாதம்' என்பது ஒரு தந்திரமான மொழிபெயர்ப்பே , ஏனெனில் அது நின்று பேசும் மேடையின் கால்களில் ஒன்றை உடைத்தே தருகிறது . சொற்களுக்கு தரும் அதே நிகர்நிலை பேனுதலை நிற்பதற்காகவும் செலவிட நேரிடும் . பல சமயம் அது கட்டுபடியாவதில்லை . விழுமியங்கள் தான் பேசுபொருள் என்றாலும் நீங்கள் இப்படி சொன்னது சிறப்பு


//நீங்கள் சராசரி நிலைமையை சொல்வதாக சொல்லலாம், நீங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்வதாகவோ  அனுமானங்களையோ சொல்லலாம். ஆனால் எப்படி இருந்தாலும் நீங்கள் ஒரு ஆண் மட்டுமே//

ஊழின் கணம் - பதிவு





|| இளையோனே, நான் காட்டான். உங்கள் மெய்யறிதல்கள் எனக்கில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். இது ஊழின்கணம். ஆகவே இக்கருணை உங்கள் உள்ளத்திலெழுகிறது. இதன்பொருட்டு நீ எஞ்சிய வாழ்நாளெல்லாம் துயர்கொள்வாய்” ||


ஊழிப்பெரு நிகழ்வு இது,  அது முன்னரே நிர்மாணிக்கப்பட்டது. அதற்கான சாலை எப்போதும் உள்ளது , ஆனால் அதன் வாசல் திறந்தது இன்று .

மாகாபாரத பிற்கால நிகழ்வுகளை மாற்றியது இத் தருணம் . ஜயத்ரதன் இன்று அழிந்திருந்தால், அபிமன்யு வதம் நிகழாமல் போயிருந்தால் , பரீட்சித்து அகாலத்தில் பதவிக்கு வராமல் இருந்திருந்தால் , சாபம் கிடைக்காது போயிருந்தால் , ஜனமேஜயன் சர்ப்ப வேள்வி நிகழ்த்தாது போயிருந்தால் , ஆஸ்தீகர்ருக்கு வேலை இல்லாது போயிருந்தால் என இருந்தால் , இருந்தால் , இருந்தால்............


வெண்முரசு- முதற் கனல் - வேள்வி முகம் - வேறு இடத்தில் வேறு பெயரில்  தொடங்கியிருக்கும் .

வெண்முரசு மாமலர் . பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள் பதிவு





பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள், அதை ஆண்கள் வைதிக, சம்பிரதாய , மனொருக்கம் ,காமம் சாராத முதுமையின் வழியாக அவர்களை அங்கீகரிகரிப்பதை தவிர அவர்களுக்கும் வேறு எல்லையில்லை .அதன்பால்பட்டு,  நிகர்நிலை உள்ளவர்கள் அதன் எல்லைகளை வகுக்கிறார்கள் , அவர்கள் அடிமை பட்டிருக்கிறார்கள் என்றும்  , மற்றவர் அவர்களை  அங்ஙனம் நிலைநிறுத்த முயல்வதும் அவசியமற்றது.
ஆம் சலிப்பாக சொல்லி சென்றாலும் பெருமிதமாக கருதுவது அங்குதான். அந்த இடம் முழுக்க முழுக்க அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த இடத்தின் அரசியாக அவள் இருக்கிறாள்.   அதை ஒரு ஆணால் மட்டுமல்ல அவன் தாயாலும் எப்போதும்  கைப்பற்ற முடியாது .பெரும் பூசல் துவங்குவது பிறிதெங்கும் இல்லை .அவள் அனுமதியின்றி  ஆண் அங்கு நுழைவதைக்கூட  அவள் விரும்புவதில்லை. 
திரு.துரைவேலு அவர்களின் இந்தப்பதிவு யாராலும் மறுக்க முடியாதது.

மாமலர் கவிதை - திரு.துரைவேலு என் பதிவு





இரண்டு பிரிவுகளாக உள்ளது திரு.த.துரைவேலு அவர்களின் கவிதை 
இரண்டும் நுட்பத்தையே பேசுகின்றன .
ஒன்று நுட்பம் மற்றொன்று நுட்பத்தில் நுட்பம். 
பிரம்மத்தின் சகுண , நிர்குண  இருமை நிலைப்போல.
"முட்செடியில் மலர்ந்தாலும் மென்மையை இழக்காத.
சகதியில் வேர்கொண்டிருந்தாலும் மணம் வீச தவறாத பெருநெறி"
அற்புதமான வரிகள்.
ஆம்,மாமலர் போற்றுதலுக்குரியது

திரு.துரைவேலு பதிவு



திரு.துரைவேலு பதிவு 







அரி கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன்.  மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும் நமக்கு வெளிமுகமாக பார்ப்பதுதான் அதிகம். வெளியில் என்ன நடக்கிறது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதையே அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் பார்வையை உட்புறமாக செலுத்தி நான் என்ன நினக்கிறேன்,  ஏன் இப்படி நினைக்கிறேன் எப்படி என் சிந்தனை நிகழ்கிறது என காண்பது அரிது.  தான் உள்ளூர கொண்டிருக்கும்  ஆன்மீகக் கருத்தில் வந்துதாக்கும் தத்துவக் கருத்துக்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும். வெளி தத்துவங்கள் உள்ளே  நுழைய விடாமல் மனதை இறுக மூடிக்கொள்ளுதலையே பெரும்பாலும் செய்கிறோம்.  அது எளிதானது. அதனால் பலரும் தெரிந்தோ தெரியாமலோ தாம் முதலில் கொண்டிருந்த கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை. அது அவர்களே அறியாமல் நடந்தால் தான் உண்டு.   ஆனால் ஒரு வயதுக்கு மேல் அதுவும் நடப்பதில்லை. அதனால் நிறைய பேர் தான் கொண்ட கருத்து,  நம்பும் தத்துவத்தை மாற்றிக்கொள்வதில்லை. விவாதங்களில் பேசுகிறார்களே தவிர மற்றவர்கள் சொல்வதை கேட்பதில்லை.  பிறர் பேசும்போது  அது எப்படி தவறானது என சொல்வதற்கான சொற்களையே அப்போது   தேடிக்கொண்டிருக்கிறோம்.  அதையெல்லாம் விடுத்து தன் மனதை திறந்து வைத்து வெளிக்கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி ஆய்தலும், அதன் விளைவாக தன் கருத்துக்களை விரித்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ செய்தல் என்பது அபூர்வமாக நடைபெறுகிறது. அரிகிருஷ்ணன் இப்படி தன் சிந்தையில் வெளிக்கருத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளுதலை கவனித்து அழகாக எழுதியிருக்கிறார். அதுவும் அவருடைய வைணவ மனதை வெண்முரசின்  
கண்ணன் எப்படி தாக்கியிருப்பான் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 

மாமலர் - மாண்டவர் மீளகையில் . பதிவு

வெணமுரசு மாமலர்
23-24



இறப்பின் தருணத்தை அடைந்து மீண்டவன் ஒருபோதும் முந்தைய மனிதனாக இருப்பதில்லை. பெருங்கொடுங்கோலர்கள் கருணை மிக்கவர்களாகி இருக்கிறார்கள். அச்சம் நிறைந்தவர்கள் பெருவீரர்களாகியிருக்கிறார்கள். மறுவழியிலும் நிகழும் போலும். அரசன் அவ்வெல்லையில் கண்டதென்ன, பெற்றதென்ன என்று நாமறியோம். இந்த மேடையில் இந்த நாடகம் இவ்வண்ணம் நடிக்கப்பட வேண்டுமென்பது ஊழாக இருக்கலாம்” என்றார்.

மிக ஆச்சர்யமானதொரு உளவியல் சிக்கல்.ஒவ்வொரு நாளும் மனிதனுக்குள் புதிய மனிதன் குடியேறுகிறான் என்பார்கள். நாம் காணும் ஆறு முந்தைய நாள் கண்டது அல்ல” .அதுபோலவே விளக்கின் தீபமும் இப்போது பார்த்தது சற்றுமுன் பார்த்ததல்ல.

நம்மை சூழ்ந்தவர்களுக்கு  நாம் செய்யும் நன்மைகள் சில காலம் சென்று அது மறக்கப்படுகிறது . அதற்கான காரணத்தை அது செய்தவரிடமிருந்தே பெருகிறது . அது மனித சுபாவம் க்ஷனிகம் ,

அரசன் என்று வந்தவன் ஒர் இடுகாட்டு இழிதெய்வம் என்கிறார்கள். அது சகிக்க ஒன்னாத விஷயங்களை செய்து விடுகிறது . அப்படியானால் மனித சுபாவம் , குணம் பொறை போன்றவை காலத்திற்கு அதீனபட்டது எனில் மனிதன் என்பவன் கொள்கலன் மட்டுமே .

"தருமத்தை சுமப்பவன் தருமி " என்கிற ஒற்றை வாக்கியத்தின் பொருள் இதுதான். தருமம் தருமியை ஆஸ்ரயித்து இருக்கும் என்றால் மலர் மலர்ந்த தன்மையைப் போல , ரோஜா சிகப்பு வரணத்தில் இருப்பது போல .

மானுடன் தருக்கி நிமிந்து கொள்ள ஏதும்மில்லை என்பது எவ்வளவு அப்ட்டமான நிஜம்

நோக்கியிருங்கள், ஒருநாள் அவரை முதல்மைந்தனே வாள்கொண்டு தலைகொய்து கதைமுடிப்பார்” என்றான் ஒரு சூதன். கேட்டுநின்றவர்கள் விழி ஒளிர மூச்செறிந்தனர். எவரேனும் கேட்கிறார்களா என்ற ஐயத்தை அடைந்து ஒருவரை ஒருவர் ஒளிர்கண்ணால் நோக்கிக்கொண்டனர். ஒன்றும்நிகழா அந்நகரில் கதைகளில் மட்டுமே கொந்தளித்தன அனைத்தும். நகரம் நழுவிச்சென்று கதைப்பரப்புக்குள் விழுந்துவிட்டது போலிருந்தது. கதைகளில் வாழும் நகர் ஒன்றுக்குள் நடப்பதாக உணர்ந்தபோது அவர்களின் கால்கள் விதிர்த்தன. உள்ளம் பொங்கி விழிகள் மங்கலாயின. மீண்டும் மீண்டும் நீள்மூச்செறிந்தபடி அங்கிலாதவர் போல் நடந்தனர்.


ஒவ்வொருநாளும் கடையனாக கீழோனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் புரூரவஸ். அதற்கென்று புதிய வழிகளை அவனுள் நிறைந்து விம்மி கரைமுட்டும் ஒன்று தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் கையிலிருந்து ஒரு மணி பொன்னும் வெளிப்போவதை அவன் விரும்பவில்லை. உலகெங்கிலுமிருந்தும் பொன் தன்னைத் தேடி வரவேண்டுமென்று எண்ணினான். அவையமர்ந்ததும் வரவுகளை மணிகளென நாணயங்களென உசாவி அறிந்தான். அக்கணக்குகளை தானே அமர்ந்து மும்முறை நோக்கி மீண்டும் கணக்கிட்டு நூறு வினாக்களால் கணக்கர்களை திகைக்க வைத்து சிறு பிழையேனும் கண்டுபிடித்து அவர்களை கீழ்ச் சொற்களால் வசைபாடி ஏடுகளை அவர்கள் முகத்தில் வீசி மீண்டும் எழுதி வர ஆணையிட்டான்.

ஒன்று தொள்ளெனத் தெரிகிறது " மாண்டவர் மீள்கையில் பூவுலகில் புதியதொரு நரகம் சமைப்பார்

அப்பா பாதுகை குறித்து செல்விக்கு

ஶ்ரீ:




அன்புள்ள செல்விக்கு,

அனேக ஆசீரவாதங்கள்,

நீண்ட யோசனைக்கு பின் இது அவசியம்தான் என உணர்ந்ததால் எழுத நேர்ந்தது . இதற்கு உன் பதில் அவசிமன்று ஏனெனில் உன் புரிதலே எனக்கு இலக்கானபடியால் .

நேற்று அப்பாவின் திருவடிகளை நீ கேட்டு நான் மறுத்ததற்கான காரணத்தை , " நீ உன்னுள்ளேயே ஆழ்ந்து உசாவிக்கொள்" என விட்டுவிடுவதே என் வழக்கம் , ஆனால் புதிதென மாறிவரும் சூழியல் கருதி இதை எழுதும்படி ஆயிற்று.

நம் உறவுகளின்  எனக்கெதிரான " இளிவரல் செயல்பாடுகள் " அனைத்தும், நடந்து முடிந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினை என்கிற அளவே செயலூக்கிகள் அமைந்தன . அவர்களும் அவற்றை அவ்விதம்தான் என புரிந்துகொண்டனர் , ஆனால் அது அவர்களின் ஆழ்மன ஆபாச விழைவின்பால் ஏற்பட்ட புரிதலின் பிறழுதலால் என்பதுதான் உண்மை .

இந்த புரிதல்பிழை என்பது என் ஊழ் , ஆகையினால்  என் தலை அறுத்து சான்றாக்கினும் , அது எவருக்கும் உண்மையை உணர்த்தாது மற்றும் தன்னிலையையும்  உணரவைக்காது . எனவேதான் என் வாழ்கையின் பிற்பகுதியை அவர்கள் இல்லாது வாழுதல் என நிலைக்கு கசப்பற்று ஏறினேன் , இனி அதனின்று விலகுதல் என்பது என் கணக்கில் இல்லை.

வாழ்வியல் நினைவுகளின் சரடில் , புரிதல்பிழைகள், பிசிறென நிற்பவை . நல்லூழின் வழக்காரில் ஒரு நாள் இவை சிடுக்கெடுக்கப்படலாம்  . உதாரணமாக இன்றைக்கு உள்ள "எனக்கு அம்மாவுடன்  சமீப உறவுமீட்சி " நிலையைப்போல . அதை நான் விழைந்தே இருந்தேன்  . எனக்குப் புரியாத , ஆனால் என் தொடர் இறைவேண்டலின் பலன்கள் அவை .

என் மறுநிலையாளர்களின் செயல்பாடுகளில் உள்ள எதிர்மறைகள் மற்றும் அதன் குவிமையத்தில் இருப்பது சூன்யம் என்கிற  உண்மையை , உன் ஆழ்மனம் உணர்ந்ததால் , நீ அங்கிருந்து விலக நேரிட்டது . அதனாலேயே நீ என்னிடம் மீண்டாய் .

ஆனால் அது மிகமிக ஆச்சர்யமானது . நிச்சயம் அது முழுமுதற்பொருளின் வெளிச்சம் , அதனால் ஏற்பட்ட செவ்வியல் இலக்கியப் வாசிப்புகள் , அதை வாழ்வியலில் பொருத்திப் புரிந்து கொள்ளுதல் . இதுவே உனக்கான தனித்த அடையாளமென நிற்கிறது.  என்றுமென நிற்க வாழ்த்துகிறேன் .

இன்று எனக்கு நீ மட்டுமே என மிச்சமாயிருக்கிறாய் . நம் வீட்டில் என் உடன்பிறந்த உனக்கு அனைத்தும் பொது . என்னிடம் கேட்டு பெற என்று எதுவுமில்லை . ஆனால் இந்த விஷயத்தில் நான் தர மறுத்ததற்கு மூன்று காரணம் .

என் குல கூடஸ்தரான தாத்தாவின் கொடியுறவுமுறை மற்றெவர்க்கும் போலன்றி எனக்கு மட்டும் , என்னுடனே அது முடிவிற்கு வருகிறது. தாத்தாவின் ஆகச்சிறந்த பிள்ளை முவரில் நிச்சயம் நம் தந்தையாக மட்டுமே இருக்கமுடியும் . அப்படி எனில் அவரை முதற்குரு எனக் கொண்டிருக்கும் என் வாழ்வியலில் , எனக்கு நிகழ்ந்தது  வரமேன்றி பிறிதொன்றென இருக்கவியலாது. அதற்கான என் தேடலின் ஒரு பகுதியே , என் பித்ரு பூஜாக்கிரமத்திற்கும், அதனைத் தொடர்ந்த  நித்தியபடி நீர்கடனுக்கு அவை இன்றியமையாதவைகள் . " சந்ரே திருஷ்டி சமானஹ" என ஶ்ரீராமர் சொன்னது பொலிவாக அப்பாவுடன் எனக்கான ஆகச்சிறந்த சம்பந்தம் இதுவன்றி வேறில்லை . இந்த பூஜா விதானத்தாலேயே இங்கு எல்லாமே மாறியது ,       நீ கிடைத்தது உட்பட . நீ மட்டுமே என்றாகி அது தடைபடுதல் , எனக்கு மட்டுமல்ல உனக்குமே நல்லதல்ல .

இந்த விஷயத்திலுள்ள நுன்மையை விளக்க நீ எனக்கு போதிய சந்தர்பம் தரவில்லை. நீ என்னிடம் மீண்டது ஒரு தற்செயல்  மட்டுமே , ஆழ்புரிதல்களால் அன்று , ஏனெனில் இது நிகழ வாய்பேயில்லை என்றே இருந்தேன் . ஆனால் பெருவிசும்பின் கரவுகளை யார் அறிய இயலும். எனவே இதுவரை கடந்து வந்ததை புரிதல்களால் வென்றெடுத்து நிற்கவைக்க வேண்டும் . இல்லையெனில் அது நிலைநிற்காது , அதை நீயும் அறிவாய். உனக்கும் எனக்குமான புரிதலின் இணைப்பு புள்ளி இது வரை தென்படவில்லை , ஆனால் அது மிக மிக அருகில் இருப்பதாக நீயும் நானும் உணர்கிறோம் . அது ஆழ்மன உரையாடல்கள் மூலமே சாத்தியமாகும் . அது இன்று வரையில் நிகழவில்லை .


உன்னை தொகுத்துக் கொள்ள உனக்கு நிறைய விளக்கங்கள் தேவை . அதை என்னிடம் எதிர்பார்க்காதே , ஏனெனில் அவை கடந்த காலத்தில் உள்ளவை . நான் இறந்தகாலத்தை நோக்கி பேசுவதில்லை . நான் முன்னமே சொன்னபடி உன்முதிரா இளமையின் அறிவு நச்சரிப்பதை உன் முதிர்ந்த செவ்வியல் இலக்கியங்களில் இருந்த பெற்ற தெளிவில் இருந்து புரிதல்கொள் . அவற்றுடன் உரையாடவே நானும் விரும்புகிறேன் . அந்த உரையாடல்கள் மூலமாக கிடைக்கும் விசையினாலேதான் எதிர்வரும் காலத்தை கடக்க இயலும் . அது நிகழாமல் போனால் பெற்றது அனைத்தும் வீண் என்றாகிப் போகும் .

நீண்டநாட்கள் நம்முடன் இருந்ததனால் பிறிதொருவர் சொத்து நம்முடையது என்றாகிவிடாது . எதனை விழைந்து அது வெளிவந்ததோ அது சித்திக்கும் வரை அது அவ்விதம் இருப்பதே அனைவருக்கும் நல்லது . இதை ஒருநாள் நீ உணர்வாய்

பல்வேறு நிகழ்சிநிரலின் மத்தியில் நீ இங்கு வருவது புரிதல் நிகழாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். உனக்கு இது இன்றியமையாதது எனத் தோன்றின்

இதற்கென்று
ஒரு நாள் வா .
பேசிக்கலையாமல் ,
பேசிக்களைவோம்

ஆசீர்வாதங்கள்

என்றும் அன்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்
23-10-2016
புதுவை.

பாதுகை குறித்த குறுஞ்செய்திக்கு எதிர்வினை

ஶ்ரீ:



" l have seen ur letter which reveals u. yesterday i talked to u about many things without any frustratiom and then i met our mother. after that only i insist about that.after ur i leaved out with less irritation.it does nt cause much feelings because im not bothet about the cause its fact of the fate.the thing we talk about will do its work.which will be good for our family.no more explanation it needs.pathugathathu namyke. "

By Selvi




அன்புள்ள செல்விக்கு,
அனேக ஆசீரவாதங்கள்,

உன்னை பதில் எழுதாதே என அறிவுறுத்தினேன். பயனில்லை   ஏனெனில் உன் எழுத்து முறை அனர்த்தத்திற்கு வழிவகுக்கும் என்பதாலேயே . தவிர்க்க சொன்னேன்

என் எச்சரிக்கைகளை மீறுவதன் மூலம் மீண்டும் தொடங்கிய இடத்தை நோக்கி  சென்று கொண்டிருக்கிறாய் -இதுவே" உன் வழக்கமான பாணி " நீ மாறவில்லை.

நீ சென்றுசேர்நத இடம் இறந்தகாலம் நான் அங்கு இல்லை.

என் கடந்த கடிதத்தில்  பரஸ்பரமாக காயப்பட்ட நம் நிலைகளை விளக்கி புதிய இனைப்புள்ளி நோக்கி பயணிப்போம் என்றே முடிவு செய்தோம் அது நிகழாமல் செய்வதற்கு காரணம் .

உனக்கான என் எச்சரிக்கைகளின் பின் விளைவு தெரியாது அதை சீண்டுவது என்பது உன் முதிரா இளமையின் செயல். ஒவ்வொரு முறையும் எதிரில் உள்ளவரையும், சூழ்நிலைகளையும் , நீ அனுமானிக்க மறுக்கிறாய்.

உன் கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் தங்கிலீஷ் எழுத்து பாணியில் அமைக்கிறாய் , மற்றும் அவற்றை தகவல்களாக அடுக்கும் முறை மிகவும் தட்டையானது . அது தரும் அர்த்தம் மொண்ணையானது , அதனால் ஏற்படும் புரிதல்கள் விபரீதமானவை . அதற்கு இந்த கடிதமே சாட்சி .

விவரிக்கப்படும் செய்திகளின் நுண்மைகளை புரிதலுக்காக எடுப்பதற்கு நேரம் கொடுக்காமல் ,  காழ்பின் உந்துதலால் அவசரப்படுகிறாய் .

என் கடிதத்தில் மையமாக சொல்லப்பட்ட உணர்வுமிகு விஷயத்தை புறந்தள்ளுவது போல அதைப்பற்றி எதுவும் பேசாது விட்டு விட்டாய் , அது உணர்ச்சி அற்ற இரங்கல் செய்திபோல ஒரு நடையை கொடுக்கிறது . நான் இதுவரை உன்னிடம் பேசியதை அனைத்தையும் வீனாக்கினாய் .

உன் எண்ணங்களை ஆழகாக வெளிப்படுத்த உன்னிடம் சாதகமான ஊடகப் பொருள் மற்றும் தமிழ் தட்டச்சும்தான் இல்லை என இதுவரை நினைத்திருந்தேன்  .அனால் இப்போதுதான் தெரிகிறது உன்னிடம் ஆழகான சாரமான கருத்துகளோ ,அறிவார்ந்த சிந்தனை புரிதல்களோ  இல்லை என அறிகிறேன் .

மிகுந்த வருத்துடன்



கிருபாநிதி அரிகிருஷ்ணன்
23-10-2016
புதுவை.

குறிப்பு:-

இதற்கும் பதில் என்று ஏதாவது உளறித்தொலைக்காதே.

கனிவதன் பாதையில்


கனிவதன் பாதையில்





இது முற்றாக திருப்பிப்பார்பது நேர்மையாக எழுதலாம் என நினைக்கிறேன். இரு காரணம் ஒன்று தமிழ் எழுத்து இன்னும் சற்று கைக்கூடிவரலாம் இரண்டு நினைவுகளை பகுத்து தொகுப்பதும் சிந்தனை அடுக்குகளில் விழும் சிடுக்குகலை கையில் எடுத்து உற்று நோக்க முடிந்தால் இனி வரும்காலத்துடன் உரையாடும் தெளிவு ஏற்படலாம்.

வாழ்வின் இறுதிக்கு வந்து விட்டதாக உணர்கிறேன் என்னிக்கைகளில் அடங்காத நிகழ்வுகளின் குவியல் பல்வேறு தளங்களுக்கு விதி என்னும் ஊடுபாவாளால் கடத்தப்பட்டு வாழ்கை அர்த்தமுள்ளதாக இருந்ததா என நிறைவு காண்பது.என் எழுத்துக்கள் யாருக்காவது பொருள்படுமெனில் நான் பாக்கியவான் யாருக்கும் சொல்வதற்கு அன்று எனக்கு நானே என இது

ஓரிரு முறை சந்திப்பவரை சரியாக புரிந்து கொண்டனை என உள்ளம் அவருடன் சேர்ந்து , விடுத்து அல்லது சமநிலை பேனுதல் என முடிவிற்கு வரும் எண்ணம் , என்னை சரியாக புரிந்து கொண்டதா என உள்ளார்ந்து பார்த்தால் இல்லை எனவே தோன்றுகிறது .


ஒருமுறை ஶ்ரீநிவாசனின் கண்பார்வை கோளாறு கண்டறிந்து நிவர்திக்கப்பட்ட பிறகு ஆச்சரியத்துடன் அவன் கேட்டது எல்லோருக்கும் காட்சி இப்படித்தான் இருக்குமா என்று ? அப்போதும் அவனுக்கு தெரிந்ததோ இல்லையோ எனக்கு ஒன்று புரிந்தது காட்சி என்பது பார்ப்பவர் சொல்லும் வர்ணனையில் இல்லை கேட்பவர் புரிதலின் சாமர்த்தியத்தில் உள்ளது என்று.

கண்முன்னே தெரியும் காட்சிக்கே இவ்வளவு வைசித்திரியம் உள்ளபோது ஒருவரின் நினைப்பில் சொல்லில் புரிதலில் இருந்து நாம் பெறுவதென நினைக்கும் புரிதல் எத்தனை விழுக்காடு சரி. இதன் பல பரிமாணங்களே வாழ்வியலை தீர்மானிக்கிறது

நவீனமயமாதல், நுகர்வியக் கலாசாரத்தை எவர் வெறுதாலும் ஒருநாள் அது கொல்லை புற வழியே அவர் தேவைக்கேற்ப என வந்து நிற்கும்

பொருள் மற்றும் பொருள்முதல்வாதம்   (materialism) மற்றுமன்றி தத்துவமும் இறக்குமதியாகிறது அது கீழை மேலை சிந்தனைகளில் இனைப்பு நம் பார்வையை முழுமையாக மாற்றி அமைக்கலாம் .

காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்துகள் போன்றவை தான் வாழ்கை அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. ஒருக்கால் விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக்கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் யாரும் அறிய இயலாதென்பர்



முதிரா சிறுவயது கேள்விகளை வயதின் ,அனுபவத்தின் ஊடே பெற்ற அறிவினால் யாதார்த்மாக மாற்றி புத்தியின் குவி மையத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் போது, செவ்வியல் இலக்கிய வாசிப்பின் விளைவினால் எழும் தர்க்கம் அதனில் எழும் புரிதலினால் அனைத்தையும் ஒரு சட்டகத்தின் உள்ளே கொண்டுவந்து வாழ்வின் நிகழ்வுகளை அதில் பொருத்தி நிற்கும் போது நான் இரண்டல்ல மூன்றாகப் பிரிந்து கிடக்கிறேன்.

லௌகீக ஒழுக்கம் தந்தையிடம் பெற்றது ஆனால் -அதில் நான் என்கிற அகங்காரம் பட்டு உருமாறுகிறது
ஆன்மீக விழுமியங்களை சம்பிரதாயத்திலிருந்து பெற்றேன்-அதில் நான் என்கிற அகங்காரம் பட்டு உருமாறுகிறது. இவை அனைத்தையும் விலக்கி தனியாக நான் என ஒன்று நிற்கிறது மூன்றாவதென நான்  சிறுமையும் ஒன்றுமில்லாதவனாக அது அனைத்து புரிதலுக்கும் மறுபதிப்பீடு செய்யத் துவங்கும் . அதுவே புத்தி நிலைபெறுதலின் வெற்றி எனப்படுகிறது .

தன்னையே இரு கூறென பிரிக்க இயலும் . அப்பொழுது நம்மிடம் உள்ள உண்மையின் மறுபகுதி பிறர் சொல்லாமலே எழந்து வரும்

இது மனிதகுணம். பிரிந்து நிற்கவும் குழுக்களாகச் சேர்ந்து போரிடவும் அவர்கள் பல்லாயிரமாண்டுகளாக பழகியிருக்கிறார்கள். வெறுப்புதான் இயல்பாக மக்களை ஒன்றுசேர்க்கிறது. வெறுப்பைப் பேசுபவர்கள் எளிதில் புகழ்பெறுகிறார்கள். ’நம்மவர்’ என ஒருவரை நினைத்துவிட்டால் அவரை முழுமையாக ஏற்க நாம் தயாராக உள்ளோம்.இங்கு வாழ்தல் என்பது உயிருடன் இருப்பதன் இனிமையை அனுபவித்தபடி உட்கார்ந்திருப்பதுதான். இதை சோம்பல் என்று நம் மக்கள் சொல்வார்கள். நான் இதை இயற்கையில் ஒன்றி அமர்ந்திருப்பது என்று தான் பொருள் கொள்கிறேன். என்னால் இப்படி வாழமுடியாது. ஆனால் வாழ முடிந்தால் இதுதான் நல்ல வாழ்க்கை .

இன்று ஓர் அலையென எழுந்துள்ளது இவ்வாணவம். வேதப்பொருள்கொள்ள தங்கள் சிறுமதியை புன்வாழ்வை கீழ்விழைவை மட்டுமே அளவீடாகக் கொள்கிறார்கள். சொல்விளக்கம் அளிக்கிறார்கள். பொருள்நீட்டிச் செல்கிறார்கள். அவர்கள் அடைவது வேதத்தை அல்ல, வேதமென மாயைகாட்டி வரும் தங்கள் ஆணவத்தை மட்டுமே. நீராடும் ஆற்றுக்கு உடலை அளிப்பவனே விண்ணிழிந்து மலைதழுவி மண்விரிந்து பெருகும் ஆற்றை அறிகிறான். தன் சிறு கொப்பரையில் அதை அள்ளி வருபவன் கையிலிருப்பது ஆறல்ல. அவன் சிறுமை மட்டுமே .

கடந்து வந்ததை முற்றாகத் திரும்பி பார்க்கிறேன் . அது எங்கு தடம்மாறி இருப்பின் எங்கு ஏறிநிற்கும் எனபதை ஆராய்வது விடுத்து நடந்தவை யாவும் நன்று என்ற புரிதல் இப்போது ஏற்பட்டால் வாழ்வின் மிச்சத்தை உணர முயற்சிக்கலாம் 

மக்களின் ஆன்மீக தேடல் ஒரு கடிதம்

ஸ்ரீ :  







அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் , உங்களுடைய சமீபத்திய "ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் " பதிவை வாசித்தேன்.பல பதிவுகள் மற்றும்  ஆக்கங்கங்கள் வாயிலாக நீங்கள் சொன்ன அதே விஷயம் மிக அற்புதமான அவதானிப்பில் முழுமையான மிக செறிவான பதிவாக வெளிவந்துள்ளது.

நான் மரபான ஆன்மீக தளங்களில் செயல்பட்டு வருபவன். நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த தளத்தில் செயல்படத் தொடங்கியதும் அங்கு புரிந்து கொள்ள இயலாத ஒரு சூழல் நிலவுவதை உணர முடிந்தது . அதற்கான தீர்வை நோக்கிய தேடலின் வழியாகவே உங்களின் இணையதளத்தை கண்டடைந்தேன். அது எனக்கு கொடுத்த புரிதல் அளப்பறியது, அதற்கு என் நன்றிகள்

உங்களின் இந்தப் பதிவு இன்றைய புதிய தலைமுறையினரிடம் காணப்படுகிற ஆன்மீக தேவையும்,தேடலையும் பொதுவான மையத்தில் வைத்து விவாதிக்கிறது . அதேசமயம் நீங்கள் இதுகாறும் சொல்லிவந்த "இந்து ஞான மரபினை " நோக்கி , கடந்த அரை நூற்றாண்டு காலமாக பலதரப்பட்டவர்களின் முரணியக்கம் வழியாக இங்கு வந்து அமைந்திருக்கிறது.நிச்சயம் இது மரபார்ந்த ஆன்மீக நிலைகளை நோக்கிய நேரடியான அறைகூவலே .

இதை ஒரு ஆரோக்கியமான பொதுப்போக்காகவே பார்க்கிறேன். இது யாருக்கும் எதிரானதல்ல.ஆனால் ஆச்சார அனுஷ்டானங்களால் மரபார்ந்த ஆன்மீக நிலைகள் ,தங்களின் பல நூறு வருடம் பேனிய  ஞான மரபினை இன்றைய எதிர்பார்பிற்கேற்ப மாற்றி ஆமைக்க இயலாது  திகைத்துள்ளனர் என்பதே யதார்த்தமானது. ஆகையால் இது எதிர்மறையாக பார்க்கப்பட்டு கொந்தளிப்பாக வெளிப்படுகிறது.

இந்து ஞான மரபில் இது போன்ற ஒன்று நடப்பது முதல்முறையன்று. ஆதிசங்கரர் தொடங்கி ராமாநுஜர் போன்ற பல மதப் பெரியவர்கள் வழியாக இந்து ஞானமரபு தனக்கு ஏற்பட்ட சவால்களை மாற்றங்கள் மூலமாகவே நிறுவி இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அது மக்கள் தொகையின் புரிதலுக்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றத்தை கோருகிறது. அந்த சூழலில் ஒரு சிந்தனையாளர் அதை முன்னெடுக்கிறார். அது சொல்லப்படுகிற யுக்தியாலே காலத்தில் நிற்கிறது . ஆனால் எந்த விஷயமுமே காலத்திற்கு அதீனப்பட்டதே. காலம் ,தேசம் ,சூழல் ஒட்டி மாற்றங்கள் தவிற்க இயலாது. ஒவ்வொரு முறையும் அது தன்னை புதுப்பித்துக் கொள்ளும் போதும் எழும் வெற்று கூப்பாடுகளை அது லட்சியம் செய்வதில்லை.

பதிவு சொல்லிய விஷய காம்பீர்யத்தை எடுத்துக் கொள்ளாது சொன்வர்மேல் பாய்வது, சூழ்நிலையை அனுமானிக்கத் தெரியாத சிந்தனை வரட்டுப்பள்ளம் உள்ளவர் செய்வது.

ஜக்கி போன்றவர்கள் யுக புருஷர்கள் என்றோ.அவர் முன்னெடுப்பது தான் காலம் கோரும் மாற்றம் என்றோ சொல்ல வரவில்லை.அதே சமயம் எதிர் வினையாற்றுபவர்களின் வீட்டு வாசலிலும் அது அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. ஆனால் இது ஒரு தொடக்கமாக இருக்கலாம் என்று இந்த பதிவு அனுமானிக்கிறது .முரணியக்கம் வழியே அது அடுத்த எல்லைக்கு போவதற்கு சில பல வருடம் ஆகலாம் அதை பார்க்க நாம் இருக்கப்போவதில்லை ,

நான் மரபான ஆன்மீக செயல்பாட்டாளன், ஈஷா யோக மையமோ அதன் சிந்தனைப் போக்கோ எனக்கு ஒருகாலமும் ஏற்புடையதல்ல.
ஆனால் மக்கள் தொகையின் புரிதலில், தேடலில் ஏற்பட்டுள்ள ஆதீத மாற்றத்தை களத்திலே சுமார் பத்து வருடங்களாக அவதானித்து வருபவன் என்கிற ரீதியில் உங்களின் இந்தப் பதிவு எனக்கு பல அடுக்கு திறப்புகளை கொடுக்கவல்லது.அதற்காக மீண்டுமொரு நன்றி.

(திரு.ஜெயமோகன் அவர்களின் கூறுமுறையில் உள்ள ஒழுக்கின் மேல் ஏற்பட்ட ஆச்சர்யத்தினால் அவர் சொன்னதை அப்படியே பல இடங்களில் கொடுத்திருக்கிறேன்)

உங்கள் பதிவு முதலிலேயே இது எவர்கெல்லாம் பொருந்தாது , என தர்க்க ரீதியில் ஒதுக்கப்பட்ட பிறகு யாருக்கு பொருந்துமா அவர்களை நோக்கியே அது மிக தெளிவாக உரையாடுகிறது .

கார்பரேட் சாமியார்கள் யார் ?எதற்கு ?யாருக்காக ? என்று கேட்டுக்கொண்டு, இன்றைய இருத்தலியல் சமூகத்தை நோக்காகக் கொண்டு எழுகின்ற மிக அவசியமான பதிவாகவே அதை பார்க்கிறேன்.




சமூகத்தில் இன்று நிலவும் ஒரு அசாதாரன சூழ்நிலையில்  மரபான ஆச்சாரத்தை ,ஆன்மீகத்தை பின்பற்றும், போதிக்கும் பொறுப்பு மிக்க அமைப்புகள், இன்றைய இந்து சமூக ஆன்மீக முரணியக்கத்தின் விளைவுகளை கண்டறிய கால் நூற்றாண்டுக்கு மேல் அவகாசம் எடுத்துக் கொண்டது. அதன் பிறகே இன்று "சனாதன தர்மம் " பற்றிய பிரச்சாரங்களில் அது ஈடுபட்டு வருகிறது. ஆனால் மாறிவரும் உலக தத்துவப் போக்கினால் "இந்து ஞான மரபு "பற்றிய குறீடுகளையும் அது சமூக போக்கில் ஏற்படுத்தி உள்ள புதிய சிந்தனை அலைகளையும் இன்னும் முழுமையாக உள்வாங்கவில்லை எனவே அவற்றின் செயல்கூடவில்லை. அதனால் சமூகத்தில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்டிருக்கும் பாய்ச்சலை புரிந்து கொள்ளாது தேவையற்று எதிர்மறையாக வினையாற்றுகின்றது.இந்த பதிவு அவர்களுக்குத்தான் முக்கியமே தவிற மற்றவர்களுக்கு இல்லை. அவர்களை இப்படி தொகுக் கொள்ளலாம்.

மரபான ஆன்மீக நிலைகள்.
பாரம்பரிய அர்ப்பணிப்புள்ள சபைகள்
பொருளியல்,பதவி மற்றும் ஜாதி ரீதியான உயர்நிலை பக்தர்கள்
1980 பிறகு உருவாகி வந்த உயர் மற்றும் நடுத்தர சமூகத்தினர்
பாமரர்கள்.

இவர்களைக் நோக்கியே உங்கள் பதிவு பேசுகிறது . இவர்களை தவிற அந்த பதிவை பற்றி கொந்தளிப்வர்கள் வேறு உள்நோக்கமுள்ள காழ்பை கக்கிற நோயாளிகள் மாத்திரமே.

உங்கள் பதிவை இப்படி தொகுத்துக் கொள்கிறேன் .

//ஒரு வலுவான தேவை உருவாகியது. வரலாற்று ரீதியான ஒரு பதில் அதற்கு இருந்தது. இரண்டும் சந்தித்தன, அவ்வளவுதான்.//

இதுவே இந்த பதிவின் கரிசனமிக்க அவதானிப்பு . அதன் முழு பதிவுமுறை , இதை தெளிவாக விளக்க வந்ததே. உங்கள் பதிவை நான் இங்கிருந்து தொடங்குகிறேன் . உங்கள் அவதானிப்பு அற்புதமானவை . இந்த பதிவு மிக முக்கியமான திறப்புகளக் கொண்டது

//இந்தத் தாக்குதல்களுக்குப் பதில் சொல்ல மரபான மடாதிபதிகளால், மதப்பிரச்சாரகர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர்களும் சடங்குகள், புராணங்களுக்குள் மட்டும் செயல்பட்டவர்கள்தான். நவீனச் சிந்தனைகளுடன் அறிமுகம் அற்றவர்கள்//

என்கிற பதில் மிகச்சரியானது . தாங்கள் கூறியது போல

// ஆன்மிகமும் தத்துவமும் அறிந்த சிலர் இருந்தனர், அவர்களை மிகச்சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அறிந்திருந்தனர். பெரும்பான்மையை நோக்கிச்செல்ல அவர்களிடம் ஊடகம் இல்லை, அமைப்பு இல்லை. இந்துமதம் சார்ந்து அமைப்புக்களை உருவாக்குவது எளிதும் அல்ல //

ஆம் அப்படிபட்ட ஊடகங்களை ஏற்படுத்த அந்த அமைப்புகளுக்கு தேவையான பெரும் பொருளை அவர்களால் எக்காலத்தும் திரட்ட முடியாது என்பதே நிதர்சணம் .காரணம் சமூகத்தில் நான்காக பகுக்க பட்ட அவர்கள் மூன்று நிலைகளில் நின்று வெவ்வேறு காரணத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள்.

பொரும் வியாபார நிறுவனங்கள்
உயர் பதவியில் உள்ளவர்கள்
1980 பிறகு வந்த பொருளியில் வெற்றி பெற்ற நவீன உயர் மற்றும் நடுத்தர சமூகத்தினர்
பாமரர்கள்.

ஒன்று.உயர் பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் பெரும் வியாபார நிறுவனங்களின் பெரும் நன்கொடைகள் வணிக நோக்கத்திற்காக, அல்லது விளம்பரத்திற்காக அல்லது தனிப்பட்ட காரணிகளால் நேரடியாக பிரசித்தி பெற்றக் கோவில்களைச் சென்றடைகிறது . வருடா வருடம் பல நூறு கோடிக்கணக்கில் உண்டியல் மற்றும் தங்கம் வைர ஆபரணங்களை காணிக்கையாக்கப் படுவதை தினசரிகளில் செய்தியாக பார்க்கிறோம் .

இரண்டு. 1980 பிறகு வந்த நவீன உயர் மற்றும் நடுத்தர சமுகத்தினர் . இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஞானத்தையும் பக்தியையும் பிரித்துக் கொள்ள முடியாதவரகள் அல்லது விரும்பாது உலகியல் நாட்டங்களில் மூழ்கித் திளைப்பவர்கள் . வீட்டு பெரியவர்கள் அல்லது பிறர் சொல்வதை பின்பற்றி நடக்கூடியவர்கள். இவர்களுக்கு தங்கள் இல்லத்திற்கு அருகில் அமைந்த சிறிய மற்றும் நடுத்தர கோவில்கள் பிரதானம் . அங்கு உற்சவங்கள் ஆபரணங்கள் நன்கொடைகளால் கோவில் நிர்வாகத்தினரிடம் செல்வாக்கு பெறுவதின் மூலமாக தங்கள் வீங்கின அகங்காரத்திற்கு வடிகால் தேடுபவர்கள்.

இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தேடல் மிக்கவர்கள். ஞானத்திற்கும் பக்திக்குமான வேறுபாடுகளை அறிய விருப்பமுடையவர்கள் மராபான ஆன்மீக விஷயங்களில் மற்றும் அதைசார்ந்த நிறுவனங்களில் உள்ள முரண் அல்லது ஊழல் அல்லது அவற்றின் நிர்வாக முறை அதை சார்ந்த  தொடர்புறுத்தல் முறையில் உள்ள குறைபாடுகளினால் அதில் இருந்து விலகியவர்கள் .

//இச்சூழலில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் வருகிறார்கள், குறிப்பாக ஜக்கி வாசுதேவ், வேதாத்ரி மகரிஷி, மற்றும் ரவிசங்கர். “இந்துமதத்திற்கு நூல்கள் ஏதேனும் உண்டா?” என டிஜிஎஸ் தினகரன் நாகர்கோயிலில் பல்லாயிரம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்தில் அறைகூவியதை நான் நினைவுகூர்கிறேன். இன்று அதே மைதானத்தில் தான் ஜக்கி பல்லாயிரம் பேரைக் கூட்டி பதஞ்சலி யோகசூத்திரம் பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் பேசுகிறார். இப்படி ஒரு காலம் வந்துள்ளது // என கூறியது அற்புதமான வரிகள்

மூன்றாவதாக. பாமரர்கள் . இவர்களே பெருந்தொகையினர். அவர்கள் பாவ புண்ணிய காரணிகளில் வாழ்கையைத் தேடுபவர்கள் பக்தியையும் ஞானத்தையும் தேவையற்று குழப்பிக் கொள்ளாதவர்கள். சிறுதெய்வ பெருதெய்வ  பாகுபாடு தெரியாதவர்கள். அனைத்திலும் புகுந்து புறப்படுபவர்கள் , மத மாறுபாடுகள் தெரியாது இந்துக் கோவில் தொடங்கி வேளாங்கண்ணியையும் நாகூர் தர்காவையும் விட்டுவைகாதவர்கள்.

//ஜக்கி போன்றவர்கள் நான் முன்னரே குறிப்பிட்டதுபோல நவீனக் கல்வி கற்று, நவீன வாழ்க்கைச் சூழலில் எழும் சிக்கல்களினால் நிலையழிந்து, அதேசமயம் மரபான மதநம்பிக்கைகளில் அமையமுடியாது போனவர்களுக்கான ஆசிரியர்கள் மட்டுமே. ஏழை எளிய பாமர மக்களுக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்கள் இன்றும் பக்தியின் வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள்//

எளிய பாமர மக்களுக்கு இது தேவையில்லை என்பதும் அவர்களுக்கு இது புரியப்போவதுமில்லை என்பது மட்டுமல்ல அவர்களாலேயே இன்று ஆலையங்களில் மக்கள் கூட்டம் கட்டுபடுத்த இயலாததாக உள்ளது அவர்களுக்காக வக்காலத்து என்பது வெறும் பம்மாத்து மட்டுமே.

//1980-களில் நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பாதிப்பேர் இந்துக்கள் அடங்கிய எங்கள் கல்லூரியில் உச்சகட்ட மதமாற்றப் பிரச்சாரம் நிகழும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இருசாராருமே இந்துக்களை நோக்கி ‘உங்களுக்கு வெறும் சடங்குகளும் ஆசாரங்களும் மட்டுமே உள்ளன. உங்கள் மதத்தில் ஞானநூல்கள் இல்லை. எங்களுக்கு மெய்நூல்கள் உள்ளன’ என வாதிடுவார்கள். நான் உட்பட எந்த இந்து மாணவனுக்கும் இந்து மதநூல்களைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இந்து தத்துவமோ ஆன்மீகமோ தெரியாது. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும்.//



//புராணக் கதைகளை எடுத்துக்கொண்டு அதை மிக எளிய அன்றாடத் தளத்தில் வைத்து ‘கட்டுடைப்பார்கள்’. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் அவர்கள் ஓரினச்சேர்க்கையா செய்தார்கள் என்பது போன்ற பகுத்தறிவுக் கேள்விகள்.//

மேலதிகமாக நாக்கில் குடியிருக்கும் சரஸ்வதி மலஜலம் எங்கு கழிப்பாள் ? பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? 786 என்பது அல்லாவின் தொலைபேசி நம்பரா? என்பன பெரியாரிகளின் கட்டுடைப்புகள்.

// இன்று மேலே சொன்ன இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஓர் இந்து இளைஞனிடம் சொல்லமுடியுமா? உன்னதமான யோகநூல்களும் தத்துவநூல்களும் காவியங்களும் இந்துமதத்தில் உள்ளன என்று ஒருவனாவது எழுந்து பதில் சொல்வான். பதஞ்சலியோக சூத்திரம் என்றும் யோகவாசிஷ்டம் என்றும் உபநிடதங்கள் என்றும் எடுத்துச் சொல்வான். இந்த இடத்துக்கு வந்துசேர இருபதாண்டுக் காலமும் அமைப்பு சார்ந்த மாபெரும் பிரச்சாரமும் தேவைப்பட்டுள்ளது

// கறுப்புச்சட்டை பரிதாபமாக “தம்பி நீ இங்கர்சால், கார்ல்மார்க்ஸ், பெரியார்லாம் படிக்கணும்’ என்றார்.”அதெல்லாம் பழைய சிந்தனைகள். நீங்க முதல்ல ஜோசஃப் கேம்பல் படியுங்க. சிமியாலஜின்னு ஒண்ணு இருக்கு, போய்ப் படியுங்க. குறியீட்டை குறியீடா பாக்கிறது எப்டின்னு தெரிஞ்சுட்டு பேசுங்க. உளறாதீங்க’ என்றான் //

// ‘அட!’ என வியந்தேன். அவனை அழைத்துப் பேசினேன். அவன் பேசியது அப்படியே நாகர்கோயிலில் ஜக்கி வாசுதேவ் அக்கேள்விக்குச் சொன்ன பதில் என அறிந்தேன். கார்ப்பரேட் குருமார்களைப் பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பெரிய அளவில் மாறியது //

இதைப் போன்ற ஒன்றை முன்னெடுக்க முயன்ற பல பாரம்பரிய ஆன்மீக தொண்டு நிறுவனங்கள் தாங்கள் செய்யக்கூடுவது ஒன்றுமில்லை என்பதையும் ,மறுசிந்தனைக்கு வெளிநோக்கி பேசுவற்கு இருக்கும் விஷயங்களை விட உள்திரும்பி பேச நிறைய உள்ளதாக கண்டறிந்தனர் . யார் யாரிடம் பேசுவது என்பது புரிபடாமல் ஒன்று ;அவை அனைத்தும் செயல்படாமல் மரணித்தன அல்லது வெற்றுச் சடங்காக ஏதையாவது செய்து கொண்டிருந்தன .

நீங்கள் மிகச்சரியாக கூறியது போல  //. இந்துமதம் ஒரு தொகைமதம். பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவானது. பழங்குடி வாழ்க்கையில் இருந்த பலநூறு ஆன்மிக தரிசனங்களும் வழிபாட்டுப் போக்குகளும் வரலாற்றின் பெருக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து, உரையாடி, தத்துவத்தைக் கட்டமைத்து உருவாகி வந்த ஒரு மரபு இது. ஆகவே அதற்கு மைய அமைப்பு இல்லை. ஆனால் வெவ்வேறு ஆன்மிகத் தரப்புகள், கருத்தியல்கள் தங்களுக்குரிய அமைப்புக்களை வரலாற்றில் உருவாக்கிக் கொண்டுதான் இருந்தன.

//. இன்றுள்ள சைவ, வைணவ மடங்கள் கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குள் பக்தி இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் உருவானவை. சைவ, வைணவ மதங்களுக்கான கல்விமுறையை நிலைநிறுத்துவதும் ஆலயங்களைப் பராமரிப்பதும் அவற்றின் பணி. அவற்றுக்கு அரசர்களால் பெரும் செல்வம் அளிக்கப்பட்டது //

ஆனால் எட்டு நூறு வருடங்களுக்குப்பிறகும் இவற்றிலும் இவை சம்பந்தபட்ட அனைவரிடத்திலும் எந்த காலத்திற்குமான ஒவ்வாமையும்  நவீன உலகியல் புரியாமை என எழுந்து மூடி கடந்த காலத்திலேயே அவை உறைந்துள்ளது .

இன்று உள்ள ஆன்மீக சூழலில் தங்களின் செயல் முடக்கத்திற்கு உள்ள சிக்கல் பொருளியல் வரட்சி மட்டுமே . அது சரியாக கிடைக்கும் பட்சத்தில் மரபான ஆன்மீக இயக்கங்கள் சரியான பாதையில் நகரத்தொடங்கும் என சிலர் பேசுவதை பார்க்கிறேன் . ஆனால் அது தவறு . அவர்கள் வசமுள்ள பல நூற்றாண்டு பழமையான போதிக்கும் முறை வழக்கொழிந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னது போல

இந்து மதம் மூன்று வழிகளை முன்வைக்கிறது. பக்தி முறையே பெருவாரியான மக்களுக்குரியது. எளிய அர்ப்பணிப்பு போதும் அதற்கு. ஆழமான நம்பிக்கையும் சீரான சடங்குகளும் இருந்தால் ஒருமனிதர் தன்னளவில் நிறைய முடியும். ஆலயவழிபாடு, பஜனை, தீர்த்தயாத்திரை என அதற்கான வழிகள் பல.

பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்கு உரியதே ஞானமுறை. அது அறிதலின் பொருட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு உரியது. கற்கவும் சிந்திக்கவும் நேரமும் வாழ்க்கையமைப்பும் இருக்கவேண்டும். ஆசிரியர்களைத் தேடிச் செல்லவேண்டும். அறிதலில் சமரசமற்று இருக்கவேண்டும்.

மூன்றாவது முறையே யோகம் எனப்பட்டது. அது அதன் பொருட்டு பிற அனைத்தையும் விடுவதற்கும் துணிபவர்களுக்கு உரியவை. மிகக்கடினமான சுய உளவியல் பயிற்சிகளின் வழி அது. உலகியலில் இருந்து விலகவேண்டும். உரிய ஆசிரியர்கள் அமையவும் வேண்டும்.

இன்று புழக்கத்தில் உள்ள ஆச்சார அனுஷ்டானங்களும் , பக்தி மார்க்க நிலைகளும், தத்துவ விசாரங்களும் பழைய தொகுப்பின் மிச்சங்கள்  மட்டுமே . ஆனால் தர்மம்  எனப்படுவது அவை அனைத்தின் தொகுப்பே.

மன ஆயாசத்தை அளிப்பதும் மிக நிதரசனமான உன்மை

//. இங்குள்ள மதமாற்ற அமைப்புகள் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமானவை. செல்வமும், அதிகாரமும், சர்வதேசத் தொடர்புகளும், அறிவுலகில் ஐந்தாம்படை வலையும் கொண்டவை. அந்த அமைப்புக்கள் உருவாக்கிய கருத்துப் பிரச்சாரத்தை, அதிலுள்ள அப்பட்டமான திரிபுகளையும் காழ்ப்புகளையும் கொஞ்சமேனும் எதிர்ப்பதற்கு இன்னொரு அமைப்பால் மட்டுமே முடியும். இன்றிருப்பவை ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்களின் ஓரிரு சின்ன அமைப்புக்கள்தான். இன்னமும் உருவாகவேண்டும் //

என நீங்கள் கூறுவதை மறுத்து சந்தியில் நின்று கூச்சலிடுபவர்களின் சிந்தனை உதிக்கும் தோற்றுவாயில் புற்றுநோய் என்பதை தவிர கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் பல்லாண்டு காலமாக அர்பணிப்புடன் சேவை செய்த சில பெரியவர்களிடத்தில் பேசும்போது அவர்கள் கார்பரேட் சாமியார்களின் எழுச்சி மற்றும் வளர்ச்சி பொதுவாகவே மரபான ஆன்மீக தளத்தில் செயல்படும் அனைவரும் ஒருவித எரிச்சலுடனே பார்கப்படுவதாகவும் . அதற்கு பலவித காரணிகள் உண்டு அரவிந்தர் ஆசிரமம் தொடங்கி புட்டபர்த்தி ஆசிரமம் வரை லட்சகணக்கான மக்களின் மனசாந்திக்கு இடமளித்தன . ஆனால் அதன் ஸ்தாபகர்கள் மரணத்த பிறகு இங்கு குவிந்துள்ள சொத்துக்களுக்கு அவர்களின்  வாரிசுகள் என்று சொல்லபட்டவரகளிடையே சண்டைகளே இன்று பிரதானம் ,அன்றி ஸ்தாபகர்  சொன்ன அற்புதமான தத்துவ கோட்பாடுகள் அனாதைகளாக நிற்கின்றன. அதன் மற்றைய சீடர்கள் வேறு நிருவனத்திற்கு செல்ல இல்லாமலும் மரபான ஆன்மீகத்திற்கு தரும்ப இல்லாமலும் தனித்து விடப்படுகிறார்கள்.

இந்த போக்கினால் மரபான இயக்கங்களுக்கு அந்த ஆசிரமத்தை சார்நத மக்கள் தனித்து நிற்பதாகவும் அவர்கள் கொடுத்த பெரும் பொருளுயல் செல்வங்களும் வீணாகும் நிலை ஒருபுறம் மற்றும் அடுத்த தலைமுறையினரை இதில் கொண்டுவருவதில் உள்ள நடைமுறை சிக்கல் , என அனைத்தையுமே முதலில் இருந்து தொடங்க வேண்டி வரலாம் என்றும் சில பெரியவர்களிடத்தில் பேசும் போது வருத்தத்துடன் சொன்னார்கள்.


சாஸ்திர விஷயம் தொடங்கி ஆயுர்வேதம் வாஸ்து என எதை எடுத்தாலும் ஒருவர் சொன்னதற்கு மறுப்பாக சொல்வதே வழமை என உள்ள நிலையில் தத்துவ நிலைபாடுகளில் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று விரோதிக்கையில் அனைத்தும் திருசங்கு நிலை போல ஆகி விடுவதற்கே வாய்புகள் அதிகம். என்பதையும் அந்தப் பெரியவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் .

ஆனால் ஞானத்தில்  அனுபவத்தில் வயதில் பெரியவர்களான அவர்களிடத்தில் ஒரு பத்து வருடத்திற்கு முன் சொல்வதற்கு யதார்த்த நிலை எனக்கு புரிந்திருந்தும் அன்று கருத்தாக , மொழியாக அது திரளாமையால் மிகுந்த மனவழுத்தத்துடன் திரும்பினேன். ஆனால் உங்களின் இந்த பதிவை வாசித்த பிறகு இதுவேயாகும் மிகச்சிறந்த புரிதலுக்கு வழி என்பதால் நீங்கள் சொன்னதையே இப்படி தொகுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளேன் .


இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் மதச்சீர்திருத்த அலை உருவானது. அதில் தோன்றிய அத்தனை ஞானிகளுக்கும் அமைப்புக்கள் உள்ளன. விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடம், நாராயணகுருவின் நாராயணமடம், வள்ளலாரின் சத்யஞானசபை போல நூற்றுக்கணக்கில் உருவாயின. இவை அனைத்துமே மைய அமைப்பும் கிளைகளும் கொண்டவை. நிதியாதாரங்களை பக்தர்களின் கொடைகள் வழியாக திரட்டிக்கொண்டவை.

இன்று வேதாத்ரி மகரிஷி, ஜக்கி, ரவிசங்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்களை மூன்றாவது அலை என்று சொல்லலாம். இந்த ஒவ்வொரு அலைக்கும் அதற்கான பங்களிப்பு உள்ளது.

ஆனால் அடுத்த காலகட்டத்தின் தேவைகளை அவை நிறைவேற்ற முடியவில்லை. ஐரோப்பிய கல்விமுறையுடனும் நவீன ஜனநாயகச் சிந்தனைகளுடனும் அவற்றால் உரையாட இயலவில்லை. ஆசாரங்களில் இருந்து அவை வெளியேறவும் முடியாது, ஏனென்றால் அவற்றின் கட்டமைப்பே ஆசாரங்களைக் காப்பதற்காக அமைந்தது. ஆகவே தங்கள் பங்களிப்பை வரலாற்றில் ஆற்றிவிட்டு அவை பணியை வரையறை செய்துகொண்டன. ஆகவே அடுத்த தலைமுறைக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் விவேகானந்தரின் அமைப்பும் நாராயணகுருவின் அமைப்பும் உருவாகி வரநேர்ந்தது.

இன்று மூன்றாவது காலகட்டத்தில் இன்றைய தேவைக்குரிய அமைப்புக்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. சென்ற காலகட்டத்தின் அமைப்புகளை விட மேம்பட்ட செயல்பாட்டு முறை இவற்றுக்கு உள்ளது. இன்றைய யுகம் கார்ப்பரேட் யுகம். எதுவும் அறிவியல் முறைகளை கருவிகளாகக் கொண்டு, நவீன நிர்வாக முறைகளை பயன்படுத்திக் கொண்டுதான் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகவே கார்ப்பரேட் அமைப்புக்கள் உருவாகின்றன.

திருவாவடுதுறை மடத்தின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் அல்ல ராமகிருஷ்ண மடத்தின் வழிமுறை. அது இன்னும் நவீனமானது. ஜக்கி வாசுதேவ் அமைப்பின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் ராமகிருஷ்ண மடத்தின் அமைப்பை விட மேலும் நவீனமானவை, கார்ப்பரேட் தன்மைகொண்டவை. இது காலத்தின் தேவையால் எழுந்தவை.

பீட்டில்ஸ் அமைப்பு 1968 ல் இந்தியாவில் ரிஷிகேஷ் நகருக்கு வந்தது. அவர்களுக்கு முன்னரே சுவாமி சிவானந்தருடன் தொடர்பு இருந்தது. ஆன்மிகமான தேடலுடன் வந்த அவர்கள் மகரிஷி மகேஷ் யோகியைச் சந்தித்தனர். மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் அவ்வாறாக அமெரிக்காவில் பிரபலம் அடைந்தது.


ரஜினீஷ் போன்ற அன்றைய பிரபல கார்பரேட் சாமியார்களின் காலத்தில் அவரின் பேச்சும் நடவடிக்கைகளையும் செய்திகளாக அறிந்த அன்றைய ஆன்மீக உலகம் திகிலடைந்தது . அதையும் இப்பொழுது நிகழ்பவைகளையும் ஒரே கோணத்தில் பார்கிறார்கள். அது தவறு இன்றைய சூழலே வேறு . இன்று அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக உணர்கிறேன்

// சென்ற இருபதாண்டுகளில் உலக அளவில் இலட்சியவாதம் சார்ந்த அரசியல் வீழ்ச்சியடைந்ததும், உலகை மாற்றியமைக்கும் அரசியல் கனவுகள் தகர்ந்ததும் இந்தக் கண்ணோட்டங்கள் வலுப்பெற அடித்தளம் அமைத்தன.//

இது ஒரு முக்கிய காரணி என நினைக்கிறேன்.இதை புரிந்துகொள்ளாதவரை மக்கள் போக்கை ஒட்டி எதையும் செய்யமுடியாது போகலாம் . சுமார் 80 சதவிகித இந்துக்கள் ஏதாவது ஒரு வகையில் கோவில் சார்ந்து இருக்கிறார்கள் . கோவிலை நிர்வகித்து வரும் மரபான ஆன்மீக நிலைகளின் கைகளைவிட்டு கோவில நிர்வாகம் கழன்டு பல ஆண்டுகள் ஆகின்றன. மக்களுக்கு மரபான ஆன்மீகம் பற்றிய தேடல் கால ஓட்டத்தில் பெருகிய வண்ணம் இருக்கப் போகிறது இதை முறைப்படுத்தி முன்னெடுப்புகள் இதுவரை துவங்கப்படவில்லை.ஆனால் இந்நு ஞானமரபு என்னும் கருதுகோளை நோக்கிய மக்கள் பயணம் உற்சாகமளிப்பதாகவே இருக்கிறது.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

முளைவிடும் காஞ்சீர மரங்கள்

ஸ்ரீ :









தம் நிஷ்ப்ரபமிவாதித்யம் முக்ததோயமிவாம்புதம் ।
உக்தவாக்யம் ஹரிஸ்ரேஷ்டம் உபஸாந்தமிவாநலம் ।
தர்மார்தகுணஸம்பந்நம் ஹரீஸ்வரமநுத்தமம் ।
அதிக்ஷிப்தஸ்ததா ராம: பஸ்சாத்வாலிநமப்ரவீத் ॥

- ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் -

தன்னை வீழ்த்திய ஶ்ரீராமனைக் குற்றம் சொல்லும் வாலியின் வாதத்தை மறுக்கும் முன் சொல்ல விழையும் கருத்தை ஶ்ரீராமர் தன் மனசாட்சியிடம் ஒருமுறை கேட்டுக்கொள்ளுவதாக அதன் பின் வரும் ஸ்லோகம்

ஶ்ரீஶ்ரீ.கிருஷ்ணப்பிரேமி -


ஊன உடற் சிறை நீத்து ஒண்கமலை கேள்வன் அடி
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய் - தானே
பழுத்தால் வீழும் கணிபோல் பற்றற்று வீழும்
விழுக்காடே தானரும் வீடு

அருளாளப் பெருமான் எம்பெருமானார்
- ஞான சாரம் -

முளைவிடும் காஞ்சீர மரங்கள்

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறான் சாக்ரடீஸ். சொல்ல வாய்பில்லா துயரங்களை எழுத்தில் கொண்டு வந்து அதை கடந்து செல்லும்  இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள்.

 - ஆம் இதுவே என் இடம் -

இது நான் மிக விரும்பும் ஒரு இடம்,ஆனால் மிக தற்செயலாகத்தான் இங்கு வந்து சேர்ந்தேன்.என்னுடைய ஊழ் மிகப் புதிரானது . நான் புழங்கிய பிரமாண்டமான இடங்களான தொழில்,அரசியல்,ஆன்மீகம் மற்றும் குடும்பம் இவற்றில் தொடர்ந்து அந்நியனாகவே இருந்து கொண்டிருக்கிறேன் . எனக்கு வெற்றி என்கிற ஒன்றை தொட்ட பிறகு அங்கு நிலைத்திருத்தல் கைவராது என்றபின் நான் இலக்கியம், தமிழ் என இதில் உள்நுழைந்தது எங்கனம்?

மிகத் தூய்மையானவர்களும் – அவர்கள் பெருங்கடவுள்களாக இருந்தாலும் சரி, எட்டியிருந்து வரம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, தரையில் இறங்கி வந்தால் கறைப்பட்டுப் போவார்கள். வாழ்க்கையின் சேறுகளிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது.

இதில் நான் எம்மாத்திரம்.

வெற்றியும் வீழ்ச்சியும் ஒரு சமன்புள்ளி குலைவதில் இருந்து தொடங்குகிறது. பல முறை தண்ணீர் இறைத்தாலும் செடிகள் உயிரை கையில்  பிடித்துக்கொண்டு ஒரு மழைக்காகத்தான் ஏங்கி காத்திருக்கின்றன . அவற்றை இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை!

ஆனால் உறவுகளால் வஞ்சிக்பட்டவனுக்கு ,பழிவாங்கவேண்டும் என்றால்  அவனுக்கு  சொந்த தேகமும், வயிறும் ,ஆன்மாவும் மட்டுமே மிச்சமாக இருக்கிறது . காடுகளில் தீப்பிடித்தால் சில குச்சிகள் எரியாமல் கருகி கிடக்கும். அவற்றை தேடி கொண்டுவந்து வயலில் ஊன்றி பல வகையாக பயன்படுத்துவார்கள்.அவை வைரம்பாய்ந்தவை என்ன செய்தாலும் ஒடியாது, வளையாது.

உறவுகளும் அப்படி பட்டவை . பலவகையான கேள்விப்படுதல்கள்  வழியாக சொல்பவர்களின் விழிகளின் ஊடாக பார்த்து அவர்கள் கொள்ளும் அனுமானம் , வெறுப்புத் தீயின் பற்றி எரியாமல் காஞ்சிர மரமாக கசப்பையே வைரமென பற்றி வளரும். அதை அடுத்த  தலைமுறையில் பொதிந்து வைக்கிறார்கள் அவையும் ஒடியாது வளையாது பல வகையில்  பயன்பாட்டிற்கு வருகிறது . ஆனால் எதிர்மறையாக.

காஞ்சீரமரச் சாறுக்கினையான கசப்பில்லை என சொல்வதுண்டு சில வியாதிக்கு அதையே கட்டிலாக செய்து அதில் படுப்பதே ஒரு சிகிச்சை முறை . அதில் படுத்தாலே அதன் கசப்பு உடம்பில் ஏறி மறுநாள் பொழுதில் நாக்கில் தெரியும். வேட்டுவேளா என்று ஒரு குளவி ,அது எந்த சாதாரணப் புழுவையும் கொண்டுபோய் கொட்டி கொட்டி வேட்டுவேளா புழுவாக்கி விடும் என ஆழ்வார் பாசுரங்களில் வரும் .இலக்கியத்தில் சொல்லப்படுவது நிஜம்தானா ? தெரியாது. ஆனால் பேசிப் பேசியே ஒரு தலைமுறையை உருவாக்கி விட முடியும்

மனிதன் சிந்தித்து சிந்தித்தே எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். காலத்தை மதுரமாக நிலைபெறச் செய்ய மீண்டும் மீண்டும் நிலைப்படுத்தி கொள்ளுதல் அவசியமாகின்றது. நினைவை மீட்டி அபசுரங்களை நீக்கி நீவி விட்டு மீண்டும் மென்மையானதாக வைத்திருப்பது வாழ்கையில் அழகியலை பேணுவதில்  அவசியமாகிறது.

ஒரு உளவியல் தத்துவம் சொல்கறது,இறப்பின் தருணத்தை அடைந்து மீண்டவர் ஒருபோதும் முந்தைய மனிதராக இருப்பதில்லை. பெருங்கொடுங்கோலர்கள் கருணை மிக்கவர்களாகி இருக்கிறார்கள். அச்சம் நிறைந்தவர்கள் பெருவீரர்களாகியிருக்கிறார்கள். மறுவழியிலும் நிகழும் போலும். அவ்வெல்லையில் கண்டதென்ன, பெற்றதென்ன என்று நாமறியோம். இந்த மேடையில் இந்த நாடகம் இவ்வண்ணம் நடிக்கப்பட வேண்டுமென்பது ஊழாக இருக்கலாம்.சில சமயம் இடுகாட்டி இழிதெய்வம் அதை முடிவு செய்வதாகவும் இருக்கலாம் என்று.


நான் என் வரையில் அவநம்பிக்கை, கசப்பு நோக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். அவநம்பிக்கை, கசப்பு கொள்ளும் சூழல் இங்குள்ளது என்பதை நானும் அறிவேன்,ஆனால் நம்பிக்கையின் பொறிகளை எப்போதும் கண்டடைகிறேன். முடிந்தவரை அதில் மூழ்கி என் தளத்தில் என்னால் இயல்வதைச் செய்துகொண்டும் இருக்கிறேன்.

நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் ,நீ கோபமுற்று இருக்கிறாயா ? வெறுப்பும் சலிப்புமாக இருக்கிறாயா? அல்லது அவ்வாறில்லாதது போல நடிக்கின்றாயா?

இல்லை . நிச்சயமாக இல்லை. நான் நடிகனல்ல . ஏனெனில் அது என் விழுமியங்களை நாசாமாக்கக் கூடியது , அதனூடாக சொல்லி சொல்லி கழற்றி கழற்றி எறிந்ததனிடமே என்னை கொண்டு சேர்த்து விடும் ஆபத்திருக்கிறது.

சிந்திக்கும் போது ,எழுதும் போது என்னால் என் ஆன்மாவோடு தொடர்பில் இருக்க முடிகிறது . எண்ணங்களை அது சுத்தமானதாக நிர்வகிக்கிறது அதனூடாக தடுமாற்றத்தை தவிர்க்க இயலுகிறது.

வருத்தமாக இருக்கிறாயா? ம்.........இதற்கு ஆம் என்றும் , இல்லை என்றும் இரண்டையும் சொல்வேன் .

ஆம் .......ஏனெனில் இழவுகள் நிகழவிடாமல் தடுக்கும் முயற்சிகள் அதற்கான மெனக்கெடல்கள் , மனப்போராட்டங்கள் , காயங்கள் நிலைதடுமாற்றங்கள் , மரியாதை இழப்புகள் , எள்ளல்கள்.....இப்படி பலவற்றை விலையாக கொடுத்து கொள்முதல் செய்தது காஞ்சீர சாறின் கசப்பன்றி வேறில்லை.

இல்லை.........ஏனெனில் இது நான் தேர்ந்த பாதையல்ல. அப்பா எனக்கென தொடங்கி வைத்த பயணம் . ஊழ் எனக்களித்த சாலை. அதில் நான் செய்யக்கூடுவது வலி மறப்பது ,விலைகொடுப்பது , அடைவது ஒன்றுமில்லை .

ஏனெனில் இது எனக்கே மட்டுமேயான பாதையல்ல.இவ்வுலகின் சரித்திர வெற்றியாலர்கள், தோல்வியை தழுவியவர்கள் என அவ் இருவியல்பினர்கள் தாங்கள் பெற்றதையும், இழந்ததையும் இங்கே வழிநெடூக வீசிவிட்டு வெறுங்கையர்களாக சென்றிருக்கிறார்கள்.

வென்றவர் கொண்டதை வீசினார் , சரி. இழந்தவர் வீச என்ன கைப்பொருள் வைத்திருக்கிறார். அவரிடம் கைபொருள் இல்லை ஆனால் சொல்லாத சொற்கள் , சொல்லி புரியாத வாக்கியங்கள் , மாறி இருக்கவேண்டிய தருணங்கள் , அதுநாள் வரை பிணைத்திருந்த தளைகள் ,மாறாத ஊழின் மிச்சங்கள் என....

அனைவருக்குமே முரண் ஒரு புள்ளி எனத்தொடங்கியது . மற்றவர்களின் தொடக் எவ்விதம் நிகழ்ந்தது எனத்தெரியாது ஆனால் அனுமானிக்கிறது அகம் , அதை பிறகு பார்க்கலாம்.

என் முரண் "அம்மா " தொடங்கியது ஒரு திகைப்பில் . அது பேச்சில் கடலூரில் தொடங்கியது . பெரும் மனவழுத்தத்துடன் வீடு திரும்பினான் .இது நாள் வரை நிகழ்ந்தது  என்ன என நான் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை.

அம்மாவாக அவர் மற்றவர்கள் தன் பால் கணிவு கொள்ள செய்யும்  ஒரு ஊடகம் "குறை " எனப்படுவது. அதில் கசப்பும் வெறுப்பும் மிகுகையில் அது எதனையும் உடைக்கும் திறன் கொண்டது. அது என்னிடம் விலையாக கேட்டது குடும்ப ஒற்றுமை எனப்படும் சிறு குருவிக்கூட்டின் தாங்கு கிளையை .

அன்றாடம் வீட்டில்  நிகழாத நிகழ்வு , செய்தி என வெளிப் புறப்பட்டு அது பிறரின் எள்ளலுக்கு, வெறுப்பிற்கு,கொந்தளிப்பிற்கு என எழந்து கிளம்பியது , அனைத்து உறவின் இல்லங்களில் இது பாராயண பொருளாகி திரிபடைந்து பன்முறை என எழுந்து என் இல்லத்து கூடங்களில் நான் நடந்து செல்கையில் திரும்ப திரும்ப செவியில் விழுந்துகொண்டேயிருந்தது. இது இப்படியே தொடருமானால் உறவை சிதைத்து மீண்டும் முளைகொள்ளாது என ஏன் இவர்கள் உணராது போயினர் .

ஒருகால் எவரிடமும் சில காலம் பேசாது இருந்தால் . பாவம் இவன் வருத்ப்படுகிறான் என அதை நிறுத்துவர் என நினைத்து சில காலம் பேசாதே கழிந்தது . பிள்ளைகளின் வருகை நின்று போனது.

தன்னிலை விளக்கம் இதை சரி செய்யலாம் என பேசத் தொடங்குகையில் , புதிய எள்ளலுக்கு ஆளாகியதும். எனக்கான மரியாதை இழந்து பல காலம் ஆகிவிட்டது புரிந்து போயிற்று

சில முயற்சிகளின் வழியே அவர்களுக்கு என்னுடைய  எதிர் காலத்தேவையை உணர்தினால் ஒரு கால் சரிவருமோ என புரிய விடுக்கும் எச்சரிக்கைகளின் விளைவுகளை அவர்கள் முன்பே புரிந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் குடியில் நன்கு வேரூன்றியது எனக்குத் தெரிந்தது. பின் விளைவுகளை அவர்கள் தெரிந்தே இருந்தனர்.

குடும்ப பூசல் வீட்டு மாப்பிள்ளைகளுக்கு தெரிந்தால் , பின் எக்காலத்திற்கும் சரி செய்ய இயலாத பிழையாகிப் போகும். ஒருகால் நான் செய்ய வேண்டிய பிற்காலத்தைய கடமையை நெறியை ஆற்ற இயலாது போகலாம் . என அச்சம் எழுந்து வந்தது.

உள்நோக்கி சிந்தித்துப் பார்த்தால் அதையும் அவர்கள் உள்ளுணர்ந்தே  இருந்தனர் .

இது ஒரு தருணம் என வாய்த்தது அவர்களில் நான் பேச விழையும் சிலரை அழைத்து என் மனக்குமுறுலை காட்டினேன் . அது பயனற்றவை ஆயின , ஒருவர் தான் முயன்று பார்த்திராத உலகியல் தத்துவம் பேசி நோகடித்தார். இளையவர் அம்மாவிற்கு புரிதலை ஏற்படுத்துவதில்  தன் இயலாமையை சொன்னார்.

எனக்கும் அது புரிந்தே இருந்தது. என் உயிர் காயத்திற்கு மருந்திட அந்த சிலர்களால்  இயலவில்லை அல்லது விரும்பவில்லை அல்லது தங்கள் வன்மத்தால் அது அப்படியே இருக்க விரும்பினர்.

இது ஊழின் கணம் . மரணத்தை விட கொடுமை எனப்படுவது. அது எனக்கு தெளிவாக சொன்னது .

விலகு விலகு என்று

சிறுவயது தொடக்கமாக யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்டதில்லை . சிக்கல் எழுகையில் எனக்குள்ள அது தர்க்கமாக தொடங்கிவிடும் . அதன் அடிப்படையில் என் முடிவுகள் அமையும்.

இந்த விஷயத்தில் என் தர்க்க புத்தி ஒத்துழைக்கவில்லை. இதுவரையிலான அனைத்து முடிவுகளையும் அதன் அனுமதியின்றி ஏதும் செய்ததில்லை , எனவே அதுனுடனான தர்க்க நிகழ்த்த தொடங்கினேன். அவற்றை இப்படியாக தொகுத்துக் கொண்டேன்.


 இதுவரை நீ சந்தித்த வலிமிகுந்த கணங்களில் , இவர்கள் உதவினார்களா?

நான் இதுவரை சந்தித்த வலி மிகுந்தது என் குழந்தை பிறப்பிற்கு முன் நிகழ்ந்தது.தொடர் சிக்கலில் நான் கையறு நிலையில் எவரும் கை நீட்டவில்லை. ஆனால் அது அம்மா மீதான பயம் காரணம் என அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

அப்படியானால் அம்மாவின் குற்ற சுமத்தலுக்கு அறம் என்ற ஒன்றைப்பற்றிய பிரக்ஞை யாருக்கும் வேண்டாமா?

இல்லை எனச் சொல்லவில்லை , ஆனால் அது அம்மா பாதித்த போது புயலென எழுந்தது அது முரண்நகை அது தாய் மகள் உறவிற்கு மத்தியில் மகனுக்கானது ஒன்றுமில்லை எனக் காட்டியது.

உன்னைப்பற்றிய நல்ல எண்ணம் சிதைந்து விட்டதா

நான் இரண்டாவது பகுதியில் அச்சமுற்றது இது பற்றி. ஆனால் நெடுநாட்களுக்கு பின்னரே அதை உணர்ந்தேன் . ஆம் ,சிதைந்து விட்டது.

அவர்களின் வாழ்வில் நீ ஒரு பொருட்டில்லையா

இதற்கு அப்பட்டமான பதிலை சொல்லுவது உசிதமல்ல. தங்கள் வாழ்வின் கணங்களை மீறி , அறம் சீர்தூக்கிப் பார்க்க இயலவில்லை . அதன் அடிப்படையில் நான் ஒரு பொருட்டென ஆகாது போயிருக்கலாம் .

அம்மா உன்மீது சுமத்துவதை உணமை என்றே உணர்கிறார்களா அதற்கு உன்தரப்பு விளக்கம் அவசியமன்று என நினைக்கிறார்களா?

இது இன்றுவரை புதிர். தொடக்கம் முதல் நேரடியான குற்றம் சுமத்துதலில் ஈடுபட்டனர்.அனைவரும் ஏறக்குறைய ஒரே நாளில் ஒரே மாதிரியாக. முன்பே பேசிவைத்துக் கொண்டது போல.

முன்பே பேசிவைத்தது போல என்றால் , ஏன் எதற்காக

அது இன்று வரை புரியவில்லை , அனைவருக்குமான ஒரு பொது பாதிப்பு இருந்திருக்கலாம். காழ்பைப் போல

இது என் தொழில் வீழ்ச்சிக்கு பின்னரே விஸ்வரூபம் எடுத்தது . அது ஒரு காரணியாக இருக்கலாம்.

இது மாமியார் மருமகள் பிரச்சனை அல்ல அம்மா பிள்ளைக்கு இடையேயான முரண் என்பதை உணர்ந்தார்களா?

இல்லை என நினைக்கிறேன் . அந்த கோணத்தில் அதை புரிந்து கொள்வது ஆயாசத்தையும் மிகுந்த புரிதலையும் எதிர்நோக்கியது . அதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அவர்களின் ஆழ்மனம் ஏதோவொரு காரணத்திற்காக இதை விரும்புகிறதா .

உளவியல் சிக்கல் இருந்திருக்க வாய்ப்புள்ளது

மேல் சொன்னவை அனைத்தையும் உன்னால் மறுக்க இயலுமா. அனைவரும் உன்னை சிறுமை செய்தால் உன் நிலை என்ன

இல்லை இதை மறுத்தால் இதைவிட சிக்கலை நோக்க கூடிய கேள்விகள் நிறைய எழுகின்றது. துரதிர்ஷ்டவசமாக அதன் பதில்கள் ரசனையற்றதாகவும் மலினமாகவும் உள்ளன. அதை பற்றி பேசுவது தேவையற்றது . அதை கடந்து செல்வதே என் சிந்தனை ஆரோக்கியத்திற்கு உகந்தது .

அந்த கோணத்தில் கேள்விகேட்டு பதில் அளிக்க முயல்வது ஆத்மாவை களங்கப்படுத்திக் கொள்வதில் முடியும் . அது என் பாணிய்யல்ல.  

இதை அவர்களின் ஒட்டுமொத்தமான வெறுப்பாக பார்கின்றாயா.

ஆம் என்பதுதான் வெளிப்படைத்தன்மை

ஆம் எனில் நீ செய்யக்கூடியவை என்ன

இதில் ஒருவரைத் தவிர அனைவரின் செயல்பாடுகள் ஒரே வட்டத்திற்குள் வருகிறது.

அந்த ஒருவரும் மிகத்திறமையாக வெளிப்படாது செயல் படுவதாக உள்மனம் சொல்லுகிறது . அவரையும் வெளிக்கொணரவும் இயலும் . அது தானக வெளிப்படும் வரை காத்திருப்பது என முடிவு செய்தேன்

அவர் ஒருவர் சரி என்றால் பொருட்டு உன் எதிர்வினையை நிறுத்துவாயா ?

ஆம் . நிச்சயமாக . ஒரே சிக்கலுக்கு இரண்டு வித அனுகுமுறை சரியானதாக இருக்காது

மேலும் ஒருமுறை வெளிபட்டால் திரும்ப முடியாத சாலை

உன்னை நீ புரிந்து கொண்டிருக்கிறாயா? எப்படிபட்ட சிந்தனை உள்ளவனாக நீ இருக்கிறாய்

ஆம் நான் என்னை மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன் அதனாலேயே அஞ்சுகிறேன்.

என் சிந்தனை ஓட்டம் , வாழ்கையை சிக்கலில்லாது உருவாக்கிக்கொள்வது . சிக்கலை ஏற்படுத்துவது சிந்தனை. சிந்தனை என்னை ஓயாது குறை சொல்வது . அது இறுதியில் கழிவிரக்கத்தில் கொண்டு விடுவது . அது மரணத்திலும் கொடியது

எனவே என் செயல்பாடுகளை எண்ணங்களில் அளவிலேயே தொகுத்துக் கொள்வது. நம் முடிவுகள் சில நம்மாலும் பல மற்றவர்களால் ,காலத்தால் சூழ்நிலையால் எடுக்கப்படுகிறது . ஆனால் அதற்கான விலையை நாம் தான் கொடுத்தேயாக வேண்டும் . விரும்பாவிட்டாலும் கூட.

ஒவ்வொரு நிகழ்வுகளின் போது அதன் காரணிகளை ஒப்பிட்டு அதே சூழ்நிலை காலம் எனும் நம்மால் பார்க்க,அறிய இயலாததின் விளைவுகளை தன் அளவில் உடன்பட்டு எதிர்வினையற்று உடன்பட்டு விடுதல்.

எதிர்வினையாற்றும் காலம் சக்தி இருப்பினும் பின் விளைவுகளை கணக்கில் கொண்டே செய்யப்பட வேண்டும் . வன்மம் இல்லாதும் வேறு வழியற்றும் இருப்பின் செய்தல் பிற்கால மனசாட்சியின் பழித்தலுக்கு இடமில்லாது போகும்.

உன்னுண்டய பங்களிப்பு இல்லாத உனக்கெதிரான அனைவரின் சூழ்கை நிகழ்ந்ததா .


ஆம் நிகழ்ந்தது . அது ஒரு ஊழின் முகூர்தம் போல பெருவலியென வந்தது .விபரீதமாக அனைவரும் ஒரே இடத்தில் கூடியதும்,எதிர்கால விழுதுகளின் கண்களில் சிறு பொறியென கசப்பை பார்த்தும். அதுதான் அந்த நாள்தான் , எல்லாவற்றையும் முடிவெடுக்க வைத்தது.


 உன் மனம் சொன்னதென்ன?.

அதை இப்படித் தொகுக்க தொடங்கினேன். பாரம்பரியமான குடும்பத்தில் இது போன்ற பிரச்சினைகள் முன்னரும் ஓரளவு இருந்தன. ஆனால் அன்றைய மனம் அதற்கு மரபுசார்ந்த பதில்களால் நிறைவடைந்தது. இன்றைய கல்விகற்ற, நவீன மனம் எளிய நம்பிக்கைசார்ந்த வழிகளை ஏற்பதில்லை. மரபு அளிக்கும் வாழ்க்கை முறையும் இன்றில்லை. குடும்பம், உறவுகள் அனைத்துமே மறுவரையறை நோக்கிச் செல்லும் காலகட்டம் இது.

நவீனக் கல்விகற்ற, நவீனவாழ்க்கையின் இடர்களில் இருந்து அடிப்படைக் கேள்விகளைச் சென்றடைந்தன ஆனால் அதற்கு சென்றகாலகட்டத்தின் எளிய மதநம்பிக்கை அல்லது குடும்ப பெருமை  அளிக்கும் விளக்கங்களால் நிறைவடையாத ஒரு வட்டத்திற்குள் வந்து சேர்வது தவிற்க இயலாதது.

அந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கும் விளக்கம் நவீன உளவியல், சமூகவியல், தத்துவம் ஆகியவற்றிலிருந்து சாத்தியமான தர்க்கங்களை எடுத்துக்கொள்கிறது. அவற்றை பொதுவான சிந்தனைத்தள அறிமுகம் மட்டுமே கொண்டவர்கள் புரிந்துகொள்ளும்படி எளிதாக்கி முன்வைக்க முடிவதில்லை.

நவீன சிந்தனை சார்ந்த குடும்பத்திற்கு ஒரு வலுவானதேவை உருவாகியது. வரலாற்றுரீதியான மரபான ஒரு பதில் அதற்கு இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் சந்தித்து உரையாடல் நிகழ்த்த வேண்டிய சந்தரபம் உருவாகி வர வேண்டிய சூழல் இன்று இல்லாது போனது

எந்த தோற்றமென்றாலும் அது ஒருவகை அறிவிப்பு மட்டுமே. எல்லா தோற்றங்களும் குறியீடுகளே. நான் அறிவுறுத்த விரும்புவதற்கான தோற்றம் அது. திருமண் இந்தியாவின் மார்க்க மரபுடன் இணைக்கின்றன கூடவே நான் பழைமையானவன் அல்ல, நவீன யுகத்தைச்சேர்ந்தவன் என்பதை வெளியிடுகிறேன் உளவியலாளர்கள் போன்று அகவயமான விஷயங்களை கையாள்பவர்கள் தங்களுக்குரிய தோற்றங்களை அமைத்துக்கொள்வது இங்கே இயல்பாக நிகழ்வதுதான்.

இந்த சூழலில் நான் அனைத்திலிருந்தும் விலகுவது என முடிவு செய்தேன் . எனக்கு ஏற்பில்லாத ஓரிடத்திலிருந்து விலகல் பல முறை நிகழ்ந்துள்ளது . இந்த நிலையிலேயே என் காலத்தை முடித்துக்கொள்ள முடியும்.அந்த உறுதி ஏற்பட்ட பிறகு பிறந்ததே

"அனைத்து சகோதரிகளுக்குமான என் விலகள கடிதம் "

துரதிர்ஷ்டமாக அந்த கடிதத்தில் நான் சொல்ல வந்ததென்ன என எவரும் புரிந்து கொள்ள முயலவில்லை . மாறாக வெறுப்புடன் கசப்புடன் அதை அனுகியதும் அவரவர் நெஞ்சம் அதில் தெரியத்
தொடங்கி இறுதியில் அதுதான் நான் சொல்ல வந்தது என ஆயிற்று.

இந்த விலகல் ஒரு செடியை வெட்டுவதைப் போல . இரண்டு வித வெட்டு உண்டு . ஒன்று மறுபடி கணுவிலிருந்து வளர்ந்து தழைக்க மற்றொன்று மறுமுறை தளிர்காதிருக்க. நான் வெட்டியது மறுபடி துளிர்குமுகமாக.

அவை முளைவிடும் காஞ்சீர மரங்கள் இல்லாதிருக்க அப்பெருவளியை அரசை வேண்டுகிறேன்






திங்கள், 14 நவம்பர், 2016

மனத்திரிபு

மனத்திரிபு








கோவில் காண்டா மணி ஒலித்தபடியே இருந்தது , காலை நேரம் கூட்டம் அனேகமாக இல்லை , கோவில் பட்டர் பரிவார சன்னதிகளை திறப்பதும் திரைகளுக்கு உள்ள சாதிகளுக்கு காலை உணவை கண்டருளப் பண்ணினார் . அவர் கையிலிருந்த மணி ஓயாமல் அடித்துக்கொண்டு இருந்தது . சாம்பிராணி புகை மூட்டமாக வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தார் சித்திரைக்கு இன்னும் நாள் இருக்கிறது என்று சூரியபகவானுக்கு யாரும் சொல்லவில்லை போலும் புழுக்கம் தாங்கவில்ல காற்றாடவில்லை , வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை . உற்சவத்தை ஒட்டி பலிபீடம் அருகில் தற்காலிக தட்டார பந்தல் வெய்யில் மட்டுமல்ல காற்றையும் மறைத்தது .
பட்டர் பலிபீடத்தில் பலிசாதித்த சுத்தன்ன உருண்டைகள் துளசி வைத்துவிட்டுப் போனார் .

தாத்தா ரா.மா.கோவிந்தசாமிபிள்ளை ,புதுவை மாகாத்மா காந்தி வீதியில் உள்ள வரதராஜர் கோவில் ராமர் சன்னதியில் என் அப்பாவிற்கு காத்திருந்தார் . பாண்டுரங்கன் சன்னதியில் படியில் குடையை ஊன்றியபடி உட்காரந்திருந்தவர் அவர் கண்ணில் யார் பட்டாலும்  வழக்கமான உரத்த குரலில் வசவுதான் , எல்லாம் கிராமத்து பாணி கெட்ட வசவுகள் . அவர் இருக்கும் இடம் நிழல்படாது திசைக்கொருவராக தெறித்துக்கொண்டிருந்தனர்

தாத்தாவிற்கு பின்னால் பெரியப்பா நின்று கொண்டிருந்தார் ஏறக்குறைய தாத்தாவின் இளவயது கார்பன் காப்பி போலத்தான் இருந்திருப்பார் . அதே நடையுடை திருமண் . தாத்தாவிற்கு பிறகு அவர்தான் எல்லா கோவில் வேலைகளை செய்யப் போகிறவர் என்று இருப்பார் . முன்கோபி சகஜமாக யாருடனும் பேசமாட்டார் . கோபம் என்று வந்தால் நாக்கு ஒரு மாதிரி நெருப்பு பிழம்பு , மறக்கமுடியாத சுடுசொல் வல்லார் அதற்கு இலக்க்கான எவராகிலும் தன் வாழ்நாளில் அதை நினைத்த உடல் பற்றியெறிவதை உணர்வர். எதையும் வெறுப்பின் மொழியிலேயே பேசுபவர் .  மிக புராதன மனிதர் போல இருப்பார் எந்த மாறுதலையும் விரும்பாதவர் பழமைவாதி வெளிப்படையானவர் யாரிடமும்  தாட்சணயம் கிடையாது , எப்போதும் கசப்பு எட்டிக்காய் போல.

வருஷோஸ்த்வமாக ராம நவமி உற்சவம் பத்து பண்ணிரண்டு நாள் நடைபெரும் நாளுக்கு ஒரு சாதியினர் முறை . பெரும்தணக்கரர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் தனியாக ஒருநாள் செலவை ஏற்றுக்கொள்வார்கள் அது அவர்களின் தனிப்பட்ட உற்சவமாக நடைபெறுவது வழக்கம். அன்று தாத்தாவின் முறை .

தாத்தா கம்பீரமான ஒரு ஆளுமை ஊரில் அவரைத் தெரியாத ஒருவருமில்லை . உயரம் நடுத்தரதிற்கு சற்று குறைச்சல் கணுக்கால் வரை ஏற்றிக்கட்டிய கதர் வேட்டி ,முழுக்கை முரட்டு ஆந்திரா கதர் சட்டைக்கும் ஜிப்பாவிற்கும் நடுவிலுள்ள வஸ்த்து அந்த காலத்து மாடல் கை புஜத்தில் ஒற்றை பிரில் , மொட்டைக் கழுத்து மார்பு வரை திறந்திருக்கும் பட்டன் கிடையாது . இருபக்கமும் காஜா எடுத்திருக்கும் அதில் தங்கச் சங்கிலியில் கோர்த்தது போல பின் புறம் பட்டையாக முன் புறம் சிறிய குண்டு வடிவில் இருக்கும் . சட்டை மாற்றிக் கொள்வதற்கு முன்னதாக அதைத்தான் முதிலில் பொருத்துவார் . முழுக்கை அதை மடித்தெல்லாம் விட முடியாது  . முடிவில் இனைக்கும் பட்டன் ஒருமாதிரி இந்தகாலத்து கோர்ட் சட்டை கை பின் போல ஆனால் சுதேசி . வழுக்கைத் தலை அளவான தெண்கலைத் திருமண் காதில் பெரிய வெள்ளைகள் கடுக்கன் , பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி . சிறு மடிப்பு பட்டு உத்திரியம் அதை கழுத்தை சுற்றிப் ஒரு முனை வலது மார்பிலும் மறுமுனை வலது பக்க முதுகிலுமாக நடுப்பகுதி மார்பில் தழையும்படி இருக்கும் , கையில் எப்பொழுதும் குடை வைத்திருப்பார் .

தாத்தா வியாபாரத்தில் தனக்கென இடத்தை பிடித்து செல்வாக்காக உலவத் துவங்கினார், பக்தியில் மிகுந்த  ஈடுபாடு கொண்டவர் வியாபார விஷயமாக 1920 களில் பாம்பே சென்றபோது பூனா பக்கத்தில் உள்ள பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் மேல் சொல்லவியலாத பிரேமை . தன்முதல் பிள்ளைக்கு அந்த பெயரையே வைத்தார்
வைஷ்ணவராக இருந்தாலும் அவருக்கு சைவ வைணவ பேதமில்லை ராமநவமி உற்சவம் போலே ஆனித் திருமஞ்சணம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரமாதமாக ஏற்பாடு செய்து பண்டு கட்டி வைத்திலுந்தார் விடாமல் நடக்க வேண்டும் என்று மணக்குள விநாயாகர் உற்சவ மூர்த்தி தாத்தா செய்து வைத்தது  . இன்று அந்த பண்டிலிருந்து வரும் வட்டிக்கு பூ கட்டுகிற இலையைக் கூட வாங்க முடியாது.

அவரது ஆன்மீக ஈடுபாடு மற்றும் செயல்பாட்டிற்கு நிச்சயம் குரு என்று ஒருவர் இருந்திருக்கலாம் அல்லது தொடர் வாசிப்பின் வழியாக இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் . தன் அலமாரியில் ஒரு வெள்ளி கூஜா பார்த்திருக்கிறேன் , அதில் அவர் எந்த கோவிலுக்கு போனாலும் கோபுர வாசல் அருகே குனிந்து சிறிது மன்னை எடுத்து சிறு காகிதத்தில் மடித்து எடுத்து வந்து அந்த கூஜாவில் சேர்பது வழக்கம் , தான் மரணித்தபிறகு அது தன் மீது தூவிய பிறகே சரமகாரியம் செய்யப்படவேண்டும் என தன் உயிலில் குறிப்பிட்டிருந்தார் . அசைவ உணவை கடைசீவரை விடவில்லை . மதிய உணவுடன் ஏதாவதொரு பச்சடி இருக்க வேண்டும் அம்மா சளைக்காது அனைத்து காயிலும் வெல்லம் போட்டு வைப்பார் கருணைகிழங்கு உட்பட . காலை உணவில் இட்லயை தயிர் கலந்து சாப்பிடுவது மட்டுமில்லாது கண்னாவி அதை அருகில் உள்ள எங்களுக்கும் ஒரு துண்டை நீட்டுவார் அதை பார்த்தாலே அனைவரும் சிட்டாக பறந்து விடுவோம்

கோவில் உற்சவத்தில் மிராசு போல் இருந்தாலும் நித்தியபடி கோவில் காரியங்களை தானே செயவது வழக்கம் . தினம் ஒரு தூக்கு எண்ணையும் கைவிளக்குமாக தார்பாய்ச்சிய வேட்டியுடன் இரண்டு கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் திரி போட்டு வளக்கேற்றுவார் , கிணற்றில் உள்ள மாடம் உள்பட . பட்சி பட்டாசாரியார் ஒருமுறை சொல்லும் போது ஏதோ ஒரு தமிழ் வருட பெயர் சொல்லி அன்றைக்கு அடித்த புயலில் தாத்தா பேய்மாதிரி விளக்கு போட்டுக் கொண்டிருந்தார் என்று. வாழ்கையின் புரிதல்களை தேடி பலமான வாசிப்பினால் அடைவது என இருந்தாலும் ஒரு  சிலர் ஒரே புத்தகத்தை இடைவிடாத வாசிப்பினாலே அதை அடைந்து விடுகிறார்கள் போலும் . பண்டரிபுர நாயகனின் லீலைகளை பற்றிய ஒரு புத்தகம்தான் அவரது பொழுதுபோக்கு . அதில் ராமதாசர், பக்தமீரா போன்றவரகள் சரித்திரமாக இருக்கும் . தாத்தா தன் பேத்திகள் அனைவருக்கும் இந்த புத்தகத்தில் வரும் காதாபாத்திரத்தின் பெயரையே .

பக்த சரித்திர நூலை என் அக்கா அவருக்கு தினம் படித்துக் காண்பிப்பாள் , நெகிழ்வான இடங்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் பக்தி பரவசத்தில் தலைக்கு மேல் கை குவித்துவிடுவார் . ஒரே புத்தகத்தில் திரும்ப திரும்ப படிப்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிடும் என அப்போது புரியவில்லை.அக்கா ஒரு சரித்திரத்தை படித்து முடித்தவுடன் அதைவாங்கி தலைமேல் வைத்து கொள்வார் , படித்தவருக்கு இருபது ஐந்து பைசா சம்பாவணை . அக்காவிடம் காசுகிடைத்தது பற்றி பேசினால் அவள்

தாத்தா அந்த காலத்தில் வலது கம்யூனிஸ்ட் அனுதாபி என்றும் சொல்லாலாம் . இந்தியாவில் ஆலைத் தொழிளாலர்களுக்கு எட்டு மணி நேர வேளை என்கிற உரிமையை பெற்றுத்தந்தவர் மக்கள் தலைவர் வ.சுப்பையாவிற்கு மிக நெருக்கமாக இருந்தார். காங்கிரஸில் காந்தி மிதவாதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிர நிலை எடுத்தவர் சுப்பையா நேதாஜியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் .

இந்தியா முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக காங்கிரஸ் போராடிய போது புதுச்சேரி சுதந்திர போராட்டம் மிக வித்தியாசமானது  இங்கு பிரிட்டிஷ்காரர்கள் இல்லை பிரன்சுகாரர்கள்  ஆண்டனர் .

சுப்பையாதான் காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்து வந்தார் என்பார்கள் நீண்டநாள் எனக்கு ஏன் சுப்பைய்யா காங்கிரஸ் கட்சிக்காரர் இல்லை எனப் புரியவில்லை.

பெரியப்பாவிற்கு அப்பா நேர் எதிர் நல்ல ரசிகர் நவீனமயமாதலின் மத்திய காலகட்டம் அது. அனைத்து  சிந்தனாவாதிகளுக்கும் ஏற்படும் விஞ்ஞான ரீதியில் எதையும் நிரூபிக்க இயலும் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் , திராவிட இயக்கம் காலூன்ற தொடங்கிய காலம் மேடைகளில் தமிழ் பேசப்பட்ட தாளகதிக்கு ஒரு பெரும் கூட்டமே மயங்கிக்கிடந்தது . அவர்களில் பலர் தங்கள் குடும்ப விழுமியங்களை போற்றும் பெரியவர்களை நமுட்டுச் சிரிப்புடன் எதிர்பவர்கள் ,ஆனால் அப்பா தாத்தாவின் மீது மரியாதை கொண்டவர் . நவீன சிந்தனை வட்டத்தில் நடைபெருவதை கூர்ந்து அவதானிப்பவராக இருப்பதால்  , தன் அளவில் சிலவற்றை பரிட்சார்த்தமாக முயற்சிப்பவர் . தன் கொள்கையில் அழுத்தமான பிடிப்பு உண்டு அதை உரத்து பேசாத மென்போக்காளர் . அந்த சம்பவம் நடக்கும்வரை .

தந்தைக்கு அடங்கிய பிள்ளை வியாபாரமார்தமாக வெளியூருக்கு சென்றிருந்தார், தாத்தா அவரைத்தான் எதிர்பார்திருந்தார்.

காலை திருமஞ்சணம் பின்பு உள்புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெரும் . தாத்தாவிற்கு அந்த நாளுக்கு வேறு எந்த முக்கிய காரியமும் ஒரு பொருட்டல்ல . அப்பா சொல்லும் வியாபார காரணங்களை அவர் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை . அந்த காலத்திலேயே பம்பாய் சென்னை என்று பல ஊருக்கு சென்று வியாபாரம் பார்த்தவர் விஷயங்களை தெரிந்து கொண்டவர் . அரசியல் சமூகம் என எல்லாவற்றிலும் அறியப்படுபவர் .

திருமஞ்சணம் முடியும் தருவாயில் அப்பா வந்துவிட்டார் பார்வையிலே தாத்தாவால் கண்டிக்கபட்டார் முனுமுனுவென்றதோடு விட்டது அப்பாவை ஆசுவாசப்படுத்தியது .

தாத்தவிற்குத்தான்  முதல் தீர்த சடாரி பிறகு குடும்பத்தாருக்கு பின் பொது ஜனத்திற்கு . தோலுக்கினியான் கொண்டுவரப்பட்டு ஶ்ரீபாதந்தாங்கிகள் தாத்தாவிற்கு பணிவாக வணங்கினர் அவர் அமைதியாக ஏற்றுக்கொண்டார் உற்சவமூர்திகளை தோலுக்கினியானில் ஏளப்பண்ண சிறிது நேரம் ஆகும் அதுவரை ஊர்பெரியவர்கள் முக்கியஸ்தர்களின் பேச்சி என்று எங்கும் ஒரே அலராயிற்று .

சுமார் ஒருமணி நேரம் கழித்து உள்புறப்பாட்டிற்கு தயாரனது யாரோ மேளம் எனக்குரல் கொடுக்க நாதஸ்வரம் எங்கோ வெளியே  தம்மடிக்க போயிருப்பார் போல வெறும் மேளம் மட்டுமே ஒலிக்க சற்று நேரத்திற்கெல்லாம் நாதஸ்வரம் இயைந்து ஒலிக்கத்தொடங்கிது .

சன்னதியில் இருந்து தோலுக்கினியான் வெளிவந்து கிழக்கு முகமாக நின்றவுடன் இயல்பாக பிரபந்தமும் , வேதமும் சேவிக்கத் தொடங்கினர் . அது ஒரு மாதிரி இழுவையான ஸ்வரத்தில் சொல்லே புரியாமல் இருந்தாலும் கேட்க கேட்க இனிதாகியது . தூக்கியதாக யாரோ குறித்துக்கொள்வார் போல புறப்பாடு தொடங்கியதும் பெரியவர்கள் சிலர் வேகமாக வந்து அதை தூக்குவதற்கு முயற்சிப்பது போல் பாவனையால் சாமியை ஏமாற்றினார்கள் . அவர் குன்சாக எங்கோ பார்த்தபடி அச்சிட்ட புண்ணகையோடிருந்தார் . வழக்கபோல சிலர் முனபின் வர புறப்பாடு துவங்கியது .

முதல் திருப்பம் வருவதற்குள் புறப்பாடு கோஷ்டிக்கு மத்தியில் திடீர் கசமுசா இன்னதென்று புரியாத நிலையில் மேளமும் கோஷமும் நின்றுவிட்டது . என்ன நடக்கிறது என்று யாருக்கு எதுவும் புரியவில்லை . உற்சவருக்கு நெருக்கமாக நின்றிருந்த அனைவரும் ஒருவித பீதியோடு விலகத் தொடங்கினர் . எட்டிப்பார்தால் பெரியப்பாதான் ஒரேமாதிரியரி நாய்குந்தல் போல உட்கார்ந்திருந்தார் முகமும் செயல்களும் ஒருவித சேஷ்டை போல அங்குமிங்கும் பார்பது எல்லாம் குரங்கு செய்வது போலவே . முதலில் யாருடனோ சண்டை என நினைத்தேன் கூட்டத்தில் அவர் அப்படி தன்னை வெளிபடுத்திக் கொள்ளாதவர் எதையும் மிக நாசூக்காக செய்வார் கிள்ளுவதைக் கூட.

பட்டாசாரியார்கள் மிரட்சியுடன் அங்குமிங்கும் ஓடுவதுமாக இருந்தார்கள்  கோவில் மணியக்காரர் சாவியுடன் ஓடி வந்து அனுமார் சன்னதியை திறக்க யாரோ திரைபிடிக்க உள்ளே இருந்த அனுமன் விக்ரகத்தை மார்போடு அனைத்த படி ஓட்டமும் நடையுமாக வந்த பட்டாசாரியார் விக்கரகத்தை லட்சுமணரின் விகரகத்திற்கு எதிரில் வைத்தார் , பின் ராமர் பாத த்தில் இருந்து துளசி தீர்த்தம் மாலை சடாரி என ஒவ்வொன்றாக அவருக்கு கொடுக்க முதலில் இடுக்கிய கண்களால் பார்த்தவர் பின் எழுந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டார் .தாத்தா பாட்டியிடம் ஏதோ சொல்ல பாட்டி பெரியப்பாவின் கையை பிடித்தபடி ஊஞ்சல் மண்டபத்தை நோக்கி சென்றார் .

நாதஸ்வரம் பிசிரடித்து மேளம் உரத்து அதிரத் தொடங்கியவுடன் உள்புறப்பாடு மறுபடி துவங்கியது யாரும் யாருடனும் பேசவில்லை  தோலுக்கினியான் சன்னதி திரும்ப  இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் ஆனால் அன்று என்னவோ அரைமணிக்குள்கவே திரும்பிவிட்டார் அர்சனை முடிந்து பிரசாத வினியோகம் . மண்டப இறுதியில் உட்காரந்து இருந்த பெரியவர் உடையார் அருகிலிருந்த ராதாகிருஷ்ணனிடம்

" என்ன இருந்தாலும் முறையை மாற்றலாமா? சிறிய திருவடி சப்ரத்தில் ஏளப்ன்ன மறந்ததும் பாண்டுரங்கத்திறகு சன்னதம் வந்தது அனைவருக்கும் மிரட்சியை கொடுத்துட்டுது" என்றார் .

வேறுயாருக்காவது வந்திருந்தால் வேஷம் என்றிருபார்கள் இப்போது யாரும் ஒன்றும் சொல்லமுடியாது  என்றார்

பாண்டுக்கு தனக்கு என்ன நேர்ந்த்து என தெரியவில்லை, கிருபா தான் அதிர்ந்து போனார் , என்றார்

கிருபா நவீனவாதி பின்னொருநாள் இது பற்றி அவரிடம் பேசவேண்டும் என்ற பிறகு இருவரும் நமுட்டலாக சிரித்துக்கொண்டனர்.

அனைத்தையும் மௌனமாக கேட்டபடி தாத்தா பிரசாதம் சாப்பிடத் துவங்கினார். கடமை என்றும் புண்ணியம் என்றும் ஒரு காரியம் நம்பிக்கை அடிப்படையிலானது அது நிஜத்தின் அருகில் வருகிறபோது மனம் வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்குகிறது . விழைவின் அடிப்படையில் இன்பத்தை நோக்கி நகரும் அது ஏதாவதொரு சமன்பாடுகளைச் சொல்லி தன் அறமென இருப்பதில் மீறுகிறது . அந்த சிறு தனிமனித விழைவிற்கும் அந்த அறமீரல்களை தவறென நினைக்க மறுக்கிறது . இன்பம் குறிக்கோள் ஆயின் அது அனைத்தையும் வாழ்வில் ஒரு கணத்தில் நிகழ்ந்த முரண்பாடுகளை கருத்தில் கொண்டு மறுதலிக்கிறார்.

அப்பாவிற்கு இது புரிதலின் மற்றொரு அடுக்காயிருந்தது நிரூபணவாத அறிவியல் நோக்கில் ஆழமான சிந்தனையால். மரபான விஷயத்தையும் புறவயமாக நிரூபிக்க இயலும் என நம்பியவர . ஆகவே மரபுகள் உருவாக்கும் நம்பிக்கைகளை ஆசாரங்களை பொருத்துவதற்கு சரியான வாய்ப்பை இழந்திருக்கலாம் . அண்ணனுக்கு நிகழ்ந்தது இதில் எதிலும் விளக்கமுடியாததாக இருந்தது . குழப்பமான மனநிலையில் எழந்து சாப்பாட்ட இலையை போட்டவர் ஆஞ்சநேயர் சன்னதி வந்ததும் கைகள் தன்னிச்சையாக எழுந்து கூம்பின

பெரியப்பாவிடம் நிகழ்ந்ததை மெதுவாக சொன்ன ஒருவரை தன்னை கேலிசெய்வதாக கடுமையுடன் சொல்லிச்சென்றார்

தாத்தா தன் இருபிள்ளைகளின் நடத்தையை குடையை ஊன்றி மண்டபத்தில் அமர்ந்திருந்த பாரத்தவர் மனதுக்குள் சிரித்துக் கொன்டார்















புதிய பதிவுகள்

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

    ஶ்ரீ : பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்   2026 * கனவை நிகழ்தல் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...