https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 507 * தாவும் அரசியல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 507

பதிவு : 507  / 693 / தேதி 29 டிசம்பர்  2019

* தாவும் அரசியல்  


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 21




அரசியல் - ஒரு அற்புதமான உளவியல் கூறு , வாழ்வியலின் பிறிதொரு அலகு , அதை  கற்க  விழைபவர்களுக்கு  கற்பிப்பது . அனைத்திற்கும் குருவின் தேவைபோல அரசியலுக்கும் இன்றியமையாதது . காரணம்  அதற்கு மேல் ஊழ் எனஒ ன்று அமரந்திருக்கிறது. அதனால் எக்காலத்தும் அதை பாதையை ஒருவர் விளங்கிக் கொள்ள இயலாது .எனக்கு பால பாடமாக இதை எனது அரசியல் குரு சண்முகம் சொன்னது . அவை சமூகங்களின் முரணியக்க தொகுப்பு , அதில் இருந்து  ஒன்றை பிரித்தறியாது அதன் உட்பொதிவை உணரமுடியாது . பிரித்தறிய குரு உதவித் தேவை .

குபேருக்கு தனக்கு என்ன நிகழந்தது என முதலில் புரிபடவில்லை . அவருக்கு அது  ஒருநாளும்  புரியப்போவதுமில்லை . காரணம் அரசியலை ஒரு வன்முறையாக அவர் கற்றிருந்தார் . அது கொடுத்த புரிதலே காமராஜர் தனக்கு ஆதரவாக மாறுவார் அவர் நினைத்தது பின்னர் முற்றான  பிழையானது . காமராஜர்  போன்றவர்கள்  அரசியலை கடந்து தன்னறமென்ற ஒன்றை வைத்திருக்கிறார்கள் , அதனாலேயே தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் , அதிலேயே நிலைகொண்டு வாழ்ந்து மடிகிறார்கள் .

செயல்படுகையிலும் செயல்படாமையின் மேலே காலம் என ஒன்று தனித்து நின்று கொண்டிருக்கிறது . அதை தனது ஆழ்மனதால் அறியும் ஒருவர் அதற்கு ஒத்திசையும் வழியை கண்டடைந்து வெற்றிபெறுகிறார்கள் பிறர் வீட்டில் பூச்சி போல அந்த  விளக்கின் ஒளியில்  வீழ்ந்து மடிகிறார்கள்ஆனால் வழிகளை கண்டைவதும் ஒருவருக்கு எப்போதும் இயல்வதல்ல அவர்களுக்கும் நேரம் என்றும் ஊழ் என்றும் அது பிறிதொரு காலத்தில் அவர்களையும் மிகை கணக்கிட வைத்து பலிகொள்கிறது .  இன்று இயற்றுபவரும் அதில் நாளை பலியாகும்  ஒருவரே. காலம் அவருக்கு பிறிதொரு நேரத்தை வகுத்து வைத்திருக்கிறது 
எந்த நிலையிலும் இந்தியரல்லாத ஒருவரை காமராஜர் ஏற்கத்தயாரில்லை . புதுவை அரசியலை மிகத் துல்லியமாக அவர் அறிந்திருந்தது அதற்கான காரணம்குபேர் போன்ற ஒருவர் இந்திய இறையான்மைக்கு உடன்பட்டு அரசியலை ஒருபோதும் இயற்றமாட்டார் . மேட்மை மனப்பான்மையுடன் இருளுக்கே அனைத்தையும் கொண்டு செல்வார் என்பது காமராஜரின் எண்ணமாக இருந்தது . காமராஜர் குபேர் எளிதில் எதையும் விட்டுக்கொடுப்பவர் அல்லர் என புரிந்திருந்தார் என்றார் சண்முகம் .

காமராஜரின் அவதானிப்பு பொய்க்கவில்லை. குபேர் எளிதில் தோல்வியை ஏற்பவரல்ல . 1964ல் பதவியேற்ற ரெட்டியார் மூன்று வருடங்களுள்ளாக பதவி விலக வேண்டி வந்தது . குபேர்  தனது அரசியல் சூழ்தல் மூலம் ரெட்டியாரின் ஆட்சியை வெகு விரைவில் முடிவிற்கு கொண்டுவந்தார் . பிறிதொரு கலகம் மூலம் ரெட்டியார் இறக்கப்பட்டு , இரண்டு அமைப்பிற்கும் பொதுவாக மரைக்கார் முதல்வராக 1967ல் தனது இளம் வயதில் பொறுப்பேற்றார் .உட்கட்சி சிக்கல் உச்சத்தில் இருந்தாலும் கட்சி அமைப்பை மட்டும் அன்றைய சூழலில் சரி செய்ய இயன்றது .

குபேர் 1963 தேர்தலில் ஆடிய ஆட்டத்தை 1968 ல் செய்ய இயலவில்லை . தனது ஆதரவாளர்களுக்கு   காங்கிரஸில் சீட்டு வாங்கி கொடுக்கும் திட்டம் வெற்றிபெறாத சூழலில் அவர்களை  திமுக வில் சேர்ந்தார் . காங்கிரேசின்  முன்னாள் முதல்வர் மரைக்கார் திமுகவில் இணைந்து முதல்வரானார் .  அதை தொடர்ந்து  பின்னர் தானும் திமுக வில் இணைந்தார் . நடைமுறை அரசியலின் கூறை   புரிந்துகொள்ள இயலாத குபேர் , அரசியலில்  மனம் கசந்து முற்றாக வெளியேறினார் . அவரின் இருப்பாக பிறிதொரு ஆளுமையாக மரைக்காரின் அரசியல் துவங்கியது .

ஆரம்ப கடத்தில் ரெட்டியார் கண்ணனுக்கு சண்முகம் தெரிந்தாலும் அவர் அவரது அசையாத இருப்பை உணர்ந்திருந்தாலும் , சண்முகத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள  முடியாது என்பதால் தனது அரசியல் கருத்துக்களை ரெட்டியார் வழியாகவே செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருந்தது .அன்று சண்முகம் ஒரு ஆளுமையாக உருவாகி இல்லாத சூழலில் அரசியல்  நுட்பமாண விஷயங்கள் பேசி புரிய வைப்பதற்கு அப்பாற்பட்டது .தர்கத்தால் அதை புரிந்து கொள்ளவோ, வைக்கவோ முடியாது

இயற்கையில் சிக்கல்களுக்கு அஞ்சும் வெங்கிடசுப்பா ரெட்டியார் எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார் என்பது வினோதம் .பிரன்ச் அரசாங்கத்தை எதிர்த்து தனி ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டவர் என்பது கூடுதல் ஆச்சர்யம் . எந்த முடிவெடுக்கவும் மிக தயங்குபவர் எடுத்த பிறகும் அதில் உறுதியாக இருப்பார் என சொல்லமுடியாது என்றார் சண்முகம் வெறுப்புடன் .

தான் துவங்கிய ஒரு வேலையை தன் விருப்பப்படி நிகழ்தி முடித்த திருப்தி காமராஜருக்கு . ஆனால் நிகழ்ந்தது என்ன என அவதானிப்பதற்கு முன்பாக ஆட்டமிழந்தார் குபேர்.தனது ஆரம்பகால  அரசியலில் சண்துகம் வெங்கிட சுப்பா ரெட்டியிரை சாந்தே செயல்பட்டார் . வெங்கிட சுப்பா ரெட்டியார் எனது முது தந்தைக்கு நெருங்கிய நண்பர் என தந்தை சொல்லி கேட்டிருக்கறேன் ஓரிருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன் . முதல் பார்வைக்கு மிக வசீகரம் நிறைந்து மனிதராக உணர்ந்ததை நினைவுறுகிறேன்.

சிவந்த நிறம் . நடுத்தர உயர ,பருமன் வெண்மை தலைமுடி இளமஞ்சல் பட்டு ஜிப்பா , வேட்டி நெற்றியில் மத்தியில் குங்கும பொட்டு என பார்த்த முதல் கணத்தில் எவரையும் கவர்பவர். மிக நிதானமான பேச்சு .பாரத்தவுடன் மதிக்க சொல்லும் ஆளுமை . இவற்றின் மத்தியில் சண்முகம் சொன்னதை பொருத்திப் பார்த்தால் வேறொரு புரிதல் கிடைக்கலாம் .

வெள்ளி, 27 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 506 * எதிர்பாராதது *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 506

பதிவு : 506  / 692 / தேதி 27 டிசம்பர்  2019

* எதிர்பாராதது * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 20







காமராஜர் தான் புதுவைக்கு வருவதை பற்றி முடிவெடுக்கும் பொறுப்பை சண்முகத்திடம் விட்டது அவருக்கு முதலில் திகைப்பை கொடுத்தாலும் , அப்போதிருந்த ஒற்றைப்படை சிந்தனை காமராஜர் புதுவை வருவதை தடுத்தாக வேண்டும் என்பதாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் ,அதனால் அவர் சொல்லவருவது என்னவாக இருக்கும் எனபதை புரிந்துகொள்ள முடியாமையால் , சற்று இடைவெளி விட்டு அன்று மாலை வந்து அவரை மீண்டும் சந்திப்பது என முடிவெடுத்து தான் வழமையாக தங்கும் உடுப்பி பவனுக்கு சண்முகம் சென்றார்

ஹோட்டல் அறையில் இதைப்பற்றி ஒன்றும்  சிந்திக்க கூடாது என முன்பே முடிவெடுத்தபடி அன்று மாலை வரை வேறு விஷயங்களில் மனதை ஓடவிட்டிருந்தார்  . மாலை 4:00 மணிக்கு காமராஜர் வீட்டிற்கு சென்ற போது வழமைப் போல அவரது வீடு ஆரவாரமின்றி அமைதியாய் இருந்தது . வைரவன் வந்து அவரை வணங்கிய  சண்முகத்திற்கு   டீ வேண்டுமா என கேட்டார் , ஆம் என சொல்லி காமராஜருக்கும் சேர்த்து  டீ வாங்க பணம் கொடுக்க, வைரவன் டீ வாங்க பிளாஸ்கை எடுத்து சென்ற அந்த நிமிடத்தில் பொறி தட்டியதுப்போல ஒன்றை உணர்ந்தார் .

மிக எளிமையாகவாழும் முறையை  அமைத்துக்கொண்ட ஒருவருக்கு தனிப்பட்ட அரசியல் என்கிற விழைவு இருக்க வாய்ப்புண்டா. ராஜாஜியுடன் உள் சமரசத்திற்கு அவர் தயாரில்லை என்பதும். ராஜாஜி திமுக வுடன் கூட்டணிக்கு துணித்தது போல ஒரு முயற்சியை அவர் முன்னெடுக்காததற்கு அவரது அடிப்படை அரசியல் கண்ணோட்டம்  மாறவில்லை என்பதே காரணம் . திமுக அரசியலுக்கு லாயக்கற்ற கட்சி எ ன்பதாக இருந்தது . அதைக்கடந்து புதுவையில் அவருக்கு தனியாக என்ன நிகழக்கூடும் ........  இப்படி பல சிந்தனைகளில் இருந்தபோது காமராஜர் எளிய கைவைத்த பனியனுடன் வெளிவந்தார் . சண்முகமும் அவரும் ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டனர் . சண்முகம் அவரிடம்நீங்கள் அவசியம் புதுவைக்கு வரவேண்டும் , பெரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்ய இருக்கிறோம் என சொல்லி விடை கோரும்  போது காமராஜர் மெல்ல சிரித்துக்கொண்டார் .

காமராஜரிடம் விடை பெற்று வெளியே வந்த பிறகு மனம் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டது  போல உணர்ந்தார் . காலை தான் கொண்ட நிலையழிவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது மனதில்  ஒருவித ஏமாற்றம் போல இருந்திருக்க வேண்டும் . அனுபவம் கழற்றலாகி அங்கிருந்து வாழ்க்கைக்கு அது வழிகாட்டலாக நிகழும் என ஒருபோதும் எண்ண முடியாது போலும் . கற்றல் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று . அதிலுள்ள சிறு சிறு நுட்பக் கூறுகளை பிரித்து அறியும் ஆவலிருக்கும் வரை அதன் பாதை சுவாரஸ்யமானது .

எளிய மக்கள் வாழ்வியல் அனுபவத்தில்  இருந்து கருத்தென ஒன்றை சென்று அடைவதில்லை . மனிதர்கள் குறித்து அவ்வாறு கருத்தை உருவாக்கி கொள்பவர்கள் கூட , தங்கள் முடிவை மாற்றிக் கொண்டே வந்து பின்னர் ஒரு நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்துக் கொண்டு , அது நாள்  வரை பெரிதாக மதித்தவர்களை  தூக்கி எரிய தயங்குவதில்லை . ஆளுமைகள் அதை எப்போதும் செய்வதில்லை. மனம் கொந்தளிக்கும் போது அதிலிருந்து விலகி நின்று அது நாள்வரை இருந்துவந்து தங்கள் கருத்திற்கு மாற்றாக ஒன்று நிகழும் போது அதில் மனித மனங்களின் செயல்பாடுகளை பொறுத்திப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள் அன்றி அதுவரை தங்களை வழிநடத்திய கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை

பலவித சிந்தனையில்  புதுவை வந்த சண்முகம் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து காமராஜரை வரவேற்க  முழு ஏற்பாடுகளை செய்யத்துவங்கினார் . அனைவரும் உற்சாகத்தோடு செய்ய துவங்கினர் . ஒருவைகள் சண்முகத்துக்கு அது ஏமாற்றமே என்றாலும் வெளிக்காட்டிக்கொள்ள இயலவில்லை . குபேரால் அழைக்கப்பட்டு காமராஜர் புதுவை வருவதால்  நிகழும் அர்த்தமின்மையை ஏன் யாரும் உணரவில்லை என்பது அவருக்கு வருத்தத்தை கொடுத்தாலும் புதுவை அரசியலாளர்களின் உளநிலை அவருக்கு புரிந்திருந்தது

 காமராஜரின் வரவை ஏற்கும் சண்முகத்தின் ஏற்பாடுகளின்   தனது அரசியல் சூழ்தலால் விளைந்தவை என நினைத்தார் குபேர் . அதேசமயம் சண்முகம் தன்னை தாண்டி காமராஜரிடம் நெருங்காது அவரது நிகழ்வுகள் குபேரால் முடிவு செய்யப்பட்டியிடுருந்தது . கட்சி  அலுவலகத்தைத்  தவிர சண்முகம் காமராஜரை தனியாக சந்திக்க முயல்வார், அதை தடுக்க வேண்டும் என நினைத்த குபேரருக்கு சண்முகம் காமராஜரை சந்திக்க முயற்சிக்காதது  ஆச்சார்யர்ப்தை கொடுத்தாலும் தனது அரசியல் சூழ்தலுக்கு முன்னாள் அனைவரும் தோற்றிருக்கிறார்கள் என்கிற நிறைவை வந்தடைந்தார்

அனால் காலம் அதற்கு  பிறிதொரு கணக்கை வைத்திருந்தது . காமராஜரின் புதுவை வியாஜயம் எந்த முரண்பாட்டையும் அடையாமல் அனைத்து தரப்பினரும்  ஏற்கும் தலைமை என்பதாக தில்லி தலைமை மகிழ்ந்தது. காமராஜர் அனைவருக்குமான தலைவரானதால் இனி புதுவை சிக்கலை காமராஜர் கொண்டு தீர்க்க தில்லித்தலைமை முடிவெடுத்தது . சில மாதங்களுக்கு பின்னர் ஆளும் அரசிற்கு சிக்கல் எழுந்தபோது மீண்டும் முரண்பாடுகள்  வெடித்தது . தில்லி தலமையால் காமராஜர் உதவிக்கு அழைப்பட அவர் தனது அனுக்கர் R.வெங்கடராமனை அனுப்பி வைத்தார் . சில மாதங்களில் குபேர் மாற்றப்பட்டு ரெட்டியார் முதல்வராக நியமிக்கப்பட்டார் .

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்