ஶ்ரீ:
பதிவு : 395 / 566 / தேதி 30 ஆகஸ்ட் 2018
*கற்பனையின் எல்லை *
“ நெருக்கத்தின் விழைவு ” - 90
விபரீதக் கூட்டு -05 .
பிறப்பின் அந்த தருணத்தின் முன்பாக நிகழ்ந்த என் குழந்தையின் மரணமும் அதற்கான வாய்ப்புகள் இனி எப்போதுமில்லை என்கிற நிதர்சணம் என்னை தாக்கிய போது . எனது மூளைக்குள் ஓயாது ஒலித்த அந்த சப்தத்திலிருந்து நான் வெளியேறியே ஆகவேண்டும் , அது என்னை முழுவதுமாக சிதைத்து விடலாம் . உடைவு என்னை எதுநோக்கி கொண்டு செல்லும் என்கிற அச்சமிருந்தது . நான் என்னை புரிந்து கொண்ட வகையில் மிக சிக்கலான ஆழ்மனப் படிமங்களினால் நான் நிலைபெற்றிருக்கிறன் சிறு உடைவுகளில் என்னால் சமநிலையை பேண இயலாது போகலாம் . என்னை என்னிடமிருந்து கழட்டிக் கொள்ள சிறந்த மாற்றுவழி மீண்டும் அரசியல் என்பதாக இருந்தது . அரசியல். அது ஒரு ஓயாத கற்பனைகளின் மாயவெளி, அது நினைத்த மாத்திரத்தில் கொடுப்பது ஒரு வேகம் , ஒரு பறப்பு , அது அனைத்தையும் மறக்கச் செய்வது. உள்ளிருந்தே கிளம்பும் ஒரு போதையைப் போல.
வெறும் பார்வையாளனாக கடைசிவரை அதில் இருந்துவிடுவது ஒரு சிறந்த யுக்தியாகப்பட்டது . அந்த எண்ணத்தில் மீண்டும் கட்சிக்குள் வந்த என்னை, இரண்டு நிகழ்வுகள் முற்றிலும் வேறொரு தளத்திற்கு என்னை நகர்த்திச் சென்றது . ஒன்று நான் எதிர்நோக்காத தருணத்தில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது , இரண்டு கமலக்கண்ணன் விலகி தமாகாவில் இணைந்தது . இந்த இரண்டும் என்னை , நான் இருக்கும் இருப்பை நினைத்து நான வைத்தது . அது என்னை மீண்டும் என் பாணியில் செயல்பட வைக்கும் பாதையில் கொண்டு விட்டது .
ஒவ்வொருத் துறையிலும் அதன் பாதைகள், அதில் பயணிப்பவர்களை அவர்கள் விழையும் இலக்கு நோக்கி அழைத்துச் செல்கிறது . பலர் அந்த திரளில் முகம் தெரியதாவர்களாக வாழ்ந்து மண்மறைகிறார்கள். சிலர் இன்னதென்று விளக்க முடியாத காரணங்களின் அடிப்படையில் உயர்ந்த இடத்தில் தனது தொடர்புறுத்திலின் வழியாக அடைந்து விடுகிறார்கள் . பின் அவர்கள் “வகுப்பதே வாய்க்கால்” என்றாகிறது. பிற எவரையும் அதன் அருகில் வர அவர்கள் அனுமதிப்பதில்லை. உள் நுழைந்த பின்னர் பிறர் நுழையும் வாசலை சிதைத்து விடுகிறார்கள.அவர்கள் கொண்டுள்ள தொடர்புறுத்தலின் பலம் அது .
எந்த நிர்வாக முறைமையும் அவர்களின் வெற்றிக்கு தடையாக இருப்பதில்லை . தங்களை வெள்ளும் எந்த நிர்வாக அமைப்பு உருவாவதை தடுத்துவிடுகிறார்கள் .அந்த முறைமைகளை தகர்த்தே அவர்கள் அங்குவந்து அமர்கிறார்கள் . அவர்களுடன் சமரசமாகப் போவோருக்கு , வெற்றிபோல சில விண்டுகள் கொடுக்கப்படுகிறது.அனைவரும் அதை பெற்றே அவர்களை வணங்கி உய்யவேண்டியதாகிறது.
அவற்றிற்கு மாற்றாக ,அடிப்படை கட்டமைப்பு என்கிற ஒன்றை கட்டி எழுப்பி எவரும் முனைவதில்லை. அதன் வழியாக பலர் தங்களது திறமையை முன்வைத்து முன்னகரும் வாய்பபு கிடைக்கலாம் . சமரச மனநிலை கொண்ட திரள் அச்சத்தினால் , சில லாபநோக்தினால் , அவற்றை ஆதரிப்பதில்லை . அந்த பாதைகள் தூர்ந்து போகின்றன , அதை மீண்டும் திறக்க முயறசிப்பவன் , ஏமாளி, போராளி , ஆணவன் போன்ற வசை சொல்லைபோன்ற ஒன்றை எழுப்பி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாரகள். கதவு திறந்து கொள்ளும் என்கிற உணர்வைப் பெறுபவர்கள் , ஒத்துழைப்பு போன்ற ஒன்றை கொடுத்து கிடைக்கும் லாபத்தை எடுத்துக்கொண்டு விலகி விடுகிறார்கள் . முயற்சி பாதியில் நீர்த்துபோய் அத்துடன் தாங்களும் காணாமலாகிறார்கள். புதிய முயற்சியை முன்னெடுத்தவர்கள் அனைவரும் வந்து சேரும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒன்றை செய்பவர்கள் அவைகளின் வழியாக பிறர் செய்ய தயங்கும் இலக்கை இயல்பாக கண்டடைவது. அதை முயற்சிப்பதால் நிகழும் நனமைகள் ஒரு வசீகரம் போல ஒரு அதை பற்றிய கருத்தியல்கள் வழியாக அவற்றுள் ஈர்க்கப்பட்டு அதனால் பிறருடன் முரண்படுதல் என்கிற கட்டம் வாழ்க்கையில் பலமுறை மீணடும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது .
கருத்தியலால் கவரப்பட்டு அதில் ஈடுபடுவதால் நம்மையும் அறியமல் ஒரு கடினத்தன்மை வந்துவிடுகிறது போலும் , பிறருடன் விவாதிக்க தயக்கமில்லாத , அதைப்பற்றிய கருத்து வெள்ளமாக பெருக்கெடுத்து , பின்னர் கருத்தியல் பிடிப்பு என்பது மறைந்து வெற்று ஆணவம் போன்று பிறருக்கு அது காட்சிபடுகிறது , அல்லது ஆணவமேதனோ?
இதை எங்கோ ஆழுள்ளத்தில் நான் உணர்ந்திருக்க வேண்டும் , அதன் பொருட்டே நான் புதிதாக உருவாக்கு நினைக்கும், அமைப்பிற்குள் எனது ஆதரவாளர்களை மட்டும் கொண்டு நிரப்பும் விருப்பமின்றி அதில், இடம் பெறுபவர்களை எனது ஆதரவாளர்களாக மாற்றிக் கொள்வது என முடிவெடுத்திருந்தேன். கமலக்கண்ணனின் வெளியேற்றம் என்னை உலுக்கிய குற்றவுணர்விலிருந்து நான் மீள என்னால் இயன்றதை மிச்சமற செய்தேன் . இனி இது தோல்வியுற்றாலும் எனக்கு ஆவது ஒன்றுமில்லை.
தலைவர் இருந்த அறைகுள் சுகுமாரனும் அவனது ஆட்களும் உரத்த குரலில் தலைவருடன் வாக்குவாதம் செய்வதையும், அதை மீறிய குரலில் தலைவர் அவனுக்கு விளக்கமளிப்பது எனக்கு மிகுந்த ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது . பல கேள்விகள் . அதற்கு தலைவர் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பது என்னை தணலில் நிறுத்துவதாக இருந்தது . முதலில் கூட்டம் , பிறகு அணைத்து பஞ்சாயத்தும், என்கிற முடிவை அவர் எடுத்திருந்தால் . இங்குங்கூடி இருக்கும் திரளிலிருந்து நான் எதிர்பார்க்கும் கூட்டத்தை வடித்தெடுத்திருப்பேன் . அவனிடம் சமாதானம் செய்ய தலைவர் முயன்றது அவர்மீது எனக்கு கடும் அதிர்ப்பதியை ஏற்படுத்தியது .