https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 23 மார்ச், 2023

அடையாளமாதல் * துலாச் சொல் *




ஶ்ரீ:



பதிவு : 669  / 858 / தேதி 23 மார்ச்  2023



* துலாச் சொல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 67.





நாங்கள் பேரணிக்கு முன்பாக நிகத்திய திட்டமிடலுக்கு தமாகா வின் இளைஞர் அணித் தலைவர் நமச்சிவாயம் கடைசி நிமிடத்தில் வந்து கலந்து கொண்டார். பிற கட்சி நண்பர்கள் ஆரம்பம் முதல் அவருக்கு அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். காரணம் அந்த அழைப்பு நேர்முகமாக எடுத்துக் கொள்ளப்படாது சீண்டலாக அல்லது எள்ளாலை உருவாக்கலாம் என நினைத்தனர். ஆனால் அவர் கலந்து கொள்வார் என ஆழ்மனத்தால் உணர்ந்திருந்தேன். அப்போது அது வெறும் ஊகம் மட்டுமே. காரணம் அவர் தலைவர் கண்ணன் திமுக அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். நிர்வாக அல்லது தனிப்பட்ட ஆளுமை மோதல்களால் ஆளும் அரசிற்குள்ளாக ஒருபோதும் தீர்க்க முடியாத சர்ச்சைக்கு அவர்கள் சென்று விட்டிருந்தனர். அதன் முடிவு என்பது அரசில் இருந்து வெளியேறுவது மட்டுமே என ஊகித்திருந்தேன் அரசியல் எப்போதும் ஊகத்தின் அடிப்படையில கணிக்கப்படுவது . நான் கண்ணனின் மனநிலை அவருக்கு அங்கு மறுக்கபடும் இடம். அவரது தன்மதிப்பு போன்றவை அதற்கு அடிப்படைக் கருவிகளாக இருந்தன


முதல் முறையாக நான் அதுவரை உருவாக்கி வைத்திருந்த அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றிய முடிவில் இருந்தேன் . அவர்களை களத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்வு அரசியலின் உச்ச கட்டத்தில் நடத்தேற வேண்டும் என நினைத்தேன். கலந்து கொள்பவர்கள் பின் பல காலம் அதை பேசி பேசி உள்ளும் புறமுமாக வளரந்து கொண்டிருப்பார்கள். அரசியல் அனைவருக்கும் பொதுவில் கொண்டு வைக்க அந்த நாளை குறிக்க நினைத்தேன். அதில் எனக்கு அடுத்த கட்டம் நோக்கிய நகர்வு பற்றிய திட்டமிருந்தது. மாநில அமைப்பை முழுமையாக நிறுவிய பிறகு இதுவரை இல்லாத அளவில் பலம் பொருந்தியதாக அது உருப்பெற்றிருந்தது. கண்ணன் தலைமையில் தனித்துவம் மிக்கதாக இருந்ததற்கு இணையாக என்னுடைய இப்போதைய இடத்தை சொல்லவிட முடியாது. ஆனால் தங்கள் அரசியல் விழைவை போராட்டமாக சொல்லி நிறுவ வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அனைத்து இடத்திலும் எங்கள் கருத்தை பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கட்சியின் அனைத்து தரப்பினர்களையும் சந்தித்து எங்கள் முடிவை சொல்லத் துவங்கியிருந்தோம். எங்களின் செயல்பாடுகள் செய்திகளாகி வெளிவரும் அனைத்து வழிகளையும் ஒருங்கிணைத்தேன். அதில் முக்கியமாக கருதியது காவல் துறையின் உளவு மற்றும் நுண்ணறிவு பிறிவு எங்களை எப்படிக் கணிக்கிறது என்பதை புந்து கொள்ள முயன்றேன்.

 

காவல் துறையில் அரசியலில் நிகழ்வதை மட்டும் தனியாக உளவறயும் பிரிவு என ஒன்று இருப்பது அரசியலில் உள்ள அனைவரும் அறிந்தது அதில் ஒளிவுமறைவு இல்லை. அவர்களும் சிக்கலுக்கு ஏற்ப அரசியலின் முக்கிய தலைவர்களை நேரில் சந்திப்பதை வழக்கமாக கொண்டவர்கள். அன்று காலை என்னை சந்திக்க யாரோ வந்திருப்பதாக சொன்னபோது கட்சி சம்பந்தமாக யாராவது இருக்கும் என நினைத்தேன்வரவேற்பறைக்கு வந்த போது எனக்கு பழக்கமான காவல் துறை உளவுபிரிவு உயர் அதிகாரி ஒருவர் அமந்திருந்தார். எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றிய பேச்சு இருந்தது. அவர் எனக்கு முன்பே நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரிடம் பேச எனக்கு தயக்கமிருக்கவில்லை. மேலும் அவர் எனது தூதுவர் போல என் செய்திகளை மாநில அரசியலில் உள்ள முதன்மை ஆளுமைகளிடம் தேரடியாக கொண்டு சேர்ப்பவர். அதில் பல தரப்பு உள்ளது. எனக்கு நேர் எதிர் தரப்பிற்கும் அது சென்று சேரும் என்பாதல் அவரிடம் கூற வேண்டியதை மட்டும் தெரிவு செயது சொன்னேன். எதையும் மிகைபடுத்த முயற்சிக்கவில்லை. அது அரசியலில் நல்ல இடத்தைப் பெற்றுத் தராது. மேலும் அவரிடம் இருந்து முதன்மை தகவல்கை பெற நான் என் வார்த்தகளை மிக எச்சரிக்கையாக வைக்க வேண்டும். நாராயணசாமியிடம் கொண்ட தனிப்பட்ட மோதல்கள் பற்றி எனது எண்ணத்தை முழுமையாக மறைத்துக் கொண்டேன். என்னை கட்சியின் அனைத்து தரப்பு எண்ணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருப்பது குறித்து சொன்ன போது அவர் திகைப்படைவதை பார்க்க முடிந்தது


அன்று நிகழவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தமாகாவில் இருந்து கலந்து கொள்வது பற்றிய முடிவு கண்ணன் எடுத்திருக்க வேண்டும் என ஊகித்தேன். தகவல் கசிந்து என்னை சந்திக்க வந்திருக்கிறார். உளவுத்துறை உயர் அதிகாரி தகவல் பெற வந்திருப்பது எனக்கு ஆரம்பம் முதலே வினோதமாக பட்டது. “ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்பட்டதற்கான விசேஷ பின்னணி ஏதாவது உண்டாஎன்றார். தகவல் முதல்வர் தரப்பிற்கானது என புரிந்து கொண்டேன். வார்தைகளில் இன்னும் கவனம் வேண்டும். சென்ற முறை திமுக அரசு கொண்டுவந்த பட்ஜெட் மீதான விமர்சன போஸ்டருக்கு எனது வீடு அலுவலகம் மற்றும் வேலை செய்த இடங்களில் நடந்த வருமான வரி சோதனை நிழலாடியது


தாமாக விற்கு அழைப்பிதழ் அனுப்பியதில் பிரத்யேக காலரணம் என ஒன்றில்லைஎன்றேன். “இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகளின் பின்னணி எப்போதும் களத்தை நிரப்பக்கூடியதாக இருக்கும். ஆட்சி அதிகாரம் எப்போதும் எங்கள் கைகளுக்கு வருவதில்லை அரசியலில் எங்களுக்கான இடத்தை உருவாக்கி நிலை கொள்ள செய்வது மட்டுமே எங்களது அரசியல். அது களக் கருத்தியல் நுட்பம் கொண்டது. பல சமயங்களில் அது  தாய் அமைப்பிற்கு நேர் முரணான பாதைகளை கொண்டதாக இருந்திருக்கிறது. அகில இந்திய தலைமை அதை அங்கீகரித்திருக்கிறது. மேலும் சமச்சீர் வரி என்கிற கருதுகோள் திமுக அரசு ஏற்காத கருத்தியல். அதை எதிர்த்து போராட்டம் நடத்த அனைத்து அமைப்பும் விரும்புகிறது. இந்த காலகட்டத்தில் அவற்றிகான இடத்ததை மேடையை உருவாக்க நினைக்கிறேன். கட்சி அடையாளத்திற்கு வெளியே ஒரு சமர கருத்தை உருவாக்க நினைக்கிறேன். அதை முன்னெடுத்ததால் அதற்கு கூட்டுத் தலைமை ஏற்றிருக்கிறேன். திமுகா இளைஞர் அமைப்பிற்கும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறேன்


ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் விவசாய அமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்பால்விலை உயர்வை அமச்சரவையில் அறிவித்துவிட்டு அந்த முடிவை பொது வெளியில் விமர்சித்திருப்பதும் போராட்டம் நடத்தியதற்கு பின்னால் என்ன அரசியல் இருக்குமோ அதுதான் இதன் பின்னாலும் இருக்கிறது என்றேன். கட்சிகளின் அரசாங்க நிர்பந்தம் கட்சியின் நிலைபாடுகளாக மாறிவிடுவதை இந்தப் போக்கு தடுக்கும் இது போல பல இங்கும் இந்திய அளவிலும் தொடர்ந்து  நடந்ததுதான்என்றேன். ஊர்வலத்தின் இறுதியில் வன்முறை நிகழலாம் என்கிறது தகவல் இருப்பதாக மறைமுகமாக சொன்னார். ஊர்வலத்தின் இறுதியில் தபால் நிலையத்துள் நுழையும் திட்டமிருந்தது. ஆனால் அது வன்முறையாக கொண்டு செல்வது எனது பாணியில்லை. முன்னர் நிகழ்ந்த ஆலோசனை கூடுகைகளில் அகில இந்திய மாணவர் பெருமன்றம் அது போன்ற ஒன்றை முன்வைத்த போது அது பற்றி பிறகு பார்க்கலாம் என சொல்லியிருந்தேன். அது எங்கள் இருவருக்கான தனிப்பட்ட உரையாடல் அது இப்போது திட்டமிட்டு கசியவிடப்பட்டிருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...