https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 மார்ச், 2023

அடையாளமாதல் * பொருத்தா குற்றம் *

  

ஶ்ரீ:



பதிவு : 668  / 857 / தேதி 16 மார்ச்  2023



* பொருத்தா குற்றம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 66.







முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்பது பேசு பொருளாகி கட்சினர் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.ஆட்சி மாற்றம் என்பது ஒரு பொது கொண்டாட்டம் போல உருவகிக்கப்பட்டு அதில் உழல்வது வேடிக்கை. அவர்களில் பலருக்கு இங்கு முகமே இல்லை. யார் முதல்வரானாலும் அவர்களுக்கு சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டிய அளவிற்கான தேவையோ காரணமோ இருக்கப் போவதில்லை போவதில்லை. டீ கடைகளில் பேசும் அரசியல் ஜம்பம் தவிர உருப்படியாக வேறு ஒன்று இருக்காது . ஆனால் முதல்வரை தேர்ந்தெடுப்பவர்கள் என்கிற மாதிரியான பாவனையை ஏன் எடுத்துக் கொள்கிறார்கள் என தெரியவில்லை. துவக்கத்தில் முதல்வர்வைத்திலிங்கம்என்கிற புரிதல் அனைவருக்கும் இருந்தது. நாராயணசாமி தனது தீவிர காய் நகர்த்தலால் முதல் இடத்திற்கு வந்துவிட்டதாக அனைவரும் உணர ஆரம்பித்ததும் வைத்திலிங்கம் அடக்கி வாசிப்பவராகத் தெரிந்தார். அந்த மாற்றம் கட்சியினரின் ஆழ்மன வெளிப்பாடாக கூட்டு நனவிலியாக புரிந்திருந்தேன்.அது அனைவரின் நினைப்பிற்கும் விரும்ப்பிற்கும் இடையேயான ஊடாட்டம் போல நம் விழைவினாலேயே எங்கோ ஒரு புள்ளியில் அது நிஜமாகி நம் எதிரில் நின்றுவிடுகிறது போலும் . நாராயணசாமிக்கு இருக்கும் சாத்திய வெற்றி என் போன்றவர்களை அச்சுறுத்தியது. தில்லியில் நீண்ட காலம் இருந்தவர் அங்கிருக்கும் லாபிகள் அனைத்திற்கும் நெருக்கமானவர். எந்த சரடை எப்போது இழுக்க வேண்டும் என்கிற நுட்பம் அறிந்தவர் என்பதால் தில்லியி்ல் தலைமையில் அசல் கருத்து என்ற ஒன்று உருவாகாமல் அவற்றை மாற்றியமைக கூடிய அனைத்தையும் செய்ய தயங்காதவர்.


தில்லி தலைமை அலுவலகம் ஒரு ஆர்பரிக்கும் அறம் உந்தியது போல காலையில் கூடி திட்டமிட்டு தீர்மானம் இயற்றி ஒரு செயலுக்கு செல்லும் முன்பு அன்று மாலையே விந்தையான ஜந்து போல அதற்கு நேர் எதிரான ஒன்றை அதன் நிர்வாகிகளால் நிகழ்த்த முடியும் என்பதை பார்த்திருக்கிறேன். அவர்களைப் போன்றவர்களுக்கு தேவை ஒரு கருத்துரு. அதை கீழிருந்து பொய்யான கருத்தொற்றுமை போல ஒன்றை  துணிந்து மேலிடத்திற்கு அனுப்பும் பலரை அறிந்திருக்கிறேன். அவர்கள் எளிதில் சிக்காமல் வெளியேற அதன் ஊடுபாவுகள் அனைத்திலும் வழிகளை கொண்டவை.அது ஒரு இருள் உலகம் அதில் இயக்குவதில் நாராயணசாமியின் நிபுணத்துவம் எல்லோரும் அறிந்தது


இரண்டு காரணங்களுக்காக நான் நாராயணசாமியை வெளிப்படையாக எதிர்த்தேன். இன்றுவரை அதுவே எனது நிலைப்பாடும் கூட .ஒன்று புதுவை அரசியலில் அது நாள்வரை நிலவும் சமநிலையை குலைப்பவராக மிக குறுகிய பார்வையுள்ளவராக தான் நினைத்த ஒன்றை அடைய எந்த அறமீறலுக்கு துணிந்தவராக அவரை புரிந்திருந்தேன். இரண்டு. மலிவான திட்டங்களினால் தனக்கென லாபமுடைய தனித்த பார்வைக்கு உகந்த எந்த செயலையும் செய்ய தயங்காதவராக அந்தந்த நேரத்திற்கு ஏற்ற முடிவு போல பிறர் ஏற்கும் ஒன்றை எடுத்து முன்பின் சமன் இல்லாது அதில் இருந்து வெளியேறி அதனால் விளையும் எதிர்மறை பலன்களினால் உருவாகும் இருட்டிற்கு அழைத்துச் செல்ல கூடியவராக அவரை ஊகித்திருந்தேன். ஆட்சியை நாராயணசாமி ஏற்றால் அது கட்சிக்கு மட்டுமின்றி தனக்கே முற்றழிவை உருவாக்கிக் கொள்வார் . மேலும் நான் உருவாக்க நினைக்கும் இளைய தலைவர்கள் தங்கள் வருங்காலத்தை இழப்பார்கள். பல வருட உழைப்பில் திரட்டி செயல்பட்ட அவர்கள் கட்சி அரசியலில் நம்பிக்கை இழந்து சிதறிப்போவார்கள்.பின் அவர்களை எப்போதும் ஒருங்கு திரட்டுவது இயலாது. அது எனக்கானது மட்டுமல்ல கட்சியின் அனைத்து மட்டத்திலும் உள்ள அனைவருக்குமானது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவரை அரசியலில் ரீதியில் வலுவாக எதிர்க்க வேண்டிய மூத்த தலைவர்கள் அனைவரும் என் கருத்தை தனிப்பட்ட முறையில் ஏற்றாலும் அவரை எதிர்க்க அஞ்சி அமைதி காக்கும் போது ஏற்படும் கொந்தளிப்பே எப்போதும் புதிய திறப்புகளை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது


முதல்வர் பதவி எங்களுக்கு தனித்த பார்வை உண்டு இனி அது குறித்து எங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்தேன். அதுவரை நடக்காத ஒன்று. அதை முதல் முறையாக முயற்சித்தேன். அமைப்பிற்குள் பெரிய அதிர்வலையை உருவாக்கியது. என்னுடய கணக்கு மிக எளிதானது இழக்க ஒன்றுமில்லை. என்பதுடன் மாநில அரசியலின் மைய ஓட்டத்தில் நுழைந்து கொள்ள இதைவிட மிக் சரியான தருணம் வாய்க்காதுபிற கட்சிகளும் காங்கிரஸில் நடப்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் எங்களை வெளிப்படுத்திக் கொள்ள இது சிறந்த நேரம் என ஊகித்திருந்தேன். என் நகர்வு காங்கிரஸ் கட்சியில் கவனிக்கப்படுகிற அதே சமந்த்தில் மாநிலத்தில் உள்ள பிற கட்சித் தலைவர்களுக்கு எங்களைப் பற்றிய  சரியான சமிக்ஞையை அனுப்பக் கூடியது. கட்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அதே சமயம் பிற கட்சிகளில் செல்வாக்கு அடைவது மிக முக்கியமானதுடன் அவர்களுடன் கட்சி சார்பாக உரையாடும் இடத்தை உருவாக்கிக் கொடுக்கும்


மத்திய அரசின் சமச்சீர் வரி விதிப்பை எதிர்த்து மாநில முழுவதுமாக போராட்டம் நடத்தியது அனைத்துக் கட்சி இளைஞர் அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் இடத்தைப் பெற்றுத் தந்தது அதன் வழியாக அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது. ஆட்சி மாற்றம் சம்பந்தப்பட்ட முதல் சமிக்ஞை அந்த போராட்டத்தில் இருந்து துவங்கியது. புதுவை தமாகா தலைவர் திமுக கூட்டணியில் இருநஃது வெளிநேற சந்தர்ப்பம் பார்த்திருந்தார். மத்தியில் வாஜ்பாய் அரசாங்கத்தில் தாமாக திமுக அங்கம் வகித்திருந்தன. அகில இந்திய அரசியல் சிடுக்குகள்  காரணமாக மூப்பனார் அதற்கு உடன்படவில்லை. கண்ணன தனது முடிவை செயல்படுத்த சமயம் நோக்கி இருந்தார் . அந்த சூழலில் புதுவை மாநில முன்னணி இளைஞர் அமைப்புகளை ஓர் அணியாக கொண்டு வருவதில் பெரிய வெற்றியை அடைந்திருந்தேன். கம்யூனிஸ துணை அமைப்பான மாணவர் அணி சில கொள்கை வேறுபாடுகளால் அதில் இணையவில்லை. நான் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தாமாக வின் இளைஞர் அணி தலைவரான நமச்சிவாயம் வந்து கலந்து கொண்டது அனைவரையும்

அதிர்ச்சி அடையச் செய்தாலும் அது எனது ஊகத்தை சரியாக்கியது. கண்ணன் தான் கூட்டணியில் இருந்து வெளியேற நாள் குறித்து விட்டார் என்பதை அறிவித்தது

அன்று இரவு நடந்த கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து பேரணி நடத்துவதாக முடிவானாலும் முக்கிய பொறுப்பில் இருந்த தலைவர்களுக்கு மட்டும் அந்த பேரணியின் இறுதியில் அதை தபால்துறை அலுவலகத்தில் நுழையும் போராக வன்முறையாக மாற்றும் திட்டமிருந்தது. அதற்குறிய நேரத்தை சில சமிஞை மூலமாக அனைவருக்கும் பொறுப்பில் இருந்தேன்


இளைஞர் அமைப்பை புதுவை தபால் நிலையத்தை நோக்கிய பேரணி முதல் முறையாக மிகப் பெரிய வெற்றிப் பெற்றதற்கான காரணம் அதை ஒருங்கிணைக்க மேவைப்பட்ட ஐந்து வருட கடும் உழைப்பு . இளைஞர் காங்கிரஸ் அதன் வரலாற்றில் முதல் முறையாக புதுவையின் அனைத்து பகுதிகளை பிரதிநிப் படுத்தியது. ஆனால் அது கட்டுக் கோப்பான அரதிநல் கருத்தியல் நீதியாக ஒருங்கு திரளும் முன்பு வல்சராஜின் அரசியல் லாபத்திற்காக சிறரடிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. இது முழுக்க எனது பிழையால் நிகழ்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்