https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 9 மார்ச், 2023

நிலையான மாற்றம்

 09.02.2023


நிலையான மாற்றம்





தர்க்கத்தில் இரண்டு வகை மாதிரிகள் உண்டு. ஒன்று தன் தரப்பை நிலை நிறுத்தவும் எதிர் தரப்பை மறுத்து ஒழிக்கவும் தர்க்கத்தை பயன்படுத்துவது. இதை நிறுவன தர்க்கம் எனலாம். மற்றொன்று தர்க்கத்தை கருவியாக கொண்டு புதிய விஷயங்களை அறிவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடுதல். தியாகுவின் தர்க்கம் இரண்டாவது வகைமையை சார்ந்ததாக உள்ளது. அவர் தொடர்ச்சியாக தான் சார்ந்துள்ள நிறுவன தர்க்கத்துக்கு அப்பால் புதியவற்றை அறிய முயன்றபடியே இருக்கிறார். அதற்கு தர்க்கத்தை கருவியாக்கி கொள்கிறார். இந்நிலையில் தியாகுவின் நூலினை தான் மூன்றாக பிரித்து கொள்வதாக கூறினார் லிபி ஆரண்யா”


  • சக்திவேல் - சிறை இலக்கிய கட்டுரை.ஜெ தளம்.09.03.2023



தர்க்கத்தில் இரண்டு வகை . ஒன்று தன் தரப்பை நிலை நிறுத்தவும் எதிர் தரப்பை மறுத்து ஒழிக்கவும் தர்க்கத்தை பயன்படுத்துவது. மற்றொன்று தர்க்கத்தை கருவியாக கொண்டு புதிய விஷயங்களை அறிவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடுதல்.ஆனால் இவ்விரண்டு நிலைபாடுகளுக்கு இடையே என்னை நிறுத்திக் கொண்டாலும் இரண்டாவது கோட்பாடு நோக்கிய மனச்சாய்வு எனக்கு இருப்பதாக என நினைக்கிறேன். முதல் வகை  நீண்ட மன ஒருமைபாட்டு பயிற்சியின் வழியாக நிகழ்த்துவது.முழுமையான புரிதலில் இருந்து துவங்குவது அதை அவர் சொல்லும் அதே  நிறுவன தர்க்கம் கோட்பாடு . இதில் என்னைப் பற்றி நான் கொண்டுள்ள ஐயம் நாளை மாற்6த்திற்கு உள்ளாகும் போது அந்த நிலைப்பாடு காலாவதியாகும் போது எதிர் கொள்ளும் அக மோதல் கடுமையான உளச் சோர்வை கொடுப்பதுடன் அடுத்த நிலைப்பாட்டை கண்டடைந்தாலும்  தன்னம்பிக்கையில் சிறு கூறு குறைவுபட்டே இருக்கும் . இரண்டாவது நிலை கற்றலை பொடுப்பது . அதிலிருந்து மெல்ல தனது நிலையை உறுதிபடுத்திக் கொண்டே செல்வதுகற்றலின் புரிதலில் நின்று உறுதிபடுத்தியபின் மெல்ல அடுத்த அடியை எடுத்து வைப்பது . நான் சிறு வேறுபாடை இங்கு நிகழ்த்திக் கொண்டேன் என நினைக்கிறேன்மரபு என்பது எனது தந்தை எனக்கு கையளித்தது அதை மறுத்து அதிலிருந்து என்னை பிறதொரு இடத்திற்கு நகரத்திக் கொள்வது மரத்தை இடம் மாற்றி நடுவது . சிக்கலானது .இது ஏறக்குறைய static and dynamic  போல . ஆனால் வானில் பறக்கும் பட்டம் கிடைக்கும் உயரத்தில் பறந்தாலும் அதன் பிறதொரு முணை அதன் அசைவை முடிவு செய்வதில்லை. ஆனால் அதன் உயரத்தை கட்டுப்படுத்துவதுடன் காற்றால்  அடித்து செல்லப்படுவதை தடுத்து விடுகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...