https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 14 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 3 * எதிர் விடுதலை *

 14.03.2023


* எதிர் விடுதலை *

அது 

என் அப்பாவின் கேமரா

 இப்போதும் 

கருப்பு வெள்ளையில்

பதில் சொல்கிறது”


-கியா-






நான் எனக்கே விடுத்ததை இப்படித் தொகுத்துக் கொண்டேன். விடுதலை, முயற்சி,விதி” . ஜெயமோகன் சொல்வது போல விடுதலை எய்துவதல்ல , திகழ்வது . என்னை தொந்தரவு செய்வது அதற்கு இடை நிற்கும் பிணைக்கும் முயற்சி” . நான் முயற்சி என்னும் செயல்பாடுகளால் இந்த இடத்தை இந்த மனநிலையை அடைந்திருக்கிறேன். அப்போது இந்த விதி தான் அனைத்தையும் நிர்ணயித்திருந்தது . அதிலிருந்து எனக்கானது திரண்டு வந்தது . அவை அனைத்தும் நான் விரும்பியதாக இருக்க வேண்டியதில்லை. என்னை நோக்கி அது கொடுக்க வரும்போது தயங்காமல் அதை கை நீட்டி வாங்கிக் கொள்கிறேன் . பின்னர் அது குறித்து புலம்புவதில்லை. இப்போது அந்த நினைவை  மயக்கும் மாயச் சொல் விதி” வேறு வடிவத்தில் எழுந்து நின்றிருந்ததுசெய்வது  விதி” என்றால் செய்யக்கூடதென தடுப்பதும் அந்த விதியே”


மணக்குள விநாயகர் கோவில்” சிக்கலுக்கு அரசியல் பலத்தை உபயோகிப்பது என்பது முதல் முடிவுசிக்கல்களுக்கு அரசியல் ரீதியான முயற்சிகளில்  நான் தோற்றதேயில்லை. காரணம் அதற்கு தோல்வி என ஒன்றில்லை தவறுகளை சரி செய்த படி மீள மீள தொடர்ந்து முயற்சிப்பது என்பதால் வெற்றி என்கிற இறுதி இலக்கை அது ஒரு கணம் அல்லது ஒரு நாள் எட்டிவிடும்.அரசியல் ரீதியில் ஒரு சிக்கலை அணுகுவது என்பதன் அடிப்படை விதி அதை ஒருபோதும் பிறரிடம் விடாது இறுதி கணம் வரை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது . சந்திக்கும் அனைத்து அரசியல் ஆளுமைகளுக்கும் அவர்கள் செய்ய வேண்டியதை தெளிவாக விளக்கிவிடுதல் அதில் அவர்கள் தங்களுக்கென தனித்த எண்ணம் கொள்ளாமல் செய்துவிடுவது . அதை புறவயமாக  யாரும் நாம் எதிர்நோக்காமல் வந்து முட்டி மாற்றிவிட இயலாது . மொத்த திட்டமும் என்னுடையது .அதில் பலருக்கு பங்கிருக்கும் என்பதால் யாரும் அதை ஒரு இடத்தில் நிறுத்தி செயலிழக்கச் வைக்க முடியாது  . இந்த சிக்கலில் நான் எதிர் கொள்ளும் மாற்றுத் தரப்பு அரசு இயந்திரம். அது மனசாட்சியற்றது . கொடூரமானது. நிறைய ஊடூபாவுகளையும் வழிகளையும் கொண்டது.இன்றய சிக்கல் யாரோ விலைபோன அரசாங்கம் நியமித்த கோவில் இருக்கும் தற்குறி நிர்வாக அதிகாரி. அவரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மிக குறுகிய காலத்தில் இதை செயல்படுத்தியதால் இதன் பின்விளைவுகளை முன்பே ஊகித்து அதன் அத்தனை வாயில்களையும் இந்நேரம் அடைத்திருப்பார்கள். மிக எளிய உணர்ச்சி அடிப்படையில் சென்று அணுகும் போது அணுகுபவர் முகத்தில் வெடித்து அவருக்கு மேலும் நிலைகுலைவை ஏற்படுத்தும். பதட்டத்தை உருவாக்கி விடுவதுடன் சமநிலையை அழித்து விளையாடும்இது போன்ற அரசியல் விளையாட்டுகளை தொடர்ந்து பார்த்திருப்பதால் என்ன மற்றும் எப்படி செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். இப்போது என் முன் உள்ள கேள்வி நான் விழையும் விடுதலை அதற்கு தடை சொல்லும் முயற்சித்துப் பார்  என்கிற ஒன்று அதை  நிகர் செய்யும் விதி என்கிற கடைசொல். நான் விதியில் இருந்து அதை தொடங்க முடிவெடுத்தேன்.விடுதலை எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஒன்று என்றால் எளிய கோட்பாட்டின் படி அதை செய் அல்லது செய்யாதே என்பதை அடுத்தடுத்த நிகழ்வின் மூலம் உறுதிப்படுத்து பார்த்துவிடுவது என்பது முடிவு. செய்” என்றால் எனக்கான விடுதலை” இப்போதில்லை. பாரபட்சமில்லாமல் அந்த சந்தர்பத்திற்கு பதைக்கும் மனதுடன் காத்திருந்தேன்


இன்றைக்குள் இரண்டு சந்தர்பங்கள் என அதன் எல்லையை முடிவு செய்தேன்   . இரண்டில் ஒன்று தானாக வருவது பிறிதொன்று நான் வலிந்து சென்று முயற்சிப்பது என வகுத்துக் கொண்டேன். முதல் என நான் என் மனதில் வைத்திருந்தது எனது அம்மா . அவரது சொல் எதையும் அசைக்க வல்லது என்பதால் மதிய உணவுக்கு சென்று அமரும் போது அவர் அதை தயாராக எடுத்து வைத்திருப்பார் . அதற்கு என்ன எதிர்விணை என முடிவு செய்தால் ஆம் அதுவேதான் என் முதல் சந்தர்ப்பம் . கட்டுக்கடங்காமல் கூச்சலிடும் மனம் நான் என்னை நிறுவிக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்காமல் என்னை செயலற்ற நிலைக்கு சென்று கொண்டிருந்தது .


அன்று மதிய உணவிற்கு வீட்டுக்கு செல்லும் வழியில் அண்ணன் ரங்கராஜை எதிர்பாராமல் சந்தித்தேன் ஒரு கணம் திகைப்பு பின் சுதாரித்துக் கொண்டு முதல் மோதலை துவங்கினேன். ஏன் இப்படிசெய்தீர்கள்” என நேரடி குற்றச்சாட்டு . ரங்கராஜ் மொட்டை வசவு சொல்லில் தேர்ந்தவர் . முன்கோபி. அவர் என்னை இட்டு செல்லும்  இடம் என்னை எனது திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வைத்துவிடும். ஆனால் அவர் சொன்னார் நீ ஏன் அவர்கள் பக்கம் சென்றாய் , அவர்கள் என் எதிரிகள் .இப்போது நீயும் என் எதிரிதானே” என்று . திரியில் நெருப்பு வைக்கப்படும் கணம் . எனக்குள் அனைத்தும் சுடர் கொள்ளத் துவங்கியது . பரவசம் . நான் உங்களை எதிரியாக நினைக்கவில்லை அனைவருக்கும் சமரசம் செய்ய முயன்று கொண்டிருந்தேன் என உங்களுக்கும் தெரியும் , இப்போது….. சொல்லுங்கள் நான் உங்கள் எதிரி என்று. உங்கள் எதிரி எப்படிப்பட்டவன்  என்பதை நாளை காலைக்குள் காட்டிவிடுகிறேன்” என்றேன் . அது அவரை கொளுத்தும் சொல். அடுத்து நிகழ்வதை பற்றி மனத்தின் ஒரு கூறு எக்களிப்புடன் காத்திருக்கிறது . அப்போது அது மட்டுமே நான். அது எனக்கு நான் விடுத்துக் கொள்ளும் ஒரு அறைகூவல் அதன் பிறகு என்ன நடந்தாலும் எனது முடிவும் பாதையும் மாறாது. என்னை செலுத்தும் விசை அது . அவர் எப்படி அதற்கு விணையாற்றுவார் என தெரியும் குரோதத்துடன் அவரது பதிலுக்கு காத்திருக்கும் அதே சமயம் பிறிதொரு அகம் முறியும் சத்தம் கேட்டு சோகப்படுத்தியது. இனி விடுதலை என்பது இல்லை என்பது ஒருவித ஏக்கமாக வலியாக உருமாறத் துவங்கியது


எதிர் பாராமல்  ரங்கராஜ் அண்ணன் தனது பாணியில் இருந்து சட்டென பின்வாங்கி விட்டார் . நான் உனக்கு எதிரி இல்லைப்பா” என சொல்லிவிட்டதும் உற்சாகம் கொள்ளத் துவங்கிய ஒன்று சட்டென அறுந்து விட்டது . சம நிலை கொள்ளும் ஒன்று இதோ ஒன்று கழிந்தது’ என்றது  . விதி செய்யாதே என்கிறது .விலகிக்கொள் என்றது .ஆனால் கடந்த நாற்பது வருடமாக என்னுள் துளிர்த்து வளர்ந்து மரமாகி நின்றிருக்கும் என் தன்னகங்காரம் இன்னொரு வாய்ப்பை எடுத்துக் கொடுத்தது . அது மணற்குள விநாயகர் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் ஆனந்த ரங்க ரவிச்சந்திரன்.புதுவையில்  நாட்குறிப்பால் இந்திய அளவில் புகழ்பெற்ற அந்த பரம்பரையை சேர்ந்தவர். குடும்ப நண்பர். என் எதிர் வீட்டில் இருக்கிறார் . காத்திருக்க முடியாதபடி அது மீண்டும் எழுந்து ஆடத்துவங்கியிருந்தது .உடல் அகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக , நமது நினைவின் கீழ் அது நிற்பதாக நம்மை நம்ப வைப்பது அது இடும் வேஷத்தில் ஒரு பகுதி . நான் எண்ணி முடிப்பதற்குள் அவரை அலைபேசியில் அழை என்பது உத்தரவு போல ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஒரு புள்ளியில் தாங்கமுடியாமலாகி அவரை அலைபேசியில் அழைத்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்