https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 6. * கனவுகளிலான புறவய மாற்றங்கள் *

22.03.2023*  கனவுகளிலான புறவய மாற்றங்கள் *


ஒரு மனம் முனை கொண்டு ஆழம் நோக்கிச் செல்லும்போது அதிலிருந்து பிரிந்தது போல இன்னொரு மனம் பரவி விரிந்து செல்கிறது. மனதின் ஒவ்வொரு செயல்பாடும் அதற்கு நேர் எதிரான இன்னொரு செயல்பாட்டால் தடுக்கப்படுகிறது. மனதின் விசையின் பெரும்பகுதியை மனமே உண்டு விடுகிறது. மனம் ஓயாது மனதுடன் போரிடுகிறது. மனம் மனதை முடிவின்றி உண்டு கொண்டிருக்கிறது. யோகமரபில் தன் வாலைத் தான் விழுங்கும் பாம்பு உருவமாக அதை அமைத்திருக்கிறார்கள்”


-ஜெயமோகன்-

உற்றுநோக்கும் பறவை” சிறுகதை.மணற்குள விநாயகர் கோவில் மாசி மக தீர்த்தவாரி தாத்தா குடை கோவிந்தசாமி பிள்ளை” அவர்களால் அந்தக் கோவில் உற்சவ மூர்த்தி செய்து எழுந்தருளப்பட்ட பிறகு  அதற்கான முதல் உற்சாவமாக  அது இருந்திருக்க வேண்டும்.தாத்தவிற்கு பிறகு பெரியப்பா அடுத்ததாக என் தந்தை  அவருக்கும் பின்னர் அண்ணன் ரங்கராஜ் தன்னச்சையாக அதை பொறுப்பேற்றார் . குடும்பத்தின் மற்றவர்கள் அந்த உற்சவ செலவை பகிர்ந்து கொண்டனர் பங்கேற்கது பற்றி பெரிய ஆர்வம் இருந்ததில்லை  .ஒரு சொத்தை முன்வைத்து குடும்பத்தாரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த உற்சவத்தை  அண்ணன் ரங்கராஜ் 2008 ல்  தனது தனிப்பட்ட உற்சவமாக மாற்றிக் கொண்டார் .அதற்கு அவரது தனிப்பட்ட அடையாள சிக்கல் காரணமாக இருந்திருக்க வேண்டும் . அதன் பின்னர் அந்த எதிர்விசை பிரமாண்டமாக எழுந்து அந்த விழா குடும்பப் பொது என்கிற உக்கிர பேச்சு உருவானது.வெளிப்படையாக அவரை எதிர்க்க அஞ்சினர்.2019 களில் அவர் இறந்த பின்னர்  2023 ல் நான் அதில் தலையிட்டு  சுமூகமாக முடித்து வைத்ததும்  அனைவரும் பதினைந்து வருடத்திற்கு பின்னர் அந்த நிகழ்வில் சென்று கலந்து கொண்டோம்


அந்த நிகழ்வு உருவாக்கிய மனப் பதிவைகள் அது தாத்தா பற்றியதாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் மனம் அது தன்னியல்பில் நான் எண்ணியிராத கணம்  சட்டென பின்னோக்கி  திரும்பி ஒரு புள்ளியில் அது மீளவும்  2009 முதல 2014 வரை காலகட்டத்தில் சென்றமர்ந்து  கொண்டது . அந்த காலகட்டத்திற்கு பிறகு என் மனநிலை முற்றிலும் மாற்றிய அமைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறேன் . அது ஏன் என்பதை தர்க்க ரீதியில் விளக்கிவிட முடியாது .அங்கிருந்த எனது பயணம் வேறு பாதைக்கு திரும்பி விட்டிருந்ததை நான் மிகத் தாமதமாக அறிந்து கொள்ள முடிந்தது .


ஆன்மீகம் , ஆசாரம் , நம்பிக்கை எனது அடிப்படையில் எனது செயல்முறையில் மாற்றம் நிகழ்ந்திருப்பதை என நான் அறிந்து கொண்டவை எல்லாம் எனக்குள் எங்கோ விதைகளாக நான் முன்பு உணர்ந்தவைகள். வெண்முரசு மற்றும் ஜெயமோகனின் பிற ஆக்கங்களை வாசிக்கத் துவங்கிய பிறகு சிதறிக்கிடந்த கருத்துகளை தொகுத்துக் கொண்டேன் என அவற்றைப் பற்றி நினைத்திருந்தேன்  . நிச்சயம் அந்த வாசிப்புகள் சிதறிக்கிடந்த என் கருத்துக்களை ஒன்றுடன் ஒன்றை  தொடர்புறுத்த வைத்தது . அதிலிருந்து கோர்வையாக என்னை புரிந்து கொண்டேன்.அவரின் சொற்களுக்கு அப்பால் உள்ளுக்குள் திறந்த கொண்ட புரிதலை இதற்கு முன் எழுதிய எந்தப்பதிவிலும் முழுமையாக சொல்ல முடியமைக்கு இந்த இரண்டிற்கும் மத்தியில் என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை ஒரு பார்வையாளனாக அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன்.இப்போது தோன்றுபவை வேறு வித படிபங்களை தொட்டதாக இருக்கலாம்


சில அடிப்படை மாற்றங்களை இப்படித் தொகுத்துக் கொள்வேன் .கோவிலுக்கு செல்வதில் முற்றாக ஆர்வமிழந்து போயிருந்தேன்  .  தினசரி வணங்கும் தெய்வ உருவுகளைத் தவிர பிற விக்ரகங்கள் என்னில் எந்த ஈர்ப்பையும் உருவாக்கவில்லை   . இந்த இரண்டு பெரிய மாற்றங்கள் என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவைகள் . கோவில் மற்றும் அதன் உற்சவ விக்கிரகங்கள் என் ஆழ்மனதில் எப்போதும் மிகப் பெரிய செல்வாக்கை செலுத்துபவை. அந்த விக்ரங்களுடன் உரையாடல் இருப்பதாக ஆழ்மனம் கறப்பித்துக் கொள்ளும்.அவை என்னை பெருமளவில் சாந்தப்படுத்து இருக்கின்றன. அவற்றில் இருந்து ஏன்  வெளியேறினேன் என தெரியவில்லை .மதம் பக்தி ஆன்மீகத்துடன் ஆசாரத்தை தந்தை தீவிரமாக வலியுத்தியதில்லை  அவற்றில்  ஒரு நெகிழ்வான நிலைபாட்டிற்கு முன்பே வந்துவிட்டிருந்தேன்


மரபான சம்பிரதாயத்தல் ஆசாரம் ஆழ்ந்து இன்றளவும் வலியுறுத்தப்படுவது குறித்த மன விலக்கம் கடந்த இருபத்தி ஐந்து வருடத்தில் தீவிரமடைந்து கொண்டே வந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். அது இன்று யாராலும் பின்பற்ற முடியாத ஒன்று . மேடையில் அது வலியுறுத்தப்படுவது ஒரு சடங்காக மட்டுமே இன்று எஞ்சியிருக்கிறது . இன்னும் பத்து வருடத்தில் அது கூட நிகழாது . அன்றும் அதை தீவிரமாக வலியுறுத்தும்  பிறரை முற்றாக தவிற்த்து வந்தேன் . ஆன்மீகம் குறித்த சமூக மாற்றம் மிக இயல்பாக நிகழ்வது . எதை நோக்கி அல்லது எந்த விதமான மாற்றத்தை நோக்கி இது செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்


பிறவி பேச்சு குறைபாட்டினால் உருவாகும் எள்ளலை எப்போதும் அஞ்சியிருக்கிறேன்.சிறு வயது தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால்  அப்போதெல்லாம் அந்த காயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் இடம் என வீட்டில் இருந்ததில்லை . வீடு பெண்களால் சூழப்பட்ட உலகம் . அதில் எனக்கு ஆதரவானவர் அம்மா மட்டுமே . ஆனால் அன்று அவர் மிக எளிய குடும்பத் தலைவி. மிகப் பொரும்பாலான சமயங்களில் அவர் பின்னால் சென்று மறைந்து கொள்வது மட்டுமே அன்று என்னை ஆறுதல் படுத்தியது .


தனித்து விடப்பட்ட சூழல்களில் என்னை குத்திக் கிழிக்கும் அவமான உணர்வுகளில்   இருந்து வெளிவர ஆழ்மனத்துடன் உரையாடும் பழக்கத்தை மிகச சிறிய வயதில் நான் பழகியிருக்க வேண்டும் . அன்று அந்த இரண்டு மன விசைகளில்  ஒன்று சில கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு   மிக எளிதில் அதிலிருந்து மீண்டிருக்கிறேன் . அதன் இருள் என்னை அஞ்சச் செய்வது. அது பற்றி எழுந்து என்னை சூழ்ந்து கொள்ள விடுவதில்லை . அந்த காலகட்டம் ஒரு கூட்டுப் புழுப் போல எனக்கு நானே பின்னக் கொண்ட வலை என்னை வெளியுலக தொடர்புகளில் இருந்து முற்றாக அறுத்திருக்கிறது  . புறவய வண்ணங்களை கொண்டு மனம் கானும் கனவுகள் என்னை ஆற்றுப்படுத்தி இருக்கவேண்டும்  .

ஒரு கால கட்டத்திற்கு பிறகு அது என்னை அங்கிருந்து வெளியேற்றி விட்டது   .அதிலிருந்ழு  ஒரு புது வாழ்கையின் துவக்கம் உருவானபோது பழைய வாழ்கையின் மிச்சங்கள் என எதுவும் இன்றி நான் அந்த அடிப்படை மாறிய மனநிலையை முதலில் அவதானிக்கத் தவறினேன்


இது எப்போதும் எனக்கு நிகழ்வது என நினைத்திருக்க வேண்டும் . இப்போது நிகழ்ந்தது பெரும் வல்லமையுடன் எழுந்தது என நான் அறிந்திருக்கவில்லை .வெளிவந்த  போது எனது சிந்தனை ஓட்டம் முற்றிலும் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது . அனைத்தையும் பார்க்கும் மற்றும் சித்திக்கும் முறையில் அந்த மாற்றத்தால் எனக்கே நான் மிகப் புதிதாக தெரிந்தேன். அதை  என் வாழ்கையில் செயல்படுத்த எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பது வியப்பாக இருந்தது.


வாழ்கை முறை ஆசாராம் , பூஜை என எல்லாவற்றின் மீது ஆழ்மனத்தல் விதையாக இருந்தது அந்த காலகட்டத்தில் மரமாகியருக்கிறது என புரிந்து கொண்டேன் . மனம் அதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டது . அதுவரை சிதறுண்டு கிடந்த எண்ணம்  அனைத்தும் சரடில் கோர்கப்பட்ட கணம் எங்கிருந்து அந்த அடிப்படை மாற்றம் எங்கு எப்படி நிகழ்ந்தது என்கிற  அவதானிப்பை பலமுறை முயன்று அங்கு செல்லமுடியமலாகி திரும்பி இருக்கிறேன் . மனதின் விசை நாமறியாத பல ஊடுவழிகளைக் கொண்டது . எண்ணாத கணத்தில் வேறொரு உலகை காட்ட வல்லது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...