https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 18 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 4 * கட்டவிழ்ந்த தெய்வங்கள் *

 


18.03.2023


* கட்டவிழ்ந்த தெய்வங்கள் *






அது  இரண்டாவது வாய்ப்பு  . அவரை சீண்டும்  சொற்களை அது எனக்கு உடனடியாக எடுத்துக்  கொடுத்தது . ஆரமபத்திலேயே பிடித்து எகிறி விடவேண்டும் அவர் என்ன சமாதானம்  சொன்னால் அனைத்திலும் முரண்பட்டு  அதை எடுத்துக் கொண்டு  அரசியல் நகர்வை தொடங்கி விடுவது . என் முதல் அழைப்பு நீண்ட நேரம் ஒலித்து பின் அணைந்தது . அது என்னை இன்னும் வெறிகொள்ளச் செய்தது . அவர் இதை உணர்ந்துவிட்டார் . என்னை தவிற்க நினைக்கிறார் என்கிற நினைப்பே என்னை மூச்சுவிட இயலாத சிரமத்தை உருவாக்கி இருந்தது . ஓடிவந்தவனைப் போல மூச்சு கட்டுக்குள் இல்லாமல் தேம்பியபடி இருந்தது . முதல் இரண்டு அழைப்புகளும் ஏற்கப்படவில்லை . நான் விடுவாதாக இல்லை . இப்போது எதிரி கிடைத்துவிட்டார். இந்த தவறுக்கு அவரது உதவி இருக்கும் அல்லது அவருக்கு தெரிந்து நடந்நிருக்கும். நான் ஆனந்தரங்க ரவிசந்திரனிடம் இது போல ஒன்று நகழலாம் என முன்பே பேசியிருந்தேன். கொஞ்சமாவது நடுநிலை வகிப்பார் என நினைத்தேன். தனது பதவி காலத்தில் வந்து நிற்கும் சிக்கலை எதிர் கொள்ள முடியாதவர் எதற்கு அது போல ஒரு பதவி வகிக்க வேண்டும் .


பின் கழுத்தில் அந்த அழுத்தம் உணரத் துவங்கினேன். அது என்னை எச்சரிக்கை கொள்ள செய்யும் உள்ளுணர்வு . நான் என் இழந்து கொண்டிப்பதை, அதீத  குரோதத்தில் இருப்பதை சொன்னது . எனக்குள் அடுத்தடுத்த தீர்மாணங்களை நோக்கி அதன் படிகளிலி ஏறிக் கொண்டே இருக்கையில் சட்டென அது அறுந்து போனது . எதிர் பக்கம் எனது அழைப்பு ஏற்கப்பட்டது தெரிந்தது. மறுமுணையில் அவரது குரல் கேட்டதும் எண்ணி வைத்ததை எடுத்துக் கொட்ட வேண்டும் என காத்திருந்தேன். ஆனால் மறுமுணையில் அவரது மனைவி. குரலில் பதட்டமிருந்தது . ஆனந்த ரங்க ரவிச்சந்திரனுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை மருத்துவமணையில் அறுவை சிகிழ்ச்சை முடிந்து தீவிர சிகிழ்ச்சையில் பிரிவிற்குள் இருபதாக சொல்லப்பட்ட உடன் அனைத்தும் அனைந்து அந்த கணம் அந்த விடுதலையை” எடுத்துக் கொண்டேன்.ஒரே நிமிடத்தில் அதை திரட்டிக் கொண்டேன் . அவருக்கு ஆறுதல் சொல்ல அவர் என்னிடம் தன் கணவருக்காக வேண்டிக் கொள்ளச் சொன்னார். அப்படியே செய்வதாக சொல்லி தொலைபேசியை அனைத்தேன். பேயாட்டம் போட்ட ஒன்று இப்போது எங்கே போனது என தெரியவில்லை . ஓடி ஆழத்தில் சென்று மறந்து கொண்டது இன்னொரு சந்தர்ப்பத்தில் வெளிவரும். இனி அது ஒருபோதும் எழுந்து வரக்கூடாது . வந்தால் அதனால் சீண்டப்படக்கூடாது என்கிற உறுதியை அடைந்து கொண்டிருந்தேன்.பின் அங்கிருந்து நீண்ட பயணம்.இதோ இன்று இங்கிருந்து கொண்டு அந்த கணத்தை நினைத்துப் பார்க்கிறேன் அது மிக இயற்கையாக அதே நமயம் மிகச் சரியாக வழிகாட்டப்பட்டு கடந்து என்னை அழைத்து வந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது


தொழிலை மிக பெரிய அளவில் விரித்தெடுக்க பங்கு சந்தையில் நுழைய இருக்கும் அனைத்து ஆரம்பகட்ட வேலைகள் ஏறக்குறைய முடிந்திருந்தது . ஆனால் அங்குத் துவங்கி இருந்த அந்த சூழலில் எதனுடனம் பொருந்தாத உளநிலை அலைக்கழிப்பில் இருந்தேன் . மனம் பலவாறாக பிரிந்து கிடந்தாலும் அனைத்து முணைகளும் முழு செயல்வடிவத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அதற்கு பின்னால் நான் என நினைக்கும் ஆழ்மனம் ஒரு அனாதையைப் போல மற்ற பிளவுற்ற மனதின் செயல்பாடுகளை திரும்பி நோக்கி செயலற்று அமர்ந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன் .மணகுள விநாயகர் சிக்கலை கையாண்டதைப் போல அனைத்தையும் செய்து கொண்டிருந்த போதும் நான் எதலும் ஒட்டாமல் தனித்திருந்தேன். மனம் நிகழ இருக்கும் பெரும் வீழ்ச்சியை கண்டுவிட்டிருந்தது . அதில் இருந்து மீட்டுக் கொள்ள காலத்துடன் ஆழ்மனம் தொடந்து உரையாடிக் கொண்டிருக்க வேண்டும்.அப்போதும் கூட மன ஆற்றல்களை அது எத்தனை நூறு மடங்காகப் பிறிந்து விசையுடன் செயலாற்ற வல்லது என்பதை ஓரளவு அறிந்து கொண்டது இந்த வலைப்பூ தளத்தில் பழைய நினைவுகளை பதிவிட துவங்கியதற்கு பின்னர் .அதற்கு  அடிப்படை காரணமாக அமைந்தது இன்றைய காந்தி” வாசிப்பு அரசியலாடலின் பிறிதொரு ஆழ்நிலைக்கு என்னை கொண்டு சென்றது . அகம் இரண்டாக பிளந்ததை நான் அறிந்து கொள்ளவில்லை ஆனால் ஆழ்மனம் நான் செய்யவேண்டியதை மிக தெளிவாக எனக்கு வழிகாட்டியதை இப்போது நினைவு கூர்கிறேன் . ஒரே சமயம்  ஜெயமோகனின் மூன்று ஆக்கத்தை வாசித்துக் கொண்டிந்தேன் . விஷ்ணுபுரம், இன்றைய காந்தி , அன்றாடம் வெளிவரும் வெண்முரசு மற்றும் பின் நோக்கி சென்று விடுபட்ட முதல் நாவலில் இருந்து வாசிக்கத் துவங்குவேன். அது ஒரு பித்து நிலை இப்போது அது போல ஒன்றை என்னால் கனவிலும் நினைக்க முடியாது.. 


2010 துவங்கி 2014 வரையிலான ஐந்து வருடம் பேச்சு என்பது முற்றாக குறைந்து போயிருந்த காலம் . செயல்பாட்டில் இருந்து வெளியேறவில்லை என்பது ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா சம்பந்தான சில கூடுகைகளை நடத்திக் கொண்டிருந்தேன். அதை தன்னளவில் 8000 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய இயக்கமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த போதும் நான் எதிலும் மூழ்காமல் தனித்தே இருந்தேன்”.இது என்ன ஒரு மனநிலை என எனக்கும் புரியவில்லை. அந்த கூடுகைகளைத் தவிற்தால் நான்  வீட்டில் இருந்து வெளியே செல்லவில்லை  என்றே பொருள் கொள்ளும்.. யாருடனும் ஒரு வார்த்தை பேசுவதில்லை . மனம் சொற்களை கைவிட்ட ஒரு நிலை . தத்துவம் போன்று கடந்து பதினைந்து ஆண்டுகாலம் மிக தீவிரமாக கேட்ட உபன்யாசங்கள்  கூட கேட்பது நின்று போனது . சிந்தனை என ஒன்றை இயக்கவில்லை என்றால் அதுவும் ஸ்தம்பித்து விடும் போல . உள்ளே இருந்த வெறுமைக்கு அப்பால் அது தீவிரமான விஷங்களை உள்வாங்க விரும்பவில்லை


அன்றெல்லாம் நான் மீள மீள கேட்டுக் கொண்டிருந்தது கிருஷ்ணப்பிரேமி அவர்களின் ராமாயணமும் ஶ்ரீமத் பாகவத உபன்யாசம் . அந்த ஐந்து வருடத்தில் எத்தனை நூறு முறை கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கில்லை  . முன்னர் DA. ஜோசப் பின்னர் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்சாங்களை மிக விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தேன் . அப்போது கிருஷ்ணப்பிரேமி உபயனசாங்களை கேட்கச் சொல்லி சிலர் பரிந்துறைத்த போது நான் மறுத்துவிட்டேன். நான் எங்கோ அவரின் பாதிப்பில் அடித்துச்செல்ப்படுவேன் என ஊகித்திருந்தேன். அது உண்மையாயிற்று. ஆனால் அது இன்னொரு கீதா முகூர்த்தம்”. அது கிடைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருப்பேன் எனத்தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...