https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 19 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 5. * அகச்சீண்டல் *

 



19.03.2023


* அகச்சீண்டல் *





காலத்தின் அழுத்தம் என்பது ஒரே சமயத்தில் பல முணைத் தாக்குதல். அதில் இருக்கும் திட்டமிட்டத் தன்மையை அறிந்து கொள்ள முடியும் . திகைத்து நின்று விட வேண்டியிருக்கும்அதை எந்த தர்க்த்தாலும் கொண்டு வைத்து  விவாதிக்க முடியாது . ஆனால் அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அனுபவம் உள்ளவர்கள் ஏற்கும் ஒன்று . அரசியல் , வியாபாரம் , நட்பு மற்றும் உறவுகள் என அனைத்திலருந்தும் வெளியேற வேண்டிய  காலம் ஒன்று உருவாதை அப்போது  ஓரளவு புரிந்து கொள்ள முடிந்ததுகுடும்ப உறவுகளுக்குள் உருவான முரணின் அடிப்படை நோயுற்றிருந்த அன்னைக்கு தேவைபட்ட ஆதீத கவனிப்பு . முழு நேரம் அதை செய்யலாம் , ஆனால் அவர் எதிர் கொள்வதாக சொல்லிக் கொண்டே இருக்கும் வதை படுவதை விட படுத்துவது பெரியது . ஒரு கட்டத்தில் அதை அவர் செயற்கையாக உருவாக்கிக் கொண்டார் . அலைபேசி ஒருவனை நிலையழிக்கச் செய்து கொந்தளிப்பின் உச்சத்திறகு கொண்டு செல்ல முடியும் என என்னனிடம் 2005 களில் சொல்லியிருந்தால் நான் அதை நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன் . அனைவரின் கவனத்தை ஈர்க்க அம்மா கையாண்டது மிக எளிய தந்திரம் அது அவதூறு வழியாக நிலைகொள்வது . காலம் காலமாக வயோதிகர்கள் , நோயுற்றவர்கள் செய்வது . ஆனால் அது போன்ற சூழலுக்கு நான் பழகியதில்லை என்றாலும் என் உடன் பிறந்தார் என்னிலும் அதில் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள்


மகனால் கைவிடப்பட்ட தாயாக” அவரின் மகள்களுக்கு மத்தியில் அவர் நிறுவிய பின்னர் அதன் மேல் மிக எளிதில் வன்மத்தைப் பற்றவைத்துவிட முடியும். ஆனால் தகவல்களை தங்கள் வாழ்கை சூழலில் போட்டு அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற எனது கணக்கு பிழைத்த போது கடும் அதிர்வை சந்தித்தேன். என்னை சுற்றி சுற்றி  குளவி போல அந்த அவதூறு பறந்து பறந்து என்னைக் கொட்டிக் கொண்டே இருந்தபோது .உயிர் போகாத வலியே மட்டுமானதுஉண்மையை ஒரு நாள் அனைவருக்கும் புரியவைத்து விடலாம் என்கிற கணக்குடன் அந்த வலியை ஆழ்மனச் சொற்காளால் மறுந்திட்டுக் கொண்டிருந்தேன்எதிர் நோக்கியது அந்த ஒரு நாள்” அனைத்தையும் அனைவரிடமும் இவை வெறும் புணைவு வதந்தி பொய் என்கிற உண்மையைச் சொல்லிப் புரியவைத்துவிடலாம் என காத்திருந்தேன் .இந்த அவதூறுகள் எனக்கானதல்ல  . என் பற்றிய உங்கள் மதிப்பீடு தவறு என ஓங்கிச் சொல்ல காத்திருந்தேன் . காத்திருந்த அந்த காலம் வதைவிட கொடுமையானது .ஆழ்மனம் பறப்படும் தகவல்களின் தொகுப்பில் உண்மை எங்கிருக்கிறது என சுட்டும் அனைத்து தர்க்கமும் ஓயாது மனதில் எழுந்தபடி இருக்கும் . ஆயிரக்கணக்கான முறை அதை மனதில் ஒத்திகை பார்க்கப்பட்டு, நடிகப்பட்டது . அது வெளிவரும் என நம்பிய அந்த நாள் கடைசீவரை வரவேயில்லை . ஒரு அவதூறில் இருந்து வேறு ஒன்று அங்கிருந்து பிறிதொன்று அன்றாடம் உருவாக்கி பரப்ப்பட்டு வெறியேற்றப்பட்டு சுற்றி சுழன்று ஒரு புயலைப் போல வீட்டில் எப்போதும் நிலை கொண்டு விட்டது . அதன் உக்கிரம் குறையும் வரை தொடர்ந்து அமைதிப்படுவதை  தவிற்கு வேறு வழிகள் இல்லை .


அவதூறுகள் எனக்கு புதிதல்ல . அரசியலில் , தொழிலில் , நண்பர்கள் மத்தியில் என அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன்  . அவை என்னை ஒன்றும் செய்துவிடவில்லை . நான் அதன் பொருட்டு விளக்மளிக்க முயன்றதில்லை .அவற்றை அமைதி என்கிற ஆற்றுப்படுத்தல் வழியாக மிக எளிதில் தாண்டியிருக்கிறேன். குடும்பத்திற்குள் அவதூறுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . அவை என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என நம்பினேன். இது ஒரு குரூர நகைச்சுவை என சுட்டி நகைக்கக் கூடியது என நினைத்திருந்தேன் ஆனால் இது வேறு வித கொடும் அனுபவம். அதை தாய் துவங்கும் போது தாங்க முடியாது . அது தன்னறம் என்கிற ஒற்றைச் சொல்லை நம்பி அத்தனை வருட காலம் வடிவமைக்கப்பட்ட மனம் . தாயை கைவிட்டவன்” என்கிற வசை ஆத்மாவை கொல்லுவது . பேச்சிழக்க வைப்பது   அது பற்றி யார் பேசினாலும் கூனிக்குறுக  வைத்துவிடும். என்னை தேற்றிக் கொள்ளவே முடியாத அவச்சொல். அது போல ஒருவரின் அகத்தை  கொடுமை செய்வது பிறிதில்லை. நாட்கணக்கில் அகம் புலம்பிக் கொண்மிருப்பதை கேட்க சகிக்காது. ஆனால் நான் பொறுமை இழந்து கொண்மிருந்தேன் .


ஆதரவாக பேசுவது போல நடிக்கும் அகத்தைப் ஒரு விரோதியை நான் அதுநாள் வரை சந்தித்ததில்லை . பரம விரோதிகள் கூட சற்றுக் கருணை கொண்டு நம்மை சில காலம் விட்டுவிடுவதுண்டு  . ஆனால்  முற்றாக துடைத்தெறிந்துவிட்ட ஒன்று நாம் விரும்பாத அல்லது தவிற்க நினைக்கும் நிகழ்வுகளின் ஒரு துளியை அது எப்போதும்  எடுத்துக் கொடுத்து நம்மை பதறவும் நிலையழியக்கவும் செய்யும் . அது என்னில் ஒரு பகுதி ஆனால் ஏன் அது என்னை எப்போதும்  இப்படி தொந்தரவு  செய்து கொண்டிருக்கிறது. என் ஆழத்தில் உறையும் ஒன்றை  நான் எப்போதும் நினைத்ததில்லை . அது சில சமயம்    வக்கரமாக என்னுள் எழுந்திருக்கலாம்  . இப்போது அதில் என் இச்சை என்பது சிறு துளிகூட இல்லை  . அதை எடுத்து என் முன் நீட்டிம்  அதிர்ச்சியும் , வெறுப்பும் அடைந்திருக்கிறேன்உள்ளே ஒன்று கடைந்தெடுக்கப்படுவது   நடந்து கொண்டே இருக்கிறது . அது நாமறியா தெய்வங்களை அங்கு அது குடியேற்றுகிறது . அதிலிருந்து தெறிக்கும் ஒன்று  நான் வாழும் இந்த உலகில் வந்து விழுந்து என்னை குன்ற வைத்துவிடுகிறது .எதிர் எனப்படுவது வெளியில் இல்லை அகத்தே இருக்கிறது .


ஆழ்மனதின் இயங்கு விசை நாம் அறியாதது . பேரியற்கை  மானுட அறத்தை அப்படி செயல்பட வைக்கிறது போலும். அந்த செயல்பாடு சில சமயங்களில் எதிர்மறையாக போய்விடுவதுண்டு.நான் எப்போதும் அத்தகைய சூழலில்  ஆழ்மனம் சொல்லுவதை நம்பி பயணத்தை ஆரம்பித்திருப்பேன் . காலம் என்ன சொல்லவருகிறது என்பதை மிக கூர்ந்து அவதனித்துக் கொண்டிருந்தேன். நிலை ஒன்றுக்கொன்று முரண்பட்ட பதிலை கொடுத்துக் கொண்டிருந்ததால் எதை நோக்கியும் மனதை செலுத்தாமல் அமைதியாக இருக்க முயல்வேன்


சிந்தனை எப்போதும் சாதகமான ஒரு முடிவை விழைகிறது . அதற்கு எதிராக துளிற்கும் எதையும் வெறிகொண்டு புறம் தள்ளுகிறது . நான் என்னை பழகிக் கொண்டது ஒரு இறப்பின் கணத்தில் . இறந்தவனுக்கு இந்த உலகியல் சொல்ல வருவது ஒன்றுமில்லை . இதை ஞானம் என்பதைவிட

இருத்லியல் . தாளமுமியாத வலி கொடுக்கும் ஒரு பெரிய முடிவை எடுக்கும் முன்பு . நான் உணர்ந்தது அந்த இறப்பின் கணத்தை . அந்த இடத்தில் என்னை சுற்றி உள்ள இந்த புறவய உலகின் அணைத்து எனக்கு எந்த வடிவத்திலும் பொருள் படுவதில்லை . அடைவதற்கோ இழப்பதற்கோ ஒன்றுமில்லை.இதை அடைந்து திகை்கும் ஒரு கணம் அனைவரின் வாழ்வில் நிகழ்வது . அந்த கணத்தை என் இறப்பால் ஈடு செய்தேன் . அந்த சட்டம் உருவாகி அதன் மீது போடப்பட்ட அனைத்தையும் உருக்கித் தள்ளி அது வெளிவந்து வட்டது . இப்போது நான் இன்னும் இறக்கவில்லை . இனி என்னால் கொண்டாடவும் முடியும் ஆனால் அந்த சட்டத்தை கோட்பாடை உருவாக்கி அந்த இறப்பில் இருந்து வெளிவந்தேனோ அது இனி  நான் வாழும் ஒவ்வொரு கணத்திலும் எனக்குறிய முறையில் எடுத்துக் கொடுக்கும் . பழைய நிலைக்கு ஒரு போதும செல்ல முடியாது .இனி அனைத்தின் மீதும் இந்த இறப்பை எடுத்து போட்டுப் பார்த்து அதன் ஆழத்தை முடிவெடுக்கவேண்டும். அது ஒரு கீதா முகூர்த்தம்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்