https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 மார்ச், 2023

அடையாளமாதல் * நினைவுகளுடன் *

 




ஶ்ரீ:



பதிவு : 667  / 857 / தேதி 10 மார்ச்  2023



* நினைவுகளுடன் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 65.




இங்கு தேர்தலில் விழும் ஓட்டு கட்சிக்காக மட்டும் விழுவதில்லை தலைமை கொண்டுள்ள கட்சி மேலாண்மை பல ஊடுபாவுகளைக் கொண்டது பலமுணைகளை இணைக்கிறது அதன் வழியாக உருவாகும் நம்பிக்கையின் அடிப்படையில் ஓட்டு விழுகிறது . அதை ஏன் என்றோ இன்னதென யாரிடமும் விளக்கவோ, பிறதொருவரிடம் விட்டுச் செல்லவோ முடியாது. அவை எப்போதும் பழைய பிழைகளை தவறுகளை சரி செய்வதில் இருந்து கிடைப்பது. அதை நான் தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதற்கு எனக்கான இடைவெளியை விட்டு வலகி நிற்கும் மேலிடத் தலைமையும் வேண்டும்.மிகச் சிலருக்கே அது கடந்தகாலத்தில் கிடைத்தது. அவர்கள் பெரும் வெற்றியாளர்களாக மேலிடம் அறிந்திருக்கிறது. புதுவை ஒரு சிறிய மாநிலம். இங்கிருந்து தில்லிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கொடுக்கக் கூடியது என்பதால் புதுவை அரசியல் அவர்களை கவருவதில்லை . இங்கு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் மட்டுமே அவர்கள் நம்மீது சற்று கனிவு கொள்கிறார்கள். அதை கட்சியின் வெற்றியாக மாற்ற எப்போதும் இங்கு சிலர் முயன்று கொண்டே இருக்கிறார்கள். அந்த வெளியில் சென்றுஇல்லை அதற்கு நானும் எனது நிர்வாகமும் காரணம்என ஒரு போதும் சொல்ல முடியாது. அந்த புரிதல் இல்லாமல் பிற எவர் வந்து இங்கு வந்து அமர்ந்தாலும் அதுவரை உருவாகி வந்திருக்கும் அமைப்பின் வெற்றியை அதன் பலனை சில காலம் அனுபவித்து பின்னர்  ஒட்டு மொத்தமாக தீர்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதன் பின் உருவாகும் வெற்றிடம் மிக ஆபத்தானது. அது புதுவை அரசியலின் மைய விசையை பாதிக்கும் ஒன்றாக கூட உருமாறலாம்


அரசியல் கட்சிகளுக்கிடையே இதுவரை இருந்த மொத்த புரிதலும் இடைவெளிகளும் உருவாக்கிய அழகியல் அழிந்து போகலாம். ……….அரசியலில் ஏது அழகியல்? என கேட்டுக் கொண்டேன். ஆம் தமிழக திராவிட அரசியலில் காண முடியாத சில இங்கு எழுதப்படாத விதிகளுக்கு இடையே நட்பும் நாகரீகமுமாக பேணப்பட்டிருகிறது. வெறி கொண்ட ஒற்றைப்படை அரசியலை முக்கிய கட்சியாக நாம் அதை தவிற்து வந்திருக்கிறோம். தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் நம்முடன் சமரசம் வேண்டி அதை ஒட்டியே பிற கட்சிகளும் தங்களை வரையறை செய்து கொண்டன. இனி மாநிலத்திற்கு புதிய தலைமையாக யார் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இங்கு வந்து சேர வழிகள் இல்லை. இனி வெறியூட்டும் அரசியலே இங்கு சாத்தியம் அதில் நிதானத்தை எதிர்பார்க்க முடியாது என்றார். அவை வயோதிகம் கொடுக்கும் கசிப்பில் உருவானவை அல்ல என ஊகித்திருந்தேன். அனைத்து வகையிலும் அது வருங்கால எதார்த்தம். அப்படி என்றால் இனி எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கு அன்று தீனி கிடைக்கவில்லை. இன்று அவதானிக்கையில் இன்றைய அரசியலின் கருவிகள் அன்று உருவாகியிருக்கவில்லை என புரிந்தது.


“1998 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்தில் கிடைக்காத கௌரவமான வாக்கு இங்கு கிடைக்கும். இப்போதைய தேவை ஒட்டு வித்தியாசத்தை குறைப்பது மட்டுமே. நிகழ்ந்தால் அது எனது தலைமைக்கானது என சொல்லெடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு அதை நான் தவறவிடுவதாக இல்லைஎன்றார். சண்முகத்தின் இந்த எதார்த்த பார்வை அன்று எனக்கு புதுவை காங்கிரஸ் வரலாறு பற்றி பல புதிய புரிதல்களை கொடுத்திருந்தது


மத்தியில் புதிய தலைமை எப்போதும் பதவிக்கு வந்தாலும் அது நவீனமடைதல் என்கிற புள்ளியை தோக்கியே நகரும். அதுநாள் வரை கடந்த காலத்தை ஒட்டி எழுந்த அத்தனை அனுபவங்களையும் அது நிராகரிக்கும். அந்த மாற்றத்தை கொண்டுவந்தால் மட்டுமே புதிதாக சிலர் உள்நுழையும் வழியை  ஏற்படுத்தும் என்பதால் அது விசை கொண்டு அமைப்பை முட்டியபடியே இருக்கும். அதை தொடர்ந்து தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை . நரசிம்மராவிற்கு நடந்தது அதுவே. அமைப்பை பலப்படுத்துதல் பல சமயங்களில் அதனால் எதிர்மறை பலன்களே விளைகின்றன. ஒரு முறை அது தனது பாதையை உருவாக்கி பழையதை தூர்த்த பிறகு இரண்டும் இல்லாத ஒரு இடத்திற்கு வந்து சேரும் அப்போது அந்த பயணம் அபத்தமானதாகி விடுகிறதுஎன்றார் அன்று அத்தனை கணக்குகளும் மிக கச்சிதமானதாக பொருந்துவதாக தோன்றியது ஆனால் 1988 பாராளுமன்றத் தேர்தலில் சண்முகம் தோல்வியடைந்து ஒரே வருடத்தில் அது தலைகீழ் கணக்கை தொடங்கி வைத்தது. சோனியாகாந்தி தலைமை பொறுப்பிற்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்த சூழலில் அவர் சந்திக்கும் முதல் தேர்தல் . அந்த 1999 தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டபோது மறுக்கப்பட்டது காரணம் அதுவரை தோற்காதவர்களுக்கு மட்டுமே சீட் என்றனர். என்னத்த சொல்ல. அது அடுத்த அனுபவமற்றத் தலைமுறை உள்ளே ஊடுருவி இருப்பதை வெளிப்படுத்தியது.அதன் பிறகு 1998 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் அந்த தேர்தலில் சண்முகத்திற்கு சீட்டு என்கிற ஒற்றைபடை இலக்கு கொவண்டதானது.


1999 இறுதிகளில் அரசியல் மாற்றம் நிகழ்ந்து திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரியது. முதல்வர் யார் என அதுவரை முடிவாகவில்லை. வைத்தியலிங்கம் அனைவராலும் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்பட்டார்.மத்தியில் பஜகா ஆட்சியில் இருந்தது புதுவை துணைநில ஆளுனர் ரஜினிராய் அடுத்து என்ன என்பது குறித்து தில்லி சமிக்ஞைக்கு காத்திருந்திருந்து அங்கிருந்து எந்த பதிலும் வராத சூழலில் சென்னைக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டதுஇல்லை அவர் மகாபலிபுரத்தில் அரசினர் விடுதியில் ஓய்வெடுக்கிறார் என அலர் நிலவியது . ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுனர் மாளிகைக்கு சென்ற காங்கிரஸ் குழுவில் என்னை சென்று சேர்ந்தே கொள்ளம்படி சண்முகம் தொலைபேசியில் சொன்னார். நான் துணைநிலை ஆளுனர் மாளிகையை அடைந்த போது அந்த இடம் ரகளையாக இருந்தது. என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள சில நிமிடங்களானது. ஆளுனர் ஊரில் இல்லை என்பதால் காங்கிரஸ் தலைவர்களுக்கு மாளிகையின் கதவு திறக்கப்படவில்லை. அதை திறக்கச் சொல்லி போராடிக் கொண்மிருந்தனர். அந்த காட்சி முதலில் திகைப்பை கொடுத்திருந்தது. அவமானப்பட்டவராக வைத்திலிங்கம் முகம் சிவந்து காணப்பட்டார். சிறிய கூட்டம் தேவையற்று அந்த வாசலில் தர்ணா செய்து கொண்டிருப்பது ரசிக்கும் படி இல்லை. அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வு இரண்டு தரப்பிற்கும் பெருமை சேர்ப்பதாக இல்லை. இரண்டு தரப்பும் தங்கள் இடத்திற்கு உகந்ததை செய்யவில்லை என தோன்றியது. முதல் குற்றம் திமுக ஆட்சி கவழ்கப்பட்டுவிட்டது அதை இனி யாராலும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆட்சியமைக்க உரிமை கோருவதாக இருந்தால். ஒரு முன்னாள் முதல்வர் என்கிற அனுபவத்தில் ஆளுனர் மாளிகையின் பொறுப்பாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் அழைப்பின் பேரில் மட்டுமே அங்கு சென்றிருக்க வேண்டும். எதற்கு முற்றுகை போல ஒன்றை நிகழ்த்தி அசிங்கப்பட வேண்டும்


இறுதிவரை கதவு திறக்கப்படவில்லை. அங்கு வேலை செய்யும் அனைவரும் புதுவை அரசின் ஊழியர்கள் தங்கள் நாளை எஜமானர்களைப் பற்றிய அச்சமின்மை அந்த திகைப்பை கொடுத்திருந்தது. அவர்களுக்கு மிகத் தெளிவான உத்திரவு இருந்திருக்க வேண்டும்.உயர் அதிகாரியை சந்திக்க அந்த போராட்டம் நிகழ்த்த வேண்டியதில்லை என நினைத்தேன். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்ததால் அது தனது ஆட்சியை தக்க வைக்க இறுதிவரை முயன்று கொண்டிருக்க வேண்டும் அதற்கு சாதகமாக தேவைபடும் நேரத்தை ஆளுனர் வழங்க முடுவு செய்து சென்னை சென்றிருக்க வேண்டும். ஆட்சி மாறியதை அறிவிக்க இந்த முயற்சி என எடுத்துக் கொண்டாலும் அதில் அரசியல் தரமின்மைத்தான் பார்க்க முடிந்தது. அனைத்திற்குமான முதல் கோணலாக அதைப் பார்த்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக