https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 24 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 7 . * கடப்பதும் வாழ்வதும் *

 24.03.2023* கடப்பதும் வாழ்வதும்  *

மிக ஆழ்ந்த மனவருத்ததில் இருந்து எதையெதை கைவிட்டு எதை பற்றி கொண்டு அதிலிருந்து மீண்டு மேலேறி வந்தேன் என்பது பற்றி யோசித்த போது சில அடிப்படை மனநிலைக்கும் சூழ்நிலைக்குமாக சில தீர்மானங்களை எடுத்து அதிலிருந்து வெளிவர முயன்றது நினைவிற்கு வந்தது . ஒன்று அன்றிருந்த பொருளாதார  நெருக்கடியில் இரண்டு  உறவுகள் கொடுத்த ஒயாத மன உளைச்சல்அந்த இரண்டும் நான் எப்படி தவிற்க நினைத்தாலும்  வாழ்வின் மத்தியி்ல் அவை வந்து விழுந்து கொண்டே இருக்கிறது . அது ஊழ்.


பொதுவாக மனம் அமைதி இழக்கும் போதெல்லாம் சில அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கி அதிலிருந்து மீண்டு வருவது பழகி இருந்தது .இப்போது அந்த இரண்டுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடை அப்போது எடுத்தேன் . பொருளாதர நெருக்கடிநில் இருந்து வெளிவர என் வீட்டு பக்கத்தில் இருந்து ஒரு பெரிய சொத்தை விற்க வேண்டிய சூழல்  .பார்ப்பவர்கள் கண்களில் வெளிப்படும் ஏளனம் அவதூறு மற்றும் வெறும் வம்பிற்கு தயங்கி அதைப் பற்றிய முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தேன் . சிக்கல் தீவிரமான பிறகு அதை விற்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி அந்த  முடிவை எடுப்பதற்கு முன்பு என்னை அதற்கு தயாரித்துக் கொண்டேன். மிக மிக கொந்தளிப்பான மனநிலையில் இருந்த காலம். அது ஒரு இறப்பின் தருணம்”. இறந்தவனுக்கு இந்த உலகம் எந்த வகையில் பொருள்படும்” என்கிற முதல் கேள்வி அனைத்தையும் துவக்கிவைத்தது.


நினைவு தெரிந்த நாள் முதல் என்னை சுற்றியிருந்த உலகம் அதன் பார்வை,  அது என்னைப்பற்றிய மதிப்பீடு போன்றவைகள் குறித்து நான் அறிந்திருந்தது எல்லாம் நான் என்னைப் பற்றி அவர்கள் நினைத்துக் கொண்டாத எண்ணிய என் கற்பனை மட்டுமே. அதன் சாதக பாதகங்கள் உண்டு . அவையே என்னை வடிவமைத்தவை. ஆனால் வயதும் அனுபவம் காரணமாக இந்த உலகில் யாரும் யாருக்கும்  பொருட்படுவதில்லை  என்கிற புரிதல்அது ஒரு கணிப்பு , அதற்கு காலம் கடந்து  எந்த மதிப்பும் இல்லை . இது நான் இறந்த உலகம் இனி இது எனக்கு எந்த வகையிலும் பொருட்படத்தக்கதல்ல என்கிற இந்த விதியை அதில் போட்டு வெளிவந்து விட்டேன் . ஆனால் விதி என ஒன்றை பற்றிக் கொண்டு வாழ்கை மாறுகிற தருணத்தில் அதன் பின் அந்த விதி அனைத்து முடிவிலும் பின்பற்றப் பட வேண்டும் என்பது எனது முடிவாக இருந்தது . அது பின் அந்த வாழ்கை இருக்கும் வரை செல்லத் தக்கது . இனி அனைத்தும் இங்கிருந்து தொடங்கப்படும் என சொல்லிக் கொண்டேன். அதன் பின்னர் அனைத்து  சந்தர்ப்பங்களில் எழுந்த சிக்கல்கள் அனைத்தையும் அந்த விதியே” அனைத்தையும் முடிவு செய்தது.


மதம் அல்லது கோட்பாடு மூலம் உருவாகும் நம்பிக்கை உளவியலில் இங்கு முக்கியமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன் . கொந்தளிக்கும் போது அது தன்போக்கில் தீவிரமான எதிர் கருத்துக்களையும் வன்முறையை உள்ளூர நியாயப்படுத்திய பின்னர் சற்று நிதானத்தை அளிக்கிறது. அந்த நிதானம்  மனதைக் கூர்மை அடையச்செய்கிறது  .மனம் எப்போதும் பிரிந்து பிரிந்தே இயங்குகிறது. ஒருமனம் ஒன்றை உருவகித்தால் மறுகணம் அதை தகர்க்க தேவையானதை அதுவே ஒரேசமயத்தில் மாறிவிடுகிறது போல  . தன் மனம் ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலை வேறு ஒருமனம் வேடிக்கை பார்க்கிறது . எந்தப் பதற்றத்திலும் எந்த அச்சத்திலும் அது வேடிக்கை பார்க்காமல் இருப்பது இல்லை . எத்தகைய கொடூரத்தைத் தான் செய்யும்போதும் தன்னில் ஒரு பகுதி அதில் ஈடுபடுவதில்லை என்கிற உபநிஷத்து வாக்கியம் சொல்ல வருவது இதைத்தான் என நினைக்கிறேன்.இது ஜெயமோகனின் உற்று நோக்கும் பறவை” சிறுகதையில் வரும் வரிகளை என் அனுபவத்தில் போட்டு சில மாற்றங்களை செய்து கொண்டபோது சட்டென பொருந்திப் போகிறது.


உடன் பிறந்தார் வெறும் வம்பாக மாறிய போது  ஒருவித அதீத மனநிலையை அது உருவாக்கி இருந்தது  .உளம் கொந்தளித்து வழிந்தோட தயாராக இருப்பது . அது காட்டும் திசைக்கு பயணப்படுவது திரும்ப முடியாத எல்லைக்கு செல்வது  . இன்று வருத்தமாக நிலைகொண்டிருப்பது   நிரந்தர கோபமான உருவெடுப்பது  அதை தக்க வைக்க அதற்கான ஒரே கருவி அளவில்லாத கசப்பை நிலைகொள்ள வைப்பது .அம்மா எனக்கொரு பாடம் .அவரின் குரோதம் நிரந்தரமானது . ஒரு முறை உருவாகும் வெறுப்பை  இறுதிவரை தூக்கி சுமந்தார். வாழ்நாள் முழுக்க அதற்கு தேவையான கசப்பையும் , கோபத்தையும் அது உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தது  . அது ஒரு நரகம். அம்மாவின் அந்த மூர்கத்தை நான் சிறுவயதில் பார்த்ததில்லை .அப்பா அவருக்குறிய இடத்தை கொடுக்கவில்லை என்கிற தவறான புரிதல் அவரை  வருத்தம் கொண்டவராக மாற்றியிருந்தது . அது சென்று தொட்ட இடம் விபரீதமான பலனை கொடுத்தது .ஆரம்பத்தில் அவரது உள நிலையை மாற்றியமைபட்டதாக நான் உணர்ந்தது இரண்டின் அடிப்படையில் . ஒன்று அப்பாவின் மரணம். இரண்டு  2001 ல் கடும் மாரடைப்பு ஏற்பட்டு பிழைத்தது கிட்டதட்ட மறு ஜென்மம் . ஆனால் அவரின் அந்த அதீத மாற்றங்கள் அதன் பின்னர் உருவானவை. அலைபேசி மற்றும் உருப்படாத தொலைகாட்சி தொடர் அவரை இன்னும் மோசமாக்கின. அது செலுத்தும் உளவியல் செல்லாக்கு அப்படிப்பட்டது


சிறு வயதில் அவரது கசப்பு நான் அறிந்தது .அது அவரை எங்கு கொண்டு சென்றது என்பதை அறிந்திருந்தேன் . அது எனக்கு வேண்டாம் என்கிற நினைப்பே என்னை சுற்றி  நிகழ்ந்த அனைத்தின் மீதான எனது எதிர்விணையைஒரு எல்லையில் நிறுத்தி வைக்க முடிந்தது . ஒரு சொல் , சிறு இடைவெளி மனதை ஆற்றுப்படுத்தும் என உறுதியாக நம்பினேன்ஒரு சொல் பேசாத நிலை . தொடர்ந்து கேட்ட ராமாயண , பாகவத ஸ்லோகங்கள் என்னை நான, மீட்டெடுத்துக் கொள்ள வைத்தது.என் இயல்பு பிறர்மீது நிரந்தர வெறுப்பை என்னால் கொண்டிருக்க முடியாது என்கிற அடிப்படை என்னை நிதானிக்கச் செய்திருக்க வேண்டும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...