https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 5 மார்ச், 2023

அடையாளமாதல் * அனுபவத்தை கடத்தல் *

  



ஶ்ரீ:



பதிவு : 667  / 857 / தேதி 05 மார்ச்  2023



* அனுபவத்தை கடத்தல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 64.





அதை நெருங்கி யாரும் எதையும் முயற்சிக்க முடியாது காரணம்  களத்தில் சாத்தியப்பட அதற்கு பல நூறு அலகுகள் தேவையாகின்றன. அவற்றை ஒருபோதும் ஒருவர் தனித்து உருவாக்கி விட முடியாது. அதற்கான ஒரு புள்ளி உருவாகி வர பல கோணத்தில் நிகழ்வுகள் ஒத்திசைவு அடைய வேண்டும் . நீண்ட அனுபவம் அந்த தருணம் எழுந்து வருவதை பார்க்க முடியும் ஒரு போதும் இருந்தும் அதற்கு முயற்சிக்க முடியாது என்பது இறுதி கருத்து . இயற்கையின் அர்த்தமின்மை என்னை எப்போதும் தொந்திரவும் அவற்றின் பிரம்மாண்டம் அளிக்கும் பெருளின்மையும் திகைக்கச் செய்பவை. வெகு சில தருணங்களில் அவை கதவை திறந்து அந்த இனிய முகத்தை காட்டுகின்றன. அப்போது அவை கனவில் அருகில் அழைத்துச் சென்று விடுகின்றன. ஒரு வித பித்தை உருவாக்கி நிலையழியச் செய்கிறது. அது போன்ற சந்தர்பங்களை நான் தவறவிட்டதில்லை. அங்கிருந்து பெற்றுக் கொள்ள ஓன்றில்லை என தெரிந்து இருந்தாலும் கூட அதை செய்யாமலிருக்க முடியாது . செயலூக்கம் கொண்டவர்கள் யாரும் அந்த தருணத்தை தவறவிட மாட்டார்கள். உள் நுழையும் விழைவு எழுந்ததும் பின் அது அவனை இழுத்துக் கொள்கிறது


அதை முயற்சிப்பவனே அதற்கு இறுதி பலி என தெரிந்தாலும் அது கொடுக்கும் ஈர்ப்பை அது உருவாகும் பரவசத்தை ஒரு போதும் இழக்க விரும்பமாட்டான். அதற்கீடாக உலகியலில் உள்ள அத்தனை சுகங்களையும் ஈடு வைக்க முடியும். பொதுவாக சுகம் என்பவை வெளியில் இருந்து வரும் சேர்கையால் நிகழ்கிறது. துக்கத்தை அமைதியாக அமர்ந்திருக்கும் சில் நவடிகளில் உருவாகிவிடும்.தனியே அது ஆள்ள ஒன்றுமில்லை. அதன் உச்சமான உன்மத்தம் ஒருபோதும் வெளியில் இருந்து வருவதில்லை. அது உள்ளிருந்து உருவாகி தனி வாழ்கையாக வாழ்வது. ஒரு போதும் பிறதொருவருக்கு புரியவைக்க இயலாதது. அதன் அத்தனை கூறுகளால் அவன் முட்டாளாக வெகு எளதில் கடந்து செல்லக் கூடிய ஒருவனாக பிறருக்கு தோன்றிவிடும் விபரீதம் அப்படிப்பட்டதாக நிகழ்கிறது


இதுரை அந்த புள்ளியை நோக்கி பல முறை பயணப்பட்டிருபக்கிறேன் ஒருமை கூடாத்தால் அந்த முயற்சிகளை கைவிட்டு மீண்டும் மொழியின் சாத்தியங்களை பலவாறு எழிது பழக இந்த வலைப்பூதளத்தை உபயோகப் படுத்திக் கொள்கிறேன் இது யாருக்கும் எதுவும் சொல்லவந்ததல்ல என்பதால் பல நிகழ்வுகள் மீள மீள சிறு சிறு மாற்றங்களுடன் இடம் பெருவது தவிற்க இயலாத்து . யாரிடமும் எந்த குறையையும் காண குற்றம் சொல்ல இவற்றை எழுத வரவில்லை . அவர்களின் வாழ்நாளில் அதைச் செய்ய வந்தவர்கள். அது உலகின் பெருநியதியின் இயங்கு விசை. மனிதர்களை வைத்து அது விளையாடுகிறது என்பதை தவிற இதில் மனிதர்களின் தனிப்பட்ட ஒன்று செய்ய அது விடுவதில்லை. பெரும் நிகழ்வினை ஒருங்கியவர்கள் அனைவரும் இதை ஏற்பார்கள் என நினைக்கிறேன்.


இந்திய காங்கிரஸ் கட்சி அரசியல் மிகுந்த குழப்பமான சூழலில் இருந்தது . இரண்டு தொடர் பாராளுமன்ற தேர்தல்களில் ஆட்சியமைக்க முடியாமலானது . நரசிம்ம ராவ் வெளியேற்றம். இடைக்கால தலைவர் போல வந்தமைந்த சீதாராம் கேசரி தேவா கௌடா அரசை கவிழ்த்து மற்றுமோர் தேர்தலை நோக்கி தள்ளினார்அவரது முடிவு சோனியா காந்தி கட்சிக்கினுள் வரும் சாத்தியங்களை சில காலம் தள்ளி வைத்தது. சோனியாகாந்தி தனது அரசியில் பிரவேசத்திற்கு சந்தர்பத்திற்கு காத்திருந்த போது 1998 பாராளுமன்றத் தேர்தல் முடிவனது

அந்த நேரத்தில் சோனியாகாந்தி ஜெயலலிதா நேரடி உரசல் காரணமாக ஒரு கப் டீ அருந்தல் கூடுகையுடன் அதிமுகவுடனான கூட்டணி முடிவிற்கு வந்தது . 1998 கூட்டணி இல்லாத அந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் போட்டியிடுவோர் ஆர்வம் காட்டவில்லை. நாராயணசாமி வழக்கம் போல தீவிரமாக முயன்று கொண்டிருந்தார் . சண்முகம் தனக்கு சீட் கேட்டு தில்லி புறப்பட்டுக் கொண்டிருந்தார். அன்று இரவு நான் அவர் தில்லி கிளம்பிம் முன்னர் ஆற்றாமையுடன்எந்த அரசியல் காரணத்திற்க்காகவும் சீட்டை விட்டுத் தராதீர்கள்என்றேன் . சற்று நேரம் அமைதியாக இருந்தவர் . “இம்முறை நான் எந்த சமாதானத்தின் பெயரிலும் அதை செய்ய முடியாதுஎன்றார் . “தமிழகம் மற்றும் புதுவைக்கும் அரசியல் நீதியாக ஒரு பெரிய வேறுபாடு உண்டு என நாற்பது வருஷமாக சொல்லி நிரூபித்து வருகிறேன் . முப்பது வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி இழந்த காங்கிரஸ் இன்னும் ஒரு நூறு ஆண்டு ஆட்சி அமைப்பதை பற்றிக் கனவு கூட காண முடியாது ஆனால் புதுவையில் அதன் பிறகு பலமுறை ஆட்சி அமைத்திருக்கிறோம் . அது உள்ளூர் தலைவரின் ஆளுமை மற்றும் மேலாண்மை வழியாக நிகழ்ந்தது என்பது அதுவரை இருந்த கட்சி மேலிடத்திற்கு நன்றாகவே தெரியும், அதனால் புதுவை கட்சி மற்றும் தேர்தல் விஷயமாக யார் தில்லிக்கு சென்று என்ன சொன்னாலும் இறுதி சொல்லெடுக்க எனக்கு அது எப்போதும் வாய்ப்பளித்தமையால் இங்கு தொடர்ந்து நம்மால் கட்சிக்கு உள்ளே மற்றும் வெளியே சமநிலையை கொண்டு வர முடிந்தது. சோனியா தலைமை பொறுப்பில் வருவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது . எப்போது என்பதுதான் கேள்வி. நிச்சயம் இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவிற்கு பிறகு அது நடந்துவிடும் . இந்த பாராளுமன்றத் தேர்தல் வெற்றி தோல்வி அவர் அரசியல் உள்நுழையும் நேரத்தை சற்று முன்பின் என மாற்றி அமைக்கலாம். வருவது உறுதி.இந்த சூழலில் அவர் தலைவராக வந்தால் அவரைச் சுற்றி  நிற்கப்போகும் குறுங் குழுவை கடந்து புதுவை அரசியல் பற்றிய உண்மை தகவலை அவருக்கு கொண்டு போக முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...