https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 1 அகங்களை நோக்கி

 


10.03.2023



அகங்களை நோக்கி





யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது. அந்த அகவய நெறிப்படுத்தலை கட்டுப்பாடுகள்’ வழியாக எய்த முடியாது. ஏனென்றால் அகத்தை கட்டுப்படுத்துவது இன்னொரு அகம். கட்டுப்படுத்த முயன்றால் அகம் இரண்டாகப் பிளந்து அகமோதல்தான் உருவாகும். அது மனஆற்றலை வீணாக்கி அழிக்கும்.


-ஜெயமோகன்-



2008 முதல் குடை கோவிந்தசாமி பிள்ளை”  குடும்பத்தார் என சொல்லப்படுபவர்கள் அனைவரும உணர்வு கொந்தளிப்பில் அணுகப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது தாத்தா கோவிந்தசாமி பிள்ளை” ஏற்படுத்திவைத்த அத்தனை கோவில் உற்சவ நிகழ்வுகள் அனைத்தும்  குடும்ப பொது” என்கிற இடத்தில் இருந்து நழுவி தனிப்பட்ட ஒரு குடும்ப நிகழ்வாக சிறுத்தது  .அதைவிட மிகுந்த வருத்தமளிப்பது அதன் பின்னணி . அனைவருக்கிடையே நான் கொண்டுவர முயன்ற சமரசம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட காழ்ப்பு மற்றும் தவறான நிலைபாடுகள் காரணமாக நிறைய உள்முக கருத்து தீவிரமடைய துவங்கிய போது அது என்னை  வெளியே தெறிக்கச் செய்துவிட்டது . உச்ச நிகழ்வாக ஒரு சொத்து சிக்கல் நீதிமன்றம் சென்றது  அனைத்திற்குமான  பின்னணி.. ஒருவகையில் நான் அந்த சமர முயற்சியில் ஒதுங்கிக்கொண்டதால் தான் இது நிகழ்ந்தது என்கிற சிறு நெருடல் எப்போதும் இருந்து கொண்டிருந்தது .


என்னளவில் மணற்குள விநாயகர் கோவில் உற்சவம் கைநழுவி போனது  தீயூழாக மனதில் பதிந்துவிட்டது. 2007 மாசி மக உற்சவத்திற்கு முதல் நாள் இரவு கோவிலில் நடைபெறும் உற்சவ மூர்த்தி  நீராட்டில்  கலந்து கொண்டு திரும்பும் போது கோவில் அருகே நிறுத்து வைக்கப்பட்டிருந்த எனது கார் டயர் பஞ்சராகி இருந்தது அதன்  துவக்கமாக ஆழ்மனம் அறிவித்ததுதர்க்க மனம்  புறந்தள்ளி அதை ஒரு சகஜ நிகழ்வு என்கிற அளவில் நிறுவும் போது அதிலிருத்து மீளும் பொருட்டு அந்த தர்க்கத்தை பிடித்துக் கொண்டேன். ஆனால்  டயரை மாற்ற மனமில்லாமல் அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோ ஏறி வீடு வந்து சேர்ந்தேன் . மறுநாள் ஓட்டுனர் சென்று காரை எடுத்து வந்தார் . முள்ளாக மனதை உறுத்திக் கொண்டிருந்தாலும் மேலதிகமாக எதையாவது செய்யும்  மனமில்லாமலை. வருவதை ஏற்பது என்கிற பழக்கத்திற்கு வந்து கொண்டிருந்த நேரம் . அப்படிதான் என்றாகிப் போனால், சரி , அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற விரக்த நிலைக்குள் சென்றுவிட்டேன்.அந்த நிகழ்வு நிரந்தர வலி கொடுப்பதாக இருந்த போதும் அதை விலக்கிக் கொள்ளும் பொருட்டு என்னால் எதன் முன்னாலும் சென்று  இறைஞ்ச இயலாது .


வாழ்வின் உச்சகட்ட சரிவை நோக்கி செல்ல செல்ல மெல்ல அனைத்திலிருந்தும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருந்தேன் .அரசியல், குடும்பம், வியாபாரம், வங்கி, நட்பு கடைசியாக அம்மா என அனைத்திலும்  ஒரே சமயத்தில் அது நடந்தது .காலை நேர எனது விரிவான பூஜை மட்டுமே என்னை அன்றாடங்களில் இருந்து வெளிவரத் செய்யும் ஒரே மீட்பு . அது ஒரு யோகம் போல தொடர் செய்கைகளினால் ஆனது. யாரும் எனக்கு அதை சொல்லிக் கொடுத்ததில்லை. இது தொடக்கம் மற்றவை அதன் பின் என சிறு ஒழுங்கு இருந்தாலும் அன்றைய மனநிலை பொறுத்து நீண்டும் குறுகியும் இருக்கும். முடித்து விட்டு வெளிவந்து  காலை உணவிற்கு அமரும் போது மணி 11:30 கடந்திருக்கும் .

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் , முக்கியமாக காலை பூஜை வேளையில் மணற்குள விநாயகர் உற்சவம் கைநழுவியது பற்றி  நினைவு கூறாது அந்த நாள் கடந்ததில்லை . அதை நினைக்கும ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மூதாதையர்களால் கைவிடப்பட்ட உணர்வு மேலெழுந்து நின்று அந்த நாளை கடினமாக்கிவிடும் . நான் மிக உச்சகட்ட உளக்கொந்தளிப்பில் இருந்த  காலம் . பல்வேறு தளத்தில்  குவிக்கப்பட்டு திட்டமிட்ட தாக்குதல் போல அடுக்கடுக்காக நிகழ்ந்தவைகளை எதிர்கொள்ளத் துவங்கியிருந்தேன்.தாக்குதல்கள் அக மற்றும் புறவயமாக இரண்டிலும். அவற்றை முழுமையாக ஏற்கவும் அதன்மீது எந்தவித எதிர்விணையை காட்டாமல் இருக்கவும் பழகிக் கொண்டேன்.அதற்கு அடிப்படை காரணம்   தீவிரமான வேறு ஒருவகை அகவயமான பயணத்தை அது உருவாக்கியிருந்தது . இன்று நான் இருந்து கொண்டிருக்கும் இடம் அங்கிருந்து உருவானது . அனைத்திலிருந்தும்  விடுதலை ,விடுதலை” என்கிற ஒயாத ஒற்றைக் குரல் அதை வடிவமைத்திருக்க வேண்டும்.


மணற்குள விநாயகர் கோவிலில் இருந்து வரும் அழைப்பு அந்த வருடம் வராது என்பதை புரிந்து கொள்ள சிறிது நேரமானது. அம்மா கொந்தளித்து விட்டார். அவரை சமாதனப்படுத்துவது  எளிதல்லஅது எப்படி நிகழ்ந்தது என திகைத்திருந்தேன்.நான் அரசிலில் பலம் பெற்றிருந்த நேரம். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் எனது நெருங்கிய நண்பர் . அதிகாரிகளை அழைத்து அதை உடனடியாக சரிசெய்திருக்க இருக்க முடியும் .   ரிஷிகேசம் சென்று திரும்பியதில் இருந்து அனைத்தின் மீதும் ஒருவித மனவிலக்கம் கொண்டிருந்தேன் . உச்சகட்டமாக உளம் நிலையழிந்திருந்தது  . வாழ்வின் அனைத்து நல்ல காலமும் முடிந்து போய் வர இருக்கும் காலம் உகந்ததாக  இருக்கப் போவதில்லை என்பதற்கான பல அறிகுறிகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் . மனம் மட்டுமின்றி ஆத்மாவே ஒய்ந்து போனது போல இருந்தது .அதிலிருந்து என்னை மீட்டுக் கொள்ள மனதை மிகம்தீவிரமாக ஒன்றிலிருந்து மற்றொற்றை தொட்டு அந்த விலகளை துவங்கியிருந்தேன்.


முற்றாக விடுபட நினைத்தது அரசியலில் இருந்து . அது என்னை ஒவ்வொரு கணமும் வதைத்துக் கொண்டிருந்தது . அரசியல் என்பது தன்னகங்கார வெளிப்பாட்டினால்  உருவாவது. அது தனக்கான இடத்தை அடையும்வரை எங்கும் என்னை நிம்மதியாக அமைய விடாது. உள்ளிருந்து வரும் குரல் அனைத்தையும் மீறி அக மற்றும் புறவயத்தை அவதானித்தபடி இருக்கும். நீண்டகால பயிற்சியில் அதை அப்படித்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது . அது ஒரு வளர்ப்பு பிராணி போல . அதை தொடர்புறுத்தும் உலகம் வேறு என்பதால் அதன் மீது எந்த முற்றதிகாரமும்  இல்லை. அது தன்னிச்சையானது . நாம் சொல்வதை கேட்பது போல அதுவரை இருந்தது  ஒரு நடிப்பு .ஆழ்வார் பாடல் ஒன்று பாம்போடு ஒரு கூரையின் கீழ் இருந்ததைப் போல” என மனதை பற்றி ஒரு வரி வரும்  பாம்பு மிகச் சரியான குறியீட்டுச் சொல். அதனுடன் முரண் கொள்ளத் துவங்கினால் அது கடித்து குதறுவது அருகிருக்கும் அதன் பயிற்சியாளனை. இப்போது எதையும் செய்யாதே என ஆணையிட விரும்பவில்லை . மீறி அழுத்தம் கொடுக்க கொடுக்க முன்னிலும் திமிறி வெளிப்பட்டு எனது அனைத்து ஆற்றலையும் சிதைத்து விடும் .


அன்று மட்டுமின்றி இன்றளவும் என்னை புறவய உலகு கொடுக்கும் அலைக்கழிப்பில் இருந்து துண்டித்துக் கொள்ள உதவுவது எனது பூஜை அறை. அங்கு பக்தியின் விளைகனி அனைத்தில் இருந்து விடுதலை” பெறும் மனதை மெல்ல பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன் . தியானம் மிக உயர்ந்த பலனை தரக்கூடியது ஆனால் அன்று நான் இருந்த நிலையில் அமர்ந்து அதை முயற்சிப்பது என்பது எதற்கும் உதவாது . ஒரு இடத்தில் அமர்ந்தால் மனதில் இருந்து மெல்ல உருவாகும் அதன் எதிர் குரலையும் அதை சமநிலை படுத்த எழும் பிறதொரு குரலையும் எனக்கு சம்பந்தமில்லாத நான் வேறெங்கோ இருந்து கொண்டு பதைக்கும்  அகத்தை எதிர் கொள்ள உடலின் அனைத்து பலத்தையும் செலவழிக்க வேண்டும்  . எனக்கு பின்னால் அது போல இன்னும் ஆயிரம் பிறவி மனங்களின் நிழல்கள் முடிவிலி வரை நீண்டிருப்பது .அதனுடன் ஓயாத பெரும் சண்டை என்னை முற்றாக முடக்கக் கூடியது என்பதால் அதை ஆஞ்சினேன். வருவதை வரும் போக்கிற்கே  விடுவது மட்டுமே அனைத்திலிருந்தும் விடுபடும் வழிமனம் அதை விழைந்தது. அது ஒன்றே என்னை காப்பாற்றக்கூடியது


அனைத்தும் போதும் என்கிற மனநிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். இந்த சூழலில் மணற்குள விநாயகர் கோவில் சர்ச்சையை தீர்க்க மீளவும் அரசியலின் கதவை தட்டுவது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. அது திரும்பவும் என்னை உள்ளிழுத்துக் கொள்ளும். பின் மீள்வது என்பது நிகழவே முடியாது . அந்த சூழலில் ஆழ்மனம் எனக்கு சொன்னது . இயலாததை மன அளவில் விட்டுவிட பழகியிருக்கும் போது இயல்வதையும் அதன் வழிக்கே விட்டு விடும் மனநிலையை உருவாக்கிக் கொள்வது மட்டுமே என்னை அனைத்திலிருந்தும் விடுவிக்கும் என்கிற புரிதலை கொடுத்தது அது ஒரு கீதா முகூர்த்தம்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக