https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 21 டிசம்பர், 2020

அடையாளமாதல் * நொய்மையும் உறுதியும் *

 




ஶ்ரீ:



பதிவு : 553  / 746 / தேதி 21 டிசம்பர்  2020


* நொய்மையும் உறுதியும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 31.







காலை 9.00 மணிக்கு தலைவர் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைத்ததாக என் மனைவி சொல்லும் போது மணி 10.30 தாண்டி இருந்தது . பூஜையில் இருக்கும் போது என்னை அழைப்பதில்லை .வெறுப்பாக இருந்தது . அவர் தலைமையில் நடக்கும் பஞ்சாயத்து நான் இல்லாமல் நடக்கட்டும் என்று முதலில் நினைத்தேன். 11.00 மணிக்கு சூரியநாராணன் எனது அலைபேசியில் அழைத்தார்  மேற்கொண்டு இழுத்தடிக்கும் எண்ணம் இருந்தாலும் யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என தோன்றியதால் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் போதுதான் கவனித்தேன் அது தலைவர் வீட்டு தொலைபேசி எண் . சற்று குழப்பமாக இருந்தது 9:30 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விடுவது அவரது வழக்கம் . என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவருடன் பேசினேன் . அவர் எதுவும் சொல்லாமல் தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் . நான் உடனே புறப்பட்டு சென்றேன். தலைவர் வீட்டின் பின்கட்டு எனக்கு மிக அனுக்கமானது . அங்கு அவரின் முதன்மை பணியாளர்கள் இருப்பார்கள் . எனது நண்பர்களும் கூடும் இடமும் அது. சற்று மூச்சு வாங்கிக் கொள்ள உகந்த இடம் , ஆனால் சிக்கல் தலைவர் வீட்டின் வரவேற்பறையை தாண்டித்தான் உள்ளே செல்ல முடியும் அவர் கண்ணில் படாமல் அங்கு செல்ல முடியாது . அழைத்தால் சென்று பேசுவோம் என வேகமாக அவரை கடந்து சென்றுவிட்டேன் . பின்கட்டில் சூரியநாராயணன் இருந்தார். எதற்காக அழைத்தார் என கேட்டேன் . அவர் என்னிடம் முதல் நாள் நடந்தது என்ன என விசாரித்தார் . நடந்தவற்றை சொன்னேன் . ஆரம்பித்தது அவர்கள் எங்காள் அதை முடித்து வைத்தார்கள் என்றேன். அவசியமில்லாத அந்த மொத்த வன்முறையும் அனைவரும் பார்க்க நிகழ்ந்தது . பக்கத்து ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்க தவறியதால் ஏமாந்து போனதை சொன்னேன் . இன்று பஞ்சாயத்து வீட்டிலேவா என்றதற்கு இல்லை தொகுதியில் என்றதும் அதிர்வளிப்பதாக இருந்ததுசற்று நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்து அவர் பேசியது யாருடன் என புரிந்து வேகமாக அவர் அறைக்குள் நுழைந்தேன் . ஊரார் கூடி இருப்பதால் அனைவரும் புதுவைக்கு அவர் இயலாததால் என்ன செய்வது என அவர்கள் கேட்டதற்கு தலைவர்சிக்கல் ஒன்றுமில்லை அரிகிருஷ்ணனை அனுப்பி வைக்கிறேன் இரு தரப்பையும் அழைத்து நீங்களே சமாதனம் செய்து வையுங்கள்என்று சொன்னது காதில் விழுந்தது . நான் திகைத்து நின்றேன். அவர் மேற் கொண்டு ஒன்றும் சொல்லாமல் என்னை பார்த்து சிறு புண்ணகையுடன் வேறு வேலைகளை பார்க்கத் துவங்கினார்.


இதை எதன் பொருட்டு அவர் செய்திருந்தாலும் , ஒரு நிகழ்வின் பின்னியில் நிகழ்வது என்ன என்று புரிந்து தான் எடுக்க வேண்டியதை துணிவுடன் எடுக்க வேண்டியன் தலைவன். நிலமையை சீர் செய்ய பகத்தில் உள்ளவனை பலியிடுவது போல கீழ்மை பிறிதில்லை . தொகுதியில் நடைபெறும் பஞ்சாயத்துக்கு எனக்கான அழைப்பு கடைசிவரை வரவில்லை . வராது என எனக்கும் தெரியும். மாலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னை வந்து சந்தித்து வெற்றி களிப்பில் பேசி மாய்ந்தது எதுவும் என்னை அசைக்கவில்லை . மாறாக ஒரு சொல்லும் இன்றி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இடம் உருவாகி இருக்கிறது அடுத்து என்ன நிகழும் அல்லது நிகழ்த்த வேண்டும் என்பதே என் முன் மாபெரும் நிழலென நீண்டு கிடந்தது . இது ஒரு நம்பிக்கையை உருவாக்கி பலரை என்னுடன் வந்து இணையச் செய்ய வேண்டியது இனி நிகழலாம் அல்லது நிகழாது போகலாம் ஆனால் இந்நேரம் என்கெதிரான பலமிக்கவர்கள் ஒருங்கி இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொள்ளத் தேவையில்லை . எனக்கெதிரான செயலை அவர்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு நகைப்புடன் செய்து கொண்டே இருப்பார்கள் . அதைத்தான் கடந்த 40 ஆண்டு காலமாக சண்முகத்திற்கு செய்து கொண்டிருந்தனர் . இப்போது எனக்கு . என் வரையிலான குறுகிய வட்டத்தில் அவை எனக்கு புரியாது போகலாம் , ஒருகால் தலைவர் நிற்கும் இடத்திற்குள் நுழைந்து பார்க்க முடிந்தால் அவை தெளிந்து வரலாம் . அவரது வட்டத்தில் நுழைந்து பார்த்து நிகழ்ந்து கொண்டிருப்பதை அனுமானிப்பது என முடிவெடுத்தேன் . இருந்தாலும் அவற்றை என்ன என்று என் வாழ்நாள் முழுவதும் செலவழித்து நான் அறிந்து கொள்ள முடியலாம் ஆனால் எவ்வளவு கவனமாக இருந்தாலும் அந்த இடறல்களில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்பது மட்டும் தெளிவாகியிருந்தது .


அன்று மாலை தலைவர் சண்முகத்தை அவரது வீட்டில் சந்திக்க குபேர் காங்கிரஸின் தலைவர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் சிலர் வந்திருந்தனர். சிவராஜ் அரசியலில் தன்னை நிலைபடுத்திக் கொள்ள , தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர் . நடிகர் சிவாஜி ரசிகர் மன்றம் தொடங்கி , குபேர் காங்கிரஸாகி பின்னாளில் பிரெஞ்ச் இந்திய விடுதலை இயக்கமாக உருவெடுத்தது . நீண்ட நாட்களாக புதுவை சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 16 தேதி கொண்டாடுவது வரலாற்றுப் பிழை என்றும் அது நவம்பர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை மற்றும் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர் . அதன் தொடர்ச்சியாக சண்முகத்தை சந்தித்து மனு அளித்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர் அது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருப்பது . அதன் நீட்சியகயாக மீள மீள அந்த சந்திப்புகள் . சண்முகம் அந்த கோரிக்கை மீது கடும் காழ்ப்பு கொண்டவர். புதுவை சுதந்திரம் குறித்து தனது அழுத்தமான கருத்துக்களை தயக்கமில்லாமல் எப்போதும் முன்வைப்பவர். எந்த சமரசத்திற்கும் உட்படாமல் தன்னால் ஒப்புக் கொள்ள இயலாததை ஒருபோதும் ஏற்காதவராக அவரை பார்த்திருக்கிறேன்.தலைமை பண்பின் பல அடையாளங்களில் இது ஒன்று என நினைக்கிறேன் . அரசியலில்  தலைமை என்பது பல சமரசங்கள் சந்திக்கும் ஒரு புள்ளி. அதில் சமரசமில்லாதவராக ஒருவர் தன்னை நிறுவிக் கொள்வது சாத்தியம் என்றும் அதனூடக பயணப் பட இயலும் என என்னை நம்பிக்கை கொள்ள வைத்தவை இது போன்ற பல நூறு சந்தர்ப்பங்கள் . தில்லி தலைமையுடன் அந்த சமரசம் இல்லாத போக்கை அவர் முன்வைத்தார் என சொல்லமாட்டேன் . அது சாத்தியமில்லாதது மிக சிக்கலானது . ஆனால் அது ஒரு தேர்ந்த நெசவு போல. பல ஆயிரம் ஊடுபாவுகளால் ஆனது. அடிப்படையை இப்படி வகுத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறேன் . தனக்கானதை எப்போதும் இழக்காமலும் விட்டுக் கொடுக்காதலும் இருப்பது. நிகழ் அரசியலில் எல்லா சாத்தியங்களையும் எப்போதும் எதிர் நோக்குவது . அவைகளுக்கான கச்சாப் பொருளான தகவல்கள் எப்போதும் தில்லி தலைமையிடத்திலும் தன்னுடன் இருப்பதை பாதுகாப்பது . அரசியல் என்பதே தகவமைதலை அடிப்படையாக் கொண்டது என அதனது இறுதிக் காலம் வரை உறுதியாக நம்பினார் . மூப்பனார் மற்றும் வாழப்பாடியிடமும் அதே போன்ற ஒன்றை பார்த்திருக்கிறேன் . அரசியலின் அத்தனை சாத்தியங்களை கொண்ட அதன் நீள் முரணியகத்தின் மைய விசையில் தனக்கான இடத்தை நொய்மையாக ஆனால் உறுதியாக வைத்துக் கொண்டார். அது சமரசப்புள்ளியா என்றால் ஆம் இல்லை என்றால் இல்லைதான் . அது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது உணர மட்டுமே முடிவது . அதன் பெயர்தான்நல்ல அரசியல்என்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...