https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 டிசம்பர், 2020

அடையாளமாதல் * இளிவரல் *

 
ஶ்ரீ:பதிவு : 552  / 745 / தேதி 16 டிசம்பர்  2020


* இளிவரல்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 30.1996 களில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்று ஆட்சியை இழந்து உற்சாகம் குன்றி இருந்தது . அனைத்து பெருந் தலைவர்களும் கட்சியில் யார் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனபெருந்தன்மையுடன்ஒதுங்கி இருந்த நேரம் . நான் எனக்கான பாதையை தேர்ந்தெடுத்தது அப்போது தான் என்பதால் அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை , என்னை நோக்கிய ஒரு இளிவரல் சிரிப்பு அத்துடன் நான்ஒரு பிங்கலன்போல அவர்களின் கண்களுக்கு தெரிந்திருந்தால் அது வியப்பில்லை. பல வகைகளில் அது உண்மையும் கூட . அவர்கள்  விதைக்காலம் குறித்த கவலையற்றவர்கள், அறுவடையில் சரியாக செயல்பட்டு முந்தியிருந்து பிற யாருக்கும் எதுவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர்கள். அவர்களுக்கு மத்தியில் தலைவர் சண்முகம் சற்று வித்தியாசமா தெரிந்தார் . அவர் அமைப்பு மனிதர் என்பது முதல் காரணமாக இருக்கலாம் அல்லது கட்சி தலைவர் என்கிற பொறுப்பால் அவருக்கு வேறு வழிகள் இல்லாதிருக்கலாம். அரசியலில் அன்றைக்கு அது யாருமற்ற நிலம் போல. அதன் எதிர்காலம் மற்றும் எனது இருப்பு என்ன என்பதை தெரிந்தே அனைத்தையும் முன்னெடுத்தேன். எனக்கான பாதை திறந்து கொண்ட போது பூனையின் வசீகரத்திற்கு முன்பு நிற்கும் எலியைப் போல அதில் நுழைவது என்பது என்னால் தவிர்க்க இயலாதது . பிறர் அறுவடை காலத்திற்கு வந்து நிற்பதற்கு முன்பாக காலூண்றி விட வேண்டும் என்கிற பதட்டம் எழுந்தது எல்லாம் பின்னர் 1999 களில். 1996 களில் அது போன்ற எந்த உந்துதலும் பதட்டமும் இல்லை. நிகழ்வுகள் கோருகின்ற செயல்பாட்டை நான் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தேன் , அது ஒன்றை தொடர்ந்து ஒன்று என எழுந்து கொண்டே இருந்தது . அது எனக்கான இடத்தை நிறுவிக் கொண்டிருந்த போது எனக்கான எதிர்காலம் குறித்த திட்டமென ஏதும் இல்லை . தனித்து செயல் பட கிடைத்த வாய்ப்பு அதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்சி நிகழ்வையும் எனது பழைய நண்பர்களைக் கொண்டு ஒருங்கிணைக்க முயன்றேன். தொடர் கட்சி நடவடிக்கைகள் சண்முகத்திற்கு அவசியமாக , ஆசுவாசமளிப்பதாக இருந்திருக்க வேண்டும் . அதனால் எப்போதும் ஏதாவதொரு தடையை குறுக்காக வைப்பவர் அமைதியாக அனைத்திற்கும் அனுமதித்தார்.


பொதுவாக அரசியலில் அதிகமும் மெனக்கெடாத நிகழ்வு என்றால் அது கொடியேற்றுவது தான் சில கார்களில் மிகச் சிறிய கூட்டத்துடன் சென்று இறங்கி கொடியேற்றி விட்டு சென்று கொண்டே இருப்பது. ஒரு முப்பது பேர் தேரினால் அங்கு மட்டும் ஒரு சிறிய உரை அவ்வளவுதான். ஒட்டுமொத்த நிகழ்வைவும் மிக எளிதாக ஒருங்கிணைத்து விடலாம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று இருந்தாலும் அதில் சில மெனக்கெடல் மூலம் சில எல்லைகளை தொடமுடியும் என்பது எனக்கு பழைய அனுவங்கள் கற்றுத் தந்தப் பாடம் . முதல் நிகழ்வை எனக்கு மிக பலமுள்ள தொகுதியாக நினைத்த ஊசுடுவில் துவங்கினேன். அது தொகுதி முழுவதும் கொடியேற்றும் எளிய நிகழ்வு . சுமார் 24 நிகழ்வுகள் சிறியதும் பெரியதுமாக ஒருங்கப்பட்டருந்தன. காலை 9:00 மணிக்கு துவங்கியது இரவு 11:45 க்கு நிறைவுற்றது . அந்த நீண்ட பயணம் எல்லோரையும் திகைக்கச் செய்திருந்தது . அதன் வெற்றிக்கு பலர் காரணம். மிகச் சரியாக தொடர்புறுத்தியது மட்டுமே நான் செய்தது. எதிர் பார்த்ததைவிட தொண்டர் திரள் அதிகரித்ததால் நிகழ்வு பெரிய வெற்றியை கொடுத்தது . பல முக்கிய தலைவர்கள் ஒதுங்கும்படி நிகழ்ந்து விட எனக்கான அடுத்த கட்டம் திறந்துவிட்டிருந்தது . ஊர் பெரியவர் சிலர் ஒரு மோதலுக்கு வழி வகுத்து தங்கள் இடத்தை உறுதி படுத்திக் கொள்ள நினைத்தனர் . இது எப்போதும் மாறாத விதி பல ஆண்டுகளாக அதை சலிக்காமல் செய்து வந்தனர் . பிரச்சனை தலைவர் முன்னியில் தீர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை எப்போதும் போல முன் வைத்தனர் . உண்மையில் அது இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களான வளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அந்த ஊர் நிலமுடை சமூகப் பெரியவர்களுக்கும் இடையேயான பல ஆண்டுகளாக இருந்து வரும் உள்ளூர் சாதீய வன்மம். தலைவர் முன்னேபஞ்சாயத்துஎன்பது என்னை எரிச்சலடைய செய்வது . நிலைமையை கட்டுப்படுத்த எங்களை கண்டிப்பதைத் தவிர அவருக்கும் வேறு வழி இல்லை . ஆனால் ஊர் முன்பே இளைஞர் அமைப்பினர் கண்டிக்கப்பட்டால் , என் மீது புதிதாக எழுந்திருக்கும் நம்பிக்கைய முற்றாக குலைத்து விடும் பிறகு என்னால் அவர்களை ஒருபோதும் ஒருங்கிணைக்க முடியாது. ஊர் பெரியவர்கள் எதிர் நோக்குவது அதையே.


முதல் நாள் இரவு தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து சிக்கலின் பின்னனி குறித்து அவருக்கு சொன்னேன் . இது புதிதாக எழுந்தது அல்ல தொடர்ந்து இருபது ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பது . ஒவ்வொரு முறையும் இந்த சிக்கலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கண்ணன் மற்றும் பாலன் சண்முகத்திற்கு எதிரானதாக திசைத் திருப்பிக் காட்டி வெற்றி பெற்றிருந்தனர் . அதை ஒட்டி ஒவ்வொரு முறையும் எழும் வன்முறையும் அதை தொடர்ந்து காவல்துறையின் கைது பின்னர் நீதிமன்ற நடவடிக்கை என வருடக்கணக்கில் அது நீண்டு கொண்டே போவது . அமைப்பை முழுவதுமாக சிதைத்து விடுவது . அதை மீளவும் கட்டி நிறுவ செலவேறிய பொருளாதாரம் மற்றும் பெரும் முயற்சியையும் கோருவது . நான் இருக்கும் நிலையில் ஒரு சிறு சிக்கலும் என்னை மீள முடியாத ஆழத்தில் தள்ளிவிடும் என்று கூறினேன் . மேலும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சி என இரண்டையும் இணைக்க நான் எடுக்கும் முறச்சிகள் தோல்வியுறும் என்பதையும் அவருக்கு சொன்ன போது நான் வெறுப்பின் உச்சத்தில் இருந்தேன் .தலைவர் ஒன்றும் சொல்லாமல் மறுநாள காலையில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு படுக்கச் செல்லும் போது இரவு 12.30 மணிக்குமேலாகியருந்தது. பெரும் மனச்சோர்வுடன் வீடு திரும்பினேன் . வீட்டுக்கு முன்பாக பத்துக்கும் அதிகமானோர் காத்திருந்தனர் . அவர்களுக்கு என்ன சொல்வது எனத் தெரியவல்லை . நானே என்னை தொகுத்து கொள்ளாதவரை அவர்களுக்குச் சொல்ல ஒன்றுமில்லை . ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் குமுறி கொட்டித் தீர்ப்பதை பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே என்னால் இயன்றது . “தலைவரிடம் சொல்லியிருக்கிறேன் காலையில் பார்ப்போம்என்பது தவிர நான் சொல்ல ஏதுமில்லை . ஒரு நாளுக்குள் முழு சக்தியையும் இழந்திருந்தேன் . இது முடிவுக்கு வராத யுத்தம் இதில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது . நிலமுடைச் சமூகம் அதனது இருப்பை ஒரு போதும் இழக்காது என்பதால் அவர்களுக்கு எதிரான சண்டை எனது பாதையில் ஒரு பெருங்கல்லை போல எப்போதும் இருக்கப் போகிறது என்கிற எண்ணம் பற்றியெரியச் செய்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

நம் அமெரிக்க குழந்தைகள் 1 . ஜெயமோகன்

  அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர்...