https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 7 டிசம்பர், 2020

அடையாளமாதல் * பாவனை *

 


ஶ்ரீ:



பதிவு : 550  / 743 / தேதி 07 டிசம்பர்  2020


* பாவனை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 28.






பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்திற்கு எதிராக காரைக்கால் காங்கிரஸ் கட்சி தன் எதிர்ப்புகளை பெரிய அளவில் முன்னெடுக்கவல்லை , அல்லது  புதுவையை போல அவற்றின் செயல்பாடுகள் சிதறி இருந்திருக்கலாம் . எனவே அவர்கள் பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க மிகவும் தயங்கினர் , காரணம் அது மிகச் சிறிய நிலப்பகுதியை ஆண்டதால் அந்நிலப்பரப்புப் பற்றிய நுண் தகவல்களும் , அனைத்து முன்னனித் தலைவர்களின் பின்புலங்கலும் அதற்கு அத்துபடியாக இருந்தது, அதனால் தனக்கு எதிரான அனைவரிடமும் ஒரு தனிமனிதன் போல வன்மம்  கொண்டதாக இருந்ததைப் பார்க்க முடிகிறது . ஒரு சிறு எதிர்பையும் அதன் அடிப்படைக்கு சென்று நசுக்க தனது பிரபுக்கள் படையை பயண்படுத்த ஒருபோதும் தயங்கியதில்லை . ஒரு கட்டத்தில் பிரபுக்கள் எதிராக திரும்பிதும் சட்டம் என்கிற பாவனையில் அவர்களை அதே உக்கிரத்துடன் திருப்பி அடித்திருக்கிறது. நிர்வாகம் சார்ந்த உச்சகட்ட வன்முறையை 1946 துவங்கி 1955 வரையிலும் கூட அது தன் வழிமுறையாக வைத்திருந்தது . ஆதனால் சாதாரன மக்கள் மத்தியில் மீது மிகுந்த அச்சத்தை உண்டாக்கி இருந்தது . ஆரம்பம் முதலே அதை மிகத் தெளிவாக உணர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் பிரெஞ்ச் இந்திய அரசின் ஒற்றை அனுகுமுறையை எதிர்கொள்ள தங்களது அரசியலின் பொருட்டு  மிக நுட்பமான திருப்பங்களையும், நிலைப்பாடுகளையும் தொடர்ந்து மாற்றம் செய்தபடி பயணிப்பதை காணமுடிகிறதுகேரள கம்யூனிஸ்ட்களின் விடுதலை போர் தனித்துவமானது, புதுவை விடுதலை போராட்ட அமைப்பு  கம்யூனிஸ்ட் தனது போராட்ட வழிமுறையை அங்கிருந்து பெற்றிருக்கலாம். இந்தியா முழுவதும் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி உள்ளூர் நிலவரங்களை கருத்தில் கொண்ட பல ஊடுபாவுகளால் அமைக்கப்பட்டதும் மிக சிக்கலானதும் இருந்திருக்கிறது .அவற்றை கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு தனது தேசியக் கொள்கைகளை வகுத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லாதது. நுட்பமான நகர்வுகளை கொண்ட கம்யூனிஸ்டு கட்சியை காங்கிரஸ் தங்களது கொள்கைகளுக்கு விரோதமானது என்கிற இடத்தை அடைவதை புரிந்து கொள்ள முடிகிறது


புதுவை காங்கிரஸ் அமைப்பின் சில தலைவர்கள் இந்தியப் பிரதமரிடம் புதுவை நிலையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இந்திய அரசு நேரடியாக இதில் தலையிட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது ,ஆனால் நேருவின் பார்வை மாறுபட்டது . அவர் எதிர் கொண்ட சிக்கல் வேறுவகை தீவிரம் கொண்டவை அவற்றின் பின்னால் சர்வதேச வழிமுறைகள் உள்ளவை . ஆகவே விடுதலை நோக்கிய நகர்வு முதலில் புதுவையில் இருந்து முதலில் துவங்கப்பட வேண்டும் , பின்னர் அதை இந்திய அரசு அதை தங்கள் எடுத்துக் கொள்ள இயலும் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது . ஓரளவிற்கு அதை ஒட்டிய நிலைபாடு கொண்டவராக மாஹி பரதன் , மற்றும் ஏனம் காமிச் செட்டி இருந்தனர்  . அதன் காரணமாக அந்தப் பகுதிகள் புதுவைக்கு முன்பாக பிரெஞ்ச் நிர்வகத்திடமிருந்து இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது . காரைகால் மற்றும் புதுவை பகுதிகளில் அது கடைசிவரை நிகழவே இல்லை . புதுவை பிரதிநிதிகளுக்கு பிரதமரின் பதில் உகப்பாக இல்லை என்பதால் உளச்சோர்வு அடைத்தனர் . நேரு நேரடியாக ஈடுபட வேண்டும் என அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. நேருவுக்கு அரசாங்கத்தின் உள்துறை மூலம் யதார்த்தமும் அதன் பின்னல் உள்ள சிடுக்கும் சொல்லப்பட்டது . அவை பிரெஞ்சு இந்திய நிர்வாகம் அனைத்து தரப்பிற்கும் மத்தியில் வரிவான வலைப்பிண்ணலில் பல தனிப்பட்ட கணுக்களை கொண்டதாகவும் சிக்கல்கள் பல அடுக்குகளாகவும் இருந்தது . பிரெஞ்சு நாட்டிற்கும் அதன் இந்திய நிர்வாகத்திற்கும் இருந்த இடைவெளி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் ஒத்த கருத்து உருவாகாமல் பார்த்துக்கொண்டது . தனக்கு எதிரான விடுதலை அமைப்பை மூன்று அடுக்குகளாக பிரித்து வைப்பதில் வெற்றி கண்டது அல்லது அந்த பிளவைகளை உபயோகப்படுத்திக்கொண்டது .மேலும் புதுவையை சேர்ந்த  மற்ற பிராந்தியத்திற்கு ஒன்றுடன. ஒன்று மைய்ய தொடர்பு அறவே இல்லாமல் பார்த்துக் கொண்டது . காரைக்கால் பகுதியில் ஏறக்குறைய புதுவை ஒட்டிய அரசியல் நிலையே காணப்பட்டது போன்றவை நேருவிற்கு எடுத்து சொல்லப்பட்டது. 1947 இல் இருந்து 1954 வரை பின்னர் 1962 வரையிலும் கூட ஏற்பட்ட தடைகளுக்கு பிரெஞ்சு இந்திய நிர்வாகம் முதன்மை காரணமாக இருந்தது .


இவற்றை மீறி அன்று  ஓரளவிற்கு அபைப்புகளாக இருந்தவை மாஹி மற்றும் ஏனாம் பகுதிகள் புதுவை இணைவதற்கு முன்பாக இந்தியாவுடன் இணைந்தன . சந்திராநாகூரி் வங்காளம் மூலம் மத்திய அரசாங்கம் தன்வயப்படுத்திக் கொண்டது . விடுபட்டது புதுவையும் காரைகால் பகுதிகள் மட்டுமே . காமராஜர் புதுவை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் அரசுசூழ்தல் ஒன்றே புதுவையை இந்திய நிலப்பரப்புடன் இணைப்பதற்கான தீர்வு என பிரதமரிடம் சொல்லப்பட்டது். உள்ளூர் நிலவரங்களையும் அதன் எப்புறமும் நகர வாய்ப்பற்றத்தன்மையையும் பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் கையாளும் அரசு வன்முறை போன்றவை தில்லிக்கு சொல்லப்பட்ட பிறகு இந்திய அரசு அதை அரசு சூழ்தல் வழியை கையிலெடுத்தது. குபேர் போன்றவர்கள் தமிழகப் பகுதிகளுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். இந்திய அரசின் நிலைபாடு அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது . ஒத்துழைத்தால் அரசு ரீதியான சலுகைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என அவர்களுக்கு சொல்லப்பட்டது . புதுவையை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகி வருவதை குபேர் அறிந்து கொண்டார். கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதை புரிந்து கொண்டனர் . இந்திய அரசாங்கம் இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அறிவுறுத்தப்பட்டதும் . அதை அடுத்து காட்சிகள் மாறத் துவங்கின



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்