ஶ்ரீ:
பதிவு : 551 / 744 / தேதி 11 டிசம்பர் 2020
* மாமதவேழம் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 29.
பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் புதுவையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக என்ன என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை இந்திய அரசு அறிந்திருக்கிறது என்பதையும் , பிரான்ஸ் அரசுடன் ராஜாங்கப் பேச்சுவார்தை துவங்கிவிட்ட நிலையில் அதன் உள்ளூர் நிர்வாகம் நினைப்பது நடக்கப் போவதில்லை என்கிற செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி சொல்லப்பட்டப் பிறகு குபேருக்கு அதன் உள்சிடுக்குகளும் தனது எதிர்காலம் குறித்து தெளிவாக புரிந்திருக்க வேண்டும் . காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளவும் அவரின் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்கிற செய்தி நேருவிடமிருந்து குபேருக்கு சொல்லப்பட்டது. அதன் பின்னர் 1954 ஆண்டு மத்தியில் குபேர் புதுவை இந்தியப் பகுதிகளுடன் இணைய வேண்டும் என தனது கட்சியின் கொள்கையாக முன்வைத்தார் . தனக்கு எதிரானவர்களை எந்நிலையிலும் விட்டுவைப்பதில்லை என்கிற நிலைப்பாடுகளைக் கொண்ட பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் அதீத காழ்ப்புடன் குபேர் மீதும் பாய்ந்தது. அதே சமயம் பேரத்திற்கு இடம் வைத்து பிரெஞ்சு அதிகாரிகள் குபேர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர், ஆனால் மற்ற சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை அனைவர் பேரிலும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது . அதன்பின் காலனித்துவ நிர்வாகத்திற்கும் குபேரின் சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உறவுகள் விரைவாக மோசமடைந்தது . புதுவை இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக கொள்கையில் ஏற்பட்ட திருப்பத்திற்கு பிறகு பிரெஞ்சு இந்திய நிர்வாகிகள் குபேரின் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தனர். சில சமயங்களில் அவரது கட்சியினர் தாக்கப்பட்டனர். நிலமை தீவிரமடைய ஒருகட்டத்தில் குபேர் தான் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக தலைமறைவானர்.புதுவை அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம் என . ஏறக்குறைய புதுவை அரசியல் பாதை வகுக்கப்பட்டது இங்குருந்து என்பது வினோதம் . புதுவையின் வரலாறு முரணயகத்தின உச்சம் என இதை சொல்லாம் என நினைக்கிறேன்.புதுவை அரசியலில் பல வருடங்களாக நிகழ்ந்த முரணியகத்தின் விளைவுகள் வெளிப்படத் துவங்கியது இந்தப் பின்னனியில் . நிலைபாடுகளின் காரணமாக அரசியல் இயக்கங்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தும் உள்ளூர் நிர்வாக ஆதரவு பெற்ற குழுக்களுடன் மோதி எந்த ஒரு தீர்வை அடைய முடியாத நிலையை உருவாக்கி இருந்தது . இந்திய அரசாங்கத்தின் தேவையை பிரதமர் நேரு மற்றும் காமராஜர் முன்வைத்த போதும் அது இந்த முரண்களினால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.
தலைவர் சண்முகம் என்னிடம் சொன்னது இதைத்தான் . குபேர் புதுவையின் முதல்வராக அவர் முடிந்ததின் பின்னனி இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் . இங்கிருந்து குபேர் , சண்முகம் இருவரின் போதல் துவங்குகிறது . குபேரின் வீழ்ச்சியும் அதனால் தலைவர் சண்முகம் அடைந்த வளர்ச்சியும் ஒன்றை ஒன்று பிண்ணி பிணைந்தது.
இந்திய அரசாங்கம் குபேரிடம் பேசத்துவங்கிய பின்னர் புதுவை அரசியலில் பதட்டம் நிலவத் தொடங்கியதை ஊகிக்க முடிகிறது . முக்கியமான மூன்று நிகழ்வுகளை பார்க்க முடிகிறது . புறநகர் பகுதிகளில் பலம் கொண்ட காங்கிரஸ் இயக்கத்தால் மே 1954 17 அன்று நெட்டப்பாக்கத்தில் வெங்கிடசுப்பா ரெட்டியார் தலைமையில் இந்திய விடுதலை கவுன்சில் அமைக்கப்பட்டு புதுவையை அடுத்த கீழூரில் இந்தியாவுடன் இணையும் தீர்மானத்திற்கு அதரவாக சரித்திர முக்கியமான ஓட்டெடுப்பு நிகழ்தப்பட்டது . இரண்டு 1954 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதுவை நகர் பகுதிகளில் இருந்து வெளி வந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற வெகுஜனக் கூட்டத்தில் வி.சுப்பையா உரையாற்றியது .சுதந்திர இயக்கத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில், 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கம்யூனிஸ்டுகளால் திருபுவனை விடுவிக்கப்பட்டது. பிரெஞ்சு இந்திய சோசலிஸ்ட் கட்சி மற்றும் இணைப்பு காங்கிரஸுடன் இணைந்து அப்பகுதிக்கான தற்காலிக ஐக்கிய அரசு அமைக்கப்பட்டது. பின்னர் மிக மெல்ல அனைத்துவித ஒப்பந்தங்களின் அனிப்படையில் புதுவை இந்திய நிலப்பரபுடன் இணைக்கப்பட்டது . இந்திய பிரெஞ்ச் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து ஒன்று இப்படி சொல்கிறது . “புதுவை மக்கள் விரும்பும் வரை அது இந்தியாவடன் இணைந்திருக்கும்” என்று . ஜனதா ஆட்சி காலத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுவையை தமிழகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு தடையாக பல எழுந்தாலும் முன்னாள் பிரதமர் நேரு பிரெஞ்ச் அரசுடன் கொண்ட ஒப்பந்த ஷரத்து முக்கியமானதாக நின்றது என்பது கூடுதல் தகவல் .
அரசியல் ஈடுபாட்டில் நான் கண்டடைந்த இடம் என்று ஒன்று உண்டு இந்த பதிவுகள் மூலம் நான் என்கு என மீள மீள சொல்லிக் கொண்டிருப்பது அதைத்தான் .அங்கு நேர்ந்த கற்றலின் வாய்ப்பு . அவை கசந்தும் , சோர்ந்தும் போகாத உரையாடல் வழியாக தொடர்ந்து நிகழ்கிற ஒன்று . அது சாத்யமாகும் காலம் வரை கற்றல் எங்கும் எப்போதும் முடிவுறுவதில்லை. இதை எனக்கு கற்றுக் கொடுத்த தலைவர் சண்முகம் . ஆனால் அந்த கற்றலை ஒரு புள்ளியில் அவர் நிறுத்திக் கொண்ட போது அவருக்கு நன்கு பழகிய அரசியல் களம் என்கிற மதயானை அவரை விட்டு வைக்கவில்லை என்பதை பெரும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் .பல துறைகளில் விளையாட்டாக நுழைந்து அதில் ஏதாவது ஒன்றை நிகழ்த்தி அதில் வெற்றியடைய காரணமாகவும் அதேசமயம் அந்த ஒன்றில் பிழைத்திருக்க அதில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்காததும். வெற்றிக்கு பிறகு அங்கு மேலதிகமாக செய்ய ஒன்றுமில்லை என ஆகிப் போகும் சூழலில் தயங்காமல் வெளியேறியதற்கு எனக்கிருந்த படைப்பூக்க மனநிலை முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என இப்போது நினைக்கிறேன் .அது ஒரு தீர்ககமான மனநிலை . சொற்களை வாரி எடுத்து நிரப்பிக கொள்ள முயன்று மனதில் தோன்றிய உறுதியான தர்க்க ரிதியான வரியை கண்டடைய இயலவில்ல,அனால் அந்த நிலைக்கு பெயர் “படைப்பூக்கம்” என்கிற சொல்லை பின்னாளில் நான் ஜெயமோகனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.அதற்கு இடமில்லாத இடத்தில் என்னால் பொருந்தி இருக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக