https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 1 டிசம்பர், 2020

அடையாளமாதல் * நிலைப்பாடுகளால் உணரப்படுபவை *


ஶ்ரீ:பதிவு : 549  / 742 / தேதி 01 டிசம்பர்  2020


* நிலைப்பாடுகளால் உணரப்படுபவை ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 27.

1945 களில் துவக்கத்தில் இந்தியாவின் சுதந்திரம் தவிர்க இயலாதது என்கிற சூழல் எழுந்த அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய பிறகு , 1947 களில் கம்யூனிஸ்ட் கட்சி புதுவை சுதந்திரம் தொடர்பான தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தனது முதற்புள்ளிக்கு வந்து சேர்ந்தது , புதுவை அதனது மற்ற பகுதிகளுடன் இந்தியாவுடன் உடனடியாக இணையவேண்டும் என்கிற நிலையை எடுத்தது . இந்தியாவுடன் ஒருங்கிணையவும் அதுவரை பிரான்ஸின் நேரடி ஆட்சியலும் புதுவை இருக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணிகளை ஒருங்கிணைக்கத் துவங்கியது . புதுவை பிரான்ஸின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற நிலைபாடு அன்று நிலவிய இரு நிர்வாகத்திற்கிடையேயான பிளவை சுட்டுவதாக இருக்கலாம் . அந்த பிளவுகளுக்கு இடையே புதுவை பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்கிற புரிதலை அடையவேண்டி இருக்கிறது , அது விவாதத்திற்கு உரியது என்றாலும் பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்தின் ஒற்றைப்படையான செயல்பாடுகள் அவற்றையே சுட்டுகிறது என நினைக்கிறேன் . கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டால் அதனுடனான தனது உறவை முறித்துக் கொண்ட பிரெஞ்ச் நிர்வாகம் , சுதந்திரத்திற்கு ஆதரவான பேரணிகளுக்கு தடை விதித்து . கம்யூனிஸ்ட் கட்சியும் , இந்திய தேசிய காங்கிரஸும் அதன் கிளை அமைப்பான மாணவர் காங்கிரஸும் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது போராட துவங்கின . இந்திய சுதந்திரப் பிரகடனத்தை ஒட்டி புதுவையில் பிரெஞ்ச் நாட்டுக் கொடியை இறக்கி, இந்தியக் கொடியை ஏற்றுமாறு அனைத்து போராட்ட அமைப்புகளும் அழைப்பு விடுத்தன . கம்யூனிஸ்ட்களின் செல்வாக்குள்ள புதுவை நகரப்பகுதிகளில் அவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது , பிரெஞ்ச் நிர்வாகத்தால் குபேர் கட்டவிழ்த்து விடப்பட்டார். சுப்பையாவிற்கு எதிராக 1948 இல் பிரெஞ்சு நிர்வாகம் மீண்டும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இரண்டு வருடம் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையின் உச்சமாக 1950 சுப்பையாவின் வீட்டில் இருந்த இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எரியூட்டப்பட்டது . பிற நிர்வாகிகளின் வீடுகளும் தீக்கிரையாயின  . பிரெஞ்ச் இந்திய பகுதியில் அதன் ஆதரவாளர்களைக் கொண்ட சோசலிஸ்ட் கட்சி 1947 களில் உருவானது அதன் தலைவராக எட்வார்ட் குபேர் இருந்தார் . புதுவை விடுதலை போராட்டக் குழுக்களை நசுக்கும் வேலை அதன் பிறகே உச்சகட்டத்தை அடைந்தது . குபேரின் தலைமையின் கீழ், பிரெஞ்சு இந்திய சோசலிஸ்ட் கட்சி, இந்தியக் குடியரசுடன் இணைப்பது பற்றிய எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக்கியது . புதுவை சுத்ந்திரம் பற்றி அதன் காலனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார் . பொதுமக்களும் போராட்ட அமைப்பும் எந்தப் புள்ளியிலும் இணையவில்லை என்பதையும் அவர்களின் விருப்பத்தை பதிவு செய்ய எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் இது வெறும் அரசியல் அறிவிப்பு மட்டுமே . பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்தின் வன்முறைக்கு அஞ்சி பொதுமக்கள் அதை வெளிப்படுத்தப் போவதில்லை .


1948 நடைபெற்ற முனிசிபல் தேர்தலில் குபேரின்  ஆதரவாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் அறிவித்தது . தேர்தல்கள் மோசடி என பிற கட்சிகள் குறை கூறின. பிரெஞ்ச் நிர்வாகம் எந்த பதிலும் சொல்லவில்லை . மூன்றாண்டு கால நிர்வாகத்தில் குபேர் அடக்க முடியாதவராக உருவெடுத்தார் . 1951 பொது மற்றும் நகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிரெஞ்ச் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்த விடுதலை இயக்கங்களின் அரசியல் அமைப்புகள் தேர்தலை புறக்கணித்தன. குபேரின் பிரெஞ்சு இந்திய சோசலிஸ்ட் கட்சி மீண்டும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. குபேர் பொது நிர்வாக அமைச்சராகத் தொடர்ந்தார். இந்திய அரசு புதுவை அரசியல் நிலை குறித்து கவலை கொள்ளத் துவங்கியது. முதல் முறையாக புதுவை அரசியல் விவகாரம் தமிழக அரசின் முதல்வர் பக்தவச்சலத்திடம் கொடுக்க, அவர் காமராஜரை புதுவை காங்கிரஸ் அரசியல் கட்சி பொறுப்பாளராக நியமித்தார் . அதன் பிறகு காட்சிகள் மாறத்துவங்கின .புதுவை காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக ஆனவுடன் அவருக்கு கிடைத்த புரிதல் புதுவை விடுதலை போரை முன்வைத்த இயக்கங்களுக்கு இடையேயான குளறுபடிகள்புதுவை விடுதலை குறித்து கம்யூனிஸ்டுகளின் தொடர் ஊசல்நிலை . அன்று அது இந்தியா முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கிடையே பொதுப் போக்கு . அவர்கள் தங்களை காங்கிரஸிற்கு மாற்று என்கிற எண்ணம் இருந்ததுஎனவே அகில இந்திய காங்கிரஸ் அமைப்பிற்கு கம்யூனிஸ்டுகளின்  மனநிலை தெரிந்திருந்தது . அவர்களுடன் அரசியல் ரீதியாக தொடர்புறுத்தும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை  .


ரஷ்யாவுடன் நேருவிற்கு இருந்த நெருக்கமும்தொழிற்புரட்சியின் மீது நம்பிக்கையும் அதற்கு ரஷ்யா உதவக்கூடும் என கணக்கிட்டிருந்தார் . அதன் அடிப்படைக் காரணம் அவரது தொழிற் கொள்கை வடிவமைப்பாளர் . இலட்சியவாதத்தில் நம்பிக்கை கொண்ட காலம். நேரு ரஷ்யாவால் ஈர்க்கப்பட்டார் . சோவியத் ரஷ்யாவின் பின்னணி கொண்ட மகாலானோபிஸ் போன்ற பொருளியல் நிபுணர்கள் அவருக்கு அணுக்கமாக இருந்தார்கள் என்பது பிறிதொரு கோணம் . ஆகவே இங்கு நேரு ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நேரு உருவகித்திருந்தார் . இந்தியாவின் சர்வதேச நிலைப்பாட்டின் பொருட்டு  உள்நாட்டு அரசியலில் அவரின் போக்கு குறித்து புதுவை காங்கிரஸ் அமைப்பால் புரிதல் இல்லாமையால் அவற்றை சோர்வுற செய்திருந்தது .

புதுவை காரைக்கால் மற்றும் மாஹே காங்கிரஸ் பிரமுகர்கள் பாரதப் பிரதமரிடம் சொன்ன நிதர்சணமான நிலை நேருவிற்கு முதலிலேயே புரிந்திருந்தாலும் இந்திய அரசாக அவர் செய்யக்கூடியது குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது


அரசியல் வரலாறு அதன் தலைவர்களின் புரிதல்களில் இருந்தும் அவர்களின் விருப்பு வெறுப்புகளின் வழியாகவும் உருவாகி வருவது , தடம் பின் பாதையாக மாறுவதும் போல . போராட்டத்தில் பங்கு பெற்ற அனைவரும் விரும்பியும் விரும்பாமலும் அதில் பயணப்பட்டேயாக வேண்டி இருக்கிறது . வெகுசிலர் கடும் கோபத்துடன் அல்லது தாள இயலாத வருத்தத்துடன் அதில் பயணித்து வெளிவந்திருக்கிறார்கள் . தனது இளம் வயதில் தலைவர் சண்முகம் அத்துடன் ஒத்திசைய முடியாமையே அவரை உருவாக்கிய விசை . வயது மற்றும் பொருளியல் காரணமாக அவர் பொருட்படுத்த தக்கவராக அப்போது அறியப்படவில்லை  . காரைக்காலைத் தாண்டி அவருக்கு பெரிதாக யாரையும் தெரிந்திருக்கவில்லைஆனால் புதுவை பகுதிகளில் நிகழும் அரசியலும் அடக்குமுறையும் அதனால் ஒடுங்கிய விடுதலைப் போராட்ட அமைப்பின் மீது அவருக்கு கடும் கசப்பை உருவாக்கி இருந்தது . இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால அவரது உள வேகத்திற்கும் அரசியலுக்கும்  ஊர் பெரியவர்களான காங்கிரஸ்காரர்கள் தடையாக இருந்தனர்அப்போதெல்லாம் கம்யூனிஸ இயக்கமும் அதன் தோழர்களுமே அவருக்கு மிக அனுக்கமாக இருந்தனர் . காங்கிரஸ் அமைப்பிற்குள் சண்முகம் ஒரு கம்யூனிஸ்ட்டாக அறியப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...