ஶ்ரீ:
அடையாளமாதல் - 507
பதிவு : 507 / 693 / தேதி 29 டிசம்பர் 2019
* அரசியல் இருப்பு *
“ ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 21
அரசியல் - அது ஒரு அற்புதமான உளவியல் கூறுகளால் ஆனது , அதற்கு மேல் ஊழ் என பிறிதொன்று அமரந்திருக்கிறது. அதனால் எக்காலத்தும் அதை பாதையை ஒருவர் விளங்கிக் கொள்ள இயலாது .எனக்கு பால பாடமாக இதை எனது அரசியல் குரு சண்முகம் சொன்னது . மிகை செயல்பாட்டாளர்கள் எப்போதும் வெற்றியை அடைபவர்கள் என்பது ஒரு தோற்றம் மட்டுமே போல , அதன் பிறிதொரு முனையின் அர்த்தம் மாறுபட்டிருக்கும் வாய்ப்புகளே அதிகம் .
குபேருக்கு என்ன நிகழந்தது என முதலில் புரிபடவில்லை . அவருக்கு அது புரியப்போவதுமில்லை . காமராஜர் தனக்கு ஆதரவாக மாறுவார் அவர் நினைத்தது பிழையானது . காமராஜர் போன்றவர்கள் அரசியலை கடந்து தன்னறமென்ற ஒன்றை வைத்திருக்கிறார்கள் , அதனாலேயே தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் , அதிலேயே நிலைகொண்டு வாழ்ந்து மடிகிறார்கள் .
செயல்படுகையிலும் செயல்படாமையின் மேலே காலம் என் ஒன்று தனித்து நின்று கொண்டிருக்கிறது . அதை தனது ஆழ்மனதால் அறியும் ஒருவர் அதற்கு ஒத்திசையும் வழியை கண்டடைந்து வெற்றிபெறுகிறார்கள் பிறர் வீட்டில் பூச்சி போல அந்த விளக்கின் ஒளியில் வீழ்ந்து மடிகிறார்கள் . ஆனால் வழிகளை கண்டைவதும் ஒருவருக்கு எப்போதும் இயல்வதல்ல அவர்களுக்கும் நேரம் என்றும் ஊழ் என்றும் அது பிறிதொரு காலத்தில் அவர்களையும் பலிகொள்கிறது .
இன்று இயற்றுபவர் அதில் நாளை பலியாகும் ஒருவரே. காலம் அவருக்கு பிறிதொரு நேரத்தை வகுத்து வைத்திருக்கிறது .எந்த நிலையிலும் இந்தியரல்லாத ஒருவரை காமராஜர் ஏற்கத்தயாரில்லை . புதுவை அரசியலை மிகத் துல்லியமாக அவர் அறிந்திருந்தது அதற்கான காரணம் . குபேர் போன்ற ஒருவர் இந்திய இறையான்மைக்கு உடன்பட்டு அரசியலை ஒருபோதும் இயற்றமாட்டார் . மேட்மை மனப்பான்மையுடன் இருளுக்கே அனைத்தையும் கொண்டு செல்வார் என்பது காமராஜரின் எண்ணமாக இருந்தது .
காமராஜரின் அவதானிப்பு பொய்க்கவில்லை. குபேர் எளிதில் தோல்வியை ஏற்பவரல்ல . 1964ல் பதவியேற்ற ரெட்டியார் மூன்று வருடங்களுள்ளாக பதவி விலக வேண்டி வந்தது . தனது அரசியல் சூழ்தல் மூலம் ரெட்டியாரின் ஆட்சியை வெகு விரைவில் முடிவிற்கு கொண்டுவந்தார் . பிறிதொரு கலகம் மூலம் ரெட்டியார் இறக்கப்பட்டு , இரண்டு அமைப்பிற்கும் பொதுவாக மரைக்கார் முதல்வராக 1967ல் தனது இளம் வயதில் முதல்வராக பொறுப்பேற்றார் .உட்கட்சி சிக்கல் உச்சத்தில் இருந்தாலும் கட்சி அமைப்பை மட்டும் சரி செய்ய இயன்றது .
குபேர் 1963 தேர்தலில் ஆடிய ஆட்டத்தை 1968 ல் செய்ய இயலவில்லை . தனது ஆதரவாளர்களை திமுக வில் சேர்ந்தார் . பின்னர் தானும் திமுக வில் இணைந்தார் . பின்னர் அரதியலில் மனம் கசந்து முற்றாக வெளியேறினார் . அவரின் இருப்பாக பிறிதொரு ஆளுமையாக மரைக்காரின் அரசியல் துவங்கியது .
ஆரம்ப கடத்தில் ரெட்டியார் கண்ணனுக்கு சண்முகம் தெரிந்தாலும் அவர் அவரது அசையாத இருப்பை உணர்ந்திருந்தாலும் , சண்முகத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியாது என்பதால் தனது அரசியல் கருத்துக்களை ரெட்டியார் வழியாகவே செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருந்தது .அன்று சண்முகம் ஒரு ஆளுமையாக உருவாகி இல்லாத சூழலில் அரசியல் நுட்பமாண விஷயங்கள் பேசி புரிய வைப்பதற்கு அப்பாற்பட்டது .தர்கத்தால் அதை புரிந்து கொள்ளவோ, வைக்கவோ முடியாது .
இயற்கையில் சிக்கல்களுக்கு அஞ்சும் வெங்கிடசுப்பா ரெட்டியார் எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார் என்பது வினோதம் .பிரன்ச் அரசாங்கத்தை எதிர்த்து தனி ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டவர் என்பது கூடுதல் ஆச்சர்யம் . “எந்த முடிவெடுக்கவும் மிக தயங்குபவர் எடுத்த பிறகும் அதில் உறுதியாக இருப்பார் என சொல்லமுடியாது ” என்றார் சண்முகம் வெறுப்புடன் .
தான் துவங்கிய ஒரு வேலையை தன் விருப்பப்படி நிகழ்தி முடித்த திருப்தி காமராஜருக்கு . ஆனால் நிகழ்ந்தது என்ன என அவதானிப்பதற்கு முன்பாக ஆட்டமிழந்தார் குபேர்.தனது ஆரம்பகால அரசியலில் சண்துகம் வெங்கிட சுப்பா ரெட்டியிரை சாந்தே செயல்பட்டார் . வெங்கிட சுப்பா ரெட்டியார் எனது முது தந்தைக்கு நெருங்கிய நண்பர் என தந்தை சொல்லி கேட்டிருக்கறேன் ஓரிருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன் . முதல் பார்வைக்கு மிக வசீகரம் நிறைந்து மனிதராக உணர்ந்ததை நினைவுறுகிறேன்.
சிவந்த நிறம் . நடுத்தர உயர ,பருமன் வெண்மை தலைமுடி இளமஞ்சல் பட்டு ஜிப்பா , வேட்டி நெற்றியில் மத்தியில் குங்கும பொட்டு என பார்த்த முதல் கணத்தில் எவரையும் கவர்பவர். மிக நிதானமான பேச்சு .பாரத்தவுடன் மதிக்க சொல்லும் ஆளுமை . இவற்றின் மத்தியில் சண்முகம் சொன்னதை பொருத்திப் பார்த்தால் வேறொரு புரிதல் கிடைக்கலாம் .