https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

அடையாளமாதல் * ‘உதறிகளின்’ தொகுப்பு *

 



ஶ்ரீ:



பதிவு : 686  / 875 / தேதி 05 அக்டோபர்  2025



* ‘உதறிகளின்’ தொகுப்பு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 84.







கட்சி தன் முழுமையான அதே சமயம் தவிற்க இயலாத எதிர்பை முன் வைக்க வேண்டிய களங்கள் பல உண்டு . மாபெரும் எதிர்ப்பு என்கிற திரள் மக்கள் கூடும் போராட்டங்கள் மக்கள் கவனத்தை பெற திரட்டப்படுவது. திரண்ட சில நாட்களில் அவை மறக்கவும் படுகின்றன. ஆனால் உட்கட்சி விவகாரங்களில் அப்படிப்பட்ட மாபெரும் கூட்டத்தை ஒருங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. அது தில்லி கட்சித் தலைமைக்கு ஒரு செய்தியை தொடர்ந்து வலியுறுத்தி அதை கடந்து செல்லாமல் அதனுள் உறையும் முழு செய்தியையும் அதன் பின்புலத்தை அவதானிக்க சந்தர்ப்பம் அளிப்பது. நீண்ட காலம் கோருவது என்றாலும் உண்மை கள நிலவரத்தன்மை திரிபடைந்தே அங்கு முன்வைக்கப்பட்டிருகிறது என்பதை மறுக்க முடியாமல் நிறுவ வேண்டும் என திட்டமிட்டேன்


வல்சராஜின் அதே பாணியில் அவரை எதிர்க்கும் செயல்பாடுகள் புதுவையில் துவங்கப்பட்டு தொடர்ந்து பெருகி நகர்ந்து கொண்டே இருந்து அதை தில்லியில் கொண்டு சேர்க்க வேண்டும். பின்னர் மெல்ல பிற கட்சி முக்கிய உறுப்பினர்களை இணைத்து கொண்டே செல்லும் போது அது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்ததை கொடுக்கும். அவர்களுடன் சுமூக உறவிற்கான உத்திரவாதங்களை கொடுக்கும் உரையாடல்கள் துவங்கிவிடும். அதன் வீரியத்தை தில்லியில் வென்றெடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தகவல் பரிமாற்றம் அனைத்து புள்ளிகளில் மிக தாமதமாக அல்லது தேவையற்ற சூழலில் சென்று சேரும் அல்லது சேரவே சேராது. அவற்றை சட்டென சென்று சேர இந்த யுக்தி வேலை செய்யும். பொதுவாக கட்சி அரசியலில் கள உண்மை நிலை மிக குறைந்த சதவீதமே கருத்தில் கொள்ளப்படும். அதை தில்லியில் எதிர்க்கும் ஒருவர் அதற்கு பின்னால் உள்ள அதன் எதிர்கால அரசியல் ஒன்றை நிகழ்த்த அவை முயற்சிக்கப்பட்டதாக கூட சொல்லி நிறுவிவிட முடியும். வட இந்திய பெரிய தலைவர்கள் வழியாக தாங்கள் உருவாக்கி வைத்துள்ள தொடர்பு வலையை அதற்கு பயன்படுத்துவார்கள்.


தெற்கில் கேரள கருணாகரன், தமிழக மூப்பனார்,ஆந்திரா சென்னா ரெட்டி கர்னாடக ஆஸ்கார் பெர்னாட்டஸ் ஜனார்தன பூஜாரி போன்றவர்களும் அந்த தொடர்பு வலையை இயக்கக் கூடியவர்கள். காங்கிரஸ் அமைப்பிற்குள் தலைமை நிர்வாக தலைவர்களுக்கு அணுக்கர்கள் மற்றும் நிர்வாகத்திற்குள் வராத தலைவர்கள் என இரண்டே அணிகள் உள்ளது . நிர்வாக ரீதியில் ஒன்றை செய்ய முயன்ற தடையை அடைவது அந்த நிர்வாகத்திற்குள் வராத இரண்டாம் அணிகளின் தலையீடு நிகழும் போது ஏற்படும் . அதை அவர்களுக்கு குள்ளே இருக்கும் மேல் கீழ் அடுக்குகள் வழியாக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்பத்திரிக்கையில் வந்த செய்திகளை ஒரு கதை சுருக்கம் போல முன் வைத்து அதற்கு முன்னும் பின்னுமான அதே பத்திரிக்கை செய்திகளை ஆதராமாக கொண்டு ஆதரவாக அல்லது அதன் மீத்தான எதிர்ப்பை முறியடிக்க முயற்சிக்கலாம். இரண்டாம் அணியினர் ஒரு எல்லைக்கு அப்பால் ஒரு சிக்கலை தொடர்ந்து கையாள மாட்டார்கள். அவர்களை அந்த கட்டத்திற்கு நகர்த்த இயன்றால் விஷயம் ஏறக்குறைய வெற்றி. மாநில செய்திகளை அடுக்கும் முறையில் அதற்கான தீர்வு தெளிவாக சொல்லப்பட்டு விடும். அதன் பின் அதன் மீதான விவாதம் மூலம் மட்டுமே அதை கடந்து செல்ல இயலாத சூழலை உருவாக்கிவிட முடியும் . அதற்குள் புதுவை மற்றும் தில்லியில் முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவான அணியை உருவாக்கிவிடலாம் என திட்டமிட்டேன். ஒரு மாநில முதல்வரின் அணியாக செயல்பட தில்லி இரண்டாம் நிலை தலைவர்கள் எப்போதும் விரும்புவார்கள்


காங்கிரஸ் கட்சி அரசியலில் விளையாட விரும்புபவர்கள் இந்த இரண்டையும் இணைக்கும் அதிகார மைய தலைவர்களை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு தனி குழு. பங்கு வர்த்தகம் போல ஒவ்வொரு முறையும் இன்று தில்லி மேலிடத்தில் யாருக்கு? என்ன செல்வாக்கு? என கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும் அதற்கான தரகர்கள் பல மாநிலங்களில் உண்டு. இதில் வலிமை மிக்கவர்கள் தில்லி அரசியல் தரகர்கள். நான் தரகர்களை ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் பயன்படுத்துவதில்லை. அவர்களை முற்றும் சார்ந்திருந்தால் நமது திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த இடமளிக்க மாட்டார்கள் . நம்மை எப்போதும் பரபரப்பிற்கு மத்தியில் வைக்க முயல்வார்கள். அவர்கள் நினைக்கும் திசைக்கு நம்மை செலுத்த முயற்சிப்பார்கள் அது நிதானமான ஆட்ட விதிகளுக்கு முற்றும் எதிரானது


கட்சி ரீதியிலான முடிவுகளுக்கு பொதுவாக எதிர்ப்பை வெளிப்படுத்த பெரும் திரள்களை திரட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை

தில்லி தலைமை புதுவை வாக்காளர்களுக்கு இணையானதை விட பல்லாயிரம் மடங்கு திரளை இந்தியா முழுவதும் பார்த்திருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த அந்த போராட்ட முறை மிக விரைவில் தன் சக்தியை இழந்து விடும். அதை தொடர்ந்த நடத்த முடியாது. தன்னியல்பாக கூடும் கூட்டத்திற்கு கூட அதன் எதிர்ப்பை முன்வைத்து விட்ட நிறைவை அடைந்த பின் அது மெல்ல தனது ஆர்வத்தை இழப்பதை பார்த்திருக்கிறேன். கருத்தியல் செயல்பாடுகளை தொடர் முன்வைப்பும் வைக்கப்பட்ட கருத்திற்கு மறுப்பும் என அதற்கான மாற்று திட்டம் அதன் தலைவர்கள் வழியாக தொடர்ந்த சொல்லிக் கொண்டே இருக்கும் வழிமுறை மிக எளிது அதே சமயம் பலன் தரக் கூடியது. அங்கு பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. அது ஒரு விவாதம் போல ஒரு முறை மறுத்த பிறகு அதையே மீளவும் வைக்க முடியாது. இந்த செயல்முறை பத்திரிக்கை மற்றும் தொடர் மனுக்கள் வழியாக அமைப்பு ரீதியில் முன் வைப்பது. தினசரிகளின் செய்தி துணுக்கை வெட்டி ஒட்டி அதை கடிதம் வழியாக வெளிப்படுத்த படும் போது அது மிக சரியாக செய்று சேர்ந்துவிடும். தொடர் போராட்டங்களை ஆங்கில பத்திரிக்கைகளால் ஒரு போதும் நிராகரிக்க முடியாது. அதன் தலைப்பை நாம் முடிவு செய்ய இயலாது என்பதுடன் அவை பெரும்பாலும் 100 அல்லது 200 வார்தைகளுக்கு மேல் வருவதில்லை. PTI மற்றும் UTI செய்தி நிறுவனங்கள் ஏறக்குறைய அகில இந்திய அலவில் அவற்றை வெளியிடுவதால் நாம் தில்லிக்கு அனுப்பும் முன்பாக அவர்களிடம் சென்று சேர்ந்து விடும். தமிழ் பத்திரிக்கை தலைப்பை நாம் முடிவு செய்ய இயலும் என்பதுடன் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பில் மிக நுண்ணிய தகவல்களை இணைக்க முடியும். அவை ஏறக்குறைய ஆங்கில பத்திரிக்கை செய்திகளுக்கு தரவுகள் போல செயல்படும். தில்லி தலைமையிடம் பத்திரிக்கை செய்திகள் போல செல்வாக்கு செலுத்துவது பிறிதில்லை


இந்தி பேசாத மாநிலங்கள் மொழியின்மை காரணமாக ஆங்கில பத்திரிக்கை செய்திகளை பெரிதும் நம்புவது. அதில் வரும் செய்தியின் நம்பகத்தன்மை காரணமல்ல உயர் நிலை தலைவர்களின் கண்களில் அந்த செய்தி பட்டிருக்கும் வாய்ப்பு பற்றிய அச்சம் அதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல யாராலும் இயலாது. பிறிதொன்று ஆங்கில பத்திரிக்கைகள் விரிவான செய்திகளை அளிப்பதில்லை என்பதால் அதன் தலைப்புகள் மட்டுமே அவர்களால் வாசிக்கப்படும். ஒன்று நினைவில் நிற்கும் அல்லது அதை கடந்து சென்றுவிடுவார்கள். எனவே தலைப்பு பற்றிய புரிதல் மிக அவசியம். ஒரே நாளில் அனைத்து செயதிகளும் வராமல் பார்த்துக் கொள்வோம். சிறிய சிறிய உதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். பல தொகுதி தலைவர்கள் செய்ய வேண்டியது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருப்பார்கள். அது அவர்களின் களம் என ஆகும் தங்களை பற்றிய செய்தி அதில் வெளியாகும் என்பதால் மிக வீர்யமாக அதை செய்து முடிப்பார்கள்.


பத்திரிக்கையில் எந்த விதமான தலைப்பு வர வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்து இருப்போம். ஒவ்வொரு தலைப்பு செய்தியும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுகிற போது மொத்த செய்தியும் அதன் சாரமும் தில்லிக்கு தெரியப்படுத்த பட்டிருக்கும். இது தலைவர் சண்முகத்திடம் இருந்து கற்றது. அதை இணைக்கும் இடத்தில் உள்ளவர் மட்டுமே அறிவார் அந்த தலைப்பு செய்திகள் வழியாக சொல்லப்படும் உண்மை உணர்வு நிலை என்ன என்று. நான் அதை ஒருபோதும் பொய்யாக வெளிப்படுத்தியில்லை. இதில் பொய் செய்தி மிக இயல்பாக ஒன்றோடு ஒன்று பொருந்தாது பிசிறி நிற்கும் என்பதால் அது வெளுத்துவிடும்


தொடர் பத்திரிக்கை செய்திகள் போல அழுத்தம் தரக்கூடிய எதிர்வினை பிறிதொன்றில்லை. தேவை தில்லியின் இன்றைய மனநிலை பற்றிய புரிதல் . அது பிற மாநிலங்களில் இது போன்ற சிக்கலை எப்படி வகைபடுத்துகிறது. எந்த கருத்தியலை கொண்டு அணுகுகிறது என்கிற கண்டடைதல் அதற்கு இணையான ஒன்றை அகில இந்திய அரசியலில் இன்று நிகழ்ந்து கொண்டிருப்பதுடன் அணைத்து இங்கு புதுவையில் நிகழ்வது மாற்றத்திற்கான அரசியல் அல்ல என புரிய வைப்பது சற்று எளிது . தில்லி அடுத்தடுத்த சலியாத கடித தொடர்பு மூலம் இங்கு தொடர்நது நிகழும் விவாதம் முடுக்கிவிட பல வழிகள் இருக்கின்றன. இல்லாததை உருவாக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும் ஆனால் நிஜமான பலத்தை மிக எளிதாக துல்லியமாக வெளிப்படுத்த அதீத திறமையும் அனுபவமும் தேவையாகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...