https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 24 அக்டோபர், 2025

அடையாளமாதல் * வசீகரிக்கும் தந்திரம் *

 



ஶ்ரீ:



பதிவு : 692  / 881 / தேதி 24 அக்டோபர்  2025



* வசீகரிக்கும் தந்திரம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 89.






வல்சராஜ் தலைமையில் நிகழ்ந்த முதல் மாநில நிர்வாக கூட்டத்தில் பொதுச் செயளாலர் என்கிற முறைமையில் முழு அளவிலான நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை எனது முதல் தீர்மானமாக வைத்தேன். அதன் மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான நிர்வாக அமைப்பை உருவாக்கும் ஒரு வரைவு தயாரிப்பது பற்றியதாக முன்வைக்கப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்தில் உருப்படியாக நிகழ்த்த வேண்டிய ஒரு பேசு பொருள் மற்றும் கூட்டத்தின் மைய நோக்கம் அது. முறைப்படி மாநில நிர்வாகிகளை மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்து அதன் தொகுதிளை அவர்களிடம் கையளிக்க வேண்டியது. புதிய நிர்வாகிகளில் பலரை எனக்கு அறிமுகமில்லை என்பதால் யார் யார் எ‌ந்த தொகுதி என நிர்ணயம் செய்து பின்னர் புதுவையை சேர்ந்த 30 தொகுதிகளுக்கு 6 பேர் நியமனம் செய்யலாம் என்கிற கருத்தை அனைவரும் ஏற்ற பின்னர் யார் எ‌ந்த பகுதியை பார்த்துக் கொள்கிறார்கள் என்றதற்கு அங்கு மயான அமைதி நிலவியது யாரும் எந்தப் தொகுதிக்கும் பொறுப்பேற்ற தயாராக இல்லை. காரணம் யாருக்கும் அவரவர் சொந்த தொகுதியை பற்றியே முழுமையாக தெரியாது. வேறு வழி இல்லாததால் நான் அனைத்து தொகுதிகளிலும் செய்ய வேண்டிய அடிப்படைகளை செய்த முடித்த பிறகு அது பற்றி மற்றொரு நிர்வாக கூட்டத்தில் விவாதிக்கலாம் என சொன்னபோது யாரும் ஏதும் சொல்வதற்கில்லை என முடிவு செய்யப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. அதற்கான கூட்ட தீர்மானங்களை பதிவுகளை செய்து வல்சராஜிடம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து அந்த ஆறு மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாக ஒரு தகவல் வல்சராஜ் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பப்பட்டு அதை பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொண்டது . அது நிர்வாக கூட்ட தீர்மானத்திற்கு எதிரானது. அமைப்பிற்குள் எனக்கெதிரான அரசியலில் நிகர் ஆட்டம் ஒன்றை முன்னெடுக்க முயன்று கொண்டுருந்தனர். அவர்கள் பெயரளவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் செயல்படப் போவதில்லை. அதே சமயம் அவர்களாக அந்த பொறுப்பில் இருந்து விலகும் வரை அல்லது நீக்கப்படும்வரை அந்த் பொறுப்பை நான் ஏற்க முடியாது அதுவரை எந்த திசைக்கும் நகராது அந்த தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்படும் என்பது நடைமுறை சிக்கல். எனக்கெதிராக அந்த கூட்டத்தில் பிறரை ஒருங்கு திரட்டி எனது அதிகாரத்தை நீர்க்கச் செய்ய திட்டமிட்டு அந்த கூட்டத்தில் நான் எனது இருப்பை உறுதி செய்த போது தங்கள் முயற்சியில் தோற்றிருந்தனர். இப்போது வேறு வழிகளில் அதை முயற்சிக்கிறார்கள் என புரிந்தது  அந்த சூழலையும் அதில் எனக்கான அனுபவங்கள் பற்றி பல பதிவுகளில் முன்பே சொல்லியிருக்கிறேன்


தனிப்பட்ட முறையில் வல்சராஜுடன் நல்ல நட்பு இருந்தாலும் அவரது தனிப்பட்ட அரசியலில் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாக அனுகுமுறையில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. அவருடன் முரண்பட்ட சூழல்களை அவரிடம் நேரடியாக சொல்ல தயங்கியதில்லை. சண்முகத்திற்கு அடுத்தபடியான தேர்ந்த அரசியல்வாதியாக நான் மதிப்பிட்டவர் அதன் அடிப்படையில் நான் அவரை அரசியலில் தவிர்க்க இயலாதவராக அறிந்திருந்தேன் . அந்த நிலைப்பாட்டில் இன்றுவரையிலும் மாற்றமில்லை. கட்சியில் அவருக்கு அப்பால் இன்னொருவரை அடையாளம் காண என்னால் இயலவில்லை. 2001ல் முதல்வர் பதவியில் இருந்து சண்முகத்தை வெளியேற்றும் வல்சராஜின் முயற்சிகளை எந்த உணர்வும் இன்றி அன்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. வல்சராஜின் பக்கம் உள்ள நியாயம் என அவர் என்னிடம் சொன்னவை எல்லாம் நான் முன்பு அறிந்தவை ஆனால் தலைவர் சண்முகத்திற்கு வேறு ஒரு கோணம் இருக்கும் என அறிந்திருந்தேன் . இங்கு வல்சராஜ் முதல்வருக்கு எதிராக தன் கருத்தென சொன்னவை பற்றி எனக்கு மாற்றுக் கருத்திருந்தாலும். வல்சராஜ் விஷயத்தில் தலைவரின் முடிவு எனக்கு உடன்பாடில்லை. தில்லி சாணக்கியாபுரி விருந்தினர் இல்லத்தில் முதல்வர் சேம்பரில் பல மணிநேரம் அவரின் முடிவை மாற்ற போராடினேன். அது வல்சராஜ் மீதான ஆதரவு என்பதைவிட அந்த முடிவு அவரின் எதிர்காலத்தை அழிக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் அவரின் எண்ணத்தை மாற்ற முயன்று கொண்டிருந்தேன்


சண்முகத்திற்கு எதிராக வல்சராஜ் கொண்டிருந்த வன்மத்தை அதிலிருந்து உருவாகும் அவரது திட்டம் பற்றிய முழ தகவல் என்னிடம் இல்லாமலிருந்தாலும் அவரது ஆற்றலை அறிந்திருந்தேன். அப்போது நான் பாரத்துக் கொண்டிருந்த தலைவர் சண்முகம் என்கிற ஆளுமை ஒரு பழிவாங்கும் இயந்திரம் மட்டுமே அதன் முதல் பலி வைத்தியநாதன். தனது தொகுதியான நெடுங்காட்டை சேர்ந்த பண்ணீர்செல்வத்தை முதன்மை செயளாலராக கொண்டு வைத்த போதே அவரின் முடிவு தொடங்கிவிட்டது . கட்சி அரசியலில் வென்ற தலைவர் சண்முகம் முதல்வர் சண்முகமாக அரசியலில் தோற்க துவங்கியிருந்தார். அவரின் பழிவாங்கும் அரசியலை அங்கிருந்து ஒரு நீண்ட கோடு கிழித்தால் வல்சராஜுடன் அது நிறைவடையும். வல்சராஜ் அவரின் இறுதி வெட்டுக் காய் அவருக்கு பிறகு பிறிதொருவரை வீழ்த்தும் வாய்ப்பு முதல்வருக்கு கிடைக்காது என உறுதியாக எண்ணினேன்அதேசமயம் நான் ஏன் வல்சராஜின் முதல்வர் ரங்கசாமிக்கு எதிரான அரசியலை நகர்வை எதிர்க்க வேண்டும் என்கிற முடிவிற்கு வந்ததன் பின்னால் இரண்டு புள்ளிகள் உள்ளன. ஒன்று இந்திய ஜனநாயக அமைப்பில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதை கடந்து ஆட்சிக்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனால் கட்சிக்கு ஒரு மெல்லிய தொடர்பு இருப்பது போன்ற மாயை வல்சராஜின் செயல்பாடுகளால் முற்றும் சிதைந்து விடும். நான் என்ன ஊகித்தேனோ அதுவே இறுதியாக நிகழ்ந்தது. இரண்டு அரசியல் காய் நகர்த்தலில் வல்சராஜ் வெற்றி பெற்றால் சட்டமன்ற அதிகாரத்தில் அவர் நினைத்து நிறைவேறிவிடும். ஆனால் அதிகாரம் ஒற்றைப்படையானதல்ல கட்சி அரசியலில் அது நிகர் செய்யப்பட வேண்டும். அதற்கான எந்த கருவியும் அல்லது அதை செய்து கொடுக்கும் உள்கட்டமைப்பு வல்சராஜிடம் இல்லை என்பதைவிட அதை உருவாக்கிக் கொள்ள அவர் ஒருபோதும் தயாரில்லை. ஐந்து வருடம் நிறைவுவிற்கு பின்னால் அவர் அடைந்த பலன்களுடன் அவர் மாஹே சென்று சேருவார் ஆனால் அவரின் முடிவால் அமைப்பில் உருவாக்கிவிட்ட வெற்றிடத்தில் இருந்து எழும் பூதம் மிகப் பெரியது அது முழு அமை்பபை பலி கொள்ளாது அமையாது. இறுதியில் அதுவே நிகழ்ந்தது. காமராஜர் காங்கிரஸில் இருந்து விலகிய போது கட்சியில் நிகழ்ந்த மிக ஆழமான பிளவிற்கு இணையாக ரங்கசாமி விலகிய போது நிகழந்தது. மேலிருந்து வேர் வரையிலான பிளவு மீண்டும் துளிர்க்கும் வாய்பின்றி அது நிகழ்ந்தது. இதுபோன்ற மிக மோசமான விளைவை வல்சராஜ் நகழ்த்தக் கூடும் என ஊகித்திருந்தேன் சற்றுப் மாற்றமில்லாமல் நான் நினைத்ததை விட இந்த பிளவு மிக ஆழமானது. கட்சியில் இருந்து தன்னுடன் இணைந்த தொண்டர்களின் எதிர்பார்ப்பை ரங்கசாமி நிறைவேற்றினாரா என்றால்இல்லைஎன்பது தான் அதன் பதில். அது வேறு ஒரு தளத்தில் கேட்கப் படவேண்டியது.


சண்முகத்தை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற முதன்மை காரணமாக இருந்த வல்சராஜ் அதை மீளவும் செய்து பார்க்க முடிவு செய்திருந்தார். இம்முறை வேறு காரணங்கள். ஒரு சிறு கூறு அதில் உண்மை இருக்கிறது. இன்றளவும் முதல்வர் ரங்கசாமிக்கு அதிகார பகிர்வு குறித்து கவனமில்லாதராக பிற அமைச்சர்களின் துறையில் தனது கருத்தை அவர்களின் இடத்தை பற்றி கொள்ளாது அழுத்தமாக முதன்மையாக வைப்பவராக இருக்கிறார். அது அமைச்சர்களின் தன்னம்பிக்கை குலைக்கும். கூட்டு பொறுப்பு தத்துவங்களை அவர் ஏற்றதாக தெரியவில்லை. அதற்கு அவரின் கோணம் என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை. இந்த சூழலில் வல்சராஜ் போன்ற தனியாளுமைகள் அவற்றை எதிர்க்க முடிவு செய்தது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் அரவணைக்கும் கட்சி செயல்பாடுகளில் நம்பிக்கையுள்ள ஒருவர் சண்முகம் அவரது வீழ்ச்சி நிகழ்ந்த பிறகு மிக குறுகிய காலத்திற்குள் அதற்கு மேலதிக அழுத்தம் கொடுக்கக் கூடிய பிறிதொரு முயற்சி அமைப்பை முற்றாக சிதைக்கும் என நினைத்தேன். 2000 களுக்கு பிறகு புதுவையில் முதல் முறையாக பல தலைமைகள் நியமிக்கப்பட்டு அடுத்தடுத்து விலகியதை கொண்டு அடுத்த தலைமை என ஒன்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்படவில்லை. தில்லி தலைமை மீதிருந்த ஆழ்நத கசப்பினால் சண்முகமே கூட தனது ஆளுமையை இழந்திருந்தார் என்றே தோன்றியது என்றால் ஆளுமை என்பது என்ன என ஆழ்ந்த கேள்விக்கு பதில்லை.


இரண்டாவது முறையாக வல்சராஜ் முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை வீழ்த்தும் முயற்சி நடைபெறக் கூடாது என தீர்மானமாய் இருந்தேன். இதை முயற்சிக்க அதுவே இறுதி வாய்ப்பு என்பதால் அதன் பொருட்டு ரங்கசாமியை சந்தித்த போது அவர் எந்த தயக்கமும் இல்லாமல் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார். தில்லி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அம்மைச்சரவை கூடத்தில் நான் அவரிடம் பேச துவங்கும் முன்பு அவருடன் எப்போதும் இருக்கும் வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்த்தி அங்கிருப்பது அனைத்திற்கும் எதிரானது. நான் காந்திராஜிடம் அவரை வெளியேற்றும் வரை பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றேன். அவர் முகம் இருண்டது. அவர் கிருஷ்ணமூர்த்தியை அஞ்சினார். அமைச்சரவையின் அந்த பெரிய அறை அதன் பெரிய நீள்வட்ட மேஜையில் ரங்கசாமி ஒரு புறம் அவருக்கு பின்னால் நின்றிருக்கும் கிரஷ்ணமூர்த்தி அதன் எதிர்புறம் நானும் காந்திராஜும் அமர்ந்திருந்தோம். அபத்தமான அமைதி நிலவியது


நான் கிருஷ்ணமூர்த்தியிடம்அண்ணே கொஞ்சம் வெளியே இருங்கள்என்ற மோது அவர் அதிர்வதை பார்க்க முடிந்தது நம்பாமல்என்னையாஎன்றார். நான் உறுதியாக அவரிடம்ஆமாம்என்றேன். கண்களில் கடும் கோபமும் வெறுப்பும் கொப்பளிக்க வெளியேறினார். என்மீது அதைவிட பல மடங்கு கோபத்தில் காந்திராஜ். அரசியலில் சமரசம் என்பது தவிர்க்க இயலாது. அதை ஏற்றே முன்செல்ல முடியும் என்பது நான் அறிந்தது ஆனால் யாருடன் அந்த சமரசம் என்பதுதான் கேள்வி. அரசியல் இடைத்தரகர்கள் போல செயல்படுபவர்கள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களுடனான சமரசம் தற்கொலைக்கு நிகரனாது. கிருஷ்ணமூர்த்தி வெளியேறுவதை காந்திராஜ் பதைப்புடன் பார்த்திருக்க ஒரு சொல்லும் இல்லாமல் ரங்கசாமி அமர்ந்திருந்தார். அந்த பிரம்மாண்ட அறையில் நாங்கள் மூவர் மட்டும் அமர்ந்திருக்க மௌனம் சற்று நேரம். காந்திராஜ் எப்படி துவங்குகிறார் என பார்க்க விரும்பினேன். எதிர்பார்த்தது போல அவர்தான் பேச துவங்கினார். முதல்வரிடம் அல்ல என்னிடம். “இது தேவையில்லாத வேலை ஏன் இப்படி விரோதத்தை உருவாக்கிக் கொள்கிறாய் என தெரியவில்லைஎன்றார். நான் சொல்ல விரும்புவது வல்சராஜ் திட்டத்திற்கு எதிரான ஒரு செயல்படும் கருத்து அதற்கு முதல்வராக ரங்கசாமியின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அது இங்கு நிகழும் முன்பாக கிருஷ்ணமூர்த்தி எல்லா தகவலையும் வல்சராஜிடம் சென்று சொன்ன பிறகே வீட்டிற்கு செல்வார்


நான் சில நிமிட அமைதிக்கு பிறகு ரங்கசாமியை பாரத்தேன். அவரிடம் எந்த மாறுதலும் இல்லாமல் நான் பேச காத்திருந்தார். நான் காந்திராஜிற்கு பதில் சொல்லாமல் பேச வேண்டியவற்றை முதல்வரை நோக்கி சொல்லத் துவங்கினேன். முன்பே திட்டமிட்டபடி அதை எங்கு துவங்கி எங்கு சென்று முடிக்க முடியும். அதில் நாங்கள் செய்ய வேண்டியது அதற்கான முதல்வரின் அனுமதி என்று சொல்லி முடித்தேன் பின் அவரின் கருத்தை அறிய காத்திருந்தேன். மிக கச்சிதமாக தனது முடிவை என் திட்டத்திற்கான அனுமதியாக சொன்னார். எனக்கு முழு அனுமதி அளித்ததுடன் வாரம் ஒருமுறை சந்திக்க சொன்ன பிறகு பின் அவர் சொன்னது என்னை திகைக்க வைத்தது. அரசியலில் என்ன செய்ய வேண்டும் அதன் எதிர்ப்பு பற்றிய சரியான கணிப்பு செயல்பாடுகளை கொண்டது. “முதலில் தனது திட்டத்தில் உறுதி பின் அச்சமற்ற அனுகுமுறை. அதை மிகச் சரியாக துவக்கினாய். கிருஷ்ணமூர்த்தி என் அரசியல் பிரதிநிதி என அவர் வெளியில் சொல்லிக் கொள்வது எனக்கு தெரியாமலில்லை. அது அவரது அரசியல்.அது குறித்து நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் அரசியலின் இடைவெளிகளை பயன்படுத்துபவர் அதை மிகச் சரியாக அடையாளப்படுத்தும் திறன் உள்ளவர்களை மிக குறைவாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் அவசர அரசியலுக்கு நான் சொல்ல எதுவும் இல்லை. அவர் பற்றிய உனது கணிப்பும் அதன் அடிப்படையில் நீ நடந்து கொண்டது ஆச்சர்யப்பட வைக்கிறது. மிக சரியான அனுகுமறை. என் சேம்பரில் இருந்து அவரை வெளியேறச் சொன்ன போது நான் அதை மறுக்கவில்லை. அந்த துணிவும் தெளிவும் இல்லாதவர்கள் அரசியலில் என்ன செய்ய முடியும்என்றார். காந்திராஜ் பிரமித்திருப்பதை பார்க்க முடிந்தது. அதே சமயம் எனக்கான அங்கீகாரத்தை அவரால் ரசிக்க இயலவில்லை. பின்னர் வீடு திரும்பும் வரை அவர் வேறு விஷயங்களை பேசினாலும் முதல்வர் சொன்னதில் இருந்து எதையும் பேசவில்லை. அது புரிந்து கொள்ளக் கூடியது. நான் எடுத்த அந்த முயற்சி முன்னாள் அமைச்சர் காந்திராஜின் அரசியல் குழப்பத்தாலும் என்மீது கொண்ட காழ்பினாலும் தோல்வியடைந்தது


முதல்வர் ரங்கசாமியிடம் ஆரம்பம் முதல் மிக தெளிவாக திட்டமிட்டு புதுவை மற்றும் தில்லியில் நிகழ்த்த வேண்டியதைப் பற்றி பேசியிருந்தேன். புதுவையில் அதன் துவக்கம் நிகழ வேண்டும் பின்னர் அது தில்லி சென்றடையும் பிறகே அவற்றை மிக எளிதாக முன்னகரத்த முடியும் என சொன்ன போது காந்திராஜிற்கு அதில் ஆர்வமில்லை. காரணம் நேரமின்மை இருக்கும் காலத்தை வீண் செய்ய வேண்டாம் என்றார். ஆனால் அதற்கான வேறு காரணம் இரண்டு. ஒன்று அவர்கள் யாரும் அடிப்படை கட்டுமான அரசியலில் அறிமுகமில்லாதவர்கள் அதன் வழியாக நிகழும் அரசியல் மாற்றம் குறித்த எந்த புரிதலும் அவருக்கு இல்லை. இரண்டு அது வெற்றி பெற்றால் எனக்கு பின்னால் நிற்க வேண்டி வரும் என நினைத்திருக்கலாம். தில்லிக்கு சென்று தலைமைக்கு புரியவைக்க வேண்டும் என்பது தான் முதலில் நிகழ வேண்டும் என் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அதை உறுதியாக மறுத்தேன். பல முறை பேச்சுவார்த்தையில் இது வெளிப்பட்டுக் கொண்டடே இருந்தது. ஒரு புள்ளியில் ரங்கசாமி அதற்கு வழிவிட்டார்


தனிப்பட்ட முறையில் என்னிடம் நீங்கள் உண்மையில் திட்டமிடுவது என்ன என்பதை சுருக்கமாக எனக்கு புரியவையுங்கள் என்றார். நான் அவரிடம் கட்சியின் உள்கட்டமைப்பு வழியாக ஒன்று நிகழும் போது அது தொடர்ந்து பத்திரிக்கையில் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுவே தில்லியில் நம்மை குறித்த பேசு பொருளாக உருவகிக்கப்படும். அவர்களின் கேள்விகள் சந்தேகங்கள அதனூடக வெளிப்படும். இல்லையென்றால் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த புகார்களில் இருந்து அவை தயாரிக்கப்பட்மிருக்கும். அதற்கு உங்களை தவிர பிறர் பதில் சொல்ல அழைக்கப்படமாட்டார்கள். வல்சராஜிற்கு ஆதரவான முதல்நிலை இணைச் செயலாளர்களை தான் சந்திக்க வேண்டி இருக்கும் அவர்களின் கேள்விகளில் உள்ள சீண்டலை கடந்து செல்வது எளிதல்ல


முதல்வருக்கு கட்சியினரின் ஆதரவு முழுமையாக உள்ளது. தில்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது தனிப்பட்ட சிலரின் உள்நோக்கம் கொண்ட காழ்ப்பு மட்டுமே. அதற்கு கட்சியனரின் ஆதரவில்லை என்பதை முதல் நிலையில் மிக தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். அது கடிதத்தை மணுக்களை கொண்டதாக இருக்க கூடாது உத்தியுடன் கூடிய தொடர் போராட்டம் வழியாகவே அதை வென்றெடுக்க முடியும். முதலில் சற்று பெரிய போராட்டம் போல ஏதாவதொரு தொகுதியில் அது நடக்க வேண்டும். நிச்சயம் அது உங்கள் தொகுதியாக இருக்க கூடாது. ஒன்று நிகழ்ந்த பிறகு இரண்டு நாட்களில் பிறிதொன்று ஆனால் சிறிய அளவில் இது தொடர்ந்து கட்சி அலுவலக்கத்தை முற்றுகையிட்டுக் கொண்டே இருக்கும். பின்னர் மெல்ல பிறதொகுதிகள் அதில் இணைந்தபடி இருக்க வேண்டும் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் நடக்க வேண்டும். அதை ஒட்டி பத்திரிக்கை செய்திகளில் வெளியாகும் குறிப்பில் இருந்து இருந்து ஒரு விலக்க முடியாத ஒற்றை வரி செயதி ஒரு சிக்கலை வேறு கோணத்தில் தில்லிக்கு புரியவைக்கும். வலுவான ஒரு சிக்கல் மேலெழுந்தாலே தில்லி தனது முடிவை மாற்றும் என நான் சொல்லவில்லை ஆனால் தனது முடிவை செயல்படுத்த காலதாமதப் படுத்தும் அதுவே ஆரம்ப நிலை வெற்றிஎன்றேன்


அவருக்கு புரிந்தது என்றே எனக்குப்பட்டது. ஆனால் அவர் காந்திராஜ் சொன்னதில் இருந்து தில்லியில் அதை துவங்கி பின்னர் புதுவையில் இதை செய்யலாமே என்றார். எனக்கு இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை அந்த சந்தர்பத்தில் சொல்ல விரும்பவில்லை. தான் காந்திராஜை தவிர்ப்பதாக அவர் நினைக்கூடும் என அவதானித்திருக்கலாம்.நான் மேலே பேசாதவனானேன். தில்லிக்கு ஒரு குழுவை அனுப்புவது என்றும் அவர்களின் விமான பயணம் மற்றும் தில்லியில் தங்குமிடம் ஒருங்குவது பற்றி அவர் ஜெயபாலிடம் கையளித்தார். நான் தில்லி செல்ல எனக்கான அழைப்பு வருவதற்கு காத்திருந்தேன். ஆனால் காந்திராஜ் தலைமையில் ஒரு குழு கிளம்பிச் சென்றதை அறிந்து கொள்ள முடிந்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் எனக்கு முற்றாக உடன்பாடில்லாத செயலில் நான் விலக்கப் பட்டதில் உள்ள நிறைவை அடைந்தேன். இருந்தும் இது முதல்வரின் வழிகாட்டலுடன் நடந்ததா என தெரியவில்லை அதே சமயம் அதை உறுதிபடுத்திக் கொள்ள முயலவில்லை. ஓரிரு நாட்களில் தானான தெரிய வரும் ஒன்றை ஏன் தேவையற்று உறுது செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்அன்று மாலை நண்பர்களுடன் கடற்கரை நடைக்கு சென்றபோது மாதா கோவில் எதிரில் உள்ள பேக்கரிக்கு அருகில் முதல்வரின் கார் நின்றிருந்தத்தை பார்த்பிறகு அவரின் உளநிலை என்ன என்பதை அறிய பேக்கரிக்கு உள்ள ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அனுகினேன். என்னை எதிர்பார்க்காத உணர்வு முதலில் எழுந்து பின் சிந்தனையால் உருவான நெற்றிச் சுருக்கம் எனக்கு முழு கதையை சொன்னது. “தில்லி ஏன் செல்லவில்லைஎன்றார். நான் அவரிடம்எனக்கு தகவல் இல்லைஎன்றேன். சிறு மௌனம் நிலவியது அதை மேலும் நீட்டிக்க விருப்பமன்றி அவரிடம் விடைபெற்று திரும்பினேன்


ஒரு புள்ளிக்கு அப்பால் சில விஷயங்களை முதல்வர் ரங்கசாமியின் நிலைப்பாட்டிற்கு எதிராக வைக்க இயலாது என்பதால் அவர் என்னிடம் தில்லி செல்வது முதலில் என சொன்ன போது நான் உடன் செல்ல முடிவெடுத்தேன் இது சிக்கலை கொண்டுவரப் போகிறது என அறிந்தாலும் எனக்கு வேறி வழிகள் இல்லாமலிருந்தது . அடுத்த நாளே காந்திராஜ் வேறு சிலரை அழைத்துக் கொண்டு தில்லி சென்றார். நான் கவனமாக விலக்கப்பட்டிருந்தேன். ஒருவகையில் மனநிம்மதி காந்திராஜின் அரசியல் பிழைகளுக்கு நான் பொறுப்பாக இருக்கப் போவதில்லெஅதன் பிறகு தில்லியில் நிகழ்ந்ததை பற்றிய தகவல்களை அறிய ஆர்வமின்றி இருந்தேன். அது எப்படியும் என்னை வந்து சேரும் என தெரியும். அது நண்பர் ஜோதிநாராயணசாமி மூலமாக வந்து நிகழ்ந்தது . அவரை கடற்கரை நடையின் போது சந்தித்தேன் அப்போது அவர்புதுவை முதல்வரின் தூதுவர்கள் அங்கு விரிக்கப்பட்ட சூதில் சிக்கினார்கள்என அவரது பாணியில் வேடிக்கையாக சொன்ன போது வலி மிகுந்த உணர்வை கொடுத்தது. அதற்கு பின்னால் நான் இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இரண்டு தொழில் முறை வழக்குரைஞர்கள் இடையேயான போட்டி ஆதன் பின்னால் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...