ஶ்ரீ:
பதிவு : 690 / 879 / தேதி 15 அக்டோபர் 2025
* விலகி அணுகுவது *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 87.
![]() |
வல்சராஜின் வீட்டில் இருந்து வீடு திரும்பி பல மணி நேரம் பழைய நினைவுகளில் இருந்து மனதை விலக்க முடியவில்லை. அடுக்கடுக்கான அலைகளால் ஆன நினைவுகள் பல இனியவை. காலத்தில் பின் நோக்கியதில் பலவித அரசியல் புரிதல்கள். அரசியலில் நான் சந்தித்த ஆளுமைகளில் வல்சராஜ் அதன் நவீன முகம். அந்த நவீனத் தன்மை என்னை அவருடன் தொடர்ந்து பயணிக்க செய்தது. அவை நட்பைப் போல நிகழ்ந்து வளர்ந்தன. அவருடனான பல வருட அறிமுகம் இருந்தாலும் இணைந்து செயல்பட்டது அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவரான பிறகு. தலைவராக அவரது கட்சி நடவடிக்கைகள் நிலைப்பாடுகள் பல எனக்கு ஏற்புடையவை அல்ல. என்றாலும் நட்பாக நீடித்த உறவு பல காலம் தொடர்ந்தது. அவருடன் நான் மேற் கொண்ட பயணங்கள் எனக்குறிய இடத்தை பெற்றுத் தந்தது.
சபாபதியின் ஆதரவாளர்களை என்ன காரணத்தினாலோ அவரால் புறந்தள்ள முடியவில்லை. நான் அதை அவருக்கு புரியவைக்க முயலவில்லை. அவர் யாரை பெரியதாக நினைக்கிறாரோ அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லை அந்த உண்மை ஒருநாள் முகத்தில் அறையும் போது எல்லாம் சட்டென புரியும் என கணக்கிட்டு காத்திருந்தேன். இறுதியில் அதுவே நிகழ்ந்தது. எனக்கு மாற்றாக இளைஞர் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் முக்கியமானவர்கள் சிலர் காங்கிரஸில் இருந்து விலகு கண்ணனின் தமாகா சென்று இணைந்தனர். அப்போது காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி சென்றிருந்தோம். அவருக்கு அந்த செய்தி சொல்லப்பட்ட போது அவர் அடைந்த அதிர்ச்சி விரக்தியை நேரில் பார்க்க முடிந்தது. சண்முகம் தொடங்கி அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகள் அவரை நிலையழிதலின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. மனதளவில் அவர் அப்போதே இளைஞர் காங்கிரஸை விட்டு விலகிவிட்டிருந்தார். அதையொட்டி எனக்கான சந்தர்ப்பமாக எடுத்து எனது இடத்தை உறுதி செய்து கொண்டேன்.கட்சி உட்கட்டமைப்பு உருவாக்கம் பராமரிப்பு பாதுகாப்பு என்பது அரசியலில் எனது துறையாக எப்போதும் இருந்திருக்கிறது. இளைஞர் காங்கிரஸில் மட்டுமே அதை முழுமையாக செய்ய இயலும் என்பதால் மிக கவனாமாக அதை செய்திருக்கிறேன்.
1996 தேர்தல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலன் கட்சியை விட்டு வெளியேறி தமாக கட்சியின் புதுவை அமைப்பில் இணைந்தார். அது தற்கொலைக்கு ஈடான முடிவு இறுதியில் அதுவே நிகழ்ந்தது 2001 பின்னர் அதிகாரப்பூர்வ இணைப்பு இல்லாமல் தாமாக காங்கிரஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்ள துவங்கினார் . கட்சியை விட்டு வெளியேறிய போது அவருடன் சில மாநில நிர்வாகிகளும் வெளியேறினார்கள். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு காங்கிரஸின் பதிவு செய்யப்படாத அமைப்பு போல செயல்பட்டதால் அதன் நிர்வாகிகள் யாரும் மாநில தலைவர் சண்முகத்தை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. அறிமுகமற்ற இயக்கமாக முகமில்லாத தலைவர்களை கொண்டதாக இருந்த அமைப்பு முற்றாக சிதைவுற்றது. அவர்களில் சண்முகம் என்னை எப்படி தனித்து அறிந்திருந்தார் என்பது எனக்கு எப்போதும் வியப்பளிப்பளிப்பது. அமைச்சர் காந்திராஜை கொண்டு என்னை அணுகியபோது அது முறையான அழைப்பு என்பதால் நான் தலைவர் சண்முகத்துடன் சென்று இணைந்தேன். மனைவி முதல் பிரவசத்தின் போது குழந்தையின் இறப்பு அதை தொடர்ந்து பிற உளவியல் சிக்கலில் இருந்து அரசியல் என்னை மீட்டெடுக்கும் என்பதால் மீண்டும் அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன்.
அப்போது எனக்கான எந்த திட்டமும் இல்லை. அங்கு இருந்து கொண்டிருப்பது மட்டுமே என்கிற மனநிலையில் இருந்தேன் . இளைஞர் காங்கிரஸ் தலைவராக வல்சராஜ் நியமிக்கப்பட்டு அவரது தனது கமிட்டியில் என்னை முதன்மை பொதுச் செயலாளராக நியமிக்க எனது அரசியல் மீண்டும் பழைய களத்தில் துவங்கியது. அதுவே எனக்கெதிராக சபாபதியின் ஆதரவாளர்களால் தொடர்ந்து எனது செயல்பாடுகள் முடக்க பட அதற்கு என்ன காரணத்தினாலோ வல்சராஜ் ஆதரவளித்தார். இதன் அரசியல் நோக்கமும் பின்னணியும் விசித்திரமானது மிக விரிவானது.
முதலியார்பேட்டை சபாபதி அவர்களுக்கு இளைஞர் காங்கிரஸின் தொடர்பு அதன் முன்னாள் தலைவர் கண்ணன் வழியாக உருவானது. அதற்கு பின்புலத்தில் இருந்தது பொதுவான சண்முகம் எதிர்ப்பு. அதை வெளிப்படுத்த அதற்கு ஒரு வாய்ப்பு காமராஜர் காங்கிரஸில் இருந்து பிரிந்த போது உருவானது. அதை தொடர்ந்து புதுவையில் சண்முகத்தின் எதிர்பாளர்களை ஒருங்குதிரள அவை “இன்டிகேட், சின்டிகேட்” என அடையாள படுத்தப்பட்டது. புதுவையில் தொகுதிகளை தாண்டி கட்சியின் முகமாக அறியப்பட்ட சிலரில் சபாபதியும் ஒருவர். தனது தொகுதி என்கிற எல்லையை தாண்டி செயல்படும் தலைவராக தன்னை முன்னிறுதிய சபாபதி
கட்சி சார்ந்த தொடர் செயல்பாடு மற்றும் காமராஜருடனான நெருங்கிய வட்டத்தில் இருந்தது போன்றவை சபாபதியை காங்கிரஸின் முக்கிய தலைவராக முன்வைத்தன. கட்சியைவிட்டு வெளியேறி மீளவும் திரும்பியது மற்றும் காமராஜரின் மறைவு போன்றவை அவரது இடத்தை நீர்க்கச் செய்திருந்தது. கட்சிக்கு திரும்பிய பிறகும் சண்முகத்திற்கு எதிரான அவரது நிலைப்பாட்டை வைவிட இயலவில்லை. ஒரு வகையில் அது மிக சிறந்த அரசியல் நகர்வு. கண்ணனை ஆதரித்து பின் அவரின் வளர்ச்சியில் காணமலானார்.
சபாபதியின் தலைவர் சண்முகத்தின் எதிர்பாளர் என்கிற அடையாளம் மிக சிறந்த அரசியல் உத்தி என்றாலும் அந்த பாதையில் மிக கவனமாக கறாராக பயணிக்க தவறினார். சண்முகத்தின் எதிர்பாளராக தன்னை முன்வைப்பதில் வெற்றி பெற்றாலும் அவருக்கு மாற்றாக தன்னை எங்கு எப்பமி முன் வைக்கும் திட்டம் என எதுவும் அவரிடம் இல்லை என்பதால் அது எளிய அரசியல் சமரசத்திற்கானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பொது வெளியில் அது பிறிதொன்றாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. தன்னை சார்ந்திருந்த திரளை கொண்டு தலைவருக்கி இணையான இடத்தை பெற இயலும் என அவர் கணக்கிட்டிருந்தால் அது பிழை முடிவு. சபாபதியால் சண்முகத்திற்கு மாற்றாக தன்னை முன்வைப்பதில் வெற்றி பெற்றிருக்க முடியாமல் போனாலும் முக்கிய அரசியல் சக்தியாக தன்னை வளர்த்தெடுத்திருக்க முடியும். அதை தனது தொடர் பிழை நிலைப்பாட்டின் மூலம் தனது அரசியலை இழந்தார்.
1998 ல் சண்முகத்திற்கு பாராளுமன்ற சீட் மறுக்கப்பட்டபோது இளைஞர் காங்கிரஸ் சார்பாக முன்னெடுத்த 24 மணிநேர முற்றுகை போராட்டம் முதல் நாள் காலை ஒன்பது மணிக்கு துவங்கி அடுத்த நாள் அதிகாலை ஆறுமணி வரை நீடித்தது. அதையடுத்து நிகழ்ந்த மாநில நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம் தலைவர் சண்முகத்தின் வீட்டில் அவரசமாக கூடியாது. பெரும் திரள் அவரது வீட்டில் வெளியே அந்த கூட்டத்தின் முடிவிற்கு காத்து நின்றிருந்தனர். அந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக நான் அழைக்க பட்டிருந்தேன். அது எனக்களிக்க பட்ட மிகப் பெரிய கௌரவம். அத்துடன் நில்லாமல் அந்த சிறப்பு கூட்டத்தின் துவக்க பேச்சாளராக என்னை அழைத்த போது சபாபதி அதை நேரடியாக எதிர்க்க சண்முகம் அவரை மறுத்த முறை அவருள் கொந்தளிப்பாக நிகழ்வதை பார்க்க முடிந்தது. அந்த கூட்டத்தில் சபாபதியை அவர் மறுத்து பேசி முறை எல்லோரையும் அதிர வைத்தது. தன்னால் ஏன் தொடர்ந்து தலைவராக நீடிக்க முடிகிறது என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட உதாரணம் சபாபதி.
“ஒவ்வொரு தேர்தலிலும் சபாபதி என்னிடம் நேராக வந்து தனக்கான வாய்ப்பை கேட்டதில்லை. அரசியலில் என்னை எதிர்ப்பவர்கள் மூலமாக என்னை அனுகியே மிரட்டி அல்லது நிர்பந்தித்து அவர் அந்த வாய்பை அடைந்தார் என பிழையாக புரிந்து கொண்டிருந்தார் . காரணம் அவருக்கு என்னை புரியவில்லை. சபாபதி போல தொகுதியில் நின்று வெற்றிப் பெறும் சிலர் எப்போதும் கட்சியில் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனது தனிப்பட்ட வெறுப்பு அரசியலின் பொருட்டு அவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களுக்கான வாய்ப்பை ஒருபோதும் மறுத்ததில்லை. அப்படி செய்திருந்தால் இந்த கட்சி எப்போதோ காணாமலாகி இருக்கும். இது போன்ற அற்ப காரணங்களினால் 50 வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சியை இழந்த கட்சி இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் அதற்கான வாய்ப்பை அடையப் போவதில்லை. ஆனால் இங்கு புதுவையில் நாம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்கு காரணம் நான் என்னை விட கட்சி பெரிது என நினைப்பது தான். ஆனால் அது புரியாமல் என்னை சிலர் தொடர்ந்து தங்களது அரசியல் செநல்பாடுகளால் என்னை அர்த்தமில்லாமல் எதிர்த்து கொண்மிருக்கிறார்கள் அத்தையவர்கள் வெற்றி பெரும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை எப்போதும் மறுத்ததில்லை ஆனால் அவர்கள் அமைச்சராக வராமல் பார்த்துக் கொண்டேன்” என்றார் . சபாபதியின் முகம் கருமை கொள்வதை பார்க்க முடிந்தது.
காரைக்காலை சேர்ந்தவரான சண்முகம் அரசியலின் பொருட்டு புதுவையில் இருந்து செயல்பட ஆரம்ப நிலைநிலையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த குழுவில் சபாபதி முக்கியமானவராக கருத்தப்பட்டார். பின்னர் தில்லி தலைமையிடம் நல்மதிப்பை பெற்ற பிறகு பிற புதுவை தலைவர்கள் அவருடன் சமரசம் செய்து கொண்டாலும் மறைமுக எதிர்ப்பை கைவிடவில்லை. வேறு சிலர் சண்முகத்தை நிராகரித்து அரசியலை பல வேறு காங்கிரஸ் எதிர்பியக்கம் வழியாக முன்வைத்தனர் அவர்களில் தட்டான்சாவடி தொகுதியை சேர்ந்த பெத்தபெருமாள் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.அவர்கள் காங்கிரஸிற்கு மாற்றாக தன்னை முன்வைத்த ஜனதா மற்றும் ஜனதாதளம் போன்ற அமைப்பை நோக்கி பயணித்துக் கொண்டே இருந்தனர் . அதற்கு பின்னால் கட்சி கொள்கை என்பதற்கு அப்பால் சண்முகம் எதிர்ப்பு முக்கியமான காரணியாக இருந்தது. காங்கிரஸில் மாநில தலைவராக உருவாவதை ஆரம்பம் முதலே தடுத்துக் கொண்டிருந்தார். அது உண்மையும் கூட. ஒரு தொகுதிக்குள் அடங்க விரும்பாத பல தலைவர்கள் காங்கிரஸ் உள்ளேயும் வெளியேயும் எப்போதும் இருந்து கொண்டிருந்தனர்.
காமராஜர் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனித்து செயல்பட துவங்கிய போது புதுவையிலும் சண்முகத்திற்கு எதிரானவர்கள் தனி அமைப்பு திரண்டனர். பின்னர் காமராஜர் அரசியல் ஆர்வமிழந்த மண் மறைந்த பின்னர் அவரது ஆதரவாளர்கள் மெல்ல காங்கிரஸில் இணைந்தனர். புதுவையிலும் அது நிகழ்ந்தது என்றாலும் அவர்கள் தங்களது தனி அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. தனியாக செயல்பாட கட்சி அடையாளத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் . கட்சித் தலைவர் சண்முகம் அவர்களை ஏற்று மாநில நிர்வாகிகளில் இடம் அளித்தாலும் அவர்களை தங்கள் தொகுதி தாண்டி செயல்பட அனுமதிக்கவில்லை. மாநிலம் தழுவிய அரசியல் செயல்பாடு என்கிற கனவு கொண்டவர்களான அவர்கள் பிறிதொரு அடையாளத்திற்கு காத்திருந்த போது இளைஞர் காங்கிரஸ் தலைவராக கண்ணன் வந்தார். அது அவர்களுக்கு தொகுதியை தாண்டிய கட்சி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும் சண்முகத்திற்கு இணையாக மாநில அளவில் தங்களை முன்வைக்கவும் ஒரு வாய்ப்பு உருவானது.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக கண்ணன் செயல்பட்ட போது அவருக்கு ஆதரவளித்து பேணியவர் சபாபதி. கண்ணனின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் முதலியார்பேட்டை இளைஞர்கள் பெரும்பங்கு வகித்தனர். மாநிலம் முழுவதும் கண்ணன் நடத்திய பல கட்சி நிகழ்வுகளில் சபாபதி கட்சியின் முன்னணி தலைவர்களையும் சண்முகத்தின் எதிர்பாளர்களையும் அதில் திரளாக கலந்து கொள்ள செய்தார் . அதன் வழியாக அவர்கள் வளரவில்லை ஆனால் கண்ணன் அசுர வளர்ச்சியடைய பிற தலைவர்கள் காணாமலாயினர்.
கண்ணன் அரசியலில் வளர்ந்து சண்முகம் மற்றும் மரைக்காயர் தலைமையை ஏற்காது மூன்றாவது தரப்பின் தலைவராக உருவெடுத்தார். பிரச்சனைகளின் அடிப்படையில் இருவரில் ஒருவரை ஆதரித்தார். அது அன்றுவரை இருந்த சண்முகம் மரைக்காயர் அரசியல் சமரச புள்ளியில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இரண்டு மாநில தலைவர்கள் தரப்பும் அரசியல் பலத்தில் நிகர்நிலை கொள்ளும் போது சந்தர்ப்பத்திற்கு எற்றபடி கண்ணன் எடுக்கும் சாய்வு அரசியல் அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் என்கிற இடத்திற்கு கண்ணன் வந்து சேர்ந்தார். இதை கண்ணன் தனக்கு சாதகமாக சரியாக அரசியல் படுத்தினாரா? என்பது அதன் துணைக் கேள்வி. அதை செய்திருந்தால் அவர் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இலக்கும் இடமும் நிச்சயம் வேறு ஒன்றாக இருந்திருக்கும்.
சபாபதி தனது அன்றாட அரசியலில் சண்முக எதிர்பை ஒரு கருவியாக கையாண்டார் அதன் தீவிரத்தால் சிக்குண்டு கண்ணனை கணிக்க தவறியது அவரின் அரசியில் பிழை. கண்ணன்ன் பெரும் உருவெடுத்து நின்ற போது அதன் முதல் பலியாக சபாபதியை கேட்டது .அதற்கு தன்னை இழந்த பிறகு அவரால் பிறகெப்போதும் அரசியலில் தனது இலக்கை அடையமுடியவில்லை என்பதுடன் பல படிகள் கீழிறங்கி சென்றார். பின் ஒருபோதும் அரசியல் மையக் களத்தில் தன்னை ஒரு இருப்பாக அவரால் வைக்க முடியவில்லை.
மரைக்காயர் கண்ணனை தன்னுடன் இறுத்திக் கொள்ள அவரின் எல்லா சமரசங்களையும் ஏற்றார் என்றாலும் தனது நேரத்திற்கு காத்திருந்தார். அது நுண் அரசியல் அதை புரிந்து கொள்ளும் இடத்தில் சபாபதி இல்லை. தனக்கு இணையாக கண்ணனை மரைக்காயர் வைப்பதாக எண்ணினார் சண்முகம் நோக்கிய மனச் சாய்வு கொண்டார் . 1983 களில் சபாபதி கண்ணன் பூசல் துவங்கினாலும் அது வெளிப்பட்டது 1985 தேர்தலுக்கு பிறகு ஒரு புள்ளியில் சபாபதி கண்ணன் மோதல் 1985 தேர்தலுக்கு பிறகு வண்ணிய சாதிப் பிரிவில் யாருக்கு அமைச்சர் என சிக்கல் உருவான போது கண்ணன் தன்னை வண்ணிய பிரிவினராக முன்வைத்து சபாபதி அமைச்சராகும் வாய்ப்பை பறித்துக் கொண்டார் . இதற்கு பின்னால் சண்முகத்தின் அதிகார அரசியல் சதி என பேசப்பட்டது. அது உண்மையாகவும் இருக்கலாம். கண்ணனுடன் முரண்பட்ட சபாபதியால் கண்ணனின் அரசியல் பலத்தை குறைக்க திட்டமிட்டு அவரது தனது ஆதரவாளர்களை கொண்டு இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் ஊடுருவி பிளவை உருவாக்க முடிந்தது. அமைப்பு உடைத்து அதன் தலைமை பொறுப்பை கண்ணனிடம் இருந்து பறித்து தனது முதலியார்பேட்டையை தொகுதியை சேர்ந்த பாலன் முன்னிறுத்தப்பட்டு 1987 இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். அது தனது அரசியல் கணக்கால் நிகழ்ந்தது என நினைத்தார். ஆனால் உள்கணக்குகள் வேறு பரிமாணத்தை காட்டின. சபாபதியின் ஆதரவில் மீண்டும் இளைஞர் காங்கிரஸ் செயல்பட துவங்கியது ஆனால் இம்முறை அது 1991 வரை மட்டுமே நீடித்தது. அதற்கு முன்பே சபாபதி பாலன் முரண்பாடு துவங்கி சபாபதி 1989 தேர்தலில் சபாபதி தோல்வியடைய பாலன் ஒரு காரணம் என அவரது ஆதரவாளர்களால் பேசப்பட சபாபதியின் ஆதரவாளர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது . ஒரு குழு பாலனை ஏற்றது அவருடன் சென்றது சிறு குழு சபாபதியுடன் தங்கிவிட்டது அதில் முக்கியமானவராக கருதப்பட்டவர் பச்சைமுத்து.
சபாபதி சண்முகத்தை எதிர்த்த காலத்தில் அவரது அரசியல் எதிரியாக கருதப்பட்ட மரைக்காயர் அணியாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார். இயல்பில் சண்முகத்தின் எதிர்ப்பாளரான பாலனும் மரைக்காயரை தனது தலைவராக ஏற்று செயல்பட துவங்க மீண்டும் அதிருத்தியடைந்த சபாபதி சண்முகம் அணியில் இனைந்து செயல்பட 1991 தேர்தலில் சபாபதி நிராகரிக்கப்பட்டு மரைக்காயர் தரப்பு வேட்பாளராக பாலன் தேர்வாகி பின் தோல்வியடைந்தார். சபாபதி மீள மீள ஒரே தவறை செய்து கொண்டே இருந்தார். கடந்து சென்ற நிகழ்வுகளில் இருந்து அவர் எதையும் கற்கவில்லை. அல்லது மாநிலம் தழுவிய தலைவராக தன்னை முன் வைக்கும் கனவில் இருந்து அவரால் வெளிவர இயலவில்லை.
வல்சராஜின் நிர்வாக கமிட்டியில் தனது ஆதரவாளரான வைத்தரசை முன் வைத்தார். சண்முகமும் அதற்கு ஆதரவளித்த பிறகு வல்ராஜ் ஏன் அதை நிராகரித்து என்னை முதன்மை பொதுச் செயலாளராக நியமித்தார். நான் அறிந்த வரை அது அவர் தனது தன்மதிப்பின் வெளிப்பாடு. தான் தல்லைவராக இருக்கும் கமிட்டியில் தனக்கு அடுத்த இடத்தில் வைத்தரசு போன்ற ஒருவரை வைக்க அவர் ஒப்பவில்லை. ஆனால் வையத்தரசை முன்வைத்து சபாபதியின் ஆதரவாளர்கள் பச்சைமுத்து தொடர்ந்து எனது திட்டங்களை மறுத்து இடையூறு செய்ய முடிந்ததே தவிற உட்கட்சி கட்டமைப்பில் அவர்களால் ஊடுரு முடியவில்லை. அதன் காரணம் அதை மேலிருந்து அதிகாரத்தை பெற முயற்சித்தனர் அது ஒருவகை மேல் நிலை அரசியல் செயல்பாடு ஆனால் களத்தில் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை . அமைப்பென ஒன்று சரியாக உருவாகாமல் அதை செய்ய இயலாது என அவர்கள் கருதவில்லை. எனக்கு தொடர்ந்து தடைகளை கமிட்டி கூட்டத்தில் உருவாக்க முணைந்த போது நான் எனது களத்தை தொகுதிகளின் கூட்டம் வழியாக என்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் இறங்கினேன். அதில் பெரிய வெற்றியை பெற முடிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக