https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 22 ஏப்ரல், 2023

அடையாளமாதல் * காலத்தை நீடிப்பது *

 



ஶ்ரீ:



பதிவு : 675  / 864 / தேதி 22 ஏப்ரல்  2023



* காலத்தை நீடிப்பது * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 73.






மாநில கட்சிக்களின் செயல்முறை கோட்பாடும் அதன் நிலைப்பாடுகளும் அன்றாட அரசியல் சரிநிலையை ஒட்டியவை . அதன் களம் நாளுக்கொரு மாற்றத்தை முன்வைக்கும் . அவை எப்போதும் முன்னுக்கு பின் முரணானவை அரசியல் சரிநிலைகளை அவைகளை அடிப்படையாக கொண்டவை . விழுமியம் பேசுபவர்களை அவை வெளியே நிற்க வைத்துவிடுகின்றன . தமிழக அரசியலில் பத்திரிக்கை தலைப்பை பிடிக்க எதையும் சொல்ல அவர்கள் தயங்காதவர்கள் . சிறு கட்சிகள் மக்கள் மறதியை நம்பி இருப்பது போல அகில இந்திய அரசியலுக்கு பழக்கப்பட்டவருக்கு அது தன்னை நெருப்பில் இட்டதற்கு இணை. திமுக தலைவர் கருணாநியும் மூப்பனாரும் அருகருகு ஊர்காரர்கள். தஞ்சை மண்ணில் தங்களுக்கான அரசியலை கண்டடைந்தவர்கள். இருவேறு சமூக நிலைகள் மற்றும் அந்தஸ்தில் இருந்து அவர்கள் உருவானவர்கள். அதை கடந்து இருவருக்கும் சில அரசியல் பொதுமைகள் இருக்கக் கூடும் அது அவர்கள் இருவரையும் சம தூரத்தில் நிறுத்தி இருந்தது . நான் அவர்கள் இருவருக்கான அந்த அரசியல் பொதுமைகளை தலைவர் சண்முகத்தை வைத்து புரிந்து கொள்ள முயல்கிறேன். அவருடன் மணிக்கணக்காக உரையாடியிருக்கிறேன். அவை மாநில அரசியலை பற்றிய புரிதலுக்காக துவங்கி இருந்தாலும் அதன் நீட்சி எனக்கு சொன்னது முற்றிலும் புதிய செய்திகளை. எனது அரசியல் கணக்குகளும் நகர்வும் அதை ஒட்டி இருந்தன என்பதால் பிறர் எனது நகர்வு பற்றிய எந்த தீர்மானத்திற்கும் வர முடியாமலானது. அது எனது பலம்


தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சண்முகமும் புதுவை அரசியல் பாணியில் இருந்து வேறுபட்டவர். மிகச் சிறந்த சமரசப் புள்ளிகளை உருவாக்கி இணைக்கக் கூடியவர். சிறந்த உரையாடல்காரர். இந்த பொதுமை ஏறக்குறைய மேலும் இருவரை இணைக்கிறது.திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மூப்பனார். தமிழக ஆட்சியில் அமர்ந்த பிறகு தன்னை முன்னிறுத்தும் போக்கு திமுக தலைவரிடம் காணப்பட்டது. அது உருவாக்கிய அரசியல் மொத்த தமிழக களத்தை மாற்றியமைத்தது. அது மூப்பனார் மற்றும் சண்முகம் நிலைக்கு மாறுபட்டதாக இருந்திருக்க வேண்டும். சண்முகம் இறுதிவரை தயக்கமும் கூச்சமும் உள்ளவராகவே இருந்தார். இருந்தும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த அவர்களுக்கு இடையேயான உறவு சம தூரத்தில் அடிபடாமல் இருந்தது


புதுவை அரசியல் கூட்டணி  தொகுதி பங்கீட்டில் திமுகவுடன் நடத்திய பேச்சு வார்தையில் சண்முகம் கலந்து கொண்ட போது அவரின் உதவியாளனாக நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை மூளையை சொடுக்குபவை. அங்கு நிகழும் உச்ச கட்ட தர்க்கம் எல்லை கடந்து பேச்சு வார்த்தை முறிந்துவிடும் என பல சமயம் நான் நினைத்ததுண்டு. மூர்கமாய் கொதிநிலையை அடைந்து விலகி பின் மறுபடியும் அழைக்கப்பட்டு வேறு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்திருக்கிறது. அங்கு சண்முகம் தன்னை மிகத் தெளிவாக வரையறை செய்து கொண்டதை உணரமுடிந்தது. தன் மேலிடம் கூட்டணியை உறுதி செய்த பிறகு மாநில உடன்பாடு பேச்சு வார்த்தைக்கு செல்பவருக்கு என்ன இடம் அங்கு கொடுக்கப்படும் என்கிற கேள்வி ஆரம்பத்தில் எழவில்லை. ஆனால் சில நாள் பேச்சு வார்த்தைக்கு பிறகு தமிழக தலைவர்களுடன் அவர் உரையாடும் போது தான் அவரின் பிறிதொரு வடிவத்தை அறிந்து திகைத்திருக்கிறேன். அந்த சிறிய இடைவெளிகளில் தனக்கான அரசியலை முழுமையாக வென்றெடுக்கு நீண்ட அனுபவம் தேவையாகிறது. நான் கற்ற அந்த நுடபம் அபாரமானது


அந்த இடைப்பட்ட வேளைகளில் சண்முகத்துடன் தங்கி இருக்கும் சென்னை உடுப்பி விடுதியில் இரவு உணவிற்கு பிறகு அவர் தனது இளமை காலத்தில் திகழ துவங்குவார். அந்த உரையாடல்கள் வழியாக தஞ்சை சார்ந்த திமுக தலைவரை பற்றிய அவரது மதிப்பீடுகள் அவற்றில் நிகழ்ந்தவை நிகழாது போனவை அவற்றை ஒட்டி நிகழ்ந்த அரசியல் மாறுதல்கள் பற்றி விரிவாக சேசிக் கொண்டிருப்பார். மூப்பனார் ஏறக்குறைய அதே மனநிலை கொண்டவராக தலைவர் சண்முகத்தின் பேச்சின் வழியாக அறிந்து கொண்டிருக்கிறேன். தமிழக அரசியல் உச்ச கட்டத்தில் அவர் திமுக தலைவர் மற்றும் அதிமுக தலைவர்களுடன் சம காலத்தில் நல்ல நட்புறவுடன் இருந்ததை பார்ததிருக்கிறேன். சண்முகத்திற்கு உள்ள வாய்ப்புகளை போல மூப்பனாருக்கு இல்லை என்பது ஒரு முரண்பாடு. தமிழகத்தில் மூப்பனார் ஒரு குழுவின் தலைவர் இடத்தை மட்டுமே பெற்றிருந்தார். அதனால் அவர் மூன்று முணைகளில் தனக்கான அரசியலை கையாண்டார். காங்கிரஸின் தில்லி மற்றும் தமிழக தலைமை அத்துடன் கூட்டணி கட்சித் தலைவரை எதிர் கொண்டாக வேண்டிய சூழல் அவருக்கு இருந்தது. மூப்பனாருக்கு தமிழக அரசியலில் பல தனிப்பட்ட கணக்குகள் இருப்பதால் இந்திரா காந்தி காலத்தில்

திமுக தலைவர் தில்லி தலைமையை மூப்பனாரை வைத்து கையாளவதைவிட முக்கிய சமயங்களில் சண்முகத்தை பயனபடுத்தினார். பின்னர் மூப்பனார் அந்த இடத்தைப் பெற்றார். தமாகவை துவக்கிய பிறகு மூப்பனார் அகில இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றார். புதுவை அரசியலில் அவரது செல்வாக்கு முழுமையாக இருந்தது திமுக ஆட்சி கலைந்து காங்கிரஸ் தமாக கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்த போது


தலைவர் சண்முகத்திடம் நீண்ட காலம் நிகழ்த்திய உரையாடல்கள் வழியாக உருவான புரிதல்கள் புதுவை அரசியலில் என்ன வகையான மாற்றத்தை கொண்டு வரும் என்கிற ஊகம் அவருடன் பேசி பேசி மெல்ல உருவாக்கிக் கொண்டேன். கண்ணனை முன்பிருந்தே மிக அணுக்கமாக அறிவேன். அரசியலில் தனது இடம் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியவராக அதை நோக்கிய வெளிப்படையான அரசியலை கொண்டவர். இளைஞர் அமைப்பை ஒருங்கிணைக்க நினைத்து செய்த போது புதுவை தமாகா வை அதில் இணைக்க முடிவெடுத்தது இதன் பின்னணியில். அது ஒரு வகை அரசசியல் சூழ்தல். தலைவர் சண்முகம் தனது எதிர்ப்பை வைத்த போது அவர் மனம் சட்டென உருவாக்கிய கணக்குகளை உணர முடிந்தது அவரது மறுப்பு சொல்லின் பலவீனம் புரிந்து கொள்ள முடிந்தது. தனது நீண்ட அரசியல் அனுபவத்தில் இருந்து அவர் பெறும் ஊகங்கள் நான் நினைப்பதை விட பலநூறு மடங்கு விசை கொண்டது. அவர் தானாக உருவாகி வரும் ஒரு சந்தர்பத்திற்கு காத்திருக்கிறார் என மனம் ஊகித்தது. அது என் தளத்தில் துவங்க வேண்டும் என நான் நினைத்தற்கு பின்னால் உள்ள அரசியல் காரணிகளை மிக சரியாக புரிந்திருந்தேன். அதை நான் முயறசிப்பதை அவர் அறிந்து திகைப்புற்றார் என்றே உணர்கிறேன். அவர் என் வழியே செல்ல அனுமதித்தது அந்த உணர்வை நிஜம் என காட்டியது


புதுவை கூட்டணி அரசில் நீடிக்க வேண்டுமா என்கிற கலந்தாய்வை புதுவையில் நிகழ்த்த முடிவெடுத்தபோது அவர் மூப்பனாரின் முழு அதிருப்திக்கு ஆளானார். கண்ணன் ஒருங்கிய கூட்டத்திற்கு முன்பாக அவரது அலுவலகத்தில் நிர்வாகிகளின் கருத்துக் கேட்பு நிகழ்ந்த போது கண்ணன் மன நிலையை முழுவதுமாக புரிந்து கொண்டார். புதுவை தமாக நிர்வாகிகள் மூப்பனாரை ஏறக்குறைய சூழ்ந்து கூட்டணியில் இருந்து விலக நிர்பந்தித்த போது அவர் கண்ணனுக்கு எதிரான நிலையையில் மேலும் உறுதிப்பட்டார். கண்ணன் மூப்பனாருடான உறவு எப்போதும் மிகவும் சிக்கலானது. அதை ஆரம்பம் முதலே மிக தெளிவாக உணரும் வாய்ப்புகள் பெற்றது 1991 களில் மூப்பனாரின் இளைய சகோதரர் ரங்கசாமி மூப்பனாருடன் ஏற்பட்ட நெருக்கம். அதனால் தனது செல்வாக்காக மூப்பனாரை முன்வைத்த போது அதை நிராகரித்தேன். அவர் மூப்பனாரை மீறி தனி கூட்டணி கணக்கு பற்றிய சிந்தனையில் இருக்கிறார் என்பதை பிறர் நம்ப மறுத்தாலும் அதுவே நிகழும் என நான் அனுமானித்திருந்தேன். அதன் அடிப்படையில் அவரது இளஞைர் அமைப்பிற்கு நான் அழைப்பு அனுப்ப காரணமாக இருந்தது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்