https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஏப்ரல், 2023

“கீதா முகூர்த்தம்” - 9. * ஸ்வதர்மம் *

 


08.04.2023

கீதா முகூர்த்தம்” -  9.


* ஸ்வதர்மம் *






நாங்கள் அனைவரும்குடை கோவிந்தசாமி பிள்ளைகுடும்பத்தார் என்கிற பெயரில்  பிறரால்  நினைவு கூறப்படுபவர்கள் . அது இன்றளவும் எங்களுடைய அடையாளம். பெருமையும் கூட . சமூகத்தில் தாத்தாவின் இடம் அவரது செல்வந்தர் வாழ்கை பின்னணியில் அல்லது பதவிகள் வழியாக உருவானதல்ல . மிக மிக எளிய மனிதர்களாலும் அவர் இன்றளவும் நிறைவுறப்படுவது அவர் பெட்டியை தலையில் ஏந்திய எளிய குடை பழுதுபார்க்கும் தொழிலாளியாக வீதி தோறும் சென்று தொழில் பார்ப்பதில் துவங்கி , அவரது  பொருளியல் நோக்கிய பயணம் பெரும் வெற்றி பெற்ற அதே சமயம் அவரது அக மற்றும் புறவயமான ஆன்மீகப் பயணம் விரிவானது , கூர் கொண்டது . அவரது துடுக்குத்தணம் பற்றி அவரது இளமைகால நண்பர் என்னிடம் சொன்னது , அவர் தனது குடை பழுதுபார்கும் கடையை நேரு வீதியில் புதிதாகத் திறந்து அதற்குஇது குடைகளின் ஆஸ்பத்திரிஎன எழுதி வைத்திருந்து என்றார் . அது அவர் தனது  நிகழ்காலத்தில் மாற்று மனநிலையில் நிற்பதை எனக்கு புரியவைத்தது என நினைக்கிறேன் . அது ஒருவித மீறல் மனப்பான்மை . அங்கிருந்து அது அவரின் எல்லாவற்றிற்கும் இட்டுச் சென்றது . அவரைப் பற்றி என் தந்தை சொன்னது , பின்னர் அவரது காலத்தில் இருந்து கடையில் வேலை செய்யும் பணியாளர்கள் நினைவுகூர்ந்தது எனத் தொடங்கி நான் அவரை நேரில் பார்த்த உருவம் என அத்தனையும் இணைத்து ஒரு பொது சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறேன்


தாத்தாவின் இறுதி காலம் சுமார் பதினைந்து வருடம் நான் இருந்த வீட்டில் கழிந்தது . பாட்டியின் மரணத்திற்கு பிறகு சுமார் பத்து வருடம் கழித்து மண்மறைந்தார். அவருடன் அணுக்கமாக இருந்தது எனது தமக்கைகள் மீராபாய் மற்றும் லக்ஷ்மிபாய். எங்கள் வீட்டு அனைத்து பெண்களுக்கும் பண்டரிபுரம் சார்ந்த பெண்களின் பெயர்போல இறுதியில்பாய்என முடியும். துளசிபாய் சக்குபாய்,மீராபாய், சந்திரபாஹா,நாராயணி,லக்ஷ்மிபாய், ஜனாபாய், குணாபாய் . பண்டரிபுரம் அவரது வாழ்வின் இறுதி கணம் வரை தனது செல்வாக்கை செலுத்தியது.அவருக்கு வழிகாட்டியது. அவை அனைத்திற்குமாக காரணமாக அவரது ஆழ்மனம் இருந்திருக்க வேண்டும் . இன்று யோசிக்கும்போது உலகியலில் திளைத்து அது சொல்லும் அனைத்தையும் வென்று நிறுவியதாக நினைப்பவர்கள் அதை ஒரு நோய்கூறு போல சமூக ஆழ்மனதில் விதைக்கிறார்கள் . அங்கிருந்து பெற்றுக் கொள்பவர்கள் அதை தோக்கிய பயணமாக அந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் செலுத்துகிறார்கள்நிறைய வாசித்திருந்தவர்கள், நிறையப்பேசியவர்கள் கூட அதுவே வாழ்வியல் எதார்த்தம் என நினைத்து அதை உண்மையாகவே நம்பி வாழ்க்கையை பலிகொடுத்தார்கள் . அவர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் வாழ்வியல் வெற்றி என்பது இந்த இரண்டும் அல்ல என உறுதியாக நினைக்கிறேன்


உலகியல் என்பது மிகசராசரிகள்அதற்கு மேலே நின்று வாழ்கையை அர்த்தமுள்ளதாக்க முயற்சிக்கும் பிறருக்கு எதிரான வன்முறை ஒன்றை அன்றாடங்களின் பெயரால் யுத்தம் போல ஒன்றை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் . “சராசரிகளின்கருதுகோள் உழை,பொருளீட்டு , உண் , இறந்துபோ என்பதை நோக்கிய ஒற்றைப்படையான பயணம். வாழ்கையின வெற்றிக்கு இவை மட்டுமே என்பது பிறர் மீது அவர்கள் செலுத்தும் வன்முறை. நான் அந்த சராசரிக்கு மேலே  நின்றிருந்த சிலரை நோக்கி எனது பயணத்தை வரையறை செய்து கொள்ள நினைக்கிறேன். தினம் தொடுக்கப்படும் அந்த வன்முறைக்கு எதிராக நான் என்னை குவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெளியில் இருந்து அதற்கான ஆதாரத்தை திரட்டுவதை விட அதை வாழ்வியல் விழுமியமாக கொள்வதை விட என் குடும்ப மூதாதை செய்து நிறைவடைந்து சென்ற அந்த வாழ்கைமுறையையில் எனக்கானதை பெற்றுக் கொள்ள நினைக்கிறேன். பிற முயறசிகளை விட இது எனக்கு வசதியானது . நம்பகத்தன்மையுமையது .அதன் மரமணு தொடர்ச்சியால் சிறிய முயற்சியே கூட என்னை அதன் அருகில் கொண்டு வைத்துவிடக் கூடும்.


சராசரிகளுக்களுடன் வாழ்ந்து நிலைநின்று வெற்றி பெருவது வாழ்கைக்கு தேவை ஆனல் ஒரு எல்லைவரைக்கும் அது போதுமானது . அதிலேயே உழலும் போது அதன் எல்லையை தீர்மானிக்க இயலாமலாகி பின் அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. உறவை பிறகு புற உலகை கூட அது அங்கிருந்து நிர்ணயம் செய்கிறது. உறவிற்குள் வாழ்வியல் அறம் மற்றும் லட்சியங்களை மிக அழுத்தமாக பேசப்பட்ட எனது இளமைகாலத்தை இப்போது நினைவுறுகிறேன். அது எனக்கு சொல்லப்பட்ட காலத்தில் இளமை காரணமாக அவற்றை கருத்தில் கொள்ளாமல் கடந்து போயிருக்கலாம். தொடர்ந்து வலியுறுத்திய தாத்தா மற்றும் எனது தந்தை தனக்கு அப்பால் இன்னொறு தலைமுறையை உருவாக்கிச் செல்கிறார். அன்று மறுத்து ஒதுங்கி ஒதுக்கி. பின் ஒருநாள் அங்கு சென்று சேரும் பாதையை கண்டடைவது ஒருகீதா மூகூர்த்தம்”  . காரணம் அவர் விதைத்த விதை எங்கோ ஆழ்மனத்தில் படிமமாகிறது அதற்கு தேவையான நீர் என்றாவது அதில் வார்க்கப்படுகிற போது  அத்தனை வருட வளர்ச்சியை திரட்டி நிமிடத்தில் காட்டி விடுகிறது


வாழ்வியலில் அறம் மற்றும் லட்சியம் என்கிற வரையறைகளுக்கு உலகியலில் எந்த மரியாதையும் இல்லை என எதிர்த்து வாதிடும் அனைவரும் தாங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் ஒரு உலகிற்கு மூப்பின் அடிப்படையில் ஒருநாள் வந்து சேர்கிறார்கள். அதுவரை அவர்களை இயக்கிய விசை காணாமலாகி பொருளிழந்து போகும் ஒரு முணை ஒன்று வாழ்கையில் இறுதி காலத்தில் அவர்களுக்காக காத்திருக்கிறது . அங்கு வந்து சேர்ந்ததும் அனைத்தின் மீது கசப்பும் வசையும் கொண்டவர்களாக , அனைத்தினாலும் அனைவராலும் கைவிடப்பட்டவர்களாக அந்த இறுதி புள்ளியை சென்று சந்திக்கிறார்கள். அதுவரை வாழந்த வாழ்கைக்கு அது தரும் அர்த்தமின்மையின் கணம் மிக கொடிய தண்டனை.அதை சந்திக்காத ஒருவர் கூட இந்த உலகில் இருக்க முடியாது


தாத்தா இரண்டிற்கும் மத்தியில் தன்னை வைத்துக் கொண்டவர் என்பதுடன் , அவரது தேடலையும் அதை நோக்கிய பிசிறில்லாத பயணமும் என்னை பிரமிக்க செய்வது . என்னுடைய தேடல் என நினைக்கும் அத்தனையும் அங்கிருந்து என் தந்தை வழியாக எனக்கு கையளிக்கப்பட்டதாக உணர்கிறேன். தாத்தாவின் அனைத்து செயல்பாடுகளிலும்புண்ணியம்என்கிற கருதுகோள் வழியாக மறுமை வாழ்கை பற்றிய சிந்தனை அவரை அன்றாடத்தில் நிலைகொள்ளச் செய்யாமல் தன்னறத்தில் இருக்க வைத்தது  . இன்று அனைத்து அகக் கொத்தளிப்பையும் இலக்கிய வாசிப்பின் வழியாக அதன் புரிதலின் நோக்கி செல்ல முயல்கிறேன். இங்கிருந்து அவரது வெற்றிகரமான  பல பாதைகளும் அது சென்று சந்திக்கும் ஒரு புள்ளியை என்னால்  பார்க்க முடிகிறது . தர்ம சிந்தனை , பல்லுயுர் ஓம்புதல் மற்றும் கோவில் கைங்கர்யம் என இவ்வுலகில் வாழ்கையில் ஒரு நாள் அந்த வாழ்வை துறக்கும் ஒரு மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்று பிறிதில்லை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள திறந்து வைக்கிறது என்றால் அது அவர் உறுதியாக பற்றி நிற்கும்தன்னறம்என்கிற சொல்லே பதிலாக இருக்க முடியும் . அந்த கனவு ஒருநாள் உண்மையில்லை என்றானாலும் அதன் பொருட்டு வாழ்ந்தது தன்னளவில் நிறைவானது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்