https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 ஏப்ரல், 2023

அடையாளமாதல் * மெல்லத் திரள்வது *

 




ஶ்ரீ:



பதிவு : 676  / 865 / தேதி 26 ஏப்ரல்  2023



* மெல்லத் திரள்வது * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 74.






திமுக உடனான கூட்டணி நீடிக்கும் என அவர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்தது கண்ணனை கொந்தளிக்க செய்தது. கண்ணனைப் பற்றிய எனது புரிதலும், மூப்பனாருடனான அவரது உறவைப் பற்றி முன்பே அறிந்திருந்ததனால் கண்ணன் குறித்த எனது கணக்குகள் அனைத்து காலகட்டத்திலும் மிக இயல்பாக பொருந்தி போனது. அதற்கான காரணமாக இரண்டை சொல்லுவேன். ஒன்று அவரை மிக அருகில் இருந்து பார்த்து அவதானித்தது இரண்டு அவற்றை ஒட்டி பின்னாளில் தலைவர் சண்முகம் கூற்றாக பல முறை கேட்டது. புதுவை அரசியலாளர்களில் சண்முகம் மட்டுமே கண்ணனை மிக தெளிவாக வரையறை செய்தவர் . அவரிடம் இருந்து எனது கருத்துக்களை கூர்படுத்திக் கொண்டேன். கண்ணனை பற்றிய அவரது அவதானிப்புகள் இரண்டும் ஏறக்குறைய ஒன்றுஒன்று கண்ணன் என்றும் யாரையும் தனக்கு மேல் என வைத்து பணிந்ததில்லை. இரண்டு தனக்கான அரசியலை எந்நிலையில் நின்று வென்றெடுக்கவும் அவர் தயங்கியதில்லை. அரசியலில் அவர் தொட வேண்டிய உச்சத்தை இழந்தது போனது இந்த மனநிலை காரணமாக . அதையே இப்போதும் எடுத்தார் புதுவை அரசியலில் தனக்கான கரு உருவாகி வரும் என கணக்கிட்டிருந்தார். அவரது இளைஞர் அமைப்பிற்கு அழைப்பு விடுத்தது நான் உருவாக்கியது அவர் நினைத்த அந்த கருவிற்கு மிக நெருக்கமானது என்பதால் எனது கணக்கு மிக சரியாக அந்த காலகட்டத்தில் பொருந்துப் போனது. ஆனால் அதன் பின்னால் எனக்கு வேறு கணக்குகள் இருந்தன


புதுவை கூட்டணியில் இருந்து கண்ணனை மூப்பனாரால் வெளியேற சொல்ல முடியாது. அவர் வாஜ்பாய் அரசாங்கத்தில் பங்கு பெற்றிருப்பதால் அவரது அகில இந்திய அரசியல் நிலைபாடுகளை அது பாதிக்கும். கண்ணனின் நிலையில் அன்று மூப்பனாரும் இருந்தார். அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் பா.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் அவருக்கு எதிரான மனநிலையில் இருந்தனர்

அது கண்ணனுக்கும் தெரியும். புதுவை கூட்டணியில் இருந்து வெளியேற கண்ணனுக்கு மூப்பனாரின் ஒப்புதல் தேவையில்லை. அவரது தயக்கத்திற்கு காரணம் முக்கிய அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணனுக்கு எதிராக இருந்தனர். மூப்பனாரிடம் அவர்கள் காட்டிய நெருக்கம் கண்ணனை கொந்தளிக்கச் செய்திருந்தது. கண்ணன் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தாலும் அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு உடன் பட மாட்டார்கள். அவர் மிக சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார். நான் அந்த அதை அவருக்கு உருவாக்கி கொடுக்க முடியும் என கணக்கிட்டிருந்தேன்


தனது அகில இந்திய நிலைப்பாட்டிற்கு மூப்பனார் திமுக தலைவர் கருணாநிதி சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. அவரைப் பற்றி மூப்பனாரின் கணக்குகள் மிக சரியானவை. அரசியலில் ஆரம்பம் முதல் வணங்காத தலை கொண்டவராக உருவான மூப்பனாரும் நெருக்கடி அரசியலில் அழுத்தமும் நகர்வும் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டவராக திமுக தலைவர் கருணாநிதியும் அவரது வளர்ச்சியும் அவர் அறிந்து நிகழ்ந்த ஒன்று. அவரது நிலைபாடு திமுக அரசை தமிழகத்திற்கு பெற்றுத் தந்த விதத்தை அறிந்திருந்தாலும் அகில இந்திய அரசியலில் களம் கண்டவர்களுக்கு மாநில அரசு என்பது எப்போதும் பொருட்டல்ல. காரணம் அதை உருவாக்கும் கருவிகள் எப்போதும் சிக்கலானவை உணர்சிகரமானவை. கருத்தியல் அரசியல் அங்கு ஒரு போதும் எடுபடாது. தமிழக அரசியலில் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாட்டை எடுப்பதில் மூப்பனாருக்கு விருப்பமில்லை. காரணம் அதுநாள் வரை முன்வைத்த அவரது தன்றத்திற்கு எதிரானது. மூப்பனாரை மிக அனுகி புரிந்து கொள்ள வாழப்பாடி ராமமூர்த்தியின் அனுகுமுறையை அவதானிக்க வேண்டியிருக்கும்


காங்கிரஸில் வளர்ந்திருந்தாலும் தமிழக அரசியலை எதிர் கொள்ள திராவிட பாணி அரசியலை முன்வைப்பவர் வாழப்பாடி ராம்மூர்த்தி. தடாலடியான பேச்சும் அதே சமயம் செறிவும் பகடியும் வெளிப்டுபவையாக அவை இருந்திருக்கின்றன. ஈவிகே.இளங்கோவன் அதே பாணியை கொண்டிருந்தாலும் பேச்சில் தற்கால அரசியல் சாய்வு மற்றும் சரிநிலைகளை அனுசரித்திருக்கும். பேச்சில் கௌரவமில்லாதவராக அவரை அறிந்திருக்கிறேன். அதற்கு நேர் எதிரானவர் வாழப்பாடி ராம்மூர்த்தி. காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்கி திமுக வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கும் சூழல்சன்டீவி தொலைகாட்சி பேட்டி ஒன்றில் அப்போதைய திமுக ஆதரவாளராக அறியப்பட்ட ரபி பெர்னாட் வாழப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க்கும் திட்டமிருந்ததுராஜிவ் காந்தி கொலையில் வாழப்பாடி கருணாநிதியை நேரடியாக தொடர்பு படுத்தி பேசியதை இப்போது காங்கிரஸில் இல்லாததாலும் திமுக உடனான கூட்டணி நிர்பந்தம் காரணமாகவும் தனது கருத்தை மாற்றிச் சொல்லுவார் என அவர் கணக்கிட கூட்டணி பற்றிய கவலையில்லாமல்கருணாநிதி ஜெயின் கமிஷன் முன் ஆஜராகி தனது நிருபித்துக் கொள்ளட்டும்என்றார். அன்றிரவே கூட்டணி முறிந்து போனது. அதை தொடர்ந்து தமிழக அரசியலில் இருந்து வாழப்பாடி காணாமலானார்.


1998களில் மத்திய அரசு சமச்சீர் வரியை கொண்டு வந்த போது ஒரு வியாபாரியாக அதன் சாதக பாதகங்களை அறிந்திருந்தேன். அதன் ஒற்றை ஆம்சம் புதுவை போன்ற மாநிலத்திற்கு ஒவ்வாது என கணக்கிட்டிருந்தேன். இளைஞர் அமைப்பு சார்ந்து ஒரு சாதாரண போராட்டமாகத்தான் அதை முன்னெடுத்தேன் . காங்கிரஸ் அமைப்பு புதுவையில் நீண்ட கால ஆட்சியில் இருந்து கொண்டிருந்ததால் அதன் போராட்டங்கள் மிக மிக சம்பிரதாயமானவை. அகில இந்திய அளவில் தனது கருத்தியல் எதிர்பை பதிவு செய்து ஒதுங்கிக் கொள்ளும். தொடர்ச்சியாக ஒற்றை திட்டத்துடன் முட்டும் போராட்டங்களை அது செயல்படுவதில்லை. எனது கணக்கு ஒன்றை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் மூலம் மாநில முழுவதுமாக அதை பற்ற வைக்க முடியுமானால் அனைத்து தொகுதிகளையும் ஒன்றிணைக்க எனக்கு ஒரு வாய்ப்பு அமையும். பல ஆண்டுகளாக சிறுக சிறுக உருவாக்கிய  அமைப்பை அதைக் கொண்டு ஒருங்கிணைக்க முடியும் என திட்டமிட்டு செயல்படுத்த துவங்கினேன். முழு ஒருங்கிணைப்பு உருவாகி வந்தது. தொடர்ச்சியாக பல்வேறு இடத்தில் போராட்டம் பல வடிவத்தில் நிகழ்ந்து தினமும் நண்பர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ் கட்சியின் வழக்கத்திற்கு மாறான தொடர் போராட்டம் பிற இளைஞர் அமைப்பிடம் அணுகி உரையாடும் இடத்தை அது எனக்கு 

எனக்கு உருவாக்கித் தர நான் அதை இணைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன். அது அனைத்து இளைஞர் அமைப்பையும் ஒருங்கிணப்பது


துவக்கிய மிக குறுகிய காலத்தில் அவற்றை ஒற்றை அமைப்பாக திரள வைக்க முடிந்தது பின் அனைத்தையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் அதை பெரிய போராட்டமாக முன்னெடுத்தேன். புதுவை மட்டுமின்றி காரைக்காலிலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. அது ஏறக்குறைய கம்யூனிஸ போராட்ட முறைக்கு மிக அணுக்கமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் முதலில் வந்திடைந்தார்கள் பின்னர் அனைத்து கட்சி இளைஞர் அமைப்பை ஒருங்கு திரட்டுவது எளிதில் நிகழ்ந்தது. 30 சட்டமன்றங்களை கொண்ட புதுவையின் 21 சட்டமன்றத் தொகுதிகளை குறிவைத்து முதல் கட்ட பிரச்சாரம் துவங்கப்பட்டது. பின் மெல்ல மாநில அளவிலான போராட்ட இயக்கமாக அதை மாற்றினேன். மெல்ல அதன் முகம் திரண்டு கொண்டிருந்ததை பார்க முடிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...