https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

அடையாளமாதல் * ஊகமும் நிஜமும் *

 


ஶ்ரீ:



பதிவு : 671  / 860 / தேதி 02 ஏப்ரல்  2023



* ஊகமும் நிஜமும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 69.






இரவு உணவிற்கு பின் படுக்கையில் நீண்ட நேர சிந்தனையை தவிர்க்க இயலவில்லை. அடுக்கடுக்காக நிகழ இருக்கும் அரசுசூழ்தல் முடிவுகளும் அதை நோக்கிய நகர்வுகளும் இனி புதுவை அரசியலை முடிவு செய்ய இருக்கின்றன. கண்ணன் திமுக கூட்டணி அரசில் இருந்து வெளியேற ஒரு சந்தர்ப்பம் எதிர் நோக்கி இருக்கிறார் என்பதால் நான் ஒருங்கிணைக்கும் ஆலோசனை கூட்டத்தில் நமச்சிவாயம் கலந்து கொள்ளக் கூடும் என்பது ஒரு ஊகம் மட்டுமே. நான் அனுப்பிய அழைப்பு மிக சரியாக வேலை செய்தது. நான் நீட்டிய கரம் ஒரு சமிக்ஞை. இந்த களத்தில் நான் மட்டும் தனித்து எதுவும் செய்து விட முடியாது என அறிந்திருந்தேன் ஆனால் அரசியல் களத்தில் புதிய சக்தியாக இளைஞர் காங்கிரஸ் உருவெடுப்பதை மாநில அரசியலில் ஊடுருவி எங்களுக்கான களத்தை எடுத்துக் கொள்ள இருப்பதை இந்த முயற்சி பகிரங்கப்படுத்தும். அதுவரை அரசியலில் நேரடி பங்களிப்பில்லாத துணை இயக்கமாக இருந்த அமைப்பை முதல் தளத்திற்கு நகர்த்தும் முயற்சியாக பிற தலைவர்களால் . கூட்டணி குறித்து தனி பார்வை இருப்பதும் அதற்காக முடிவெடுக்கும் சுதந்திரம் எனக்கு அளிக்கப்பட்டிருபதாக நான் வெளிப்படுத்துவது பாவணை. ஒரு நகர்வு மட்டுமே. நிஜத்தில் அது அப்படியல்ல. ஆனால் அரசியலில் பாவணை நிஜத்தை விட பலம்மிக்கது



ஆலோசன கூடுகையல் எங்களுக்கான இடம் குறித்து அவர்கள் பேசி சென்றாக உணர்ந்தேன். பேரணியை கலகமாக மாற்ற அவர்கள் நினைப்பது எனக்கு உடன்பாடானதல்ல என்றாலும் அரசியலில் அது மிகவும் பொருட்படுத்தக்க கருத்து. இது நான் சார்ந்த இயக்கம் மட்டுமின்றி பிற இயக்கத்தையும் உள்ளடக்கி துவங்கியது என்பதால் அவர்கள் இதை என் முன் வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி புதுவையில் முதன்மை இயக்கம். அது சண்முகத்தின் கணக்கில் இயங்குவது. இனி இதில் எனக்கான தனிப்பட்ட உணர்வுகளை தவிர்த்து கூட்டு முடிவிற்கு உடன் பட வேண்டியிருக்கும். அதற்கு முன்பாக தலைவரிடம் இது குறித்து பேசியாக வேண்டும்


அதிகாலைக்குள் தலைவரை சென்று சந்திக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தேன். நீண்ட நேரம் கழிந்த பிறகே படுக்கச் சென்றேன் . படுக்கையில் அடுத்தடுத்த திட்டங்கள் தன்னிச்சையாக மனதில் உருவாகி வலுப் பெற ஊகங்கள் பெருகியபடி இருந்ததால் தூக்கமின்மையை உணர்ந்தேன். துங்குவதற்கு மனதை ஒருமுகப் படுத்த முயன்றது தோல்வியில் முடிந்தது. மன வேகமாக தன்னிச்சையில் செயல்படுவது. இனி அது நிற்கப் போவதில்லை. ஒரு கணக்கில் இருந்து மறுத்து பிறிதொன்றிற்கு தாவிய படி இருந்தது. அரசியல் எனக்கு பழக்கப்படுத்திய சிந்தனை முறை . அடுத்தடுத்து நிகழ இருப்பது வரைபடம் போல மனதில் முழுமையாக எழுந்தது நின்றது. இரவு ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சட்டென செல்பேசி ஒலி எழுப்பி சிந்தனையை தடுத்தது. யார் இந்த நேரத்தில்? ஏதாவது தவறுதல் அழைப்பாக இருக்கலாம் என நினைத்தேன். இல்லை . தலைவர் சண்முகத்திடமிருந்து. முழு விழிப்பு வந்து போனை எடுத்த போது குரலை மிக சாதாரணமாக வைத்துக் கொள்ள முயன்றேன். “என்ன செய்கிறாய்என அபத்தமாக ஆரம்பித்தார்.மனதில் எழுந்த சிரிப்பை அடக்கிய படி அவரே தொடரட்டும் என காத்திருந்தேன்


உரையாடலில் தலைவர் எப்போதும் உறுதியானவர் அவரை சந்திக்க வருபவர்ககள் தங்களது சிக்கல்களை அல்லது தனது தரப்பு நியாங்களை வைக்கும் போது அவர் ஒரு சொல் சொல்லாது அவர்களை மேலும் மேலும் பேச அனுமதித்து அவர்களை சொல்லின்மை நோக்கி நகர்த்திச் செல்வதை விளையாட்டு போல செய்வார். உரையாடல் எப்போதும் எதிர் தரப்பு தன்னை முன்வைக்கும் போது பெருகி செறிவாக வளர்ந்த படி இருப்பது. அதற்கு பின்னால் தான் பேசும் ஆளுமையின் பலம் வாய்ந்த அகம் அதன் உள்ளுறையாக இருக்கும். எளிய மனிதர்கள் அங்கிருந்து தன்னை தொகுத்து கொள்ள முடிந்தால் மிக சிறப்பாக தன் தரப்பை வைக்க முடியும். ஆனால் சண்முகம் போன்ற ஆளுமைகள் ஒரு உரையாடல் துவங்கும் முன்பாக அதன் இறுதியை அறிந்து விடுவார்கள். பின் ஒரு போதும் தங்கள் வார்தைகளை செலவு செய்வதில்லை. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களே அதை பேசி தீர்க்க காத்திருப்பார்கள். அதனால் மிச்சமில்லாத சொல் விடுபடாத உரையாடல் நிகழ்ந்து முடியும். அதன் பின் எந்த சமாதனமும் சொல்லாமல்பார்க்கலாம் பேசி சொல்கிறேன்என்கிற சம்பிரதாய வார்த்தைக்கு அப்பால் சொல்லமாட்டார்கள். இனி தலைவர் என்ன செய்யக் கூடும் என்பதை அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவார். தன்னை விட பலம் வாய்ந்த ஆளுமைக்கு எதிராகவும் பேச இடமளிப்பார்அது ஒரு வகை ஜனநாயக மரபாக அவரால் பேணப்படுவது. எவராலும் கடக்க முடியாத மௌனமாக அது எப்போதும் இருப்பது


சிறிது மௌனம் பின் சற்று கனத்த கலந்த குரலில்ஆலோசனை எப்படி போனதுஎன்றார்.சண்முகம் பாணி காத்திருத்தலில் வென்ற எண்ணம் எழுந்த போது முகத்தில் புண்ணனையை உணர்ந்தேன்.அதே சமயம் அதை குரலில் வெளிப்படுத்தாமல் கூட்டத்தில் யார் யார் என்னென் பேசினார்கள் என்பதை சுருக்கமாக சொல்லினேன். நமச்சிவாயம் வந்தது பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் அவராக கேட்கும் வரை காத்திருக்க முடிவு செய்திருந்தேன். நமச்சிவாயம் வந்து கலந்து கொண்டது அரசியல் முக்கியத்தும் வாய்ந்தது. புதுவை மாநில அரசியலில் இனி முதலில் நிகழ இருப்பது முடிவு செய்வது. தலைவருக்கு முதல் தரப்பு செய்தி ஏதாவது கிடைத்திருக்க வேண்டும். அது அவரை அமைதியிழக்கச் செய்து அவரை காலை வரை பொருத்திருக்க வைக்க முடியவில்லை என்பதின் வெளிப்பாடு இந்த அலைபேசி அழைப்பு


நான் ஊகித்தது சரி புதுவை அரசியலில் காய்கள் கருக் கொள்ளத் துவங்கிவிட்டது. இனி நகர்வுகளுக்கு பஞ்சமிருக்காது. தலைவரை தூங்க விடாது தொந்தரவு செய்யும் கணக்குகள் எழத் துவங்கி இருந்தன. காலையில் என்னை சந்தித்த உளவுத்துறை அதிகாரி நமச்சியவாயம் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டதை சொல்லியிருக்க அவருக்கு சொல்லியிருக்க வேண்டும். கண்ணன் தனது நகர்வை முடிவு செய்துவிட்டதை உணர முடிந்தது. “நமச்சிவாயம் வந்தாராய்யா”? என்றார் நேரடியாக. குரலில் பகடி இருந்தது. நான் அதற்கு மேல் அதை இழுக்க விரும்பவில்லை முழுமையாக அனைத்தையும் பின்னர் எனது ஊகத்தை சொன்னேன். நீண்ட நிசப்தம். பின்வீட்டிற்கு வாஎன்றார். நான்இப்போதா?” என கேட்கவில்லை. உடன் கிளம்பிச் சென்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...