https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 ஏப்ரல், 2023

அடையாளமாதல் * நேரத்திற்கு மாறும் கணக்கு *

 



ஶ்ரீ:



பதிவு : 673  / 862 / தேதி 15 ஏப்ரல்  2023



* நேரத்திற்கு மாறும் கணக்கு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 71.







காலை அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பின் இணை செயளாலர் நண்பர் முருகன் மற்றும் தமாக இளைஞர் அமைப்பின் தலைவர் நமச்சிவாயம் மட்டும் வீட்டிற்கு வந்திருந்தனர் . மற்றவர்களுக்கு தகவல் இப்போது சொல்ல வேண்டாம் என முடிவு செய்திருந்தோம். முருகன் ஊர்வல இறுதி கட்டத்தில் சில மாற்றம் செய்வது பற்றி பேச நமச்சிவாயம் அமைதியாக இருந்தார். “இந்த தருணம் நமக்கு மிக முக்கியமானது. அரசியல் பெரும் மாற்றம் கண்டு வருகிறது அதன் துவக்கமாக இது இருக்கலாம் .அதை நமது அரசியல் நகர்வாக என் வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்றார். மேலதிகமாக அவரே சொல்லி முடிக்க காத்திருந்தேன். ஊர்வல நிறைவில் நடக்கும் ஆர்பாட்ட கூட்டத்திற்கு பிறகு நாம் ஏன் வலிந்து தபால் நிலையத்திற்குள் நுழைய முயலக்கூடாது. காவல் துறை தடியடி நடத்தினாலும் ஆர்பாட்டம் உக்கிர நிலையை அடைவது மறுநாள் முக்கிய செய்தியாகும். ஆளும் அரசில் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் தாமாக நம்முடன் இருப்பது அரசிற்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்றார். காவல் துறை மூர்க்கமாக நடந்து கொண்டால் அதை காரணம் சொல்லி அந்த கட்சியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான கண்ணன் ஆட்சியை விட்டு வெளியேறுவார். அவர் ஒரு காரணத்திற்கு காத்திருப்பது நாம் அறிந்ததுஇது அரசியலில் நமது இடம் மட்டுமல்ல இனி வர இருக்கும் ஆட்சி நோக்கிய நமது முதல் நகர்வாக இருக்கும்


ஆட்சியில் பங்கு வகிப்பது எங்களுக்கு பல ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு என்றாலும் ஆளும் அரசு குறித்து கட்சியில் நிறைய அதிருப்தி நிலவுகிறது. ஆட்சியில் இருப்பது பற்றிய எண்ணம் எங்களுக்கு எப்போதும் செயலூக்கத்திற்கு மட்டுமே. ஆனால் புதிய தலைமுறையை உருவாக்கி அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு அருகில் செல்லும் வல்லமை உங்களுக்கு இருக்கிறது. முதல் முறையாக தாய் மைப்பை சார்ந்திருக்காமல் அரசியலில் புதிய கூட்டணிக்கு ஒரு முன் வரைவை கட்சிக்கு அளிக்க நீங்கள் முயல்வது இதுவரை கட்சி அரசியலில் இல்லாதது. உங்களுக்கும் இது போராட்டம் மட்டுமே. ஆட்சி மாற்றம் குறித்த கணக்குகள் இல்லை என்றால் தமாக வை அழைக்கும் அவசியம் வந்திருக்காது என்றார்


இனியும் அது போல நிகழும் வாய்ப்பு குறைவு. நீங்கள் முயற்சிக்கும் இதை செய்ய உங்கள் தலைவர் எப்படி ஏற்றார் என எனக்கு புரியவில்லை. இங்கிருந்து நிகழும் அனைத்தும் மாநில அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என அவரும் கணித்திருந்தால் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அரசியலில் நிகழ்ந்து கொண்டிருப்பதை மாற்றி புதிய துவக்கம் கொடுக்க முயலும் இந்த சந்தர்ப்பத்தை மிக சரியாக அணுகி இருக்கிறீர்கள். நாங்கள் அதை ஒட்டி இறுதி தருணங்களில் சில அரசியல் நாடகீய மாற்றங்களை முன்வைக்கிறேன் இது அதற்கான மிக சரியான தருணம் என்றார். நமச்சிவாயம் அமைதியாக இருந்ததால் இது அவர்கள் இருவரும் பேசி முடிவெடுத்தாக இருக்க வேண்டும். முதல் நாள் காலை உளவுத்துறை அதிகாரி சொல்ல வந்தது இது தான் போலும். இருவரும் பேசி முடிவு செய்திருக்கிறார்கள் என்றாலும் தமாகா வின் பங்கெடுப்பிற்கு பிறகு ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பது அரசியல் நீதியில் முக்கியத்துவம் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட முடியாது


புதுவை ஆளும் திமுக கூட்டணியால் இருந்து வெளியேற வேண்டும் என இரண்டாண்டு காலம் கண்ணன் மூப்பனாருக்கு பல வகையான அழுத்தம் கொடுத்தும் மூப்பனார் அதற்கு உடன்படவில்லைதமிழக தாமாக தலைவர் மூப்பனார் அகில இந்திய அரசியல் குறித்த உட்கட்சி நெருக்கடியில் இருந்தார்

பிரதமராகும் வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி தனது அரசியல் சாதுர்யத்தால் தடுத்துவிட்டார் என எங்கும் அலர் சூழ்ந்திருந்தது. திமுக தலைவர் எப்போதும் நம்பத் தகுந்தவர்  அல்லர் என்கிற கருத்து அவருக்கு மிக ஆழமாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் தில்லி அரசியலில் அதற்கான வாய்ப்பிருந்ததா ? என்பது ஒரு ஊகம். அது முதல் நிலை . அப்போதைக்கான கணக்குமேலதிகமாக அதன் பொருட்டு பிறரின் தேவை மற்றும் அவதானிப்புகளாக அவை திரண்டிருக்க வேண்டும். இது இரண்டாம் நிலை. மூன்றாம் நிலை அதனால் லாபமடையக் கூடியவர்கள் செயலில் இறங்கும் போது களம் கொதிநிலை அடையும். அங்கிருந்தே புதிய வார்ப்புகள் வடிக்கப்படுகின்றன. கருணாநிதி போன்றவர்கள் தில்லியில் தங்களின் பிரதிநிகளை நிலை பெறச் செய்து பல பத்தாண்டுகளாகிறது. அதன் தலைவர் போன்று முரசொலி மாறன் செயல்பட்டு வந்தார். அவருக்கு இணையாக பிறிதொரு குழுவை உருவாக்குவதோ நிலை கொள்ள செய்வதோ எளிதல்ல


தில்லி ஒரு தந்திர பூமி அரசுசூழ்தல் நிமிடத்திற்கு ஒரு முறை புரண்ட படி இருப்பதால் அதன் மீது உறுதியான எந்த கட்டுமானத்தையும் மதிப்பீடுகளையும் வைக்க முடியாது . துவக்கத்தில் பல கணக்கோடு செயல்பட்டவை கள முரணியக்கத்தால் யாரும் கணிக்கிடாத ஒன்றை விடையாக தருவதை பல முறை பார்த்திருக்கிறேன். கருணாநிதி கள முரணியக்க கணக்குகளை மிக சரியாக கையாளத் தெரிந்தவர்களை தில்லியில் நிலை கொள்ளச் செய்திருக்கிறார். அவருக்கான வாய்ப்புகள் அகலமும் ஆழமும் கொண்டவை. கட்சியின் எல்லையை விட்டு விரிந்து செல்லக்கூடியவை. அதில் மூப்பனார் போன்றவரும் நீண்ட கால விற்பன்னர் என்றாலும் ஏன் அமைதியாக இருந்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்யம். அரசியலில் தன்னை, தன் வல்லமயை தனக்கான வாய்ப்பை அறிந்தவர்கள் மிக குறைவானவர்கள். அவர்கள் அரசியலில் வீண் கனவுகளை வளர்த்துக் கொள்வதில்லை. என்றாலும் களமும் காலமும் அவர்களை அமைதியா இருக்க விடுவதில்லை. முடிவெடுக்கும் இடத்திற்கு நகர்தப்படுவதும். எடுத்த முடிவினால் சிக்குண்டு போவதையும் பார்த்திருக்கிறேன். நான் கற்ற அரசியலில் காமராஜர், மூப்பனார் துவங்கி சண்முகம் வரை அது நீண்டிருப்பதை அறிந்திருக்கிறேன். அகில இந்திய தலைவர் பொறுப்பில் காமராஜர் அமர்ந்து செய்த அரசியல் நகர்வுகள் இந்திராகாந்தி போன்ற தலைமை உருவாக காரணமாக இருந்தது. அதனாலேயே பிற்காலத்தில் அவருடன் இணக்குமாக செயல்பட அவரது தன்மானம் இடம் தரமால் போனதால் அரசியலில் தனது இடத்தை இழந்து போனார். மூப்பனார் மற்றும் சண்முகம் மிகவும் அஞ்சும் நிலை அது. ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் ஊழ அங்கேயே சென்று அவர்களை காத்திருந்தது


அரசியிலை தங்களுக்கு மேலாக நினைக்கும் காலமும்,சூழல் தரும் நெருக்கடிகளால் தங்கள் திறமையை அனுபவத்தை முன் வைக்கும் போது எங்கோ சமநிலை குலைந்து அரசியல் பின்னுக்கு இழுக்கப்பட்டு அனுபவம் முன்னே வந்து நிற்கும் போதுநான்என்கிற தருகல் நிகழ்ந்து அவரிடம் இருந்து பிறரை விலக வைத்துவிடுகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக