https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 30 மார்ச், 2024

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

 புதுவை கூடுகையில் எனது உரை



  1. செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம். அதன் வழியாக நேர் அல்லது எதிர்மறையாக வளர்கிறது. அதன் முடிபுகள். உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது நமது முடிவாக காலத்தில் நீண்டு விடுகிறது. மனம் மட்டுமின்றி புலன்களும் ஒரு ஊகம் மட்டுமே பிரம்மமே அதன் இறுதியை அறிகிறது.அவர்கள்கதைகளால் உண்ணப்படுபவர்கள்.
  1. வாழும் காலத்தில் பரு ஒளியால் உருவாகி பின் நிற்கும் நிழலை போல வாழ்நாள் புகழ் அல்லது இகழும் ஒரு நிழலைப் போல இங்கே விழுந்து கிடக்கிறது
  1. ஊழ்கம் தன் எல்லைகளை தீர்மானித்து பின் வழிகளை சொல்லுகிறது. ஒவ்வொருக்கும் அது தனித்தது.அது உள்ளம் என்பது நீயல்ல என்பதை முதலில் விளக்குகிறது. பட்டில் பொதிந்த கருங்கல் என.
  1. கூட்டு நனவிலி பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அது உலகின் அனைத்து உயிர்களுக்குமானது. ஊழ்க முயற்சியில அன்னை நாரையின் விழிகளில் தெரிவதை பார்த்து அஞ்சி விலகுகிறாள். அது அவள் ஆற்றிய நாரை கொலைகளை நினைவுறுத்துகிறது. பெண் என அவன் வெளிப்பட்டு அவற்றின் அன்னையாவதுடன் அவளது ஊழ்கம் நிறைவுறுகிறது
  1. இடம் மாறுவது ஆண் பெண் என பிரிந்து விடுகிறது. பெண் என குவியும் போது ஆண் என சிதறி பரவுகிறது
  1. அன்னையின் அன்பை முதலில் பெறாதவன் எப்போதும் திறன் மிக்கவன். அவனது அகப் பயணம் அங்கிருந்து துவங்குகிறது










வெள்ளி, 8 மார்ச், 2024

சிங்கை பயணம்


 


சிங்கப்பூர் செல்வது பற்றி மனைவி கடந்த ஒரு வருடமாக சொல்லி சொல்லி என்னை ஒருவாரு தயாராக்கி இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நான் வீட்டை விட்டு வெளி கிளம்புவதை விரும்புவதில்லை. மாலை கடற்கரை நடைக்கு மட்டுமே வீட்டைவிட்டு கிளம்புகிறேன்.   என்னை சூழ்ந்திருக்கும் உலகியல் வாழ்விற்கு அவளே கடைசி தொடர்பு என்பதால் அவள் விரும்புவதை நான் மறுப்பதில்லை. சில காலமாக எனக்குள் என்ன நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றி நான் இன்னும் அவதானிக்க வேண்டி இருக்கிறது. சமீப காலமாக நான் வலைப்பூ தளத்தில் எழுதுவது கூட சற்று நின்று விட்டது. நிறைய எழுதி இருந்தாலும் அதில் நான் நினைக்கும் மொழி அல்லது கருத்து கைவரவில்லை. அது போன்ற ஒன்று நிகழும் என ஜெயமோகன் சொல்லுவதுண்டு. அதை இப்போது புரிந்து கொள்கிறேன் . அந்த சூழல் வரும் போது எதையும் எழுத தோன்றாது. ஒரு ஊழ்கம் போல அது மறுபடி வரவேண்டும் அது வரை காத்திருக்க முடிவு செய்திருந்தேன் . பதிவு செய்யும் காலம் வராமலேயே போய்விட்டால் என்ன செய்வது என தோன்றிய போது   இல்லை என்றால் இல்லைதான். விடைபெற வேண்டியது தான் முழுமையாக எல்லாவற்றையும் ஆற்றி சென்றவர்கள் யார்?.


வாழ்வின் அடிப்படை ஆதாரம் என் முந்தையர்கள் உருவாக்கி கையளித்த ஆன்மீகம். அதில் இருந்து நான் உருவாக்கிக் கொண்ட எனது பூஜை முறைகள் என நீண்ட தூரம் வந்து விட்ட உணர்வு எழுகிறது . இனி காலம் அதிகமில்லை . அது குறித்து நிறைவையே அடைகிறேன் .  நீண்ட  வாழ்க்கையில் பெற்றதும் இழந்ததும் போக இறுதில் அடைந்தது இந்த நிறைவு . மனைவியைத் தவிர பிற யாரையும் சார்ந்து இல்லாத இந்த நிலையே போதுமானதாக இருக்கிறது . குடும்பம் என்கிற கருத்தியல் குறித்து கட்டி எழுப்பிக்கொள்வது கூட ஒருவித கற்பனை மட்டுமே நிஜ வாழ்வில் அவை பொருளற்றவை. என்றாலும் சமூகம் என்பது அந்த உள் கட்டுமானத்திற்குள் தான் வருகிறது . உணவும் தண்ணீரும்  உயிர் வாழ தேவை என்றாலும்  அவை நன்மையை மட்டும் கொடுப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. அப்பாவின் வியாதி அவருக்கு நாள் ஒன்றிற்கு 1 ½ லிட்டருக்கு மேல் தண்ணீரை அனுமதிக்கவில்லை. உப்பு கூட 5 கிராம் மட்டுமே.


வீட்டைவிட்டு வெளியில் செல்லும் விருப்பம் முற்றாக குறைந்து விட்டது. வெள்ளிமலை பயணத்திற்கு பிறகு பயணம் பற்றிய எண்ணம் மெல்ல தலைத்தூக்க ஆரம்பித்திருந்தது . சிங்கப்பூர் பயணம் செல்ல தடையாக இருந்தது இரண்டு ஒன்று மீன் தொட்டி பராமரிப்பு அதை முழுக்கியாக பணியாளரிடம் விட முடியாது co2 மற்றும் செடிகளுக்கான திரவ இடுபொருள் இடும் அளவை பயிற்றிவைக்க முடியாது . எனக்கே கூட அது தவறி பின் திருத்திக் கொள்வதாகவே இருந்து வருகிறது எனவே அவர்களுக்கு குறைந்த பட்ச வேலைகளை கொடுத்திருந்தேன் . வீடு பராமரிப்பு அதைவிட முக்கியம் வேலை செய்பவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்து வீட்டை பராமரிக்கிறேன் என சொன்ன பிறகு தடைகள் எனஒன்றில்லை  மனம் அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றது. மேலும் மனைவியிடம் சொல்ல ஒன்றில்லை . 


சிங்கப்பூர் கிளம்பலாம் என முடிவது செய்த்தேன். கடந்த முறை போல இம்முறை சிங்கப்பூர் எனக்கு எந்த உளவெழுச்சியையும் கொடுக்கவில்லை. கம்போடியா சென்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மற்றபடி சிங்கப்பூர் இந்தியாவிற்குள் பயணிப்பது போல இருந்தது சுமார் இருப்பது நாட்கள் . சென்ற முறை பார்க்காது விட்ட சிலவற்றை சென்று பாரத்தோம் . அதில் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது “மேகக் காடு ” முற்றிலும் செயற்கையானது என்றாலும் கண் சென்று தொட முடியாத உயரவரை அடுக்கப்பட்ட காட்டு செடிகள் எதிரே ஒருமணி நேரம் அமர்ந்திருந்தது . பெரும் உலா எழுச்சியை கொடுத்தது 
































வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

ஒரு கனவு

 





அன்பிற்கினிய ஜெ,

வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன்.

கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப்பது போன்ற கனவுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாது வருவதுண்டு . ஆனால் இந்த இரண்டு கனவுகள் வேறுவிதமானவை  , அதிலிருந்து விழித்து எழுந்த பிறகும் அந்த கனவின் அதிர்ந்த உணர்வு நிலை விழித்து எழுந்த பிறகும் நீண்ட நேரம் உடலில் நீடித்திருந்தது புதிய அனுபவம். அது பற்றி உங்களுக்கு எழத வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக இந்த கடிதம்.

கனவுகளுக்கு அர்த்தமில்லை என்றாலும்  தொடர் கனவுகள் வந்து போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன் இன்று காலை கண்ட கனவு இந்த கடிதத்தை எழுத தூண்டியது. இரண்டு கனவுகள். முதல் கனவு நான் இன்னதென்று அறிய முடியாத ஒரு பழங்கால அல்லது புராதன இடத்தை பார்க்கச் சென்றிருக்கிறேன். அது பாழடைந்த கோவிலும்  கோட்டையும் கலந்தது போன்ற இடம்.

அந்த கட்டுமானம் கற்கள் என ஏதுமின்றி   முழுவதும் பித்தளையினாலும் வேறு உலோகங்களினாலும் ஆன உலகம். எங்கு திரும்பினாலும் லட்சக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக சக்கரமும் விசைகளும் கதவுகளைக் கொண்டதாக பச்சை களிம்பேறி இருந்தது . அது எந்த மாதிராயான இடம் என அறிந்து கொள்ள உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன். பின்னர் ஒரே குழப்பம் அலைபேசி எங்கே என தேடிக் கொண்டிருக்கிறேன் .பின்னர் எப்போது அலைபேசி கிடைத்தது என தெரியவில்லை. உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன்  .  அங்கிருந்தவர்கள் அலைபேசியை உபயோகப்படத்த கூடாது என்றார்கள். மேற் கொண்டு உங்களுடன் பேச இயலவில்லை.

ஒரு முக்கிய இடம் என சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள் சில லிவர்களை இழுக்க எங்கும் சக்ரமும் விசையுமாக நின்றிருந்தது இடம் திடீரென உயிர் கொள்கிறது . ஒட்டு மொத்த அமைப்பே உருமாறிக் கொண்டிருந்தது. அது இயங்கும் ஓசையை என் உடலால் அதிர கேட்டுக் கொண்டிருக்கிறேன். சட்டென ஒரு ஓராள் நுழையும் அளவிலான பித்தளை தரைக் கதவு திறந்து கொள்ள அதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உலோகத்திலான சுருள் படிகெட்டுகள் ஆழமாக இறங்கிச் செல்கின்றன் அருகில் இருந்த சிலர் என்னை அதில் இறங்கி போகச் சொல்லுகிறார்கள்.

மனம் அந்த மொத்த இடத்தையும் மூளையென சொல்லியது. அந்த தரைக் கதவு ஆழ்மனம் என்றும் அதில் இறங்கி இருந்தால் வெளியேற இயலாது சிக்கி கோமா போன்ற மரணத்திற்கு இணையான ஒன்று எனக்கு நிகழ்ந்திருக்கக் கூடும் என்றது. அதை உண்மைதான் என இன்னொரு பகுதி ஏற்றது. அரை மணி தேரம் உடலின் இருந்து கொண்டிருந்த அந்த அதிர்வு நீங்கவே இல்லை.

இரண்டாவது கனவு. இன்று அதிகாலை மீண்டும் ஒரு விசித்திரமான கனவு உங்களை சந்திக்க உங்கள் வீட்டிற்கு வருகிறேன் ஏதோ விசேஷம் போல வீடு நிறைந்திருந்தது. பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். வரவேற்பறை போல இருந்த இடத்தில் அரை இருட்டில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்கை வணங்கி அருகிருந்த நாற்காலியில் அமர்ந்ததும் பக்கத்தில் இருந்தவர் அது நீங்கள் இல்லை “அஜிதன்” என்றார் நான் திரும்பவும் பார்த்த போது அது அஜிதன் தான் சில மாத தாடியுடன். அருகில் நீங்களும் இருந்தீர்கள். இரண்டு பேரும் கரு நீல முழுக்கை சட்டை முழங்கை வரை ஏறி இருந்தது. நீங்களும் அதே ஜாடை தாடியுடன் இருவரும் ஒரு மாதிரி உடல் அசைவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன் .

யாரோ நீங்கள் வெளி அறையில் இருப்பதாக சொல்ல எழுந்து வந்து உங்களை பார்க்கும் போது உடல் முழுவதுமாக முடி மழிக்கப்பட்டு ஆடைகள் இல்லாமல் சமணத் துறவி போல ஒரு கால் மீது மறுகால் போட்டு உட்காரந்து கைகளை மடிமேல்  வைத்துக் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு பின்னால் சுவர் அகல உயர கண்ணாடி அலமாரியில் சற்று முன்னர் யாரோ மூன்று பேர் சாப்பிட்டுச் விட்டச் சென்ற பெரிய வாழையிலை அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தது  அதில் செம்பருத்தி பூ போல சிவந்த நிரத்தில் சாப்பிட்ட மிச்சல் . அதன் கீழ் அடுக்கில் அதே போல ஆனால் அந்த இலைகளை விட சற்று சிறிய அளவில் சாப்பிட்ட இலைகள்.

யாரோ மிக மிக முக்கியமானவர் வந்து உணவருந்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் புனிதர் என்கிற புரிதலைக் கொடுத்தது. நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் இறுதியில் யார் அந்த இலைகளில் உணவருந்தியது என சொல்லப் போகிறீர்கள் என புரிந்தது காத்திருந்தேன். கனவு கலைந்து விட்டது.

நன்றி

ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

நவம்பர் 2023

அன்புள்ள அரிகிருஷ்ணன்

அஜிதன் திருமணம் முடிவாகும் முன் வந்த கனவு. கிட்டத்தட்ட அதையே சொல்கிறது. என் முன்னகர்வு பற்றி…

ஜெ

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * முடிவுறாத துவக்கம் *

  ஶ்ரீ : பதிவு : 700  / 889/ தேதி 09 ஆகஸ்ட்   2026 * முடிவுறாத துவக்கம் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...