https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 8 மார்ச், 2024

சிங்கை பயணம்


 


சிங்கப்பூர் செல்வது பற்றி மனைவி கடந்த ஒரு வருடமாக சொல்லி சொல்லி என்னை ஒருவாரு தயாராக்கி இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நான் வீட்டை விட்டு வெளி கிளம்புவதை விரும்புவதில்லை. மாலை கடற்கரை நடைக்கு மட்டுமே வீட்டைவிட்டு கிளம்புகிறேன்.   என்னை சூழ்ந்திருக்கும் உலகியல் வாழ்விற்கு அவளே கடைசி தொடர்பு என்பதால் அவள் விரும்புவதை நான் மறுப்பதில்லை. சில காலமாக எனக்குள் என்ன நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றி நான் இன்னும் அவதானிக்க வேண்டி இருக்கிறது. சமீப காலமாக நான் வலைப்பூ தளத்தில் எழுதுவது கூட சற்று நின்று விட்டது. நிறைய எழுதி இருந்தாலும் அதில் நான் நினைக்கும் மொழி அல்லது கருத்து கைவரவில்லை. அது போன்ற ஒன்று நிகழும் என ஜெயமோகன் சொல்லுவதுண்டு. அதை இப்போது புரிந்து கொள்கிறேன் . அந்த சூழல் வரும் போது எதையும் எழுத தோன்றாது. ஒரு ஊழ்கம் போல அது மறுபடி வரவேண்டும் அது வரை காத்திருக்க முடிவு செய்திருந்தேன் . பதிவு செய்யும் காலம் வராமலேயே போய்விட்டால் என்ன செய்வது என தோன்றிய போது   இல்லை என்றால் இல்லைதான். விடைபெற வேண்டியது தான் முழுமையாக எல்லாவற்றையும் ஆற்றி சென்றவர்கள் யார்?.


வாழ்வின் அடிப்படை ஆதாரம் என் முந்தையர்கள் உருவாக்கி கையளித்த ஆன்மீகம். அதில் இருந்து நான் உருவாக்கிக் கொண்ட எனது பூஜை முறைகள் என நீண்ட தூரம் வந்து விட்ட உணர்வு எழுகிறது . இனி காலம் அதிகமில்லை . அது குறித்து நிறைவையே அடைகிறேன் .  நீண்ட  வாழ்க்கையில் பெற்றதும் இழந்ததும் போக இறுதில் அடைந்தது இந்த நிறைவு . மனைவியைத் தவிர பிற யாரையும் சார்ந்து இல்லாத இந்த நிலையே போதுமானதாக இருக்கிறது . குடும்பம் என்கிற கருத்தியல் குறித்து கட்டி எழுப்பிக்கொள்வது கூட ஒருவித கற்பனை மட்டுமே நிஜ வாழ்வில் அவை பொருளற்றவை. என்றாலும் சமூகம் என்பது அந்த உள் கட்டுமானத்திற்குள் தான் வருகிறது . உணவும் தண்ணீரும்  உயிர் வாழ தேவை என்றாலும்  அவை நன்மையை மட்டும் கொடுப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. அப்பாவின் வியாதி அவருக்கு நாள் ஒன்றிற்கு 1 ½ லிட்டருக்கு மேல் தண்ணீரை அனுமதிக்கவில்லை. உப்பு கூட 5 கிராம் மட்டுமே.


வீட்டைவிட்டு வெளியில் செல்லும் விருப்பம் முற்றாக குறைந்து விட்டது. வெள்ளிமலை பயணத்திற்கு பிறகு பயணம் பற்றிய எண்ணம் மெல்ல தலைத்தூக்க ஆரம்பித்திருந்தது . சிங்கப்பூர் பயணம் செல்ல தடையாக இருந்தது இரண்டு ஒன்று மீன் தொட்டி பராமரிப்பு அதை முழுக்கியாக பணியாளரிடம் விட முடியாது co2 மற்றும் செடிகளுக்கான திரவ இடுபொருள் இடும் அளவை பயிற்றிவைக்க முடியாது . எனக்கே கூட அது தவறி பின் திருத்திக் கொள்வதாகவே இருந்து வருகிறது எனவே அவர்களுக்கு குறைந்த பட்ச வேலைகளை கொடுத்திருந்தேன் . வீடு பராமரிப்பு அதைவிட முக்கியம் வேலை செய்பவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்து வீட்டை பராமரிக்கிறேன் என சொன்ன பிறகு தடைகள் எனஒன்றில்லை  மனம் அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றது. மேலும் மனைவியிடம் சொல்ல ஒன்றில்லை . 


சிங்கப்பூர் கிளம்பலாம் என முடிவது செய்த்தேன். கடந்த முறை போல இம்முறை சிங்கப்பூர் எனக்கு எந்த உளவெழுச்சியையும் கொடுக்கவில்லை. கம்போடியா சென்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மற்றபடி சிங்கப்பூர் இந்தியாவிற்குள் பயணிப்பது போல இருந்தது சுமார் இருப்பது நாட்கள் . சென்ற முறை பார்க்காது விட்ட சிலவற்றை சென்று பாரத்தோம் . அதில் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது “மேகக் காடு ” முற்றிலும் செயற்கையானது என்றாலும் கண் சென்று தொட முடியாத உயரவரை அடுக்கப்பட்ட காட்டு செடிகள் எதிரே ஒருமணி நேரம் அமர்ந்திருந்தது . பெரும் உலா எழுச்சியை கொடுத்தது 
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக