https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

ஒரு கனவு

 





அன்பிற்கினிய ஜெ,

வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன்.

கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப்பது போன்ற கனவுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாது வருவதுண்டு . ஆனால் இந்த இரண்டு கனவுகள் வேறுவிதமானவை  , அதிலிருந்து விழித்து எழுந்த பிறகும் அந்த கனவின் அதிர்ந்த உணர்வு நிலை விழித்து எழுந்த பிறகும் நீண்ட நேரம் உடலில் நீடித்திருந்தது புதிய அனுபவம். அது பற்றி உங்களுக்கு எழத வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக இந்த கடிதம்.

கனவுகளுக்கு அர்த்தமில்லை என்றாலும்  தொடர் கனவுகள் வந்து போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன் இன்று காலை கண்ட கனவு இந்த கடிதத்தை எழுத தூண்டியது. இரண்டு கனவுகள். முதல் கனவு நான் இன்னதென்று அறிய முடியாத ஒரு பழங்கால அல்லது புராதன இடத்தை பார்க்கச் சென்றிருக்கிறேன். அது பாழடைந்த கோவிலும்  கோட்டையும் கலந்தது போன்ற இடம்.

அந்த கட்டுமானம் கற்கள் என ஏதுமின்றி   முழுவதும் பித்தளையினாலும் வேறு உலோகங்களினாலும் ஆன உலகம். எங்கு திரும்பினாலும் லட்சக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக சக்கரமும் விசைகளும் கதவுகளைக் கொண்டதாக பச்சை களிம்பேறி இருந்தது . அது எந்த மாதிராயான இடம் என அறிந்து கொள்ள உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன். பின்னர் ஒரே குழப்பம் அலைபேசி எங்கே என தேடிக் கொண்டிருக்கிறேன் .பின்னர் எப்போது அலைபேசி கிடைத்தது என தெரியவில்லை. உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன்  .  அங்கிருந்தவர்கள் அலைபேசியை உபயோகப்படத்த கூடாது என்றார்கள். மேற் கொண்டு உங்களுடன் பேச இயலவில்லை.

ஒரு முக்கிய இடம் என சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள் சில லிவர்களை இழுக்க எங்கும் சக்ரமும் விசையுமாக நின்றிருந்தது இடம் திடீரென உயிர் கொள்கிறது . ஒட்டு மொத்த அமைப்பே உருமாறிக் கொண்டிருந்தது. அது இயங்கும் ஓசையை என் உடலால் அதிர கேட்டுக் கொண்டிருக்கிறேன். சட்டென ஒரு ஓராள் நுழையும் அளவிலான பித்தளை தரைக் கதவு திறந்து கொள்ள அதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உலோகத்திலான சுருள் படிகெட்டுகள் ஆழமாக இறங்கிச் செல்கின்றன் அருகில் இருந்த சிலர் என்னை அதில் இறங்கி போகச் சொல்லுகிறார்கள்.

மனம் அந்த மொத்த இடத்தையும் மூளையென சொல்லியது. அந்த தரைக் கதவு ஆழ்மனம் என்றும் அதில் இறங்கி இருந்தால் வெளியேற இயலாது சிக்கி கோமா போன்ற மரணத்திற்கு இணையான ஒன்று எனக்கு நிகழ்ந்திருக்கக் கூடும் என்றது. அதை உண்மைதான் என இன்னொரு பகுதி ஏற்றது. அரை மணி தேரம் உடலின் இருந்து கொண்டிருந்த அந்த அதிர்வு நீங்கவே இல்லை.

இரண்டாவது கனவு. இன்று அதிகாலை மீண்டும் ஒரு விசித்திரமான கனவு உங்களை சந்திக்க உங்கள் வீட்டிற்கு வருகிறேன் ஏதோ விசேஷம் போல வீடு நிறைந்திருந்தது. பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். வரவேற்பறை போல இருந்த இடத்தில் அரை இருட்டில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்கை வணங்கி அருகிருந்த நாற்காலியில் அமர்ந்ததும் பக்கத்தில் இருந்தவர் அது நீங்கள் இல்லை “அஜிதன்” என்றார் நான் திரும்பவும் பார்த்த போது அது அஜிதன் தான் சில மாத தாடியுடன். அருகில் நீங்களும் இருந்தீர்கள். இரண்டு பேரும் கரு நீல முழுக்கை சட்டை முழங்கை வரை ஏறி இருந்தது. நீங்களும் அதே ஜாடை தாடியுடன் இருவரும் ஒரு மாதிரி உடல் அசைவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன் .

யாரோ நீங்கள் வெளி அறையில் இருப்பதாக சொல்ல எழுந்து வந்து உங்களை பார்க்கும் போது உடல் முழுவதுமாக முடி மழிக்கப்பட்டு ஆடைகள் இல்லாமல் சமணத் துறவி போல ஒரு கால் மீது மறுகால் போட்டு உட்காரந்து கைகளை மடிமேல்  வைத்துக் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு பின்னால் சுவர் அகல உயர கண்ணாடி அலமாரியில் சற்று முன்னர் யாரோ மூன்று பேர் சாப்பிட்டுச் விட்டச் சென்ற பெரிய வாழையிலை அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தது  அதில் செம்பருத்தி பூ போல சிவந்த நிரத்தில் சாப்பிட்ட மிச்சல் . அதன் கீழ் அடுக்கில் அதே போல ஆனால் அந்த இலைகளை விட சற்று சிறிய அளவில் சாப்பிட்ட இலைகள்.

யாரோ மிக மிக முக்கியமானவர் வந்து உணவருந்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் புனிதர் என்கிற புரிதலைக் கொடுத்தது. நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் இறுதியில் யார் அந்த இலைகளில் உணவருந்தியது என சொல்லப் போகிறீர்கள் என புரிந்தது காத்திருந்தேன். கனவு கலைந்து விட்டது.

நன்றி

ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

நவம்பர் 2023

அன்புள்ள அரிகிருஷ்ணன்

அஜிதன் திருமணம் முடிவாகும் முன் வந்த கனவு. கிட்டத்தட்ட அதையே சொல்கிறது. என் முன்னகர்வு பற்றி…

ஜெ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...