அவதானிப்புகள்
பழைய புகைப்படங்கள் பார்த்த நொடி நினைவுகளை கிளர்ந்து எங்கெங்கோ அழைத்துச் செல்பவை. பல சமயங்களில் நம்மை இன்னும் அணுக்கமாக பார்க்கும் வாய்ப்பையும் அவை தந்துவிடுவதுண்டு. எந்த காரணமும் இன்றி நம்மை சுற்றி நிகழ்வன பற்றி அவதானிப்பு நமக்குள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கொந்தளிப்பாக , வருத்தமாக, ஐயமாக. உள்ளம் செயல்படும் விதம் அப்படி. அந்த கடந்த கால அவதானிப்புகள் நிகழ்காலத்தில் என்ன மாதிரியான நிஜங்களாக மாறி இருக்கிறது என்பது பற்றி பார்த்து அறிந்து கொள்ள அதில் உள்ள பயணம் போன்றது அந்த வாய்ப்பு கிடைக்கும் போது உற்சாகமாகிறோம். அவை எப்படிப்பட்டதாக மாறியிருந்தாலும். அவை நம்மை பற்றி நாம் கொள்ளும் மீள் அவதானிப்பு. கொள்ளும் ஆர்வத்தால் “சரியாக கணித்திருக்கிறோம்” அல்லது கணிப்பிற்காக கொண்ட கருவிகள் சரியாக அமையவில்லை என்ற அந்த நினைவுகளை அலையலையாய் எழுப்புபவை. அந்த அவதானிப்பின் வழியாக நம்மை மறு வரையறை செய்து கொள்கிறோம் . அதை கொண்டு நிகழ்காலத்துடன் எந்தளவு தொடர்பில் இருக்கிறோம் என்பதுடன், புதிய தரவுகளை உள்வாங்கிக் கொண்டு தகவமைத்து கொள்ளவதற்கும் முன்னகர்வதற்கும் அவற்றை உபயோகப் படுத்திக் கொள்கிறோம் என்பது தன்னளவில் மன நிறைவை தருவது.
தன்னை வடிவமைத்துக் கொள்ள ஒருவருக்கு அனைத்தைப் பற்றிய அவதானிப்புகள் அவசிமானது. அவையே கருத்துக்களாக அதை ஒட்டி நிலைப்பாடுகளாக உருமாறுகின்றன. தீவிர அரசியலில் இருந்த போது அது எனக்கு அழுத்தமாக அறிமுகமாகியது என்றாலும். அது என் இயல்பில் இருந்திருக்க வேண்டும் . எனது பேசுதல் குறைபாடு என்னை அப்படி சுற்றி நிகழும் அனைத்தின் மீதும் அவதனிப்புகளை நிகழ்த்திக் கொள்ள பழக்கியிருக்க வேண்டும்
கணிப்புகள் பெரும்பாளும் சந்தேகத்தை அடிப்படையாக கொண்டவை. அவதானிப்புகளின் வழியாக கணிப்பு முறையில் மிகச் சரியானது என தோன்றினாலும் நிஜத்தில் அவை இன்று நின்று கொண்டிருக்கும் இடத்தை பார்க்கும் போது உகப்பாக இருப்பதில்லை என்பதுடன் வருத்தமளிப்பதாக இருக்கிறது. என்றாலும் சூழ்நிலையை புரிந்து கொள்ளவும் அது குறித்து முடிவெடுக்கவும் எடுத்த முடிவினால் பின்னாளில் ஏமாற்றமோ வருத்தமடைவோ இடம் இருக்காது.
ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு துவங்குவது பற்றிய திட்டம் எழுந்த பிறகு நான் மிக தீவிரமாக நினைத்து கொண்ட பல விஷயங்களில் “செயின்ட் தெரேசா” வீதியில் அமைந்துள்ள ராமாநுஜ கூடத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதும, ஒன்று . இடைப்பட்ட காலத்தில் மடம் பெரும் செலவில் புணரமைக்கப்பட்டு தனியார் சொத்தாக மாறி குறிப்பட்ட சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த சமூகத்தினர் பெரும் பொருள் செலவில் அதை மறுவுருவாக்கம் செய்திருந்தனர் . அவர்களிடம் இடத்தைக் கோரிப் பெறுவது எளிதல்ல என்றார் ஆனந்தரங்கர். ஆனால் முயற்சிக்காது அதை கைவிட எண்ணமில்லை. பேசி பாரஃப்போம் என்றதற்கு உடன்படஃடார்.
நாங்கள் சென்று அவரை சந்தித்த போது அவர் சொன்ன சில தகவல்கள் அதிர்வளிப்பதாக இருந்தது. மடம் அவர்கள் கையிலிருந்து நழுவி அரசாங்கத்திடம் சென்றுவிடும் சூழல் எழுந்திருப்பதாக சொன்னார். அதற்கு ஒரு வகையில் நானும் ஒரு காரணம் என்றார். எனக்கு புரியவில்லை.
மடம் நிர்வாகத்தை அரசிடம் இழக்கக் கூடிய சிக்கல் உருவாகியது அவர்கள் மடத்திற்கு பூசகராக நியமித்த தஞ்சாவூர் பாகவதரும் என்கிற தேவநாதனும் வேறு சிலரும் நிர்வாகத்தை பற்றி அரசுக்கு புகார் அளித்து மடத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என கோரியிருப்பது பற்றி சொன்னார். எனக்கு தஞ்சாவூர் பாகவதர் என சொல்லப்பட்ட தேவனாதனை தெரியும். அவர் எப்படி அங்கு அர்ச்சகராக வந்து சேர்ந்தார் என்பது எனக்கு அன்றைய புது தகவல். இதில் நான் எங்கு வந்தேன் என தெரியவில்லை என்று அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு ஒருவகையில் தேவநாதனை நான் தான் அறிமுகம் செய்தேன் என்றார். எனக்கு அவரை அறிமுகம் செய்ததாக நினைவில்லை. மேலும் எனக்கு அவரைப்பற்றி உறுதியான எதிர்மறை எண்ணம் இருந்தது காரணம். விழா குழுவில் அவர் முக்கிய இடத்தில் நான் வைத்திருந்ததாகவும் அதை பார்த்தே அவர்கள் தங்கள் மடத்தின் ஆர்ச்சகராக அவரை நியமிப்பது குறித்த எண்ணம் எழுந்ததாக சொன்னார்கள்.
விழா குழுவில் துவக்க நாள் தேவனாதனை மேடையில் வைக்க ராமாநுஜரின் படம் ஒன்றை வரையச் சொல்லி இருந்தேன். அவர் தஞ்சாவூர் பாணி ஓவிய நிபுணர் . அவரும் மிக சிறப்பாக வரைந்தளித்தார். அவரை கௌரவிக்க விழா துவங்கும் முன்பாக மேடையில் அந்த படத்தை ஆராதிக்கும்படி அவரிடம் சொல்லி இருந்தேன். அவரும் துவக்க விழாவாக நடந்த மூன்று நாளும் மிக பணிவாக அதைச் செய்தார். அவர் அதுவரை பொது மேடை ஏறியதில்லை. விழா அன்று மேடையேறியவரை பார்த்த போது எனக்கு மிகுந்த திகைப்பைத் தந்தது சௌராஷ்ட பிராமணனான அவர் முழு அந்தனர் வேடத்தில் இருந்தார். நான் அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணி காரணமாக அவரை முற்றுமாக மறந்திருந்தேன்.
அன்று மேடையில் அவரை பார்த்த எனது விழா குழுவினர் சிலர் ராமாநுஜ கூட ஆராதனை வேலைக்கு அவரை அழைத்து சென்று அர்சகர் போல ஆக்கி வைத்தனர். அவர்குள்ளாக என்ன நிகழ்ந்தது என எனக்குத் தெரியாது. சில காலம் கழித்து தேவனாத் வேறு சிலருடன் இணைந்து அந்த சமூகத்தினரை எதிர்க்க மடம் தனியார் கைகளில் இருந்து அரசு அரங்காவலர் துறை கைக்குளுக்கு சென்றுவிட்டதை மிகுந்த மன வலியுடன் சொன்னார்கள். அப்படி பட்ட ஒருவரை எப்படி நீங்கள மேடை ஆராதனை்கு தெரிவு செய்தீர்கள் என என்னை கேட்டு அதிர்ச்சி அளித்தனர். அந்த கேள்வி என்னை சீண்டினாலும் அவர்களிடம் மிகப் பொறுமையாக எனது நிலைப்பாட்டை சொன்னேன். நான் அவருக்கு கொடுத்தது தற்காலிக மேடையில் வழிபடுவதற்காக. அதுவும் அந்த படத்தை வரைந்ததற்காக அவர் எந்த ஊதியமும் பெறவில்லை. அவரை கௌரவப்படுத்த அதை செய்தேன். அவரை மடத்தின் வேலைக்கு எடுக்கும் முன்பு என்னிடம் கேட்டிருந்தால் அது விபரீதமான முடிவு என தெளிவாக சொல்லியிருப்பேன். அவரை பற்றிய நல்லுள்ளப் பதிவு எனக்கில்லை என்பதை சொன்னேன்.
தேவனாதன் யாரிடமும் மிக பணிவாக இருக்கும் உடல் பொழி கொண்டவர் அதை பிறர் தஙழகளுக்கான மிதமிஞ்சிய பணிவு என எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அது பணிவு அல்ல “குறுகல்” என அவர்களுக்கு தெரியவில்லை. குறுகலை உடல் மொழியை கொண்டவர்கள் எப்படிப்பட்ட உளநிலை கொண்டவர்கள் என்பதை பல ஆண்டு காலம் பார்த்திருக்கிறேன். அவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அவர் பற்றிய என் எண்ணம் என்ன என என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்றேன். எனக்கு தகவல் சொல்லாது தேர்ந்தெடுத்தது அவர்கள் தவறு என சொன்னேன். நான் அவர்களுக்கு சொன்னதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என தெரியாது.
தேவனாதன் ராதநுஜ கூட அர்ச்சகராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் உடல் வழியாக நிகழ்ந்த பயணம் சுவாரஸ்யமானது. சட்டென தங்கள் அடையாளத்தை கழட்டி புதிதாக புணைந்து கொள்பவர்களை கடந்த பல பத்தாண்டுகளாக பார்த்தபடி வந்திருக்கறேன். அவர் இறுதியில் சென்று அடையும் இடத்திற்கு முன்னதாக தங்கள் வாழ்வியல் படிநிலைகளில் உதவிய அனைவரின் கரங்களை கடிக்காமல் அ8உத்த இடத்திற்கு வந்து சேராதவர்களாக அறிந்திருக்கிறேன். இதில் உதவியவர் உதவாதவர் என்கிற பாகுபாடுகளை அவர்களை வைத்திருப்பதில்லை. ராமாநுஜ கூடத்தில் அர்ச்கராக வந்த பிறகு வலிந்து உருவாக்கிக் கொண்ட கச்சக்கட்டு குடுமி அக்கிரகாரத்து பாஷை என முழு அந்தணரானது வேறு கதை. அதின் பின்னால் இருக்கும் அவருக்கான அரசியலும் அதிகாரமும் அவர் தனக்காக உருஙயவாக்கிக் கொண்ட இடமும் எனக்கு எப்போதைக்கும் ஏற்புடையதல்ல.
ஆரம்பம் முதல் அவரின் உடல் மொழி வழியாக அவரை பற்றிய எனது மனச் சித்திரம் இது போன்ற ஒன்றை செய்யக்கூடுபவராக கணித்திருந்தேன் அவரை போன்ற பலரை அரசியலில் இருந்து பார்த்து புரிந்திருக்கிறேன். தங்களுக்கென அடையாளமோ இடமஓ இல்லாதவர்கள். அவர்களுக்கு சட்டென உருவாகி வரும் அதிகாரமிக்க இடத்தை தக்க வைத்துக் கொள்ள எத்தகைய முகம் சுழிக்கச் செய்யும் செயல்களை அவர் செய்ய கூடுவதில்லை.
அனைவரிடமும் மிக பணிவான தோற்றமுடையவர்களாக இருப்பதால் மிக விரைவில் அதிகாரத்திற்கு பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளும் சமர்த்தியம் உள்ளவர்களாக அவர்களை அறந்திருக்கிறேன். அவர்கள் நேரடியான அதிகாரத்திற்கு வரும் போது அதுவரை அவர்கள் சார்ந்திருந்தவர்களை நிராகரித்தே புதிய உயர்ங்களை அடைகிறார்கள்.
தங்கள்ள் எதிர்காலத்திற்கு அவர்களை மிதித்து மேலெழுந்து வர தயக்கமில்லாதவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். மிக மோசமான விளைவுகளை தஙகள் ஆதிகாரத்தில் செய்யக் கூடியவர்களாக குமட்டலெடுக்கும் பேச்சும் நடவடிப்கையும் கோண்டவர்களாக மாறி இருப்பதை பார்த்திருக்கிறேன். அரசியலை விட ஆன்மீகத்தில் தங்களுக்கான அடையாளம் தேடுபவர்கள் செல்லும் எல்லை கசப்படைய வைப்பவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக