https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஜனவரி, 2022

அடையாளமாதல் * கனவு *

 



ஶ்ரீ:



பதிவு : 602  / 792 / தேதி 08 ஜனவரி  2022


* கனவு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 74.





இளைஞர் காங்கிரஸில் இருந்து கற்று வெளிவந்தது பல அடுக்குகளைக் கொண்ட சாமான்யனை தொடர்புறுத்துவது அதன் வழியாக அவர்களின் வாழ்கையில் நுழைவது. நல்லது கெட்டது அனைத்திலும். நடிப்பில்லாமல் செய்வது. அது எளிதான ஒன்றல்ல அவர்களின் நம்பிக்கையை பெறுவது நிஜமாக சவால் . மிக மெல்லத்தான் அது நிகழ்ந்தது . எனது குடும்ப பின்னணியும் பாலனின் தேரடியான ஆதரவிருந்ததால் அதை தடையில்லாமல் செய்ய இயன்றது . அதை செய்து முடிக்க வேண்டுமானால் சின்ன சின்ன நாரெடுத்துக் கட்டும் தூக்கனாங்குறுவி கூடு போல. ஒரு நாள் ஒரு இரவில் அது நடக்கிற காரியமல்ல . அலுவலக ரீதியில் நான் செய்ய முயன்றது அனைவருக்குமான ஒரு இயக்கம் . எங்களின் அடிப்படை சக்தியாக திரண்டெழுந்த விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் ஆதரவு . அவர்களுக்கு எதிரான உள்ளூர் நிலமுடை சமூகம் , அவர்களை எதிர்க்கும் வல்லமையை அரசியலால் இயலும் என முன்வைத்து வெற்றி பெற்றார் கண்ணன் என்பதால் அதுவே எங்கள் வழியானது என சொல்லுவதைவிட . அவர்களில் இருந்து மேலெழுந்து வந்தவர்கள் தலைவர்களென உருபெற்று கண்ணனுடன் சென்றமர்ந்தார்கள் . கண்ணன் அரசியலில் உயர்ந்த போது நிலமுடை சமூகம் அவருக்கு நேரடியாக உதவியது. கண்ணனின் அனுக்கர்கள் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள நேர்ந்ததால் அவர்கள் தங்களை கைவிட்டார்கள் என கொந்தளித்த விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பாலனை நாடியபோது அவர் கண்ணன் சென்ற அதே பாதையில் பயணிக்கும்படி ஆனது .


நிலவுடமை சமூகத்தை எதிர்ப்பது எங்கள் செயல்பாடானது . நிலவுடைமை சமூகம் சண்முகத்தின் பின்னால் நிற்பதாக எங்கள் புரிதல் இருந்தது . அகவே அவர்கள் சண்முகத்திற்கும் எதிரானவர்களானார்கள். ஆனால் எதார்த்த உலகில் அதன் பொருள் வேறுவிதமாக இருந்ததை பார்க்க முடிந்தது . காரைக்காலில் சண்முகம் அப்படி பார்க்கப் படவில்லை . குபேரை எதிர்த்த போது விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் குரலாக அவர் ஒலித்தார் என்பது முரண்நகை. எந்த செயல்பாட்டிற்குள்ளும் வருவதில்லை என சண்முகத்தடன் இணைந்த போது இருந்த உள நிலையில் அடைந்த மாற்றம் . வல்சராஜ் யாரையும் ஆதரிக்கவில்லை. அவர் இளைஞர் காங்கிரஸ் எப்பக்கமும் நகராமல் இருக்கு அதன் மேல் வைக்கப்பட்ட எடை. அது சண்முகம் செய்தது. இதுவரை அதன் தலைவர்கள் தங்களுக்கு எது உகந்ததோ அதைச் செய்தார்கள் . வென்றாவர்கள் தோற்றவர்கள் என பிரித்துப்பார்கப்பட்டனர் . இறுதியில் அமைப்பு சென்று அமர்ந்த இடமென்ன என்பது கேள்வி. இதோ இப்போது அதை இயக்கத்தின் பொருட்டு செய்யும் முயற்சி . அதில் எனக்கென்று அரசியல் லாபமில்லையா? என்றால் ஆம் இருக்கு ஆனால் அது உணவில் ஒரு துளி உப்புபோல எனக்கான இடத்தை உருவாக்கிக் கொடுப்பது . கண்களால் பார்க்க இயலாதது . ஆனால் நுண்ணுரவினால் அறியப்படுவது . எந்த நிகழ்வலும் நான, என்னை முன்நிறுத்தவில்லை . கேட்டது அனைவரின் ஒத்துழைப்பை மட்டும். எதுவும் தனிப்பட்ட ஒருவரின. ஆளுமையில் இருந்து உருவாவதில்லை . அனுபவம் அந்த ஆளுமையை அலங்கரிக்கிறது


எனக்கு மறுக்கப்பட்ட இடம் அது. மறுக்கப்பட்ட போது ஏன் ? என ஒருவரும் கேட்கவில்லை. நான் பார்த்த வேலைக்கு இணையாக எதாவது செய்து என்னை கீழே தள்ளியிருந்தால் கூட எனக்கு ஒன்றுமில்லை . ஆனால் அந்த வேலை செய்ய இயலாதவர்கள் என்னை செயல்பட விடாமல் செய்தபோது ஆற்றாமை பெறுக செய்தது . ஆனால் அதிலிருந்து மெல்ல மீண்டிருக்கிறேன் இதைவிட பல நூறு முறை அடிப்பட்டு இதோ அமர்ந்திருக்கும் சண்முகம அரசியலை நேர்மறையாக செய்ய மிகுந்த  நம்பிக்கை அளிக்கிறார் . மனதை பதறவிடாமல் உரிய இடத்தை நோக்கி நகரும் வித்தையை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன் என நினைக்கிறேன் . இதுபற்றி வாய் மொழியாக அவர் எனக்கு வருபோதும் சொன்னதில்லை . குரு என கொண்டவரின் அருகிருப்பு அதை அளித்து விடும் போல .


அதுவரை பெற்ற உதாசனத்திற்கும் கேலிக்குமாக அத்தனைக்கும் சேர்த்து மிக மிக சிறியதாக ஒன்றை செய்திருந்தேன் ஆனால் அதை மையப்படுத்தி சிக்கலை துவக்க முடியாது . அது இலக்கணப்பிழை போல அதை ஆரம்பித்தால் ஏக குழப்பம் வரும் எனவே பிடித்து இழுக்க வேறு தளர்வான முணை ஏதாவது அவர்களுக்கு வேண்டும். பளீச்சென தெரிவது என் கையெழுத்து . அதை கண்டதும் பொங்கி பெருகும் காழ்ப்பை யாராலும் தவிற்க இயலாது . சுற்றறிக்கையில் வழக்கமாக தலைவர் கையெழுத்திடுவார் . அவர் கையெழுத்திடுவது பற்றி முன்பொரு முறை சபாபதி வைத்த விமர்சனத்தை நீண்ட நாள் அவர் நினவில் கொண்டிருந்தார். காந்திராஜ் அதை சொன்னபோது சண்முகம் கடும் கோபமடைந்தார் . இப்போது என்னை குறித்து அதை எழுப்பினால் அவரது பழைய நினைவுகள் கிளர்ந்தெழும் . நல்லதுதான் என நினைத்துக் கொண்டேன்.


வல்சராஜ் ஊரிலில்லாத போது நடைபெறும் அழைப்பை சுற்றறிக்கை வடிவத்தில் அனுப்பி இருந்தேன். அதில் கையொப்பமிடமால் வெற்றாக அனுப்ப முடியாது . ஆனால்சுற்றறிக்கைஎன்பதற்கு பதில்அழைப்பிதழ்என போட்டிருந்தேன் . அதை முன்வைத்து பேசுவது அரசியாகும் என்பதால் அவரை சந்தித்த அனைவரும அழைப்பிதழில் நான் எப்படி கையொப்பமிடலாம் என்பதை வைத்து முதல் சிக்கல் உருவாக்கி கொண்டு சென்றார்கள் . முழுவதும் அமைதியாய் கேட்ட சண்முகம்  “வல்சராஜிடம் பேசிக் கொள்ளுங்கள்என சொல்லிவிட்டார் . அவர் மாஹி பயணப்பட்டப் பிறகு தான் அழைப்பிதழை வெளியிட்டேன் என்பதால் வல்சராஜிடம் கூட்டமாக சென்று குழப்ப இந்த முறை வாய்ப்பளிக்கவில்லை. சிலர் மெனக்கெட்டு அவரிடம் தொலைபேசியில் பேசிய போது அவரது ஆர்வின்மை அவர்களை வடியச்செய்து விட்டது . நிகழும் இடம் குறித்து அடுத்த சிக்கல்எதற்கு ஹோட்டல்”. ஒரு நடசத்திர ஓட்டல் அரங்கின் சூழல் , பல விஷயங்களை சொல்லில்லாமல் உணர்த்திவிடும் . கட்சி அலுவலகத்தில் சட்டென எழுந்து எதையும் முரணாக முன்வைக்கத் தரும் துணிவை அந்த அரங்கு முதலில் இழக்க வைத்துவிடும் . ஏற்பாட்டின் விரிவும் நுட்பமும் மனதை செயலோடு ஒத்திசைய வைக்க கொள்ளும் முதல் தயக்கமே . அடுத்த வெற்றியை தீர்மாணிக்கும் . புதிய அதீத ஒளியூட்டப்பட்ட இடம் துல்லியமான ஒலிபெருக்கி போன்றவை தயக்கத்தை உருவாக்கிவிடும் . அதே சமயம் அமைப்பிற்குள் புதிதாக நுழையும் எவரையும் அது தருக்கி நிமிரச்செய்யும். அன்று முதல் முதலாக கலந்து கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட தொகுதி தலைவர்களுக்கு இனி யாரை பின் தொடர வேண்டும் என தெளிவாக காட்டிவிடும்.


சண்முகம்கூடஏன் ஹோட்டல் யாராவது தேவையற்ற செலவு என குறை சொல்லுவார்கள்என்றார் . குறைந்தது 50 பேராவது கலந்து கொள்வார்கள் வழக்கம் போல சிலர் பேச பலர் கேட்க்கும் முறையில் அதை நிகழ்த்த முடியாது அனைவரும் பங்கெடுக்க வேண்டும் அரங்கு அமைப்பு எப்படி ஒழுங்க வேண்டும் என நீண்ட விளக்கம் கவடுத்தபிறகு வழக்கம் போலஒழிஎன்கிற அனுமதி. யார் ஐம்பது பேர் என கேட்டிருந்தால் அடுத்த சிக்கல் எழுந்தருக்கும் . அவர் மாநில கமிட்டி 50 பேர் கொண்டது என நினைத்திருந்தார் . அழைப்பு அனுப்ப்பட்ட பிறகு இன்னொமொரு பஞ்சாயத்து காத்திருந்தது .


ஞாயிறு, 2 ஜனவரி, 2022

அடையாளமாதல் * இயங்குவிசை *

 


ஶ்ரீ:



பதிவு : 601  / 791 / தேதி 02 ஜனவரி  2022


* இயங்குவிசை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 73.






அழைப்பிதழ் அனைவருக்கும் சென்று சேர்ந்து விட்டதென்றும் ஐந்து பொதுச் செயலாளர்களின் ஒருவர் வையத்தரசு அழைப்பிதழை வாங்க மறுத்தது கடுமையாக பேசியதைப் பற்றி இரவு 9:00 மணிக்கு இணைச் செயலாளர் விஜயகுமார் என்னை தொடர்பு கொண்டு சொன்னபோது நான் அந்த அழைப்பிதழில் செய்த சிறு விஷமத்தை நினைத்துக் கொண்டேன் . ஆனால் உளம் பதறவில்லை . இன்னும் உக்கிரமாக எதிர்பார்த்தேன் அல்லது விஜயகுமார் முழுமையாக நாளை நேரில் சந்திக்கும்போது சொல்லாமல் என விட்டிருக்கலாம் . “நான் நாளை ஊரில் இல்லை எப்படியும் மதியம் வந்துவிடுவேன் மாலை தலைவர் வீட்டில் சந்திக்கலாம்என்றேன் . அதுவரை அவன் பொறுக்க மாட்டான், தினசரி அதிகாலை தலைவரை சந்தித்து ஒரு வணக்கம் போடுவது வழக்கம் . பிள்ளையார் கோயில் கும்பிடு போல . அவருடன் பேச்சென ஏதும் இருக்காது . ஆனால் நாளை விஷயமுள்ளது அவனாக வலிந்து அவரிடம் முழுவதும் சொல்லுவதுடன் அவரிடம் நியாயம் கேட்பான். எப்படியோ சிக்கலும் , நான் ஊரில் இல்லை என்கிற தகவலும் அவருக்கு சென்று சேர்ந்துவிடும்.நான் ஊரில்தான் இருந்தேன். என்னால் ஒரு சிக்கலை முன் வைத்து முதல் தகவல் அறிக்கை போல ஒன்றை கொடுக்க முடியாது . சிக்கல் குறித்து பேசினால் அதற்கு சரியாக வாதத்தை முன் வைக்க முயல்வேன். இப்போது இந்த சிக்கல் எப்படி பத்திவிரித்து எழுந்து நிற்கிறது என்கிற முழு தகவலுடன் அதை எப்படி எதிர் கொள்வது என கண்க்கிட்ட பிறகே தலைவரை சந்திப்பது நல்லது . அதை அப்படி செய்திருக்க வேண்டாமோ


பயிற்சி முகாம் நிகழ்வுதான் முக்கியம் அங்கிருந்தே எனக்கான பாதை துவங்குகிறது அதற்கு முன்பு இந்த சில்லறை அரசியல் ஏன் ? என தோன்றியது . இல்லை அதுபற்றி பலநூறு முறை மனம் நடித்து பார்த்தாயிற்று . அதை செய்யாமல் எனக்கு விடுதலையில்லை. ஒரு போராட்டத்திற்கு பிறகே அந்த கூட்டம் துவங்கப்பட வேண்டும் . ஆலோசனை கூட்டத்தில் பேசு பொருள் குறித்து உரையாடக்கூட யாரும் எழுந்திருக்கக் கூடாது . தலைவரை அழைக்க இருப்பதால் அவர் முன் எழுப்ப வேண்டிய கேள்விகளை இங்கேயே கேட்டு அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அலோசனை கூட்டம் வரை அழைத்து செல்வதில்லை என்றிருந்தேன். இது எனது இருப்பை அழுத்தமாக சொல்வது . அரசியலின் இயங்கு விசையும் அதற்கான அறங்களும் வேறு விதமானவைகள் என்பதை கற்றுக் கொள்ளும் காலம் . நான்கு ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த முதல் செயற்குழுக் கூட்டத்தில் அனைவரும் சூழ்ந்து நான் முன்வைத்த திட்டத்தை வல்சராஜை வைத்து மெல்ல மெல்ல நிராகரிக்க செய்த போது நான் கால் தடுக்கி அவர்கள் உலகில் சென்று  விழுந்தேன் . அங்கு காட்டு விலங்கு நியதி மட்டுமே . கொல் அல்லது கொல்லப்படு. மிகுந்த மன வருத்தமடைந்து ஆறுதலுக்கு யாரையாவது சந்திக்கலாம் என நினைத்த போது 


மாநில காங்கிரஸ் நிர்வாகி ஜோதி நாராயணசாமி நினைவிற்கு வந்தார் . அவர் நினைவு எழுந்தவுடன் வேண்டாம் என அழுத்தமாக நினைக்க வைத்தது , அவர் அறுதலாக தடவிக் கொடுப்பவர் அல்ல . சமயத்தில் புண்னில் புளி வைப்பார். நான் சண்முகத்தை முதலில் சந்தித்த போது அங்கிருந்த சிலரில் ஜோதிநாராயணசாமியும் ஒருவர். அதன்பிறகு கட்சி அலுவலகத்தில் சந்திக்கும் போது நட்பார்ந்த புண்ணகை. ஒரு முறை தலைவருக்காக கீழ்தளத்தில் சூரியநாராயணன் அலுவலகத்தில் காத்திருந்த போது அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். அவர் முன்னாள் வணிகவரி அலுவலர் என் தந்தையை அறிந்தவர். அதைச் சொல்லித்தான் ஜோதிநாராயணசாமிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.அவரும் என் தந்தையின் அறிமுகம் உள்ளவர். தகவல் தெரிந்ததும் ஆச்சர்யம் என் தந்தை அதிர்ந்து பேசாதவர். வியாபாரம் , இலக்கிய வாசிப்பு தவிர வேறு எதிலும் ஆர்வமில்லாதவர். அந்த குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு என்பதால் அந்த வியப்பு வந்திருக்கலாம். அதன் பின்னர் சந்திக்கும் போதெல்லாம் அரசியல் நிகழ்வுகளை பேசிக் கொண்டிருப்போம் . அவர் தொழில் முறை வக்கீல். வக்கீல்களுக்கே உரிய பேச்சின் கறார்தன்மை அவர் மீது விலக்கத்தை கொடுத்தாலும் காந்திராஜ் முன்வைக்கும் அரசியல் கோணத்திற்கு முற்றாக பிறிதொரு கோணம் சொல்லுவார். அதுவே என்னை அவரிடம் மீள மீள செலுத்தியது . அது கற்றலுக்கு உரியது 


அவர் அரசியலில் உள்ள வனநீதி பற்றி சொன்ன போது அது ஒன்றும் புது செய்தியல்ல முன்பே தெரிந்தது தான் . ஆனல் அதன் தொடு வீச்சிற்குள் சென்று அடைபட்டு நிற்பதை ஏற்கும் மனம் வருவதுதான் மிக கடினமானது . அவரின் அந்த நேரடித்தன்மை ஒரு சீண்டல் . அடிபடும் போது உடைவதல்ல அப்போது நிகழவேண்டியது . ஆவருடன் உரையாடும் ஒவ்வொரு முறையும் உள்ளே ஏதாவது உடைபட்டுப் போகும்  . மனம் இந்த ஆளை இனி ஒருபோதும் சந்திக்க கூடாது என கூப்பாடு போடும் மனத்துடன் அங்கிருந்து வெளியேறுவேன் சில காலம் சந்திப்பதை தவிற்திருக்கிறேன் . ஆனால் எங்காவது சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு எழுவதை தடுக்க முடியாது .முன்பு நான் புழங்கிய உலகும் எனக்கு சொல்லிக் கொடுத்ததும்இளைஞர் காங்கிரஸில் வெற்றி என்பது எதிர்பவரை விட சிறப்பாக ஒன்றை செய்து அடைவது  . ஆனால் இன்று நடைமுறையில் அது இல்லாமலாகி பிறரை செயல்படாது செய்வது . தடைகளை நகர்த்தி நகர்த்தி செயல்படுபவரை வெறி கொள்ளச் செய்வது , முட்டுச்சந்தில் கொண்டு நிறுத்துவது . உளச் சோர்வை கொடுப்பது , எடுத்த முயற்சியை கைவிடும் படி செய்வது என்கிற எதிர் வினையாக செயல்படுத்தப்பட்ட போது . “அதே மாதிரியான ஆட்டத்தை எதிரீடாக வைக்க கற்பது அல்ல அரசியல் பழகுதல்என்பதை  சொன்னவர் சண்முகம். இதை ஒருபோதும் நேரடியாக சொன்னதில்லை அவரது அனுக்கர்கள் வழியாக நான் சென்றடைந்து இடம் . சரியான நேரம் வரும்வரை காத்திருப்பது . காத்திருப்பது இயல்பை மீறி பிறிதொருவராக மாறுவதல்ல இயல்பில் இருந்து காட்டி அதில் வெற்றி பெற முயற்சிப்பது . அரசியலில் வெற்றி எப்போதுமே அடையப்படுவதில்லை அது பல நேரங்களில் கிடைக்காமல் போவது. அதை நோக்கிய பயணமும் அது கொடுக்கும் புரிதலுமே அதன் பலன் . என்னுடைய தனித்தன்மை மனிதர்களை தொடர்புறுத்துவது. என்னை அவர்களை ஏற்கவைப்பது . அதற்கு தேர்மறையான அனுகுமுறையும் செயல்பாடுகளுமே உகந்தது. அதை நடிக்க முடியாது. அது ஒருவரின் அடிப்படை குணமாக இருக்க வேண்டியது என நினைக்கிறேன்.

புதன், 29 டிசம்பர், 2021

அடையாளமாதல் * எண்ணத்திலிருந்து உரு *

 



ஶ்ரீ:



பதிவு : 600  / 790 / தேதி 29 டிசம்பர்  2021


* எண்ணத்திலிருந்து உரு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.





அரசியலில் எனக்கானபுதியஇடமொன்றை கண்டடைவதற்கு  ஒருவகையில் சண்முகம் காரணம் . புதியவற்றை ஏற்காத பழமைவாதி . அங்கு வளர்தல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு அனேகமாக இல்லை . கட்சி அமைப்பில் சிலருடைய இறப்பினால் உருவான வெற்றிடங்கள்கூட அப்படியே விடப்பட்டு நீண்ட காலம் ஒட்டடை பிடித்து இருந்தது . ஒரு வகையில் யாருக்கும் எந்த அதிகாரமும் பிரித்தளிக்கபடாமல் போனாலும் நிர்வாக சிக்கல்கள் எழுந்ததில்லை என்பது அடிப்படைக் காரணமாக இருக்கலாம் . கட்சி அரசியலில் அனைத்தும் தலைவரை சார்ந்து இயங்குவது . பொதுச் செயலாளர் பதவி இங்கு அலங்காரம் . அவரைப் பற்றிய புரிதல்கள் அனைத்தும் பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்தியில் மட்டும் உலவிக் கொண்டிருந்தது . அங்கிருந்து புதிய தலைமுறையினர் அவற்றை பெற்றுக் கொண்டார்கள் . கண்ணன் அன்று நவீனத்தின் முகமாக அறியப்பட்டார் . இயல்பில் அது ஒரு தலைமுறை இடைவெளி . அவர் வாழ்ந்த வீடும் கட்சி அலுவலகம் கூட புராதன அடையாளம் போல . அதில் நான் தூரத்தில் இருந்து பார்த்த சண்முகம் கடந்த காலத்தின் முகம் . அவருடைய செயல்கள் அனைத்தும் காலத்தில் பின்னோக்கி எங்கோவென இருப்பவை . அதுதான் அவரை பிற சராசரிகளிடமருந்து பிரித்து நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவுகிறது போல . சுடச்சுட புது செய்திகள் வந்தணைந்து கொண்டே இருந்தாலும் யார் எப்போது அந்த பழைய செய்தியை சொன்னாலும் புதுசு போல ஆர்வமாய் கேட்பார் . அப்படியா ? என்பார் பார்க்கப் பற்றிக் கொண்டு வரும் . அவரை நன்கு அறிந்தவர்கள் அது ஒன்றுமில்லை என நடந்து விலகிக் கொள்வார்கள் . ஆரம்பத்தில் அவை திக்பிரமையைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில்  அனைவரையும் போல எனக்கும் பழகிப் போனது என நினைக்கிறேன்நவீன காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளுதல் தேவையும் தேவையற்றுதுமான இரட்டை நிலை. எங்கே அதை வரையறை செய்யும் கோடு கிழிக்கப்பட வேண்டும் என ஆழ்மனம் முடிவு செய்கிறது . நிலை மற்றும் மாற்றமுறு சக்திக்கான இடைவெளியை  சரியாக நிர்வகிக்க தெரியாமல் அதைஇருப்பிடமாககொள்ளும் அனைவரும் உலகியலின் அன்றாடங்களுக்கு பலியாகிறார்கள் . ஆனால் இவை அத்தனையையும் கடந்து சண்முகத்திற்கு நவீன முகமும் உண்டு . புதிதாக தெரிந்து கொள்ள ஆசைபடுவார் அதை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நவீனத்தின் அவசியம் ஏற்படும்போது அதை மறுப்பவரல்ல என்பது எனது புதிய புரிதலாக இருந்தது . இன்றைய அரசியலை விரும்புபவர்களுக்கு மத்தியில் அவருக்கான இடம் என்ன? . மரபில் இருந்து நவீனமாக ஒன்றை பற்றி நகரும் போது பிற சழக்குகளுடன் கலக்காமல் வெளிவர கற்றுத்தரும் , நம்பிக்கை அளிக்கும் ஒரு ஆளுமை . கட்சியில் அந்த இரண்டுக்குமான பாதையை சீரமைக்க, சண்முகத்தை முன்றிறுத்திய முயற்சி எனக்கான இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியாக நம்பினேன் என நிலைப்பாடுகள் அனைத்தும் அதை சார்ந்தே இருந்தனஅதற்கான சந்தர்ப்பம் வழக்கமான சிக்கலுடன் வந்தது


காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற இருப்பதாக தகவல் வந்தது , தில்லி சென்றேன். அதில் பயிற்சி முகாம் நடத்துவது பற்றிய குறிப்புகள் போன்றவை மூன்று நாட்களுக்கு பேசப்படும் என நினைத்திருந்தேன் . அது வழக்கம் போல முதுகை சொறியும் நிகழ்வு என நினைத்தேன் . வரவேற்புரையில் பேசியவர் வழிந்ததில் இருந்து தெரிந்தது. தலைமை நிலையத்தில் இருந்து பொதுச் செயலாளர்கள் ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி போன்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். முதல்நாள் பங்கு  ஓரளவு திட்டமிட்டபடி நிகழ்வுகள் நடந்தன . அந்த கூட்டம் ஒரு சம்பிரதாயமானதாக இருந்தது . ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி  போன்றவர்கள் நிர்வாகத்தில் கடுமை முகங்கள் . பிரதமர் நரசிம்மராவிற்கு அனுக்கர்கள் என்பதால் அவர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்அவர்களை குஷிப்படுத்த முயன்றது நல்லபடியாக அவர்களை சென்று சேர்ந்ததாகத் தெரிவில்லை. எந்த இளிப்புமல்லாமல் மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்கள் . இருவரும் ஆங்கிலத்தில் உரையாடியதால் முதல் நாள் நிகழ்வு சட்டென முடிந்தது போல இருந்தது, அவர்கள் இருவரின் உரையும் மூத்தவர் இளையவர்களுக்கு அறிவுரை சொல்லும் தொணி இருந்தது . இருவரும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸில் இருந்து தலைமைக்கு சென்றவர்கள் என்பதால் அந்தகறார்இருந்திருக்கலாம்.


மூன்று நாள் நிகழ்வு . மற்ற முழு நாளும் இந்தியில் பேசியே கொன்றார்கள் .எத்தனை நாட்களுக்குள் நடத்த வேண்டும் முக்கிய பேசு பொருள் என்ன என்பதை பற்றிய மேலோட்டமான குறிப்புகளாகவே அவை இருந்தன. ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி மீத நாட்களுக்கும் வந்திருக்கலாம் போல என தோனழறியது . இரண்டு நாள் நிகழ்வுகள் மிகுந்த ஏமாற்றமளிப்பவை. இதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம் எனத் தோன்றியது . மூன்று நாள் பயிற்சி முகாம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தனது தலைமைக்கு கணக்கு காட்ட கூட்டிய கூட்டம் போல நடந்து முடிந்ததுஅன்றிரவே வெறுப்பாக சென்னைக்கு ரயிலில் புறப்பட்டேன் . முதல் நாள் இரவு சரியான தூக்கமில்லை இரவு முழுவதும் கண் விழித்தபடி கடந்தது போல இருந்தது . இன்னும் ஒன்னறை நாள் பயணம் எப்படி இருக்க போகின்றது என்கிற அழுத்தம் உணர்ந்தேன். இடையில் எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை விடியற்காலையில் கண்விழிக்கும் போது நன்றாக தூங்கிய நிறை உணர்வு . அதிசயமாக ரயில் பயணங்களில் அது போல ஒரு ஆழ்ந்த உறக்கம் சில மணி நேரத்தில் கிடைத்து விடும். மூளை முழு ஓய்வாக இருந்தது . சட்டென செய்ய வேண்டிய பற்றிய முழுத் திட்டம் எழுந்தது . ஒரு மணி தேரத்திற்குள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என இயல்பாக நிகழ்வுகளை மூளை அடுக்கத் துவங்கி இருந்தது . சென்னை மறுநாள் காலை வந்திருங்கும் போது முழு உற்சாகத்தில் இருந்தேன்


அதுவரை மாநிலம்முழுவதும் தேர்ந்தெடுத்து வைத்திருந்த தொகுதி தலைவர்களை களம் இறக்க இதைவிட சிறந்த சந்தர்பம் கிடைக்காது . கட்சி முடிவு என்பதால் சண்முக்கத்தை ஒத்துக் கொள்ள வைப்பதில் சிக்கல் இல்லை . அடுத்தது வல்சராஜ், அவர் மாதத்தில் பாதிநாளுக்கு மேல் புதுவையில் இருப்பதில்லை என்பதால் அந்த தேதிகளை முடிவு செய்யலாம். மாநில நிர்வாகிகளுக்கு உரிய இடம் நிகழ்வு நடக்கும் போது உருவாகும் என்பதால் அது நிகழும்வரை அதைப்பற்றி சலம்பிக் கொண்டிருப்பார்கள் . இது பயிற்சி முகாம் இல்லை அதை எப்படி நிகழ்த்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் என தெளிவாக அறிவித்துவிட வேண்டும். அவர்களிடம் கலந்து ஆலோசிக்கபட இருக்கிறது என்பது அவர்களுக்கு போதுமானது குட்டையை குழப்ப . யாரெல்லாம் பங்கு பெற போகிறார்கள் என்பது மட்டும் ரகசியம். தங்களுக்கு இணையாக யாரை வைத்தாலும் கலகம் செய்வார்கள் என்பதால் அந்த மந்தனம் . சிறப்பு அழைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்த தொகுதித் தலைவர்களை அழைப்பது கடைசி ஒரு நாள் வேலை. அனுக்கர்களிடம் கூட அது பற்றி விரிவாக தெரிவிக்கவில்லை. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என வல்சராஜிடம் சொன்னபோது முகம் சுழித்து வழக்கம் போல தனது ஆர்வமின்மையை சொன்னார். எதிர்பார்த்தது . எங்கு நிகழ்த்த திட்டம் என்பது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. அனைவரும் கட்சித் தலைமை அலுவலகத்தில் நிகழவிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள்முதல் நிலையில் அதை நிகத்துவது குறித்து சண்முகத்திடம் சொன்ன போதுஏற்பாடு செய்” “சூர்யநாராயணை உடன் வைத்துக் கொள்என்றார். அடுத்த கட்டம் அழைப்பிதழ் . ஒரு வாரத்திற்கு முன்பாக என்னுடைய அலுவலக கடிதத்தில் தட்டச்சு செய்யப்பட்டு நகல் எடுத்து முதலில் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டது . எனது அனுக்கன் விஜயகுமாரிடம் அனைவருக்கும் கடித்த்தை கொண்டு சேர்க்கும் பொறுப்பு . அவனே அதில்குட்டிக் குழப்பம்செய்பவன் . யாரும் எதிர்பார்க்காத ஒன்றை உருவாக்கி எடுத்து வந்து கொடுத்து அனைவரையும் திடுக்கிடச் செய்பவன் . அதே சமயம் கொடுக்கப்பட்ட வேலையை செய்வான் பத்தாதற்கு மேலதிகமாக ஏதாவது செய்து தொலைப்பான் .அழைப்பிதழை பெற்றுக் கொண்டதற்கான கையெழத்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் தேதியும் இடமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது . இடம் ஹோட்டல் சற்குருவின் சிறய அரங்கு அதற்கென ஒருங்கி இருந்தது . அனைத்தும் சென்று சேர்ந்தது என இரவு 9:00 மணிக்கு அவன் அலைபேசியில் சொன்ன பிறகு அடுத்த நாளை சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்தேன்.


புதிய பதிவுகள்

அடையாளமாதல். * மனசாட்சி *

  ஶ்ரீ : பதிவு : 699  / 888/ தேதி 08 ஆகஸ்ட்   2026 * மனசாட்சி *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 96. திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு...